இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதிமான் முன்னால் வைக்கப்படும் இடறல்கள் !


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நீதிமான் முன்னால் வைக்கப்படும் இடறல்கள் !
Permalink  
 


பெருமையால் பீடிக்கப்பட்டு தேவனால் "ஆகாதவன்" என்று தள்ளப்பட்ட  தந்திரக்காரனாகிய சாத்தான், நல்லவன்போல்  வேஷம் போட்டு/ மாய்மாலம் செய்து குறுக்கு வழியில் எப்படியாவது தேவனின் நித்திய ராஜயத்துக்குள் பிரவேசித்துவிடலாம் என்று முயலுவதால், நமது தேவன் நீதிமான்களுக்கு முன்னால்கூட பல்வேறு தடுக்கல் கல்களை/ இடறல்களை வைத்து ஒவ்வொருவரின்  பரிசுத்த நிலையையும்  பரிசோதனை செய்கிறார்.
 
எசேக்கியேல் 3:20 அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்
 
எரேமியா 6:21 ஆகையால் இதோ, நான் இந்த ஜனத்துக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் பிதாக்களும், பிள்ளைகளும், குடியானவனும், அவனுக்கடுத்தவனும், ஏகமாய் இடறுண்டு அழிவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
தேவனால் வைக்கப்படும்  இந்த இடறல் கல்லில் இடறி காணாமல் போகிறவர்களே அதிகமேயன்றி அதில் வெற்றிபெற்று  ஜெயிப்பவர்கள் மிக சொற்பமே! அவர்களே ஜீவனுக்கு போகும் குறுகிய வாசலை கண்டுபிடிப்பவர்கள்!
 
இவ்வாறு நீதிமான்களுக்கு முன்னால் வைக்கப்படும் இடறல்களை பற்றி அறிந்து கொள்வது அநேகருக்கு  எச்சரிக்கையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதால் நமக்கு தெரிந்த சில இடறல்களை பற்றி  இங்கு ஆராயலாம்  
 
1. உலகில்  உள்ள  எல்லா  நீதிமான்கள்  முன்னாலும்  வைக்கப்பட்டுள்ள  இடறல்.  
 
இன்று உலகில் உள்ள  அநேகர்  விழுந்து சிக்குண்டு பிடிபடும்படிக்கு எல்லோர் முன்னாலும் தேவனால் வைக்கப்பட்டுள்ள இடறல் கல் நமது  ஆண்டவராகிய இயேசுவே!
 
ரோமர் 9:33 இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை
 
ஆம்! ரட்சிப்பை பெற  ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்ற தேவனின் கட்டளையே உலகில் உள்ள எல்லா புரஜாதியினருக்கு முன்னாலும் வைக்கப்பட்டிருக்கும் இடருதலுக்கான கல்!  இயேசு என்னும்  அந்த தடுக்கல் கல் அவர்களின் நேர்மையை சோதிப்பதற்காக அல்ல, அவர்களின் கீழ்படிதலையும் தாழ்மையையும் விட்டுகொடுக்கும் தன்மையையும் ஆராய்வதற்கே தேவனால் வைக்கப்பட்டுள்ளது!    எந்த சிரமமும் இல்லாமல் இலவசமாக கிடைக்க கூடிய
"இயேசுவை  விசுவாசித்தல்" என்று சொல்லப்படும் இடறுதல்கல்  எதற்காக எல்லா புரஜாதியினர் முன்னும் வைக்கப்படுகிறது என்பதை நாம் மூன்று காரணங்கள் அடிப்படையில் ஆராயலாம்.
 
1. மனிதன் தன் சுயநீதியால்/பெலத்தால்  எதையும் சாதித்துவிட முடியாது
 என்பதை உணர்த்த!  
 
இன்று புறஜாதி ஜனங்களில்   நீதி  நேர்மையாக நடப்பவகள் அநேகரை பார்க்க முடியும். அவர்கள் தங்கள் நேர்மையிநிமித்தம் மேட்டின்மை அடையாதபடிக்கும்
தங்கள் நீதியினிமித்தம் தங்களை
உயர்த்ததபடிக்கும் ஆண்டவராகிய இயேசுவை "சொந்த  ரட்சகராக" ஏற்ப்பதன் மூலம் மட்டுமே ரட்சிப்பை பெறமுடியும் என்ற தடுக்கல்கல் அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது. 
 
ஆதியில் தேவன் ஆதாம் ஏவாளை படைத்தபோது அவர்களுக்கு தேவையான அனைத்தையும் குறையின்றி உருவாக்கி கொடுத்து, அவர்கள் தன்னையே சார்த்து வாழவேண்டும் என்று எதிர்பார்த்தார். அதாவது ஒரு சிறு பிள்ளையானது எப்படி எந்த ஒரு தேவை என்றாலும் தன் பெற்றோரையே கேட்கிறதோ அல்லது பெற்றோரை நம்பி தனது எதிர்காலத்தைபற்றிய அச்சமின்றி இருக்கிறதோ அது போல் ஒவ்வொரு மனிதனும் தன்னை சார்ந்து வாழவேண்டும் என்று தேவன் எதிர்பார்த்தார். இன்றும்கூட தேவன் பரலோகராஜ்யத்துக்கான தகுதியாக அதையே எதிர்பார்க்கிறார்  
 
மத்தேயு 18:3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஆனால் மனிதனோ, ஆண்டவரை விட்டு விலகி தன் சுய பலத்தை அல்லது சுய தெரிவையே  நம்பி வாழும் வாழ்வையே  தேர்ந்தேடுத்துகொண்டான் தேவனும் அவனுடன் போராடாமல்  விட்டுவிட்டார் ஆனால்  துன்பம், துயரம், நோய் நொடி கவலை, கண்ணீர், மரணம் அனைத்துமே இந்த பூமியை ஆட்கொண்டுவிட்டது.  எந்த ஒன்றுக்கும் நிரந்தர தீர்வில்லாமல் எல்லோருமே கலங்கி நிற்கும் நிலை ஏற்ப்பட்டது.  
 
இந்நிலையில் தேவன் தரும்  நித்திய வாழ்வை பெறவேண்டுமெனில்  மனிதன் தனது தவறை உணரவும், தேவனின்றி  தனது சுயநீதியால் தனது சுயகிரியையால் பெலத்தால்   எதையுமே சாதித்துவிட  முடியாது என்பதை உணரவேண்டும் என்ற
காரணத்துக்காக "இயேசுவை ரட்சகராக    ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று ஒரே ஒரு கட்டளையை மாத்திரம் அவன்  முன்வைக்கிறார். 
அதை அறிந்து தங்களின் தவறை உணர்ந்து எவரொருவர் எந்த நிபந்தனையுமின்றி  இயேசுவின்மேல் விசுவாசம் வைக்கிறாரோ  அவர்  தேவனுடைய பிள்ளையாகும்   அதிகாரம் பெறுகிறார்கள்!  
 
யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்  எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

ஆனால் எந்த ஒரு மனிதன்  இயேசுவின் தியாகத்தை அசட்டை செய்து தனது சுயநீதியையும் தனது சுயபெலத்தையும் நம்பி போகிறானோ அவன் தேவனால் வைக்கபட்ட இந்த இடருதலுக்கான கன்மலையாகிய இயேசுவில் இடறி  ஜீவனை காணாதே போகிறான்!  
 
 
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்.................


-- Edited by SUNDAR on Thursday 23rd of December 2010 11:38:33 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

நீதிமான்களின் முன்னால் இயேசுவை விசுவாசிக்கவேண்டும் என்ற தடுக்கல் கல் ஏன் வைக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தை ஆராய்ந்து வருகிறோம்  
 
2. மனிதனின்  பிடிவாத  குணத்தை  தகர்க்க!
 
எந்த ஒரு மனிதனுக்குமே தன்னுடைய கருத்துதான் சரி என்றும் தான் அறிந்து கொண்டதுதான் உண்மை என்றும் எண்ணம் இயல்பாகவே இருக்கும். பிறரின் கருத்துக்களில் உண்மை இருந்தாலும் அதை ஏற்க்க மனம்வராது. காரணம் தான் அறிந்ததைவிட மேல் எதுவும் இருக்கமுடியாது என்றொரு சுயபெருமையும் பிடிவாதமுமே இதற்க்கு காரணம். ஆண்டவர் மனிதனிடம் எதிர்பாப்பதோ "ஒரு சிறு பிள்ளைபோல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது!"
 
லூக்கா 18:17 எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது எனது தாயார் பல கதைகள் சொல்வது உண்டு கொஞ்சமும்  உண்மை இல்லாத மாயாவி கதைகளைப்போல் இருக்கும் அந்த கதைகளை கூட உண்மை என்று எண்ணி அதை நம்பிய நாட்கள் உண்டு. அதேபோல் தேவனை பற்றிய உண்மைகள் மனித அறிவால் ஏற்றுக்கொள்ள முடியாத அனேக உண்மைகள் நிறைந்தவை அவரை  அறிவதற்கும் மனதில் ஒன்றுமே இல்லாத வெற்றுதன்மை இருந்தால் மட்டுமே  தேவன் தன்னுடைய கருத்துக்களால் அந்த மனதை  நிரப்பபமுடியும். ஏற்கெனவே நிரம்பியிருக்கும் ஒரு பத்திரத்தில் எவ்வளவு தண்ணியை ஊற்றினாலும் அது வேஸ்டாக போவது போல் ஏற்கெனவே பலவித கருத்துக்கள் அனுமானங்கள் இதுதான் உண்மை என்ற தத்துவங்கள் எனக்கு எல்லாம் தெரியும்  என்ற அகங்காரம் மற்றும் எதையும் செவிகொடுத்து கேட்க மனமில்லாத தன்மை, எல்லாவற்றிலும் பிறரை குற்றம்கண்டுபிடிக்கும் மனப்பாங்கு போன்றவைகளால் நிறைந்துள்ள மனதுக்குள் தேவன் எந்தஒரு கருத்தை புகுத்த நினைத்தலும் அது ஏற்றுக் கொள்ளபட்டாமல் வழிந்து வீணாகத்தான் போகும்.
 
எனவே தன்னை பற்றிய உண்மைகளை அறிய ஒரு மனிதன் திறந்த மனதோடும் தனது கருத்துக்கள் அனைத்தையும்  விட்டுகொடுக்கும்  பக்குவத்துக்குள் வர வேண்டும் என்று தேவன் எதிர்பார்ப்பதால், ஆண்டாண்டு காலமாக தங்கள் பரம்பரையில் ஊரிப்போன  பழைய கதைகளை விட்டு வெளியில் வந்து இரட்சிப்பை பெற  "ஆண்டவராகிய இய்சுவை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்ற ஒரு இடரலை எல்லோர் முன்னாலும் தேவன் வைக்கிறார்.
 
இன்றைய உலகில் எந்த ஒருமதத்தை சேர்ந்தவர்களும் பிற மதத்தவரை மிகுந்த பிரயாசத்துடன் தெரு தெருவாக அலைந்து பணம் செலவழித்து "எங்கள் தெய்வத்தை ஏற்றுக்கொள்" என்று போதிப்பது கிடையாது.. எந்த மதத்தை சேர்ந்தவர்களும் பிறருடைய துன்பத்தை தன் துன்பம்போல் பாவித்து கண்ணீருடன் தேவனிடம் மற்றாடுவது  கிடையாது. எந்தஒரு மதத்தினரும் "ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொள் அது ஓன்று மட்டுமே உன்னை நித்தயத்துக்கு அழைத்து செல்லமுடியும்" என்ற சுலபமான இரட்சிப்பை போதிப்பது கிடையாது அடுத்த்து  எந்த மதத்தில் உள்ள தெய்வமும் "உனக்காக நான் மரித்தேன், உன்மேல் வரவிருந்த ஆக்கினையை நான் தாங்கினேன்" என்று சொல்வதும் கிடையாது. இறுதியாக எந்த தத்திலும் தேவனின் வழி நடத்துதலை நாமே  அனுபவபூர்வமாக அறிந்துஉணரும்படிக்கு  தேவனால் அனுப்பபட்டிருக்கும் "பரிசுத்த ஆவி" என்னும் தேற்றவாளரின் வழி நடத்துதல் கிடையாது.  இப்படி எல்லாவிதத்திலும் ஒருவேறுபட்ட கருத்தை உடையதாகவும் அனேக  உயிரோட்டமுள்ள உண்மை சாட்சிகளை  தன்னுள் கொண்டதும், பாவிகளுக்கும் வேசிகளுக்கும் எல்லோருக்காகவும் மனதுருகும் தெய்வமான "இயேசுகிறிஸ்த்து" என்னும் மரித்து உயிரோடு எழுந்த தேவனை கொண்டதும் எந்த மதமும் கிடயாது.
 
இவ்வளவு வேறுபாட்டை கண்கான கண்டும் தங்கள் பிடிவாத குணத்தை தளர்த்தி ஆண்டவராகிய இயேசுவை சொந்த ரட்சகராக  ஏற்றுகொள்ள மனதில்லாமல் இருப்பவர்கள் நிச்சயம் பரலோக ராஜ்யத்து தகுதியற்றவர்களாகவே  இருக்க முடியும் என்பது தேவனின் தீர்மானம் 
 
இவ்வாறு மனிதனின் விட்டுகொடுக்கும் தன்மையை சோதித்து அறிவதற்காக "இயேசுவைபற்றிய சுவிசேஷம் ஒரு இடறுதல்கல்லாக எல்லா மத நீதிமான்கள் முன்னாகவும் வைக்கப்படுகிறது"
 
எபிரெயர் 2:4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன்தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.


கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்.................


-- Edited by SUNDAR on Wednesday 5th of January 2011 11:38:07 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard