இந்த கட்டுரையை வாசிக்கும்அன்பானவர்களேநான் யாரையும் குற்றம்சொல்லவோ அல்லதுகுறை கூறவோ இதை இங்கு எழுதவில்லை. தேவனின் மீது வைத்துள்ள அன்பின் நிமித்தமாகவும்தாங்கள்என்ன செய்கிறோம்என்று தெரியாமல் செய்து கொண்டு இருக்கும் சகோதர்களின் கவனத்திற்காகவும் இதை சுட்டி காட்டவே இங்கு நான் எழுதுகிறேன்.
நான் கடந்தஞாயிற்றுகிழமை ஒருஊரில் உள்ள சபைக்குசென்றேன்அந்த சபையில் நடந்த காரியங்கள் என் மனதை மிகவும் பாதித்தது.
அங்குஒருவர்தேவ செய்தியை கொடுக்கும்படிஅழைக்கப்பட்டு இருந்தார்.அவர் வந்து பேசுவதற்கு முன்பாகஅவரைபற்றி ஒரு சிலஅறிமுகம் என்ற சொல்லிஅவரை வரவழைத்தவர்வந்தவரைபற்றி புகழ்ந்துதள்ளி கொண்டிருந்தார். இவர்தான்எல்லாத்துக்கும்கரணம் நான் இங்கு நிற்பதற்குஇந்த சபையை நடத்துவதற்கு எனஎக்கசக்கமாய்புகழுந்து கொண்டே இருந்தார்.
அங்கு ஒரு வார்த்தைகூட தேவனைபுகழ்ந்த மாதிரி எனக்கு தெரியவில்லைகிட்ட தட்ட எப்படியோ ஒருவழியாகஅவர் பேசிவிட்டுஅவரிடத்தில்மைக்கை கொடுத்துவிட்டு உட்கார்ந்தார். வந்தவர்கொஞ்ச நேரம்அவர் சொன்னமாதிரி இவரும் இன்னும் கொஞ்சம் சொல்லிவிட்டுபோன வருஷம் அவர் இருந்தார்இப்ப இல்லைஎன்று சாதாரண காரியங்களை எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார்.
வசனத்தைஎதிர்பார்த்து கொண்டு இருந்த எனக்கு மிகவும் ஏமாற்றம்தன்னுடைய கையில் வைத்து இருந்த ஒரு டைரியை திறந்து அவர் பேச ஆரம்பித்து விட்டார்வேதமானதுமூடி வைக்க பட்டு இருந்தது .
எப்படியோஒரு 45நிமிடங்களுக்கு பிறகுஅவர் பிரசங்கத்தை முடித்து விட்டு அமர்ந்தார்அந்த போதகர் எழுந்துமறுபடியும்ரொம்பநல்ல வார்த்தையை கொடுத்தார் என்று போற்றிவிட்டுசிறிது நேரத்திற்கு பிறகு ஒரு துண்டை எடுத்து அவருக்கு போட்டார்அவரும் சிரித்து கொண்டே பெற்று கொண்டார். இப்படி ஒருவருக்கொருவர்துண்டுகளை போற்றுகொண்டும்ஒருவரை ஒருவர் போற்றி புகழ்ந்து கொண்டும் இருந்ததை பார்த்து நான் மிகவும் வருந்தினேன். எல்லபுகழுக்கும் கனத்திற்கும் நம்முடையதேவனாகிய கர்த்தர் ஒருவரே தகுதியானவர். ஆனால் இங்கோ தங்களுக்கே தெரியாமல் மற்றவர்களை புகழ்ந்து கொண்டும் தேவை இல்லாத வார்த்தைகள பேசியும் தேவனுடைய வார்த்தையை கொடுக்கவேண்டிய நேரத்தை வீணடிப்பதை பார்த்து நான் மிகவும் வருந்தினேன்.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
மெய்யாகவே தேவ செய்தி தான்!! தேவ செய்தி என்றல் என்ன என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ள தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு செய்தி! இனியும் மனிதர்கள் தருவது தேவ செய்தி என்று நம்பாதீர்கள்!! வேத புத்தகம் ஒன்றே தேவ செய்தியை தாங்கியிருக்கிறது!! மனிதர்கள் அவர்கள் என்னங்களை அதில் கலந்து மெருகுட்டி, பிறகு மயக்கி விடுவார்கள்!!
புகழ்ச்சிக்கே இதை எல்லாம் செய்கிறார்கள் என்று தாங்கள் கூறியது மிகவும் சரியே!! குறையை குறை என்று சொல்லுவதற்கு என்ன தயக்கம்!! இது தான் இன்று சபைகளில் நடக்கும் செயல்!! தேவ செய்தி என்கிற பெயரில் மனிதர்களின் கைத்தட்டல்களும் பாராட்டுக்களும்!!
கிறிஸ்மஸ்தினத்தன்று நான்ஒரு சபைக்கு சென்றிருந்தேன்.அந்தஆராதனையின்முடிவில்திராட்சரசமும் அப்பமும் கொடுக்கப்பட்டது.
ஏறக்குறைய அந்த சபையில் அனைவரும் அதில் பங்கு பெற்றனர் அதை பார்த்த எனக்கோ மிகவும் மகிச்சியாக இருந்தது ஓ...எத்தனை பேர் பங்கு பெறுகிறார்களே என்று நினைத்து சந்தோசப்பட்டான்.
ஆனால்என் சந்தோசமோ அன்று சாயங்காலமேபோய் விட்டதுகாரணம் அன்று சாயங்காலம் நடந்த சம்பவம்தான்.
சபை முடிந்து எல்லாரும் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர் மறுபடியும் சாயங்காலத்திலே தெருவிலே மிகவும் சத்தமாக சினிமா பாடல்கள் ஓடிகொண்டிருந்தது அதை கேட்டதும் என்ன நடக்கிறது என்று பார்க்கும் படி வெளியே வந்தேன்.
வாலிபர்களும் சிறுபிள்ளைகளும் மேடையின்மீது சினிமா பாடல்களுக்கு ஆடிகொண்டிருந்தார்கள் அதுவும் இன்றைக்கு சினிமா பாடலகள் எப்படி இருக்கிறது என்பது நாம் எல்லாரும் அறிந்ததே……! ஏறக்குறைய சபையில் நான் பார்த்த எல்லாருமே அங்கு கைகளை தட்டியும் ரசித்து கொண்டிருந்தார்கள் இன்னொரு பக்கம் பார்க்கும்போது ஒரு சிலர் சாராயத்தை குடித்துவிட்டு தடுமாறி கொண்டிருந்தார்கள் அவர்கள் எல்லாம் காலையில் திருவிருந்தில் பங்கு கொண்டவர்கள்தான் என்பதை நான் அறிந்து மிகவும் வருந்தினேன். அந்த சபையின் முக்கிய அங்கத்தினர் எல்லாம் ஒன்று சேர்ந்து பணம் சேகரித்து தெருக்கூத்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர் அந்த நேரம் வந்தபோது ஒரு சில முக்கியமான ஜெபவீர்கள் வந்து ஜெபித்து நன்றாய் நடக்க வேண்டும் என்று ஜெபித்து ஆரம்பித்து வைத்தனர்.
அதை பார்த்த எனக்கோ ஐயோ .......இவர்கள் செய்வதோஎன்னவென்றுதெரிந்துதான் செய்கிறார்களோ…………! இதற்கு தேவனிடத்தில் வேற ஜெபித்து ஆசீர்வாதம் வேற கேட்கிறார்களே என்று நினைத்து நான் மிகவும் பயந்து நடுங்கினேன்.
என் நண்பர்களின்அழைபினாலேநானும்அப்படிஎன்னதான் இருக்கிறதுஎன்றுபார்க்கும்படிஉட்கார்ந்தேன்அதில் நடிக்கிறவர்கள்பேசின வார்த்தைகளெல்லாம் மிகவும்மோசமாகவும்முகத்தை சுளிக்கும்படியாகவும் இருந்தது.இரட்டை அர்த்தத்தில்பேசினார்கள்.
அதையும்ரசித்து கொண்டும் கைகளை தட்டி கொண்டும் இருந்தார்கள். மறுநாள்காலையில்இதை குறித்துஒருசிலரிடம்சொன்னபோது இதெல்லாம் ஒரு தப்பா சும்மாஜாலிக்குதானேஎன்று சொன்னதை கேட்டதும்எனக்கோமிகவும் வருத்தமானது. தாங்கள் செய்கிறதுதவறு என்கிற எண்ணம் சற்று கூட இல்லாமல்மிக சாதாரணமாகஅவர்கள் சொன்னதை கேட்டுநான் அதிர்ந்து போனேன். எந்த அளவிற்குஅவர்களும் அந்த சபையும்கர்த்தருடையபயமும், உணர்வும் இல்லாதிருகிறதை பார்த்துநான் வேதனை அடைந்து அவர்களுக்காக ஜெபித்து கொண்டு இருக்கிறேன். இதை போல அநேகர்என்ன செய்கிறோம்ஒரு தேவனுடைய பிள்ளைகுரிய தகுதியுடந்தான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோமா என்கிற உணர்வே இல்லமால் இருகிறதை கண்டு அவர்களுக்காக தேவனிடத்தில் ஜெபித்து கொண்டு இருக்கிறேன்.
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
அதாவது நான் வருகின்றேன்எனக்குஇவ்வளவுபணம் கொடுங்கள்மற்றும் நான் காணிக்கைகவர்களைகொண்டு வருவேன் அதை உங்கள் விசுவாசிகளிடம் தருவேன் திரும்பவும் அவர்களிடம் அந்த காணிக்கைகளைவாங்கிகொள்வேன்
சொல்லுங்கள்சகோதரரேஇதுஊழியமாஅல்லதுபிஷ்னசா(BUSINESS ) எனக்கு சந்தேகமாய் இருக்கின்றது
சபை முடிந்து எல்லாரும் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர் மறுபடியும் சாயங்காலத்திலே தெருவிலே மிகவும் சத்தமாக சினிமா பாடல்கள் ஓடிகொண்டிருந்தது அதை கேட்டதும் என்ன நடக்கிறது என்று பார்க்கும் படி வெளியே வந்தேன்.
வாலிபர்களும் சிறுபிள்ளைகளும் மேடையின்மீது சினிமா பாடல்களுக்கு ஆடிகொண்டிருந்தார்கள்
தாங்கள் பதிவிட்டிருக்கும் இந்த செய்திகள் மிகுந்த ஆச்சயர்த்தை தருகிறது. இப்படியும் சபைகள் இருக்கின்றனவா? அவைகள் எந்த பிரிவை சேர்ந்த சபைகள் என்பதை நான் அறிந்துகொள்ளலாமா?
ஒரு சபை இறைவனின் சித்தப்படி செயல்படுகிறதா என்பதை அந்த சபைக்குள் நுழைந்த உடனேயே அங்குள்ள தேவபிரசன்னத்தை வைத்து அறிந்து கொள்ளலாம் என்று கருதுகிறேன். இன்று சபைகளில் தேவ பிரசன்னம் இல்லாமல் போவதற்கு முக்கிய காரணம் தேவ ஊழியத்த அழைப்பின் அடிப்படையில் செய்யாமல் அதை ஒரு பிழைப்புக்கடுத்த அலுவலாக்கி அநேகர் புதியப்திய சபைகளை உருவாக்கும் உழியர்களே. எதோ ஒரு வாஞ்சையில் ஊழியத்துக்கு வந்துவிட்டு பிறகு சோதனைகள் வரும் போது தங்கள் வாழ்க்கையை நடத்த தேவனை சார்ந்து உறுதியாக நிற்காமல் எதற்கும் விட்டுகொடுக்க துணிந்து விடுகிறார்கள். மிகப்பெரிய ஊழியர்களே தங்கள் காரியத்தை சாதிக்க அரசியல்வாதிகளையும் ஆண்டவரை ஏற்காதவர்களையும் தேடி போகும்போது இவர்கள் எம்மாத்திரம்.
இப்படிபட்ட சபையின் பாஸ்டர்கள் மிக அதிகமதிகமாக தேவனால் தண்டிக்கப்படுவதை பார்த்திருக்கிறேன். ஆகினும் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்துவது இல்லை. இவர்களின் அடிப்படை கொள்கையே தவறாக இருப்பதால் இவர்கள் இருதயம் இருந்தும் உணர்ந்து திருந்துவது கடினம் என்றே நான் கருதுகிறேன்.
தாங்கள் குறிப்பிட்டதுபோல் இவர்களுக்காக ஆண்டவரிடம் விண்ணப்பிப்பதை தவிர வேறு என்ன செய்யமுடியும்?
-- Edited by SUNDAR on Thursday 10th of February 2011 10:04:03 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
..................// தாங்கள் பதிவிட்டிருக்கும் இந்த செய்திகள் மிகுந்த ஆச்சயர்த்தை தருகிறது. இப்படியும் சபைகள் இருக்கின்றனவா? அவைகள் எந்த பிரிவை சேர்ந்த சபைகள் என்பதை நான் அறிந்துகொள்ளலாமா? ...............//
அந்த சபை ஒரு பாரம்பரிய CSI பிரிவை சேர்ந்தது அந்த சபை ஒரு கிராமத்தில் உள்ளது அது ஏதோ குருசேகரம், பேராயம் என்று சொல்லி கொள்ளுகிறார்கள்.
என்னுடைய முழு நோக்கம் விருப்பம் எல்லாம் தேவனுக்கு பயந்து அவருக்கு பிரியமனவைகளையே நடபிக்க வேண்டுமென்பதே .
இந்த மாதிரி அனேக சபைகள அந்த பகுதியில் உள்ளன எல்ல சபைகளுமே ஏதோ ஒரு பாரம்பரியத்தின் கீழ் உட்பட்டு தாங்கள் செய்வது சரியா... தவறா என்கிற என்னமோ அல்லது அதை குறித்த கவலையோ இல்லாமல் இருகிறதை கண்டு மிகவும் துக்கப்பட்டேன்.
-- Edited by Stephen on Thursday 17th of February 2011 03:20:33 PM
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
சகோதரர் அவர்களே, நான் சிறுபிள்ளையாக இருக்கும்போதெல்லாம் RC சபைகாரர்கள் மட்டுமே உலகப்பிரகாரமானவர்களாகவும், கோவில்களில் கிடா வெட்டுவது, முடியை காணிக்கையாய் செலுத்துவது போன்ற இந்துமத கலாச்சாரங்களை பின் பற்றுபவர்களாகவும் இருந்தார்கள். சிலை வணக்கத்தில் இருந்து புனிதர்களாகிய அந்தோனியார், தோமையார் போன்றோரையும் வணங்குவது, சினிமா பாடல் கச்சேரிகளை வைப்பது போன்ற காரியங்களால் சாத்தானால் திசை திருப்பப்பட்டு முற்றிலும் தேவனின் வார்த்தைக்கு வெளியே செயல்பட்டு வந்தனர்.
அந்த கால கட்டங்களில் CSI சபைகள்தான் அதிகம் ஆவிக்குரிய நிலையில் இருந்தன. நான் படித்தபள்ளியில் இருந்த ஒரு அருமையான டீச்சர் அதிக மதிகமாக ஆண்டவரைப்பற்றி எல்லா பிள்ளைகளுக்கும் எடுத்து சொல்லி, ஞாயிறு பள்ளி நடத்தி சிறு வயதிலேயே இயேசுவின் அன்பை எல்லோருக்கும் எடுத்து சொன்னார்கள். அன்று என்னுடைய மனதில் போடப்பட்ட விதைதான் பின்னாட்களில் தேவனை நான் அறிந்துகொள்ள வழிசெயதது.
அந்நாட்களில் பெந்தேகோஸ்த் என்ற அமைப்பே கிடையாது.மிகப்பெரிய சபை பாகுபாடு எல்லாம் கிடையாது. சரியான கிறிஸ்த்தவம் என்றால் CSI சபைகளைதான் குறிக்கும். கிராமங்களில் இருந்த CSI சபைகளில் கூட மிகப் பெரிய ஆவிக்குரிய எழுப்புதல்கள் இல்லை என்றாலும் ஒரு ஒழுக்கம் அன்பு மற்றும் இணங்கும் தன்மை இருந்தது.
இந்நாட்களில் CSI சபை விசுவாசிகள் முற்றிலும் உலகப்பிரகாரமானவர்களாக திசை திருப்பபட்டு விட்டார்கள் என்றே கருதுகிறேன். சுபாவ அன்பில்லை, சிவிஷேஷ பாரமில்லை ஆவிக்குறிய எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் பாரம்பரியத்தில் ஊறிப்போன ஒரு சபையாக பெயரளவுக்கு கிறிஸ்த்தவம் என்ற நிலையில் இருக்கிறது. ஆண்டவர் குறிப்பிட்ட "அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்" இருக்கும் சபையாகவே அது காட்சியளிக்கிறது. உலக மனிதர் களுக்கிடையே காணப்படும் போட்டி, பொறாமை, பதவி ஆசை மற்றும் பணம் சம்பாதித்தல் போன்ற அனைத்து காரியங்களும் அச்சபைக்குள் நிறைந்து காணப்படுவது அனைவரும் அறிந்ததுதான்.
ஆனால் தாங்கள் சொல்வதுபோல் சினிமாப்பாட்டுக்கு டான்ஸ் ஆடும் நிலைவரை வளர்ந்துள்ளது என்பது ஒரு ஆச்சர்யமான செய்தியே!
-- Edited by SUNDAR on Wednesday 23rd of February 2011 11:10:05 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எனக்கு தெரிந்த ஒரு சபையின் போதகர் தன சபை மக்களுக்கு ஏதோ ஓரிடத்தில் மாதம் மாதம் பணம் தருவதாகவும் அந்த ஸ்தாபனத்தில் சேர்ந்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்றும் அதில் சேரும்படியாக தன சபை மக்களுக்கு சொல்லி கொண்டிருந்தார்... அது மட்டுமில்லாமல் தான் அதில் சேர்ந்து விட்டதாகவும் நீங்களும் அதில் சேருங்கள் என்று தீவிரமாக சொல்லி கொண்டிருந்தார்.
I தீமோத்தேயு 6 : 10
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இதை கேள்விப்பட்ட நான் பாஸ்டர் தாங்கள் சொல்லுகிறது சரியெல்ல தன்னுடைய உழைப்பில் நமக்கு வராத பணம் நம்முடையதல்ல அது நமக்கு ஆசிர்வாததையல்ல சாபத்தையே கொண்டு வரும் என்று இரண்டு மூன்று முறை கூறி விட்டு விட்டேன்.
அவரும் கண்டும் காணாதவரை போல் இருந்து கொண்டு இருந்தார் .
ஆனால் நல்லவேலையாக அந்த சபையில் வேற யாரும் அந்த திட்டத்தில் சேரவில்லை.
கொஞ்ச மாதங்களுக்கு பிறகுதான் தெரிந்தது அது ஒரு போலி ஏமாற்று வேலை என்றுஅதில் சேர்ந்த அநேகரை போலிஸ் பிடித்து விட்டதாகவும் ஒருசிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கேட்டு மிகவும் வருந்தினேன்.
அவரும் அதைப்பற்றி என்னிடம் எதையும் கூறாமல் விட்டு விட்டார்.
எனக்கு அருமையான.. சகோதரனே , சகோதரியே, ஊழியர்களே , உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதளையும் அற்பமானவைகளுக்காக இழந்து விடாதிர்கள்..
கொலோசெயர் 2 : 19
மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும்உங்கள் பந்தயப்பொருளைநீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.
சபைக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டியவர்களே இப்படி இருந்தால் சபை ஜனங்களுடைய நிலைமை என்னவாகும் என்று சற்று சிந்திபிர்களா...
I பேதுரு: 5 : 3
சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.
இன்றைக்கு சாத்தனுடைய ஆயுதங்களில் மிகவும் முக்கியமானது பணம் என்கிற ஆயுதாமே என்பதை தெரிந்து ஜாக்கிரதையாய் இருந்தால் நலமாய் இருக்கும்.
-- Edited by Stephen on Wednesday 29th of February 2012 06:25:30 PM
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )
இன்றைக்கு சாத்தனுடைய ஆயுதங்களில் மிகவும் முக்கியமானது பணம் என்கிற ஆயுதாமே என்பதை தெரிந்து ஜாக்கிரதையாய் இருந்தால் நலமாய் இருக்கும்.
உண்மையான கருத்து சகோதரர் அவர்களே. உலகில் உள்ள ஒவ்வொரு மனுஷனையும் சாத்தான் ஒவ்வொரு விதமான இச்சை மற்றும் ஆசையின் மூலம் பிடித்து வைத்துகொண்டு இருப்பதை நாம் அறியலாம். அதில் பணம் மற்றும் உலக பொருளால் பிடிக்கபட்டவர்களே அநேகராயிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.
சபைகளில்கூட தலைமை பாஸ்டர் "வீட்டுக்கு ஜெபிக்கவரும் பாஸ்டர்களுக்கு காணிக்கை எதுவும் கொடுக்காதீர்கள் காணிக்கை கொடுப்பதாக இருந்தால் அதை இங்கு சபையில் கொண்டுவந்து போடுங்கள்" என்று எச்சரிக்கை செய்திபோல் சொல்கிறார்". பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் சபைக்கு வரும் காணிக்கையை வீட்டு விசிட் செய்யும் பாஸ்டர்கள் தங்கள் வீட்டுக்கு கொண்டுபோய் விடுகிறார்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இப்படி ஒரு பாஸ்டருக்கு இன்னொரு பாஸ்டர் மீது பணம் குறித்த விஷயத்தில் நம்பிக்கை இல்லாத நிலையே இன்று இருக்கிறது.
பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள் அல்லவா. அந்த பத்தில் ஓன்று 'பாஸ்டர்களையும் படுகுழிக்குள் தள்ளிவிடும்' என்பதாக இருக்குமோ என்னவோ?
I தீமோ 6:10பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தற்போது பெரும்பாலான சபையில், ஒரு மிக பெரிய அரசியல் நடந்துக்கொண்டிருக்கிறது.. ஆலயத்தில் பிரசங்கத்தின் போது, "அவர்மேல் எவ்வாறு குற்றப்படுத்தலாம், அவருக்கும் மற்றவருக்கும் எவ்வாறு பகையை வளர்களாம்,, எவ்வாறு அவரை னமது பக்கமாக ஈர்த்துக்கொள்ளலாம்" என்ற சிந்தனைகளையே கொண்டுள்ளனர்..
யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.
__________________
காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்–மாற்கு:1:15
"அவர்மேல் எவ்வாறு குற்றப்படுத்தலாம், அவருக்கும் மற்றவருக்கும் எவ்வாறு பகையை வளர்களாம்,, எவ்வாறு அவரை னமது பக்கமாக ஈர்த்துக்கொள்ளலாம்" என்ற சிந்தனைகளையே கொண்டுள்ளனர்..
நான் ஒரு கிராமத்தில் சில காலம் தங்கியிருந்தபோது ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்த நோய்வாய்பட்ட சகோதரனுக்கு ஆண்டவரைபற்றி எடுத்து சொல்லி அவரை கிறிஸ்த்துவுக்குள் நடத்தினேன். அந்த ஊரில் எந்த சபையும் இல்லை எனவே பக்கத்து ஊரில்உள்ள ஒரு CBM சபைக்கு அனுப்பி வைத்தேன். சுமார் ஒருவருடத்துக்கு மேல் சபையில் விசுவாசியாக இருந்து ஞானஸ்தானம் எல்லாம் எடுத்த அந்த சகோதரர் அடுத்தமுறை நான்அங்கு போயிருந்தபோது மொட்டை போட்டிருந்தார். என்ன திடீர் மொட்டை? என்று கேட்டால், திருச்செந்தூர் கோவிலில் போட்டது என்று சொன்னார். திகைத்துப்போன நான் என்ன நடந்தது என்று கேட்டால் சபையில் உள்ளவர்களின் பிடுங்கல் தாங்க முடிய வில்லை எனவே சபைக்கு போவதையே நிறுத்திவிட்டேன் என்றார்.
ஒவ்வொரு முறையும் பாஸ்டர் அவரை தனியாக அழைத்து, இன்று காணிக்கை எவ்வளவு போட்டாய்? என்று கேட்பாராம். இவ்வளவு என்று சொன்னால், இது போதாது இன்னும் அதிகம் போடவேண்டும் என்று சொல்வாராம்.
ஊரில உள்ள வயல்களில் என்ன விளைகிறது அதில்தசம பாகம் கொடுத்தாயா? தென்னை மரத்தில் எத்தனை தேங்காய் காய்த்தது அதில் தசம பாகம் எங்கே என்று கேட்பாராம். (அவரின் அப்பா அம்மா அண்ணன் எல்லோரும் இந்துசாமியை கும்பிடுகிறவர்கள் அவர்களிடம் எப்படி தசம பாகத்தை வாங்க முடியும் என்பது அந்த பாஸ்டருக்கு புரியவில்ல போலும்)
அதுபோக, உடம்புக்கு சரியில்லாத அந்த சகோதரன் ஆராதனை வேளையில் டாய்லெட் போனால்கூட கண்டிப்பாராம். இன்னும் அனேக கண்டிஷன்களை எல்லாம் தாங்க முடியாமல் தடுமாற்றத்தில் இருந்த அந்த சகோதரை, இந்து சாமியாடும் அவரது மாமா ஒருவர், மூளை சலவை செய்து அழைத்துக்கொண்டு மொட்டை போட வைத்துவிட்டார்.
பின்மாற்றம் கேடானது என்று நான் சொன்ன அறிவுரைகளை எல்லாம் சரி சரி என்று கேட்டுகொண்டார் அவ்வளவுதான்.
இப்படி சபைக்கு உள்ளேவரும் ஆடுகளையும் பயம்காட்டி சிதறடிக்கும் மேய்ப்பர்களை என்ன செய்வது?