இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீமை அல்லது சாத்தான் எவ்வாறு தோன்றியது!
தீமை அல்லது சாத்தான் எவ்வாறு தோன்றியது! [10 vote(s)]

தேவனால் வேண்டுமென்றே "தீமை" அனுமதிக்கப்பட்டது!
30.0%
தேவனுக்கும் தீமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
40.0%
அசுத்தம்/தீமை என்பது ஆதியிலிருந்தே இருந்திருக்கலாம்!
30.0%


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
தீமை அல்லது சாத்தான் எவ்வாறு தோன்றியது!
Permalink  
 


அன்பு wrote
////ஒருபுறம் வெளிப்பாட்டுக்காக காத்திருக்கவேண்டும் என்றும் மறுபுறம் மேன்மையானதை விசுவாசிக்க வேண்டும் என்றும் சொல்லி சகோ.சுந்தர் தான் எதிரெதிரான கருத்தைச் சொல்லியுள்ளாரேயொழிய///
 
சகோதரர் அவர்களே! இதை எதிர் கருத்து என்று என்ன இருக்கிறது? இரண்டு வெவேறு விதமான வசனம் சொல்லப்படும்போது அதில் மேன்மையானது எதுவென்று என்னால் தீர்மானிக்க முடியாததால் ஆண்டவரிடம் விசாரிக்கிறேன் இதில் என்ன எதிரெதிரான கருத்து என்று சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.   

அன்பு57 wrote
////யாத்: 34:7  பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்.
எசே 18:1-4,20 குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை;
 
இவ்வசனங்கள் எதிரெதிர் கருத்துடையவை அல்ல என்பதை எசேக்கியேல் 18:3-ம் வசனத்திலிருந்து மிக எளிதில் நாம் புரிந்து கொள்ளமுடிகிறது///.

இந்த இரண்டு வசனங்களும் எதிர் கருத்துக்களை சொல்கிறது என்பதை சாதாரண மனிதர்கள் கூட புரிந்துகொள்ள முடியும் ஆனால் தங்களுக்கு
எதிர் கருத்து அல்ல என்பது எப்படி எளிதாக புரிகிறதோ?.
 
நேற்று ஒருவர் "உன் கடனை உன் பிள்ளையிடத்திலாவது  வசூலிக்காமல் விட மாட்டேன்" என்று சொன்னார் இன்றோ "உன் கடன் உன்னிடம்தான்  வசூலிக்கப் படும் உன் பிள்ளையிடத்தில் வசூலிக்கப்படாது" என்று சொன்னால் அதற்க்கு பெயர் எதிர் நிலையா அல்லது இரண்டும் ஒன்றுதானா?   
 
எதிர் கருத்துக்கு காரணம் அல்லது விளகம் என்று சொல்லி  "ஓன்று முன்னர் சொல்லப்பட்டது பின்னர் இவ்வாறு மாற்றப்பட்டது" என்று வேண்டுமானால் சொல்லுங்கள் அதை ஏற்றுக்கொள்ளகாம் அதற்காக இரண்டும் ஒரே கருத்துதான் என்று நிலைநாட்ட நினைப்பது ஏற்றதல்ல.  
 
அன்பு57 wrote
////அதாவது, ஒரு காலத்தில் பிதாக்கள் திராட்சைக்காய்களைத் தின்றால் பிள்ளைகளின் பற்கள் கூசினது எனும் பழமொழி இஸ்ரவேலில் இருந்தது மெய்தான்
(
அதாவது பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளிடம் விசாரிக்கப்பட்டது மெய்தான்); ஆனால் இனிமேல் அப்பழமொழி இஸ்ரவேலில் இருக்காது (அதாவது பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளிடம் விசாரிக்கப்படுவதில்லை) என 2,3-ம் வசனங்கள் கூறுகின்றன. இக்கருத்து யாத். 34:7-க்கு எவ்விதத்திலும் எதிரானது அல்ல.

ஒரு காலத்தில் யாத். 34:7-ன் படி நடந்தது; ஆனால் இனி அப்படி நடவாமல் எசே. 18:20-ன்படித்தான் நடக்கும் எனும் கருத்தைத்தான் யாத். 34:7 மற்றும் எசே. 18:20-லிருந்து நாம் பெறுகிறோம்.
இதில் “எதிரெதிர் கருத்து” என்ற பேச்சுக்கே இடமில்லை.////

ஒரு காலத்தில் அப்படி இருந்தது பின்னர் இப்படி மாற்றப்பட்டது என்று சொல்கிறீர்கள். சரி உங்கள் கருத்துபடியே முன்னர் சொல்லபட்டது பின்னர்  எசேக்கியேல் காலத்தில் மாற்றப்பட்டது  என்று எடுத்து கொண்டாலும் அது எசேக்கியேல் காலத்தில் மாற்றப்பட வில்லை அதே நியாயபிரமாண காலத்திலேயே  அதற்க்கு மாற்று வசனம் இருக்கிறது.   
 
நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டது:  
 
யாத் 20:5பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
யாத் 34:7  பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்.
 உபா 23:3 அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது
உபாகமம் 23:2 வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.

இவை எல்லாம்  பிதாக்கள் செய்யும் அக்கிரமம் பிள்ளைகளை தொடரும் என்பதை வலியுறுத்தும் வசனங்கள்
 
அதே நியாயப்பிரமாணத்தில்   சொல்லப்பட்டது  
 
உபா 24:16 பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.

இது பிதாக்களின் அக்கிரமம் பிள்ளையை கொல்லாது என்பதை வலியுறுத்தும் வசனம்.
 
எரேமியா மற்றும் தானியேல் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது:
   
எரேமியா 32:18  பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர்  ,

தானியேல் 9:16
  எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.

இவை எல்லாம் பிதாக்கள் அக்கிரமம் பிள்ளையை தொடரும் என்பதை வலியுறுத்தும் வசனம்
 
அதே சமகால தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் சொன்னது:
 
எசேக்கியேல் 18:௨௦  குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் ராஜாவினுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்
 
இது பிதாக்களின் அக்கிரமத்தை பிள்ளைகள் சுமப்பதில்லை என்பதை வலியுறுத்தும் வசனம்
 
அதன் பின்னர் இயேசு சொன்னது:
 
லூக் 11 50. ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. 51. நிச்சயமாகவே இந்த சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 
இது பிதாக்களின் அக்கிரமம் பின் சந்ததியிடம் கேட்கப்படும் என்று சொல்லும் வசனம்.
 
இப்படி தேவ ஞானத்தால்  சொல்லப்பட்டுள்ள தேவனின் வார்த்தையை உடனடியாக புரியும் அளவுக்கு  எனக்கு போதிய  ஞானம் இல்லை எனவே நான் தேவனின் பாதத்தில் அமர்ந்து விசாரிக்கிறேன். 
 
 எனக்கு அதிகம் ஞானம் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு "பிக் பேங்க்" தியரியை உறுதியாக நம்பும் மனிதன் "தேவன் உலகத்தை படைத்தார்" என்பதை எப்படி நம்புவதில்லையோ அதேபோல் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைக்கப்பட்டுள்ள தேவ ஞானத்தை மனித ஞானத்தால் "இது இப்படித்தான்" என்று முடிவாக  தீர்மானித்து விட்டவர்களுக்கு அவ்வாறு தேவனிடம் விசாரித்தல் நிச்சயம் தேவைப்படாது.

சுயமாக முயன்று பழத்தை சாப்பிடபோன ஏவாளை தேவன் தடுக்க வரவில்லை அதுபோல் எப்பொழுது ஒருவர் தேவனின் பாத்தில் அமர்ந்து உண்மையை அறிய வேண்டிய அவசியமில்லை  சுயமாகவே எல்லாவற்றையும் அறிந்துவிடலாம்  என்று எண்ணுகிறாரோ அப்பொழுதே தேவன் அவரின் தெரிவுக்கே அவரை விட்டுவிடுவார். அங்கு தேவன் தலையிடுவது இல்லை!
 


-- Edited by SUNDAR on Friday 21st of January 2011 04:23:42 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

bro. anbu wrote
////சகோதரரே! ஒருநேரம் “ஞானம்” என்கிறீர்கள், ஒருநேரம் “வெளிப்பாடு” என்கிறீர்கள். உங்கள் நிலையை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.////
 
சகோதரர் அவர்களே  தேவனிடம்  ஜெபித்து  ஞானத்தை பெற்று அந்த தேவ ஞானத்தால் ஒரு வசனத்தின் உண்மை பொருளை அறிவதே நான் "வெளிப்பாடு" என்று சொல்கிறேன். இவ்வாறு நான் சொல்ல காரணம் என்னவெனில். தேவன் ஒரு வார்த்தையை தீர்க்கதரிசி மூலம் சொன்னாலும் அவர் எந்த பொருளின் அடிப்படையில் ஒரு வார்த்தையை சொன்னார்கள் என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும். எந்த மனிதனுக்கும் தெரியாது!  உதாரணமாக "பாதாளம்" என்ற வார்த்தை பூமிக்கு அடியில் உள்ள ஒரு குழியை குறிக்கிறது அதை நீங்கள் "மனிதனை புதைக்கும் குழி" என்று சொல்கிறீர்கள். எனக்கோ அது ஆழமான படுகுழியாகவும் மரித்த ஆத்துமாக்கள் தங்கும் இடமாகவும்  தேவனால் உணர்த்த பட்டுள்ளது. இரண்டுக்குமே வசன ஆதாரங்கள் இருக்கிறது எனவே இதன் உண்மை என்னவென்பதை அறிய, ஜெபித்து அவர் தரும்  ஞானத்தால் அந்த பாதாளம் என்ற சொல்லுக்கான உண்மை பொருளை அறிய முனைவதும்  அவ்வாறு அறிந்துகொண்டதயுமே வெளிப்பாடு என்று சொல்கிறேன்.  எனவே இங்கு ஜெபித்து தேவ ஞானத்தை பெறுவதும் அதன் மூலம் ஒரு வசனத்தின் உண்மை பொருளை அறிவதும் நெருங்கிய தொடர்புடையதே. தெரியாத ஒன்றை அறிவதை  "வெளிப்பாடு" என்றபெயரில் நான் குறிப்பிடுகிறேன். அதற்க்கு வேறு ஏதாவது வார்த்தை இருந்தால் தெரிவியுங்கள் இனி அதை மாற்றிகொள்கிறேன்.  
 
மேலும் இந்த உலகத்தில் கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் நாம் அறிந்தவைகளை மட்டுமே வைத்து ஒன்றை ஆராய்வோமானால் நாம் நிச்சயம் உண்மையை அறியமுடியாது. "வானம் திறக்கப்பட தேவ தரிசனங்களை கண்டேன்" என்று எசேக்கியேல் சொல்கிறார். அந்த தரிசனம் நமது மாம்ச கண்களுக்கு தெரியாது.  புதியதாக தரிசனம் இல்லை என்றாலும் அட்லீஸ்ட்
அவர் கண்ட தரிசனத்தை நாமும் காணமுடியும்  என்றாவது விசுவாசம் வேண்டும்.  "இல்லை" "முடியாது" "தெரியாது"  போன்ற அவிசுவாச வார்த்தைகளால் உள்ளம் நிரம்பியிருந்தால்  ஒன்றுமே பார்க்கமுடியாது.      

நீங்கள் முற்றிலும் உலக  ஞானம் உலக நடைமுறையோடு,  அறிந்து தொட்டு உணர முடிவது போன்ற காரியங்களின் அடிப்படையிலே விவாதிக்கிறீர்கள். என்னால் அப்படி முடியாது சகோதரரே. . நான் கண்ட காரியங்கள் அநேகமானவை இயற்க்கைக்கு அப்பாற்பட்டவை. அதை நான் எடுத்து சொன்னால்
ஒரு பிற மதத்தார்கூட நம்பிவிடுவார்கள்  ஆனால் கிறிஸ்த்தவர்கள் நம்பமாட்டார்கள் பிறகு அதை விவரிப்பதில் என்ன பயன்? சொல்லுங்கள். உங்கள் கண்களை தேவன் ஒருநாள் திறந்து  நீங்களும் அதுபோல காரியங்களை கண்டால் மட்டுமே உங்களால் ஏற்க்க முடியும் என்றே நான் கருதுகிறேன்.  அதுவரை என்னை  நீங்கள் கள்ளனாகவோ அல்லது நல்லவனாகவோ
எப்படி வேண்டுமானால்  தீர்மானித்துகொள்ளலாம்     
   

ANBU WROTE:
///நியாயப்பிரமாண காலத்தில் “பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளிடத்தில் விசாரிக்கப்படும்” எனச் சொன்ன தேவன், அந்த நியமனத்தை எசேக்கியேல் காலத்தில் மாற்றி, “இனி அவனவன் அக்கிரமத்தை அவனவன்தான் சுமப்பான்” என்று
தெளிவாகச் சொல்லியிருக்கையில், இவ்விஷயத்தில் மேற்கொண்டு தேவனிடம் கேட்க எதுவுமில்லைதானே?////

இத்தோடு முடிந்துவிட்டால் நிச்சயம் நான் கேட்க வேண்டிய தேவை இல்லை தான். ஆனால் அதன் பின்னர் ஆண்டவராகிய இயேசு மீண்டும் 
 
சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. 51. நிச்சயமாகவே இந்த சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

தீர்க்கதரிசிகளின் இரத்தபழி அவர்களின் பிள்ளைகளாகிய  இந்த சந்ததியிடம் கேட்கப்படும் என்று வசனத்தை 
சொல்லியிருப்பதாலேயே  நாம் அதன் உண்மை பொருளை அறியவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்படுகிறது.
 
நான் இயேசு சொன்னதற்கு விளக்கம்கொடுக்க இங்கு அந்தவசனத்தை குறிப்பிட வில்லை. அது தெளிவாக இருக்கிறது.  எசேக்கியேலில் தேவன் "பிதாக்களின் அக்கிரம் பிள்ளைகளை தொடராது" என்று சொல்லி விட்ட பிறகு,  இயேசு லூக்கா 11.50ல  எதற்க்காக தீர்க்கதரிசிகளின் அக்க்ரமம் இந்த சந்ததியிடம் கேட்கப்படும் என்று குறிப்பிடவேண்டும் என்பதை அறிவுறுத்தவே அந்தவசனத்தை சுட்டினேன். மீண்டும் வசனம் இவ்வாறு வருவதால் தாங்கள் சொல்வதுபோல் முன்னர் சொல்லப்பட்ட வார்த்தைகள் பின்னர் மாற்றப்படவில்லை மனுஷனால் வழங்கப்பட்டு வந்த பழமொழியே தேவன் மாற்றினார் அனால் உண்மையில் பிதாக்களின் அக்கிரமம் பிள்ளைகளில்  சிலருக்கு தொடரும் சிலருக்கு தொடராது என்பதை அறியமுடிகிறது.     
 
அது யார் யாருக்கு தொடரும் யார்யாருக்கு தொடராது என்பதன் விளக்கத்தை நான் கொடுத்திருந்த திரியில் விளக்கியிருந்தேன்.
 
BRO. ANUBU WROTE 
//////நீங்களோ "மூலப்பிரதி ஆராய்ச்சியெல்லாம் செய்யமாட்டேன்; தேவன் எனக்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்துவார்" என்கிறீர்கள்.

இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன்: யோவான் 5:4 மூலப்பிரதியில் இல்லை எனும் தகவலை ஓரங்கட்டிவிட்டு, அவ்வசனத்திற்கு தேவனிடம் வெளிப்பாடு பெற்று அதை எனக்குச் சொல்லுங்கள்////
 
இயேசு தனது நாளில் அனேக அற்ப்புதங்களை செய்திருக்கிறார் அதில் இதுவும் ஓன்று. இதில் பெரிதாக  தேவனிண்டம் அமர்ந்து விசாரிக்க எதுவும் இல்லை மேலும் தற்க்காலத்தில் தேவன் அற்ப்புத அதிசயங்கள் செய்வதை அதிகம்  விரும்பவில்லை என்பதை  எனக்கு உணர்த்தியிருப்பதால் அவ்வாறு ஒரு குளம் இருந்ததா? என்பதை அறிந்துகொளவதால்  எனக்கு எந்த பயனும் இல்லை என்று தோன்றுவதால் அது சம்பந்தமான உண்மையை நான் அறிய விரும்பவில்லை.

கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைவிட அதன் மூலம் தற்காலத்தில் நாம் என்ன செய்யவேண்டும் என்பது அறிவுறுத்தப்படுகிறது அறிவதிலேயே பயன் உள்ளதாக நான் கருதுகிறேன்.  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

இந்த உலகில் மனிதன் மட்டுமல்லாது  சர்வ சிருஷ்ட்டிகளும்  படும் அவஸ்த்தை என்பது சொல்லி முடியாததாக இருக்கிறது.

மனிதர்களின் பாடுதான் மோசமாக இருக்கிறது என்றால் விலங்குகளின் நிலையோ அதைவிட மோசமாக உள்ளது. ஒரு பசுவின் உடம்பில் ஊசியை குத்தி வைத்துகொண்டு இரத்தம் வரும்வரை பாலை கறக்கிறான். நான்குபேர் சேர்ந்து ஒரு மாட்டை கயிறு வைத்து காட்டி பிடித்துகொள்ள ஒருவர் பெரிய கத்தியை கொண்டு அதன் குரல்வளையை அறுக்கிறான். அதுவும் நம்மை போன்ற ஒரு ஜீவன் தானே அதற்கும் வலியை உணரும் மூளை துடிதுடிக்கும் உடம்பு  "அம்மா" என்று கதறும் வார்த்தை அனைத்தும் இருக்கத்தானே செய்கிறது! அதை சற்றும் அவன் சித்திக்கிறதில்லை!

 
மனிதன்தான் ஏதோ பாவம் செய்தான் அது இது என்று சொல்லி தீமை வந்து விட்டது சாவு  உண்டானது  என்று சொல்கிறோம். இந்த பாவமறியா விலங்குகள் என்ன தவறு செய்தன அவற்றுக்கு ஏன் இத்தனை துன்பங்களை தேவன் அனுமதித்தார்?
 
ஒரு சிறிய உயிரில் இருந்து பெரிய உயிர் வரை ஒன்றை கொன்று ஓன்று உயிரோடு உரித்து  தின்று வளருகிறது! அவைகளால் வேதனையை வாய்திறந்து சொல்ல முடியவில்லையே அன்றி அவைகளுக்கும் வலி உணரும் தன்மை இருக்கத்தானே செய்கிறது.
 
இப்படியொரு வேதனை நிறைந்த முறையை  தேவன் வேண்டுமென்றே அனுமதித்தார் என்று என்னால் ஏற்றுக்க கொள்ளவே முடியவில்லை. அப்படி அவர் வேண்டுமென்றே அனுமதித்து வேடிக்கை பார்க்கிறார் என்று சொல்வோமாகில் அவரை  "மிகுந்த இரக்கமுள்ளவர்" என்று சொல்வது எவ்வாறு தகும் என்பது புரியவில்லை.
 
என்னை பொறுத்தவரை "ஏதோ நிர்பந்தமான ஒரு நிலையில் தேவன் இவற்றை எல்லாம் அனுமதித்து, இந்த சுழற்ச்சி முறையில் இருந்து அனைத்து உயிர்களையும் விடுவிக்க ஒரு திட்டத்தைதீட்டி அதை செயல்படுத்தி வருகிறார்" என்றே கருதுகிறேன்.
 
ஆண்டவராகிய இயேசு "மத்தேயு 6:10 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக" என்று ஜெபிக்க சொல்லியிருப்பதால் அவரது சித்தம் பூமியில் நிறைவேறுவதில் தடங்கல்கள் இருக்கிறது அதாவது அவருக்கு சித்தமில்லாத காரியம் நடக்க வாய்ப்பிருக்கிறது  என்பதை அறியமுடிகிறது.  
 
தேவனின் மன விருப்பம் அதாவது அவரது "சித்தம்" விரைவில்  நிறைவேறே வேண்டும் என்பதே அனுதினமும் நாம் முக்கியமாக செய்யவேண்டிய ஜெபமாக இருக்கிறது. 
 
தேவனின்  சித்தம் சரியாக நிறைவேறினால் விரைவில் "தீமை" என்பது இந்த உலகத்தை விட்டு வெளியேறிவிடும் என்பது உறுதி.
 
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard