நியாயப்பிரமாண கட்டளைகளில் "பலி" என்பது ஒரு பிரதான இடத்தை பிடித்திருந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. லேவியராகமம் முழுவதும் பல்வேறு பலிகளை பற்றிய முறைமைகளும் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
நியாயபிராமண கட்டளைகள் பிறப்பதற்கு முன்னும் நோவா, ஆப்ரஹாம் போன்றவர்கள் தேவனின் இருதய நிலையை அறிந்து பலியை செலுத்தினார்கள் என்பதை நாம் வாசிக்க முடியும். இவ்வாறு ஆரம்பிக்கபட்ட பலி இறுதியாக இயேசுவின் சிலுவை பலியோடு முடிவடைகிறது.
இந்த பலிக்கான காரணத்தின் உண்மை தன்மையை அறியாததால், நமது கர்த்தராகிய தேவனை நம்ம ஊரு கருப்பசாமி / மாட சாமி/ முனியசாமி போல ஆடு மாடுகளின் பலியை பிரியத்தோடு வாங்கி அதில் திருப்தி காணும் ஒரு தெய்வமாக எண்ணிவிடும் நிலைமை ஏற்ப்பட வாய்ப்பிருக்கிறது. அதற்க்கு ஒத்த வசனங்களும் வேதத்தில் அநேகம் இருக்கிறது;:
ஆதி. 8:20,21 நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். யாத். 29:18 ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்க தகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும். லேவி. 3:16 ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது. ஏசாயா 43:23உன் ஆடுகளை தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனம்பண்ணவுமில்லை
எசேக்கியேல் 44:7 நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில்
ஆவியானவரின் துணையின்றி மேலேயுள்ள வசனங்களை படித்தால் ஒருவர் நிச்சயம் கர்த்தரை கொழுப்பையும் நிணத்தையும் உண்ணும் ஒரு தேவனாக எண்ணிவிடும் நிலைதான் ஏற்ப்படும். எனவே அந்த வசனங்கள் அடிப்படையில் கர்த்தரை பற்றிய ஒரு முடிவுக்கு வரும்முன் அவர் கர்த்தர் நம்மை பார்த்து கெஞ்சுதலோசு சொல்லும் கீழ்கண்ட வசனங்களையும் சற்று தியானியுங்கள்!
சங்கீதம் 50:13நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
ஏசாயா 1:11உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது
சங்கீதம் 40:6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரண பலியையும் நீர் கேட்கவில்லை.
சங்கீதம் 51:16பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
இவற்றேல்லாவற்றிலும்கூட "பலி அல்ல இரக்கம்தான் எனக்கு முக்கியம்" என்று இரக்கமில்லாமல் உயிரை கொல்லும் பலிக்கு நேர் எதிரான இரக்கத்தை தேவன் விரும்புவதாக கூறுகிறார்.
ஓசியா 6:6பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.
இவ்வாறு "பலியிடு" என்று சொன்ன அதே தேவன் பலியைவிட எனக்கு இரக்கம்தான் பெரியது என்று ஓர் எதிர்மாறாக காரியத்தை சொல்கிறார் என்றால் "பலி" என்பது ஏதோ நிர்பந்தத்தின் அடிப்படையில் கட்டளையானது என்பதை நாம் அறிய முடியும்.
உதாரணமாக அதிக வசதியுள்ள நான் எனது மகனிடம் எனது சாப்பாட்டு செலவுக்கு மாதம் ரூ.500௦௦/- கொடுக்கவேண்டும் என்று கண்டிப்பாக கட்டளை யிடுகிறேன். பின்னர் ஒருநாளில் அவனிடம் "என்னிடம் இவ்வளவு பணம் இருக்கையில் உன்னிடம் இதுபோல் பணம் வாங்கி நான் சாப்பிடுவேனா?" என்றொரு கேள்வியை எழுப்பினால் அதன் பொருள் என்னவாக இருக்க கூடும்? அதற்க்கு பல கரணங்கள் இருக்க கூடும்! ஆனால் நிச்சயமாக அதை வாங்கி அதில் பிழைப்பு நடத்துவதற்காக அல்ல என்பது மட்டும் உறுதி
இவ்வாறு கர்த்தரும் "எனக்கு ஆகாரமாக பலியை செலுத்து" என்று சொல்லி விட்டு, பின்னர் "நான் எருதுகளின் மாமிசம் புசித்து இரத்தம் குடிப்பேனா?" என்றொரு கேள்வியை எழுப்புகிறார் என்றால் பலியிடுதலின் அடிப்படை உண்மை என்னவென்பதை ஆவியானவரின் துணையுடன் ஆதாம்ஏவாள் காலத்தில் இருந்து தியானித்து ஆராய முயல்வோம்!
(எனக்கு மிக குறைவான நேரமே கிடப்பதால் அதிகம் எழுத முடியவில்லை மன்னிக்கவேண்டும்.கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்.......)
-- Edited by SUNDAR on Tuesday 4th of January 2011 11:09:52 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உலகத்தையும் அதில்உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்த தேவன் அதை ஆண்டுகொள்ளும்படி மனிதர்களுக்கு கைய்யளிக்கிறார்!
ஆதியாகமம் 1:28பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்
சங்கீதம் 115:16 வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.
தனக்கு கொடுக்கப்பட்ட அந்த அதிகாரத்தை சரியாக பயன்படுத்தாத மனுஷன், தேவனின் சத்துருவான சாத்தானின் வஞ்சகத்தால் இழுப்புண்டு தேவனின் வார்த்தையை மீறி தன்னிடம் இருந்த அதிகாரத்தை சாத்தானிடம் இழந்து போனான். இவ்வாறு உலகமும் அதிலுள்ளவைகள் எல்லாம் சாத்தானிடம் ஒப்புகொடுக்கப்பட்டது. சாத்தான் இந்த உலகத்தின் அதிபதியானான்.
லூக்:4இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப் பட்டிருக்கிறது;
இவ்வாறு ஆதாம், சாத்தானிடம் தனது மகிமை அனைத்தையும் இழந்தபோது, தனக்கு சொந்தமான இந்த உலகத்தில் வாழ ஆதாம் தகுதியற்றவன் என்றும், அவனை இந்த உலகிலிருந்து அகற்றும்படி தேவனின் சாத்தான் கோரிக்கை வைக்கிறான். (சூதாட்டத்தில் நாட்டை இழந்தால் நாட்டைவிட்டு வெளியேறுவதுதானே நியாயம்) இங்கு ஆதாமை உலகத்தில் இருந்து வெளியேற்ற மரணமே வழி என்ற நிலை உருவாகிறது! இப்படியொரு நிலை உருவாகும் என்பதை முன்னமே அறிந்ததால்தான் தேவன் "நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; என்றும் அதை நீ கனியை புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று கட்டளையிட்டிருந்தார்.
இப்பொழுது நீதிபரராகிய தேவன் சாத்தானின் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் அதேநேரம் "புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்" என்னும் தன்னுடைய வார்த்தையையும் நிறைவேற்றேவேண்டும் அடுத்து அதே ஆதாம் சந்ததியில் வரும் வித்தின் மூலம் சாத்தானுடைய தலையையும் நசுக்க வேண்டும்.
எனவே தேவன் சாத்தானுக்கு சொந்தமான உலகில் இருந்து ஆதாமை நீக்குவதற்கு பதிலாக அவனுக்கு ஈடாக தனது படைப்பில் பாவமில்லாத வேறொரு உயிரை நீக்குகிறார். அதுவே தற்காலிக ஜாமீன் அல்லது பலி!
இரத்தம் பாவத்தை பரிகரிக்கும்! இரத்தம் ஜீவனுக்கு கிரயமானது
என்ற தேவனின் மாறாத பிரமாணத்தின்படி கொல்லப்பட்ட ஜீவனின் இரத்தத்தால் ஆதாம் தற்காலிக பாவ மன்னிப்பு பெற்றதோடு அந்த ஜீவனின் தோல் பாவத்தால் நிர்வாணமான அவனது உடலை மறைக்கும் உடையாக தேவனால் கொடுக்க பட்டது. அதே நேரம் தேவனின் வார்த்தைப்படி அதே நாளில்தானே ஆதாம் ஆவியில் மரணத்தை சந்தித்தான்! அம்மரணம் அவனது மாம்சத்தில் நிறைவேற தொளாயிரத்து முப்பது வருஷம் ஆயிற்று! தேவனுக்கு ஆயிரம் வருடங்கள் ஒரு நாள் என்ற கணக்கில் அந்நாளிலிருந்து ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆதாம் மரித்துபோனான்.
இவ்வாறு முதல் பலி இந்த உலகில் பிரவேசித்தது! அதை தொடர்ந்து மரணமும் பாவத்துக்கு மிருகங்களை பரிகாரமாக பலிசெலுத்தி தற்காலிக விடுதலைபெரும் நிலையும் உருவானது.
தேவன் மஹா நீதிபரர்! மனிதனானாலும் சாத்தானானாலும் தூதர்களானாலும் பாரபட்ச மின்றி நியாயம் செய்பவர் என்பதை அறியவேண்டும். அவருடைய நீதியே அவருடைய சிங்காசனம்! அவருடைய பரிசுத்தமே அவரை சாத்தானை விட மனிதனைவிட வல்லமையான நிலையில் வைத்திருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு, "தேவன் சாத்தானுக்கு பயந்து இதெல்லாம் செய்தாரா" என்று அர்த்தமற்ற முறையில் கேட்க வேண்டாம்! நீதி/நேர்மை/நியாயம் இவற்றின் வலிமை என்னவென்பதை அறியாதவர்கள் வேண்டுமானால் இவ்வாறு கேட்கலாம் மற்றபடி அவர் யாருக்கும் பயந்தவர் அல்ல அனால் நீதியானவர்!
தேவனின் நியமணமாகிய "இரத்தம்சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை" என்ற பிரமாணத்தின் அடிப்படையில் பாவமில்லா ஒரு உயிருடைய இரத்தம் பாவம் செய்தவனின் பாவத்தை பரிகரிக்கிறது. அந்த இரத்தம் பாவத்தால் இழந்துபோன இந்த பூமியில் சிந்தப்படுகிறது
உபாகமம் 12:16இரத்தத்தைமாத்திரம் புசிக்கவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்.
ஆகினும் அந்த மிருகத்தின் ரத்தத்தால் அவன் நிரந்தர விடுதலை பெற முடியாது. ஏனெனில் மிருகத்தின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு முற்றிலும் ஈடாகாது எனவே ஒரு தற்காலிக விடுதலை மட்டுமே பெறுகிறான்.
"கர்த்தர் ஆட்டுக்கடாவின் இரத்தம் குடிப்பவர் அல்ல" என்று வசனம் சொல்லும் பட்சத்தில் இந்த பலி ஏன் கர்த்தருக்கு என்று செலுத்தப்பட்டது என்பதை கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து பார்க்கலாம்.... .
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பலி ஏன் கர்த்தருக்கென்று செலுத்தப்பட்டது என்பதை இங்கு பார்க்கலாம்!
"தேவன் நீதிபரர்" என்றும் அவர் மனிதனுக்கு சாத்தனுக்கும் தேவர்களுக்கும் தூதர்களுக்கும் அவரே நியாயாதிபதி என்பதும் நாம் அறிந்ததே அதாவது அவர் சர்வலோக நியாயாதிபதி என்று வேதம் சொல்கிறது.
இப்பொழுது ஒரு நீதிமன்றத்தில் ஒருவர் செய்த குற்றத்தினிமித்தம் ஒரு அபதாரமோ அல்லது ஜாமீன் தொகையோ அவர்மேல் சுமத்தப்பட்டால் அந்த தொகையை நீதிபதி எவ்விதத்தில் யாரிடம் செலுத்த சொல்கிறாரோ அவரிடமே நாம் நியமத்தின்படி செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்தாமல் நாம் நமது இஸ்டத்துக்கு யாரிடமாது கொடுத்தால் அது தவறானதும் லஞ்சபணமாககூட ஆகிவிட வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல் தேவன் பாவம் செய்தவர்கள் மேல் சுமத்தப்பட்ட தண்டமாகிய பலியை அவர் கட்டளையிட்ட பிரகாரம் சரியான முறையில் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
லேவியராகமம் 9:16சர்வாங்க தகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி, அதைப் பலியிட்டு,
அது செலுத்தப்பட வேண்டிய இடத்தில், செலுத்தப்பட வேண்டிய முறைப்படி செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு நியமத்தின்படி செலுத்தினால் மட்டுமே அது சரியான பலியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பாவ நிவாரணத்தை பெறமுடியும்!
மற்றபடி தந்தோன்றிதனமாக கண்ட இடங்களிலும் பலியிட்டும் பலிகளால் எந்த பயனும் இல்லை அது தேவனின் பார்வையில் குற்றமாகவே கருதப்படும்.
உபாகமம் 12:13கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
(இதில் அனேக ஆவிக்குரிய விஷயங்கள் அடங்கியுள்ளன அவற்றை கர்த்தருக்கு சித்தமானால் தனியாக தியானிக்கலாம்)
இந்த அடிப்படையில்தான் கர்த்தர் பலியிடுதலுக்கு முறைமைகளை வகுத்துள்ளார்
மற்றபடி காளையை கொன்று ஆகாரமாக சாப்பிட அல்ல!
"எருதுகளின் மாமிசம் புசிப்பேன?" என்று சொல்லும் கர்த்தர் சில இடங்களில் இடங்களில் "எனது ஆகாரமாகிய நிணம்" என்று குறிப்பிட காரணம் என்ன வென்பதை கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த பதிவில் பார்க்கலாம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
திரு, சுந்தர் அவர்களே, மிகவும் அருமையான பதிவுகள். பழியே குறித்தான எனக்கு இருந்த பல வித கேள்விக்கு பதில் சரியாக கிடைத்து விட்டது. வேதத்தை இப்ப தான் வாசிக்க ஆரன்பிதேன்.அதாவது என் கேள்வி என்னவென்றால் எல்லா கடவுளையும் போல யோகோவா என்னும் நாமத்தை உடைய கடவுளும் ஏன் மிருக பழியே விரும்பினார் என்று.....நீங்கள் எழுதிய பதிவில் எனக்கான சகல விடைகளும் அமைந்து இருக்கு. நன்றி
திரு, சுந்தர் அவர்களே, மிகவும் அருமையான பதிவுகள். பலியை குறித்தான எனக்கு இருந்த பல வித கேள்விக்கு பதில் சரியாக கிடைத்து விட்டது. வேதத்தை இப்ப தான் வாசிக்க ஆரன்பிதேன். அதாவது என் கேள்வி என்னவென்றால் எல்லா கடவுளையும் போல யோகோவா என்னும் நாமத்தை உடைய கடவுளும் ஏன் மிருக பலியை விரும்பினார் என்று.....நீங்கள் எழுதிய பதிவில் எனக்கான சகல விடைகளும் அமைந்து இருக்கு. நன்றி
தங்களின் புரிதலுக்கு நன்றி சகோதரரே!
மிகுந்த இரக்கமுள்ள தேவன் "பலியை" ஏன் கட்டளையிட்டார்? மற்றும் பலியிடுதலின் உண்மை நிலை என்ன? என்பதை அறிவதற்காக நான் எவ்வளவோ சிரமபட்டு ஆண்டவா சமூகத்தில் விசாரித்து இந்த கட்டுரையை எழுதினேன். இதுபோன்ற பல காரியங்களை நான் மிகுந்த சிரமங்களுக்கிடையில் அறிந்து எழுதினேன். அனால் அக்கருத்துக்களோ பலர் பரிகசிக்கவும் ஏளனமாக பேசவும்தான் வழி செய்ததேயன்றி உண்மையை புரிந்துகொண்டேன் என்று சாட்சி சொல்பவர்கள் தங்களிபோன்ற சிலரே.
அந்த சிலருக்காக நான் ஆண்டவரை ஸ்தோத்த்ரிக்கிறேன்.
இன்னும் கர்த்தர் ஏன் "நிணத்தையும் கொழுப்பையும் தனது உணவு" என்று சொன்னார்? என்பதற்குரிய உண்மையையும் நான் ஆண்டவரிடமிருந்து அறிந்து கொண்டேன். அனால் இனி நான் வசனங்களுக்கு வெளிப்பாட்டின் அடிப்படையிலான விளக்கங்களை பதிவிடுவதை சில காலங்கள் நிறுத்தி வைத்திருப்பதால் இந்த கட்டுரையை இத்துடன் முடித்து கொள்கிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)