நாம் விவாதத்துக்கு எடுத்துள்ள கீழ்கண்ட வசனத்தை நிதானமாக ஆராய்ந்தால் அங்கு இரண்டு "பகை"களை பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதை பார்க்க முடியும்.
எபே 2:13-17 முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். 14 எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாகநின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, 15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, 16 பகையைச்சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார். 17 அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்
ஆண்டவராகிய இயேசுவின் சிலுவைமரணம் என்பது அனேக காரியங்களுக்கு முடிவாகவும் விடுதலையாகவும் அமைந்தது! அதைபற்றி இந்தஅதிகாரம் பட்டிலயலிட்டுள்ளது அதின் நான் ஒன்றை குறிப்பிடுகிறேன் நீங்கள் ஒன்றை குறிப்பிடுகிறீர்கள். அவ்வசனத்தில் "பகை" என்ற வார்த்தை இருமுறை வருகிறதல்லவா?
அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி.
இத்தோடு இயேசு செய்துமுடித்த ஒருகாரியம் முடிவடைந்து விட்டது.இங்கு குறிப்பிட்டுள்ள "பகை" தாங்கள் குறிப்பிடும் நியாயப்பிரமாணம் என்னும் பிரிவினை சுவரை குறிக்கும் பகையாகும். அதை கொல்லவில்லை "தகர்த்தார்".
(சாத்தானால் உண்டாகி தேவனுக்கும் நமக்கும் இடையே இருந்த) பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
இரண்டாவதாக நான் குறிப்பிடும் அவர் சிலுவையில் கொன்ற பகை என்பது நம்மை தேவனோடு ஒப்புரவாக்க தடையாக இருந்த சாத்தானால் உருவான ஆதி பகை ஆகும். அதை சிலுவையில் கொன்றபிறகே எல்லோரும் அவரோடு ஒப்புரவாகும் சிலாக்கியத்தை பெற்றுள்ளோம் என்பது என்னுடைய புரிதல்.
தங்கள் பார்வைக்கு ஒருசில பகையை மட்டும் இயேசு கொன்றது போல் தெரிகிறது! ஆனால் எனது பார்வைக்கு ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை மரணம் மிகுந்த மாத்துவம் வாய்ந்ததும் அது எல்லாபகையையும் சிலுவையில் கொன்று சகலத்தையும் செய்து முடித்திருக்கிறது என்றும் கருதுகிறேன்!
-- Edited by SUNDAR on Monday 3rd of January 2011 03:04:03 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)