மேலேயுள்ள தலைப்பின் அடிப்படையில் சில சத்தியங்களை தியானிப்பது மிக மிக அவசியமும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று கருதுகிறேன்.
மனிதன் என்பவன் ஆவி - ஆத்துமா - சரீரம் இவற்றின் தொகுப்பு
ஆவி ஆவி என்பது தேவன் தந்த ஆவியை குறிக்கிறது. தேவன் தந்த ஆவியால் தான் நாம் உயிர்வழ்கிறோம். அந்த ஆவியே நமக்கு ஜீவனை தருகிறது. ஆவியில்லை என்றால் மனிதன் என்பவன் ஒன்றுமில்லை.
நீதிமொழிகள் 20:27மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது
யோபு 27:2 , தேவன்தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,
தேவன் நம்மில் உள்ள தனது ஆவியின் மூலமே நம்மை உள்ளான வழியில் தொடர்பு கொண்டு நமது ஆத்துமாவை விடுவிக்க முயல்கிறார்.
சரீரம்:
நமது சரீரம் என்னும் மாமிசம்தான் சாத்தானின் மிகப்பெரிய தூண்டுகளம். சரீரத்தின் மூலமே சாத்தான் நமது ஆத்துமாவை ஆட்கொள்ள முயற்ச்சிக்கிறான். எப்பொழுதும் இன்பத்தையே நாடி ஓடும் இந்த மாம்ச சிந்தனை தேவனுக்கு கீழ்படிய கூடாததாக இருக்கிறது
ரோமர் 8:7மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
மாம்சம் என்பது பூமிக்கு சொந்தமானதும் தேவனுடய ராஜ்யத்தை சுதந்தரிக்க தகுதியற்றதுமாக இருக்கிறது.
ஆத்துமா:
ஆத்துமா என்பது ஒன்றுமே இல்லை! அதுதான் மனிதனை குறிக்கிறது "நான்" என்று நாம் நினைக்கும் நமது மனம் எனப்படுவது அதுதான். தேவன் நம்மை முழுமையாக ஆட்கொள்ளும்போது அந்த "நான்" என்பது காணாமல் ஒன்று மில்லாமல் போய்விடும். நமது ஆத்துமா என்பது மதில் மேல் பூனை போன்றது எந்தப்பக்கம் வேண்டுமானாலும் சாயும் தன்மையுடையது. பொதுவாக தண்ணீரை எடுத்து கொண்டால் அதற்க்கு தனி உருவமோ அல்லது நிறமோ கிடையாது அது எந்த இடத்தில் இருக்கிறதோ அல்லது எதனுடன் சேர்கிறதோ அதன் தன்மையே
பிரதிபலிக்கும். அதே போன்றதே ஆத்மா என்பது எந்த பக்கம் வேண்டுமானாலும் சாயும் தன்மை உடையது. தேவனுக்கு ஏற்ற காரியங்களை அதிகம் செய்தால் அது தேவன் பக்கம் சாயும் மாம்சத்து ஏற்ற காரியங்களை அதிகம் செய்தால் அது சாத்தான் பக்கம் சாயும்.
சுருக்கமாக சொல்லின்:
தேவன் மனிதனுக்குள்ளிருக்கும் தன்னுடைய ஆவியின் மூலம் மனிதனின் ஆத்துமாவன் தன்பக்கம் இழுத்து நித்தியத்துக்கு கொண்டு செல்ல முயற்ச்சிக்கிறார். ஆனால் சாத்தானோ தேவனின் இந்த செயலை இருட்டடித்து மனிதனுக்கு இந்த உலக இன்பங்களையும் மாம்ச இச்சைகளையும் பெரிதாக காட்டி அதன் மூலம் மனிதனின் ஆத்துமாவை கவர்ந்து, தனது இடமாகிய பாதாளத்துக்கு இழுத்தது செல்ல முயற்ச்சிக்கிறான்.
இதுதான் இந்த உலகில் நடப்பது நடந்துகொண்டு இருப்பது.
எந்த நேரமும் மாம்ச சிந்தையிலேயே வாழும் மனிதன் தேவனை விட்டு பிரிந்து சாத்தானின் கைப்பாவையாக வாழ்கிறான். இவர்களுடைய தேவன் வயிறு இவர்கள் உலக பொருட்களை சேர்ப்பதிலும் அதில் இன்பம் காண்பதிலும் அதிக ஆர்வம் காட்டி தேவனை விட்டு பிரிந்து வாழ்கின்றனர்.
யோபு 21:15 சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள்.
இவர்கள் தன்னை படைத்த தேவனை தேடுகிறது இல்லை!.கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற கருத்தில் ஏதோ தானாக இந்த பூமியில் உருவாகி விட்டோம், வாழும் வரை இன்பமாக இருபதுவே நாம் வாழ்வதன் பயன் என்று எண்ணி வாழும் அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.யோபு 21:13
இதுவே சாத்தானால் முழுவதும் ஆட்கொள்ளப்பட்ட தேவனுக்கு எதிரான நிலை
அதுவே -17 என்னும் சாத்தானின் நெகட்டிவ் நிலை!
2. மனிதனின் பயனற்ற நிலைகள்.
a) தேவனை தேடாமல் ஆனால் நேர்மையாக வாழ்பவர்கள்.
இவர்கள் தன்னை படைத்த தேவனை அறியாதவர்கள் அறிய விரும்பாத நாஸ்திகர்கள்! ஆனால் தங்கள் வாழ்வில் நேர்மையாக நடக்கவேண்டும் என்று வாஞ்சிப்பவர்கள். தேவனை விசுவாசிக்காத இவர்கள் யாருக்கும் தீங்கு செய்யாமல், பிறரை ஏமாற்றி வஞ்சிக்காமல் ஒரு சன்மார்க்க வாழ்க்கையை கொண்டவர்கள்
இவர்கள் தங்கள் சுய பேலத்தான் சாத்தானின் -17 நிலையை மேற்கொள்ள நினைத்து ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும் முழுமையான் வெற்றியை பெறமுடியாத ஒரு பயனற்ற நிலையிலியே வாழ்ந்து மரிப்பவர்கள்.
இவர்கள் தங்கள் நேர்மையான் நடத்தையின் மூலம் ஒருவேளை முன்னேறி தீய கிரியைகளை அழித்து -16, - 15, -௦14 என்ற நிலைக்கு முன்னேறினாலும் தேவ ஆவியானவரின் பெலன் இவர்களிடம் இல்லாததால் மாம்சத்தின்மூலம் சாத்தான் இவர்களை எளிதில் ஆட்கொண்டு மீண்டும் அதே - 17வது நிலைக்கு கொண்டு வந்துவிடுவான் எனவே இந்த நிலையும் எந்த பயனும் அற்ற ஒரு மதிகேடான நிலையே!
சங்கீதம் 53:1தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்....
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)