இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எபிரேய உருவக மொழிகளை அறிந்து கொள்ளுதல்


இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
எபிரேய உருவக மொழிகளை அறிந்து கொள்ளுதல்
Permalink  
 


நூல்  :- வேதாகமப் பிண்ணனி
ஆசிரியர்கள்  :- யோசுவா போல், எஸ். பேர்னாட்ஷன்
வெளியீடு  :- இலங்கை வேதாகமக் கல்லூரி

எபிரேயருடைய பேச்சு வழக்கில் உருவக மொழிகள் முக்கியனமான இடத்தினைப் பெற்றிருந்தன என்பதை நாம் வேதாகமத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இவ்வுருவக மொழிகளை எபிரேய பின்னணி என்பதன்டிப்படையிலும் அதனை அவர்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டனர் என்பதன் அடிப்படையில் புரிந்துக்கொள்ளும்போது அவற்றின் சரியான அர்த்தத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச்சொன்னால் முடவனுக்குக் கோபம். எனும் உருவக மொழியினை தமிழ்ப்பின்னணியில் விளங்கிக் கொள்ளும்போதே அதன் சரியான அர்த்தம் கிடைக்கின்றது. அவ்வகையில் எபிரேய உருவக மொழிகளை எபிரேயப் பின்னணியில் விளங்கிக் கொள்ளும்போது சரியான அர்த்த்த்தினைப் பெற்றுக் கொள்வதோடு அவற்றைக் குறித்த தவறான எண்ண அலைகளையும் தவிர்த்துக் கொள்ளலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

1. மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு (நீதி 19.13)
பாலஸ்தீனாவில் வீட்டுக்குக் கூரை அமைக்கும் முறையை கவனத்திற் கொள்ள வேண்டியது  அவசியமாகும். அக்காலத்தில் பலஸ்தீனாவில் வீட்டுக்குக் கூரை அமைக்கும்போது நெடுக்காக மரக்கம்புகளை வைப்பதோடு  அதனிடையே களிமண் என்பவற்றை வைத்தே கூரைகளை அமைப்பர். “வெயில் காலத்தில் இதில் வெடிப்புகள் ஏற்படும். எனவே மழை பெய்யும்போது மழைநீர் மரக்கம்புகளிடையே சென்று கூரை ஒழுக்க்கூடிய சூழ்நிலை உருவாகத் தொடங்கும். இவ்வொழுக்கானது மழை பெய்யும்போது மட்டுமல்ல. மழை ஓய்ந்த பின்னரும் கூரையின் இடுக்குள்ளிருக்கும் மழைநீர் ஒழுகிக் கொண்டேயிருக்கும். சண்டைக்காரியான மனைவியும் குடும்பவாழ்வில் ஓயாது ஒழுகும் கூரைக்கு சமனான இருக்கிறாள் என்பதே நிஜமாகும்.


2. ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்  (மத் 19.24, லூக் 18.25)
இது குறித்த இருவிதமான கருத்துக்கள் உண்டு.
1. ஒரு சாரார் கிறிஸ்து நேரடியாக ஒட்டகத்தையும் ஊசியையுமே குறிப்பிடுகின்றார் என்றனர்.
2. மற்றயை சாரார் கூறுவது யாதெனில் அக்காலப் பட்டண வாசல்களில் “ஊசியின் கண்“ எனப்படும் சிறிய வாசலும் காணப்படும். ஒட்டகத்தின் மீதேறி வருகின்றவர்கள் வந்த வண்ணமாகவே ஊசியின் கண்ணாகிய சிறிய வாசலினூடாக செல்ல முடியாது. ஒட்டகதினை அமரச் செய்து அதன் பின்னாக தள்ளியவாறே அச்சிறிய வாசலினூடாக ஒட்டகத்தினை கொண்டு செல்ல முடியும். எனவே கிறிஸ்து குறிப்பிடுகின்ற ஊசியானது இந்த ஊசியின் கண்ணாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.
கிறிஸ்து எதனை நினைவில் கொண்டு கூறினார் என்பதனை விட இதற்கூடாக என்ன கருத்தினை முன்வைக்கிறார் என்பதே அவசியமாகும். உண்மையில் நிஜமான ஊசியின் கண்ணின் ஊடாக ஒட்டகம் நுழைவது மனித அறிவிற்கு அப்பாற்பட்டது. அதாவது மனிதனால் இது கூடாது. ஆனால் தேவனால் எல்லாம் கூடும். (மத். 19.26) என்பதனை நாம் மறந்துபோக கூடாது. மனிதனால்(ஐசுவரியவானால்) தன்னைத் தானே இரட்சித்துக் கொள்ள முடியாது. ஆனால் தேவன் அவனை இரட்சிப்புக்கு நேராக வழி ந்டத்துவாரெனில் அவனால் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அவ்வாறே ஒட்டகம் ஊசியின் கண் எனும் சிறிய வாசலினூடாக செல்ல முடியாது. ஆனால் அதனை அமரச் செய்து பின்னிருந்து தள்ளும்போது அதாவது ஒரு மனிதனுடைய வாழ்வில் பின்னருந்து பரிசுத்த ஆவியானரான தேவன் கிரியை செய்யும்போது இரட்சிப்பென்னும் வாசலினூடாக அம்மனிதனால் செல்லமுடியும். மனிதன் தன்னைத் தானே இரட்சித்துக் கொள்வதை அவனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது, ஆனால் தேவனால் மட்டும் கூடும என்பதை மறுப்பதற்கில்லை. இதில் 2வது கருத்தினையே பொதுவாக ஏற்றுக்கொள்வர்.

3. குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள் (மத் 23.24)
அக்காலப்பகுதியில் மக்கள் திராட்சை ரசத்தினைக் குடிக்கும்போது அதற்குள் கொசுக்கள் காணப்பட்டால் அத்திராட்சை ரத்தினை வடிகட்டி கொசு இல்லாது குடிப்பது வழக்கமாகும். பரிசேயர் வேதபாரகரும் கூட இதற்கு விதி விலக்கில்லை. கிறிஸ்து இதற்கூடாக முன்வைப்பது என்னவெனில் பரிசேயர் ஒற்தலாம், வெந்தாயம், சீரகம் போன்றவற்றில் தசமபாகம் கொடுப்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதேயளவு முக்கியத்துவத்தை ஏனைய கட்டளைகளுக்கும் கொடுக்க வேண்டும். தசமபாகத்தினை மட்டும் செலுத்துவதால் முழு நியப்பிரமாணத்யும் நிறைவேற்றிவிட்டோம் என காண்பித்த பரிசேயருக்கு கிறிஸ்துவின் செய்தி யாதெனில் நியாயப்பிரமாணத்தில் நீங்கள் நிறைவேற்றியது கொசுவளவு நிறைவுற்றாத்து ஒட்டகத்தினளவு. எனவே, தேவநீதியையும் இரக்கத்தையும் விசவாசத்தினையும் கூட கைக்கொள்ள வேண்டும் என்பதனையும் கிறிஸ்து எடுத்துரைக்கிறார்.

4. நாளைக்கு அடுப்பில் போடப்படும் காட்டுப்புல்லுக்கு (மத் 6.30)
இயேசுக்கிறிஸ்துவின் கூற்றுக்களிடையே அறிவீனமானதாக்க் கருதப்படுவது அவர் காட்டுப்புல்லைப் பற்றி கூறிய விடயமாகும்.
அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு  அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? (மத் 6.30)
என்று வாசிக்கின்றோம். புற்களை எவரும் அடுப்பில் போடுவதில்லை எனக் கூறும் வேதவிமசகர்கள் அடுப்பைப் ப்ற்றி கூட சரியாக அறிந்திராத இயேசு புற்களை அடுப்பில் போடுவதாக அறிவீனமாக உளறியுள்ளார் எனக்கூறுகின்றனர். எனினும் இவர்களது விமர்சனமே அறிவீனமாக உள்ளது. ஏனென்றால் இயேசுவின் கூற்றுக்களை அறிவீனமானவை எனக் கூறுபவர்களே இயேசு வாழ்ந்த பிரதேசத்தைப் பற்றிய அறிவற்றவர்களாக அவரைப் பற்றி விமர்சித்துள்ளனர். இயேசு வாழ்ந்த பிரதேசத்தில் காயவைக்கப்பட்ட காட்டுப் புற்கள் அடுப்புகளுக்கு எரிபொருட்களாக உபயோகிக்கப்பட்டன. காய்ந்த புற்களையும் வாடிய மலர்களையும் சிறுகட்டுகளாக கட்டி அடுப்புகளுக்கு எரிபொருளாக அக்கால மக்கள் உபயோகித்தனர். முட்செடிகளும் சிறுகுச்சிகளும் இவ்விதமாக அடுப்புக்கான எரிபொருட்களாக உபயோகிக்கப்பட்டன. இன்றும்கூட மத்தியகிழக்கு நாடுகளில் வெதுப்பகங்களில் காட்டுப்புற்கள் எரிபொருட்களாக உபயோகிக்கப்படுகினறன. எனவே இயேசுவின் கூற்று அறிவீனமான தொன்றல்ல.  மாறாக அவர் காட்டுப் புற்களின் தற்காகலிக நிலையை அதாவது அவை கொஞ்சகாலம் மட்டுமே உலகிலிருக்கும் உண்மையை இக்கூற்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

5. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? (மத் 5.13, மாற் 9.50, லூக் 14.34)
உப்பானது சாரமற்றுப் போகாது என்பதால் இயேசு உப்பைப்பற்றி அறியாதவராக ஒரு தவறான விளக்கத்தைக் கொடுத்துள்ளார் என இன்று பலர் கருதுகின்றனர். உண்மையில் இயேசு உப்பின் தன்மையை அறியாதவராக அப்படி கூறவில்லை. இன்று உற்பத்தி செய்யப்படுவதுபோல் இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீனாவில் உப்பு தயாரிக்கப்படவில்லை. பாலஸ்தீனாவில் உப்பைப் பெறுவதற்கு கடல்நீரை ஆவியாக்க வேண்டியதாய் இருக்கவில்லை. ஏனென்றால் உப்பைப் பொறுக்கிக் கொள்ளக் கூடிய அளவிற்கு கடற்கரையில் உப்புக் கற்கள் இருந்தன. உண்மையில் கடற்கரையோரங்களில் இருக்கும் சதுப்புமண்ணில் அல்லது நிலத்திலிருந்தே உப்பு எடுக்கப்பட்டது. பலஸ்தீனாவுக்கு சாக்கடல் பிரதேசமே உப்பளமாக இருந்தது. இப்பகுதியில் பல உப்புமலைகளும் இருந்தன. எனினும் இப்பிரதேசத்து உப்பில் வேறு கனிமபொருட்களும் கலந்தே காணப்பட்டன. இத்தகைய கலப்பு உப்பில் பிற கனினப்பொருட்கள் அதிகமாக இருக்கும்போது நாளடைவில் உப்புத்தன்மையானது இல்லாமல் போய்விடும். அதாவது உப்பிலிருக்கும் சோடியம் குளோரைட் எனும் கனிப்பொருளானது ஏனைய கனிமப்பொருட்களினால் உறிஞ்சிக் கொள்ளப்பட்டு உப்பு சாரமற்றுப் போய்விடும். இதனடிப்படையில் கிறிஸ்துவின் கூற்று சரியானதேயாகும். உப்பு சாரமற்றுப் போனால் அதனை மீண்டும் சாரமாக்க முடியாது. அதனால் அதனால்தான் வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற் குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது என்றார். அத்தோடு அது நிலத்திற்கா கிலும் எருவிற்காகிலும்  உதவாது என்றும் குறிப்பிட்டுள்ளார் (லூக் 14.35) இன்றும்கூட எகிப்தில் உப்பு ஒருவகையான எருவாக உபயோகிக்கப்படுகின்றது. உப்பானது உப்புத் தன்மையுடனே இருக்க வேண்டும். அது உப்பின் தன்மை இழந்துபோனால் பிரயோசனமற்றதாகிவிடும். இஸ்ராயேல் ராஜ்யம் ஏனைய ராஜ்யங்களுக்கு ஆசிர்வாதமாயிருக்கும் தன்மையை இழந்துபோனதை வர்ணிக்கும் ஒரு உருவகமாக சாரமற்ற உப்பை யூதமதப் போதகர்கள் உபயோகித்தனர். இதேவிதமாக உலகிற்கு உப்பாயிருக்கும் கிறிஸ்தவர்களும் தமது கிறிஸ்தவ தன்மையை இழந்துபோனால் எதற்கும் பிரயோசனமற்றவர்களாகவே இருப்பார்கள் என்பதையே இயேசுக்கிறிஸ்து இவ்வசனத்தில் விளக்கியுள்ளார். மேலும் நீங்கள் உலகிற்கு உப்பாயிருக்கிறீர்கள் என்பதை உப்பின் குணங்களின் அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ள வேண்டும்.  உப்பு உணவினைச் சுவையூட்டக்கூடியது. எனவே நமது வாழ்க்கை கிறிஸ்துவை மற்றவர்கள் சுவைக்கும்படியாக காணப்படவேண்டும். உப்பு அழுகிப்போகும் பொருட்களை நீண்டநாட்கள்  பாவனைக்குரிய பொருட்களாக (கருவாடு, மரக்கரி வற்றல்) மாற்றுவது போல் நாமும் அழிந்துபோகும் மக்களை நித்தியத்திற்குள்ளாக ஆதாயப்படுத்த வேண்டும் அத்தோடு உப்பு தாகத்தை ஏற்படுத்துவதுபோல நாமும் கிறிஸ்துவைப் பற்றிய தாகத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். 

(அடுத்த பதிப்பில் நிறைவுறும்)




-- Edited by colvin on Friday 31st of December 2010 10:13:31 AM


-- Edited by colvin on Friday 31st of December 2010 10:14:36 AM

__________________
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. (Ps 42:1)



இளையவர்

Status: Offline
Posts: 21
Date:
Permalink  
 

6. உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப் போடுங்கள். (மத் 10.14)
இயேசுக்கிறிஸ்து தனது சீடர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது ”எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளா மலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்” இது அக்காலப் பிண்ணனியில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். யூதர்கள் வழமையாக புறஜாதியருடைய பட்டணங்களுக்கூடாக பிரயாணம் செய்திருந்தால் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிவரும்போது தமது கால்களில் படிந்துள்ள தூசியை நகர எல்லையில் உதறிப் போடுவார்கள். யூதர்கள் புறஜாதியாரை அசுத்தமானவர்களாக கருதியமையால் அவர்கள் வாழும் இடங்களும் அசுத்தமானவையாக கருதினர். இனால் அவர்களின் பட்டணங்களினூடாக செல்லும்போது அப்பிரதேச மண்ணில் பட்ட தமது கால்களை அசுத்தமாகிவிட்டதாகக் கருதி தம்மை சுத்திகரிக்க இவ்வாறு செய்தனர். சில சந்தர்ப்பங்களில் தாம் அணிந்திருக்கும் ஆடைகளையும் உதறுவர். யூதர்கள் புறஜாதியினரை அசுத்தமானவர்களாகவும் இறை இராஜ்யத்திற்குப் புறம்பானவர்களாகவும் கருதினர். ஆனால் இயேசுவின் பார்வையில் நற்செய்தியினை நிராகரிப்பவர்களே அசுத்தமானவர்களாகவும், இறை இராஜ்யத்திற்குப் புறம்பானவர்களாகவும் இருந்தனர். இதன்மூலம் யூதர்கள் எப்படி புறஜாதியினரை நடத்தினார்களோ அதேவிதமாக நற்செய்தியினை நிராகரிப்பவர்களிடம் நடத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். அத்தோடு இயேசுவின் அடுத்த வசனத்தின் அடிப்படையில் இது ஒரு தீர்க்கதரிசன அடையாளச் செயலாகவும் உள்ளது. அதாவது நற்செய்தியினை நிராகரிப்பவர்கள் மீது வரவிருக்கும் தண்டனையை அறிவிக்கும் ஒரு அடையாளச் செயலாக உள்ளது. .

7. உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? 4)

அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?(லூக் 11.11-12)
அடுப்பின் எரிபொருட்களாக காய்ந்த புல் (மத் 6.30) முட்செடிகள் (பிர 7.6) போன்றன பயன்படுத்தப்படும். இவ்வாறு அப்பஞ்சுடும் கல்லை சூடாக்கி அப்பத்தினை சுடும்போது அடுப்பின் சாம்பல், தூள்கள் காரணமாக அவை அப்பத்தின் மீது படிவதனால் அப்பம் நிறம்மாறி கூழாங்கல் வடிவத்திலேயே காணப்படும். அத்தோடு பலஸ்தீனாவிலுள்ள தேள்கள் வெண்மையாகவும் முட்டை வடிவத்திலேயும் சுருண்டு காணப்படும். இப்படியிருக்கும்போது பொல்லாதவர்களாகிய (அதி 6.5, சங். 51.5) மனிதர்களே தமது பிள்ளைகளை ஏமாற்றாது நல்ல ஈவுகளைக் கொடுக்கும்போது இறைவனை நோக்கி உண்மையாக வேண்டுதல் செய்பவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் மூலமான நன்மையான ஈவுகளை (மத் 7:11, லூக் 11:13 அவர் கொடுப்பது அதிக நிச்சயம் என்பதை மறுப்பதற்கில்லை

9. இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைக்கிறேன். அதை ஒருவனும் பூட்டமாட்டான் (வெளி. 3:8)4)

பாலஸ்தீன வீடுகளின் கதவுகள் காலையிலிருந்து மாலைவரை திறந்தவாறே காணப்படும். வீட்டில் இல்லாத பட்சத்திலும் இரவு வேளைகளில் மட்டுமே கதவுகள் பூட்டப்பட்டிருக்கும். வீட்டின் கதவு திறந்திருந்தால் வீட்டுக்காரர்கள் இருக்கிறார்கள் என்றும் நாம் சென்று அவர்களோடு உரையாடத் தடையில்லை என்பதும் நி்ச்சயமானதாகும். இதனூடாக நாம் அறிந்து கொள்வது யாதெனில் நாம் தேவனிடம் செல்வதற்கு அவரது வாசல் எப்போதுமே திறந்திருப்பது மட்டுமல்ல அவர் எவ்வேளையிலும் நம்மை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறார். எனவே நாம் தேவனை எப்போதும் சந்தித்து உரையாடலாம்.


10. ஒருவனும் கோடித்துண்டை பழைய வஸ்திரத்தோடே இணைக்க மாட்டான் (மத் 9:16)4)

கோடித்துண்டானது ஒருமுறையாவது துவைக்கப்படாத புதிதான சேலைத் துணியைக் குறிக்கும். பழைய துணியிலுள்ள கிழியலை மறைப்பதற்காக புதிய துணியை இணைப்பர். அப்பழைய துணியினை துவைத்த பின் அதில் இணைத்த புதிய சேலைத் துணியானது சுருங்கும். அப்போது முன்பிருந்ததை விட அதிகமான கிழியல்கள் பழைய துணியில் உண்டாகும்.

கிறிஸ்து இதனை ஏன் கூறினாரென்பதை சற்று நோக்குவோம். ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு முன் உபவாசமிருக்க வேண்டும் என்பது பரிசேயரது போதனையாயிருந்தது. எனவேதான் யோவானது சீஷர் இயேசுவிடம் வந்து உம்முடைய சீஷர்கள் உபவாசியாமலிருப்பது என்ன எனக் கேட்டார்கள். எனவே கிறிஸ்து பரிசேயரது போதனையை நிராகரித்து இரட்சிப்பிற்காக உபவாசமிருப்பதல்ல. மாறாக இரட்சிக்கப்பட்ட பின்பே உபவாசமிருக்க வேண்டும் (மத் 9:14)எனக் கூறுவதோடு பரிசேயரது போதனையையும் தனது போதனையையும் எவ்விதத்திலும் இணைக்கவோ இல்லது இணையாக கைக்கொள்ளவோ முடியாது என்ற கருத்துப்படக் கூறினார். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. கிறிஸ்துவின் போதனையை மட்டுமே நாம் கைக்கொள்ள வேண்டும். அதன் மூலமே இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.

11. ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.(Luke 9:59)4)

இயேசுக்கிறிஸ்து ஒருவனைக் கண்டு தன்னைப் பின்பற்றி வரும்படி கூறியபோது ஒருவன் அவருக்கு கொடுத்த பதிலே மேலே கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே அவன் தகப்பன் மரித்திருக்கவில்லை. அம்மனிதன் கூறிய சாட்டுப்போக்கிற்காகவே இக்கூற்று உள்ளது. வேலைக்கள்ளிக்குப் “பிள்ளை சாட்டு என்பது போல“ இதனையும் எடுத்துக் கொள்ளலாம்.


Reference:
1. இராபின்சன் ஞான. இஸ்ரவேலரின் வரலாறு இரண்டாம் பாகம் மதுரை – மதுரை கிறிஸ்தவ இறையியில் நூலோர்
குழு, 1965
2. வசந்தகுமார், எம்.எஸ், புனித வேதாகமத்தின் புனித வரலாறு. கண்டி, இலங்கை இலக்கிய சேவை, இலங்கை
வேதாகமக் கல்லூரி, 1996
3. செனஞானம், கா.தா, புதிய ஏற்பாட்டு அறிமுகம், மதுரை, கிறிஸ்தவ இறையில் நூலோர் குழு, 1996
4. டெனி, மெரில் சி. புதிய ஏற்பாட்டு அறிமுகம்(மொழிமாற்றம்) பேராதனை: இலங்கை வேதாகமக் கல்லூரி
வேதவியாக்கியான பிரிவு
5. Alexander, Pat The Lion Encyclopedia of the Bible, England : The Lion Publication, 1978
6. David. The Lion Hand Book to the Bible England : The Lion Publication, 1973
7. Gleason L. Archer, A Survey of Old Testament Introduction (Revise and Exampled) Chicago : Moody Press, 1994
8. Freeman, James M, Manners and Customs of the Bible. New Jersey. Logos International, 1972


-- Edited by colvin on Friday 31st of December 2010 10:16:08 AM

__________________
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. (Ps 42:1)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard