தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் நம்மை "யோஹோவா சாட்சிக்காரர்" என்று வர்ணித்து ஒரு தவறான செய்தியை நமது சிலர் பதிவிடுள்னர் யகோவா சாட்சிகாரர்கள் யாரென்பதே சரியாக தெரியாத நமக்கு அச்செய்தி கொஞ்சம் அதிர்ச்சியை தருகிறது. அதற்க்கு மறுப்பு கூறவேண்டாம் என்று எண்ணி விட்டுவிட்டேன் ஆகினும் வேத வசனம்: யாத்23:1அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; என்று போதிப்பதால் இப்பதிவை தருகிறேன்!
நமது தளத்தைப்பற்றி இல்லாததும் பொல்லாததுமான தேவையற்றை பதிவுகள் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில பதிவிடுவது என்பது சில நண்பர்களின் முக்கியமான வேலை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் அங்கு பதிவிடப்பட்துள்ள உண்மையற்ற அந்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
நமது தளத்தின்மீது வீண்பழிபோட நினைத்த யாரோ ஒருவர் "ஆண்டவராகிய இயேசுவை பற்றி நான் தாழ்வாக விமர்சிப்பதுபோல் எனது பெயரில் கள்ளத் தனமான ஒருபதிவை அவரது பிளாக்கில் பதிவிட்டு, அதை தொடரும் போது எமது தளத்து தொடுப்பை கொடுத்து இப்படி எவ்விதத்திலாவது கீழ்த்தரமான முறைகளில் மோசடிசெய்து முயன்று நம்மை தரம்தாழ்த்த நினைத்தார்கள். ஆனால் முடியவில்லை.
சிலர் "மூல வியாதி வரும், இரத்தம் கக்கி சாவாய்" போன்ற சாபங்களை பதிவிட்டு சபித்து பார்த்தார் அதிலும் பயனில்லை, எனவே இப்பொழுது கிறிஸ்த்தவர்களின் பொதுதளத்தில் நமது தளத்தையும்
"யகோவா சாட்சிகள்" என்று சேர்த்து எழுதி எம்மை பற்றி ஏதேதோ புது புது கதைகளை பதிவிட்டு இருக்கிறார்.
சிலரை ஆவிக்குரியவர் போதகர் என்று நம்பி அதிகம் சார்ந்திருந்த நான் அவரது சுயரூபத்தை கண்டு விலகிவிட்டேன். சாப வார்த்தைகள் மற்றவர்களுக்கு இடறலாக இருக்ககூடாது என்று கருதி நமது தள நிர்வாகியும் நமது தளத்தில் பதிவிட தடை செய்துவிட்டார், அத்தோடு அவரைப்பற்றி எதுவும் இங்கு எழுதவேண்டாம் என்றும் அறிவித்துவிட்டோம். ஆகினும் சிலர் "தொடர்ந்து தளத்திலும் நம்மைப்பற்றி அவதூறுகளை எழுதி வைகிறார்.
அவர் என்னை இவ்வளவு வெறுத்தும் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்ப நான் ஆயத்தமானேன் அனால் அன்று எனக்கு கடுமையான ஜுரம் வந்து நான் எழுதி பதிவை அனுப்ப முடியாமல் போய்விட்டது. தேவனாலே அது நடந்தது அவரைப்பற்றி வேறு எதுவும் நான் சொல்வதற்கு இல்லை! ஏனெனில் நாம் இங்கு ஜீவனுள்ள தேவனை பற்றி எழுதிவருகிறோம். நம்மிடம் உண்மை இருந்தால் தேவன் நமக்காக வழக்காடுவார்!
அவர் கர்த்தர்! அவர் ஜீவனுள்ளவர்! அவர் தமது பார்வைக்கு நலமானதை செய்வாராக!
நான் ஒரு நல்ல போதகன் என்று நிரூபிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தினால் இப்பதிவை தரவில்லை. அது எனக்கு அவசியமும் இல்லை. நான் கள்ளனாகவோ கள்ள போதகனாகவும்தாலும் என்னால் ஒரு ஆத்துமா இடறலடைந்தாலும் எனக்கு ஐயோ!
உபாகமம் 18:௨௦ நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். என்று வேதம் சொல்கிறதே!
நான் கள்ள போதகனா? என்பதை தீர்மானிப்பது தேவன் ஒருவரே. என்னை நல்ல போதகனாகவோ அல்லது கள்ளபோதகனாகவோ மாற்ற தேவனாலேயே கூடும்! தள சகோதரர்கள் பிற மனிதனின் விகர்ப்பமான வார்த்தைகளை நம்பி எம்மை விமர்சிக்காமல் எனது பதிவை அராய்ந்து பின்னர் முடிவெடுத்து கொள்ளுங்கள்
அதில் உள்ள கருத்துக்கள் தவறா சரியா என்பதை நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள். நான் முறைப்படி பயின்று வேதாகமத்தை அறிந்துகொள்ள வில்லை. ஒரு இந்துவாகிய நான் தேவனால் எதிர்பாராதவிதமாக தொடப்படு இயேசுவை ஏற்றுக் கொண்டவன். பின்னர் தேவனிடம் பிடிவாதமாக என்னுடைய மனதில் பதில் தெரியாமல் இருக்கும் கேள்விகளுக்கு எல்லாம் சரியான விடை தெரிந்தால் மட்டுமே நான் உம்மை உறுதியாக பின்பற்றுவேன் என்று மன்றாடியதால் தேவன் எனக்கு பல உண்மைகளை தெரிவித்தார். அவற்றை வசன ஆதாரத்தோடு தான் எழுதி வருகிறேன்.
சிவபெருமான் என்னும் இந்துசாமி இன்னொரு ஆண் இந்து சாமியோடு இச்சை கொண்டு இணைத்தால் தேவனின் மாறானத பிரமாணமாகிய "ஆணும் ஆணும் சேரக்கூடாது" என்ற பிரமாணத்தின்படி தண்டனை பெற்று தன் மகிமையை இழந்தார் என்று
ரோமர் 1:26 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார் 27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
என்ற வசனத்த்தின் அடிப்படையில் நான் கூறிய ஒருகருத்தை திரித்து ஏதோதோ அவர் எழுதியிருக்கிறார்!
எனது கருத்துக்கள் சற்று மாறுபாடாக இருந்தாலும்பொதுவான கிறிஸ்த்த கொள்கைகளுக்கு நான் எந்த விதத்திலும் முரணானவன் அல்ல என்பதை இந்த தளத்தில் உள்ள பதிவுகளை படித்து அறிந்து கொள்ளலாம்
ஒரு வகையில் பார்த்தால் நாம் "யகோவா" என்ற நாமமுள்ள சர்வ வல்ல தேவனுக்கு சாட்சிகளாகவும் இருக்கிறோம் என்பதை அவர் தெரிவித்ததில் மகிழ்ச்சியே. ஏனெனில் அவரே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர் என்று வேதம் சொல்கிறதே. ஆனால் "யகோவா சாட்சிகள்" என்று பெயர் வைத்துக கொண்டுள்ள ஒரு கூட்டத்துடன் எமக்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துகொள்கிறோம்!
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்! தேவனுக்கே என்றும் மகிமை உண்டாகட்டும்!
நன்றி
அன்புடன்
SUNDAR
-- Edited by SUNDAR on Thursday 13th of January 2011 03:05:38 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அன்பின் நண்பர்களே, எமது வார்த்தைகள் சத்தியத்தை வெளிப்படுத்தட்டும். தனிநபர்களைப் புண்படுத்த வேண்டாம். தயவுசெய்து அன்புடன் கிறிஸ்துவுக்குள் உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அன்பின் சகோதரரே, அந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் உண்மையில் சகோதரர் சில்சாம் அவர்கள் அல்ல என்பது நான் அறிவேன். அக்கவிதைக்கு பின்னவர் வந்த உங்கள் காரசாரம் நிறைந்த கருத்துக்கள் என் மனதை புண்படுத்துகின்றது. தவறு யார் பக்கம் இருக்கின்றது என்பது எனக்குத் தேவையில்லை. நாம் கிறிஸ்துவைப்போல நடந்துகொள்கின்றோமா என்பதையே நான் அவதானித்து வருகின்றேன்.
"யோஹோவா சாட்சிக்காரர்" என்று வர்ணித்து ஒரு தவறான செய்தியை நமது சகோ. சில்சாம் பதிவிடுள்ளார் .... மேற்கூறிய கூற்றிற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டியது எனது கடமை. அதேவேளை, இந்த கலாச்சாரத்தை நான் துவங்கவில்லை;இயேசுவே துவங்கிவைத்தார்..! என்ற கருத்தையும் நான் மறுக்கின்றேன். நமக்குள் எதற்கு சண்டை?
நீங்கள் இருவருமே மிகவும் நல்லவர்கள். அதை நான் அறிவேன். அத்துடன் கடைசியாக மறுபடியும் வலியுறுத்துவதாவது, தவறு யார் பக்கம் இருக்கின்றது என்பது நமக்குத் தேவையில்லை. நாம் கிறிஸ்துவைப்போல நடந்துகொள்கின்றோமா? இதையே உலகம் உங்களிடமும் என்னிடமும் எதிர்பார்க்கின்றது.
அன்பின் நண்பர்களே, எமது வார்த்தைகள் சத்தியத்தை வெளிப்படுத்தட்டும். தனிநபர்களைப் புண்படுத்த வேண்டாம். தயவுசெய்து அன்புடன் கிறிஸ்துவுக்குள் உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
சகோதரர் அவர்களே! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! எங்களின் இந்த பிரச்சனை இன்று நேற்று வந்தது அல்ல. கடந்த ஒரு வருடமாக நான் என்ன எழுதினாலும் அதை குறைகூறுவது என்பது வாடிக்கையாகிவிட்ட ஓன்று. chillsam wrote in tamilchristian site: ///மேலும் தனக்கு மரணமில்லை என்று கூறுவதையும் தான் ஒரு மறுபிறவி என்று அவர் கூறிக்கொள்வதையும் மறுக்க முடியுமா?///
"ஒருவன் என் வார்த்தையை கைகொண்டால் அவன் மரணத்தை காண்பதில்லை" என்று ஆண்டவராகிய இயேசு சொல்லியிருக்கிறார் என்பது குறித்தே நான் எழுதியிருக்கிறேன். அதை திரித்து "நான் எனக்கு மரணமில்லை" என்று சொன்னதாக கட்டுகதையை அவிழ்த்து விட்டிருக்கிறார். "
அவர் கூறுவதுபோல் "எனக்கு மரணமில்லை" என்று நான் தளத்தில் எங்காவது எழுதியிருந்தால் அதை சுட்டிகாட்டவும். நான்
இந்த தளத்தை மூடிவிடுகிறேன்.
இல்லை என்றால், குறை கூறும் ஆவி அவரை பிடித்துள்ளது என்பதை ஒத்துக் கொண்டு தன்னை திருத்திகொள்ள வேண்டியது அவரது பொறுப்பு!
நான் எழுதும் எல்லா கருத்தையும் திரித்து குறை கூறுவது அவர் வழக்கமாகி விட்டது! .
"இயேசு ஒருவராலே இரட்சிப்பு" என்று எழுதிய நான் "கற்பனையை கைகொள் கிறதனால் தீங்கை தவிர்க்க முடியும்" என்று நீதிமொழிகளின் வாக்கிய அடிப்படையில் பதிவிட்டால். அதை திரித்து "கற்பனையை கைகொண்டால்தான் ரட்சிப்பை அடையமுடியும்" என்று நான் போதிப்பதாக எழுதுகிறார்.
பாவத்தில் வீழ்த்த மனிதனை மீட்கும் திட்டத்தில் தேவன் தனது வல்லமையை மூன்றாக பிரித்து மூன்று ஆளத்துவமாக செயல்படுகிறார் அதை திரித்துவம் என்று கிறிஸ்த்தவர்கள் கூறுகிறார்கள் என்று எழுதினால் "யஹோவா சாட்சி" "திரித்துவத்தை நம்பாதவர்" என்றெல்லாம் துர்செய்தி பரப்புகிறார்.
ஆண்டவராகிய இயேசு தன்னை "முந்தினவரும் பிந்தினவரும்" என்று குறிப்பிடு வதாலும் "மனிதன் ஒருதரம் மரிப்பதும் பின்னர் நியாயத்தீர்ப்பு அடைவதும் நியமிக்கப்பட்டிருக்கிறது" என்கிற வசனம் புதிய ஏற்பாட்டில் இருப்பதாலும், அதற்க்கு இணை வசனம் இல்லாத காரணத்தாலும், இயேசுவே எல்லா சிருஷ்டிக்கும் பிந்தியவர் அவருக்கு பிறகு பிறப்பவர்கள் எல்லோரும் மறு பிறப்பாக இருக்கலாம் என்ற கருத்து எனக்கு உண்டு! அதையே எழுதினேன். சரி இப்படி நான் கருதுவதால் அல்லது எழுதியதால் யாரும் இடறிபோக எந்த வாய்ப்பும் இல்லை? மாறாக "பிறவி ஊணம்" "சமூக உயர்வு தாழ்வு" போன்ற பல பதில்சொல்ல முடியாத பிற மதத்தவர் கேட்கும் கேள்விகளுக்கும். பதில் கிடைக்கிறது. ஒருவேளை இந்த கருத்து தவறாக தெரியுமானால் அதற்க்கு உரிய முறையில் வசனத்தின் அடிப்படையில் விளக்கம் தரலாம். உண்மையை அறிவதர்க்குதானே விவாதகளம்? ஆனால் அதையும் திரித்திது குற்றம்மட்டும் சாட்டி திரிகிறார்.
இதுவரை எனது கருத்துக்களில் ஒன்றுக்கும் அவர் எந்த விள்ளகமும் கொடுக்க வில்லை நாம் நேரடியாக விவாதிக்கலாம் என்று கேட்டும் அவரிடம் சரியான பதில் இல்லை. ஆனால் குற்றம் சாட்டுவதில் மட்டும் குறியாக இருக்கிறார். அவர் பிற சகோதரர்கள் கூறிய ஒருசில நல்ல விளக்கங்களை நான் உடனே ஏற்றுக் கொண்டும் இருக்கிறேன். நான் அவரைப்போல பிடிவாதம் பிடித்தவனோ, நல்ல விளக்கம் கிடைத்த பின்னும் நான் எழுதியதுதான் உண்மை என்று சாதிப்பவனோ அல்ல! தவறாகபட்டாலோ அல்லது ஆண்டவர் உணர்த்தினாலோ நிச்சயம் மாற்றி விடுவேன். ஏன் சர்வவல்ல தேவனேகூட தம்முடைய சில வார்த்தைகளை மாற்றியிருக்கிறாரே! எனவே இதில் எனக்கு எந்த அவமானமும் கிடையாது. ஆனால் உண்மை தெரியாமல் இவர் தூன்றுகிறார் என்பதானால் எனது கருத்தை ஏன் மாற்றவேண்டும்? .
வசனத்தின் அடிப்படையில் மட்டும்தான் எல்லாவற்றையும் ஏற்க்க வேண்டும் என்று எண்ணுவோமாகில் "திரித்துவம்" என்கிற வார்த்தை எந்த வசனத்திலும் இல்லை. சரியாக வேதவசனத்தின் அடிப்படையில் மூல பாஷையை ஆராய்ந்து சகோ. அன்பு அவர்கள் கூறும் விளக்கங்களுக்கு வசனத்தின் அடிப்படையில் யாரும் சரியாக பதில் சொல்லவே முடியாது. ஆனாலும் அவரை வித்தியாசமான போதனை என்றுசொல்லி தவிர்க்கிறீர்கள். நமக்கு அருளப்பட்டுள்ள ஆவியானவர சில காரியங்களை போதித்திருப்பதாலேயே வேதத்தில் இல்லா திரித்துவம் என்பது எப்படி சாத்தியம் என்பதை அறியமுடிகிறது. அதுபோல் சில உண்மைகளை ஆவியானவர் வெளிப்படுத்தினால் மட்டுமே அறியமுடியும். அவ்வாறு அறிந்தவைகளை நான் இங்கு எழுதுகிறேன். அதில் பிறருக்கு இடரலை உண்டாக்கும் கருத்து இருக்குமானால் அதை நிச்சயம் சுட்டலாம், அதை நீக்க தயாராக இருக்கிறேன்.
ஆனால் அவரோ 'நான் என்ன எழுதுவேன், எங்கே குற்றம் கண்டுபிடித்து தூற்றலாம், எதை அடிப்படையாக கொண்டு சாபமிடலாம், எப்படி இவன் பெயரை கெடுக்கலாம்' என்பதே நோக்கமாக இருப்பதாகவே அறியமுடிகிறது. ஆண்டவர் என்னிடம்"நான் யாரையும் வெறுக்கவில்லை நீ யாரை குறித்தும் தவறானவர்கள் என்று தீர்மானமாக எந்த ஒரு வார்த்தையும் எழுதக்கூடாது என்று திட்டமாக சொல்லியிருப்பதால், நான் எவ்வளவோ சமாதானமாக போக அல்லது விலகிப் போக நினைத்தும் என்னை அவர் விடாது துரத்துகிறார். அதனால் இன்னும் தியாநிக்கப்படவேண்டிய அனேக கருத்துக்களை எழுதமுடியாமல் தடைபடுகிறது.
இதற்குமேல் அவரது பதிவுகளுக்கு நான் விளக்கம்கொடுக்க எனக்கு விரும்ப வில்லை எனக்கு நேரமுமில்லை! நன்றி
சுந்தர்
-- Edited by SUNDAR on Saturday 8th of January 2011 01:31:19 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
///கிறிஸ்துவுக்குள் அன்பு நண்பர் சுந்தர் அவர்களே உங்கள் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை///
சகோதரர் மைக்கோ அவர்களே கிறிஸ்த்துவின் சபையில் ஒரே சரீரமாக இருப்பவர் களுக்குள் தனிப்பட்ட விரோதம் என்ற பேச்சுக்கே இடமில்லை அதைப்பற்றி நான் எதுவும் எழுதவில்லை.
ஒருவரை எவ்வளவு வேண்டுமானாலும் புகழுங்கள் தவறில்லை ஆனால் குறை கூறும் முன் அதன் உண்மை தன்மையை ஒருமுறைக்கு நூறு முறை யோசிக்க வேண்டும் ஆனால் பரியாசம் பண்ணுதல் என்பது கூடவே கூடாது! என்பதே வேதத்தின் அடிப்படையில் எனது கருத்து! அதன் அடிப்படையிலேயே நான் பதிவிட்டுள்ளேன்.
சகோ மைக்கோ தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் எழுதியது
////உங்களின் கூற்றுப்படி "மனிதன் மரணத்தை ஜெயம்கொள்ள முடியும்" என்ற வார்த்தை அவன் மரிக்காமலேயே ஜெயங்கொள்ளுவான் என்பது வேத வசனத்தை தவறாக புரிந்து கொண்டதின் விளைவு ஆகும்.///
வேதமானது இரண்டு விதமான மீட்பை பற்றி கூறுகிறது. ஓன்று "மரித்தோர் உயிர்த்தெழும் மீட்பு". இது சம்பந்தப்பட்ட அனேக வசனங்கள் வேதத்தில் உள்ளது அதில் பலவற்றை தாங்களும் பதிவிட்டுள்ளீர்கள் அதை நான் மறுக்கவோ அல்லது தவறு என்று கூறுவதோ அர்த்தமற்றது. அது நிச்சயம் நிறைவேரக்கூடியதே!.
அனால் இன்னொன்று மீட்பும் உண்டு அது "மரியாமல் மறுரூபம் ஆகும் மீட்பு.!" அதை தாங்களும் விசுவாசிக்கிறீர்கள் என்று எழுதியுள்ளீர்கள். அதே மீட்பைதான் நான் "மரணத்தை ஜெயித்தல்" என்று எழுதுகிறேன் நான் அதை முழுமையாக விசுவாசித்து எனது நாட்களில் அது சாத்தியம் என்று கருதுகிறேன். மரிக்காமல் மறுரூபம் ஆக்கப்பட்டால் அது மரணத்தை ஜெயம்கொள்ளுதல்தானே? அதையே நான் எழுதுகிறேன். நீங்களோ வசன அடிப்படையில் விசுவாசத்தில் நம்புகிறீர்கள் அனால் அதே வசனத்தைபற்றிய சில விசேஷ வெளிப்பாடுகளை பெற்று அவ்வாறு "ஜெயம் கொள்ள" சில காரியங்கள் நிறைவேறவேண்டியது இருக்கிறது என்பதை அறிந்து அதற்க்கு வேதம் சொல்லும் வழி முறைகளையும் வசன அடிப்படையிலேயே எழுதி வருகிறேன். யாருக்கு புரியவில்லை என்பதை தேவன் தான் தீர்மானிக்க வேண்டும் என் புரிதலை குற்றம் சுமத்த வேண்டாம்! விசுவாச அடிப்படயில் ஒரு வசனத்தை நம்புவதற்கும் வெளிப்பாட்டின் அடிப்படையில் அதே நம்புவதற்கு அனேக வேருபாடுகள் உண்டு!. பவுல்போல் வெளிப்பாடு பெற்றவர்கள் எழுதியதுதான் அதிகமாக வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. .
சகோ மைக்கோ தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் எழுதியது
////நீங்கள் சொல்லுகிறபடி பார்த்தால் பவுல்.பேதுரு போன்ற மூத்த அப்போஸ்தலர்கள் கூட இயேசுகிறிஸ்துவின் வசனத்தை சரியாக கடைபிடிக்கவில்லை என்ற தோற்றத்தை குறிக்கும்.////
பவுலை பற்றி நான் இங்கு அதிகம் எதுவும் எழுத விரும்பவில்லை அவர் தனது காலத்தில் தனக்கு ஒப்புவிக்கபட்ட பணியை தேவ சித்தத்த்தின்படி செவ்வனே செய்து முடித்துவிட்டு சென்றார். நல்ல ஓட்டத்தை ஓடி விசுவாசத்தை காத்துகொண்டார் அவருக்கு கிடைத்தது நீதியின் கிரீடம்!
"எல்லாவற்றிக்குமே ஒரு காலம் உண்டு" என்று வேதம் சொல்கிறது. எது எந்த காலத்தில் நிறைவேற வேண்டுமோ அது அந்தந்த காலத்தில்தான் நிறைவேறும். அவ்வாறிருக்க பவுலை இங்கு சம்பந்தப்படுத்தி அவர் ஏன் மரணத்தை ஜெயித்து மறுரூபம் ஆகாமல் போனார்? என்று கேட்பது இயேசு ஏன் பழைய ஏற்பாட்டு காலத்திலேயே வரவில்லை? என்று கேட்பது போன்றது! அதற்க்கு நீங்கள் தான் வசன அடிப்படையில் பதில் சொல்ல வேண்டும்.
அதேபோல் இது கடைசி காலமாக இருப்பதால் ஆண்டவரின் வருகையும் நாம் மறுரூபம் ஆகுதலும் சாத்தியம் என்ற கருத்திலேயே மரணத்தை ஜெயம்கொள்ள முடியும் என்று எழுதுகிறேன்.இதுதான் எனது முக்கிய வெளிப்பாடு! மற்றவைகள் எல்லாம் அவரவர் கேட்கும் கேள்விக்கு ஏற்ப பதில் கொடுக்கிறேன். அதற்க்கு யாரிடமும் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்!
அடுத்து சகோ. சில்சாம் குற்றம் என்று என்னை தீர்ப்பது நான் அதிகமதிகமாக "தேவனின் வார்த்தைகளை கைகொள்ளும்படி திட்டமாக போதிப்பது" இந்த எனது போதனைக்கு வேத ஆதாரம் தேவையில்லை என்றே நினைக்கிறேன். வேதம் முழுவதும் தேவன் "என் வார்த்தையை கைகொள்ளுங்கள்" என்று சொல்லும் சத்தம் எதிரொலிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் இய்சுவின் இரட்சிப்பு இல்லாமல் வெறும் கிரியையால் எதுவுமே சாத்தியமல்ல எல்லாமே வீண் என்பதையும் நான் வலியுறுத்த தவறவில்லை! அதை பற்றிய விளக்கங்களை கிருபை கிரியை இரண்டுமே அவசியம்! என்ற தலைப்பின் கீழ் தெளிவான விளக்கம் எல்லாம் கொடுத்துவிட்டேன்.
எனது வியாக்கீனம் சற்று விதயாசமாகத்தன் இருக்கும் அதை நான் மறுப்பதற்கு இல்லை. எனினும் ஒருவர் சொல்வதுபோல்தான் இன்னொருவர் போதிக்க வேண்டும் என்று எழுதாத சட்டம் எதுவும் இருக்கிறதா என்ன? எனக்கு எந்தபிரகாரம் தேவன் தெரிவிக்கிறாரோ அந்த பிரகாரமே எழுதுகிறேன்!. எனக்கு ஒரு சந்தேகம் என்றால் எந்த பாஸ்டரிடமும் ஓடுவது இல்லை மாறாக அதை எழுதிகொடுத்த தேவனிடம் ஓடுகிறேன். அதற்க்கான பதிலை பெரும் வரை நான் சமாதானமடைவதே கிடையாது. தேவன் எனக்கு எல்லாவற்றிக்கும் பதில் தருகிறார் அவற்றை வசன அடிப்படையிலேயே எழுதுகிறேன். மனிதனுக்கு கீழ்படிவதை பார்க்கிலும் தேவனுக்கு கீழ்படிதலே உத்தமம் அல்லவா? .
நான் எழுதுகிறவைகளில் யாருக்கும் எந்த விதத்திலும் பாதிப்பில்லாத கட்டுரைகளை மட்டுமே இந்த தளத்தில் பதிவிடுகிறேன். வேண்டுமானால் இனி அதையும் நிறுத்திவிடுகிறேன் ஏனெனில் சிலருடைய எழுத்துக்கள் என்னால் சகிக்க முடியவில்லை. நான் ஒரு கிறிஸ்த்துவை பின்பற்றும் கிறிஸ்த்தவன் எனது எழுத்துக்களில் யாரையும்நான் ஒருசிறு தவறான வார்த்தை சொல்லிக்கூட நோகடிக்க மாட்டேன். யாரையும் பரியாசம் செய்வது கிடையாது. முடிந்தால் பதில் எழுதுவேன் இல்லேயேல் விலகிவிடுவேன். மற்றபடி வீண் விவாதம் விரோதத்தையே வளர்க்கும்.
எனது அன்பான வேண்டுகோள் என்னவெனில் இந்த தளத்தில் (தமிழ் கிறிஸ்தவ தளத்தில்) விவாதப்பொருளாக வைத்து விவாதிக்க வேண்டாம். எனக்கு யாரும் கட்டளையிடவும் வேண்டாம். எனக்காக யாரும் பரிந்து பேசவும் வேண்டாம். இப்படித்தான் எழுத வேண்டும் என்று நிரபந்திக்கவும் வேண்டாம். எனக்கு ஒப்புவிக்கப்பட்டவைகளை நிறைவேற்ற வேண்டியது எனது கடமை!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
(இந்த பதிவு தமிழ்கிறிஸ்த்தவ தளத்தில் நான் பதிவிட்டது இத்தோடு நம்முடைய கருத்துகளுக்கு தன்னிலை விளக்கம் கொடுப்பதை நிறுத்திவிடலாம் என்று எண்ணுகிறேன்)
rajkumar_s wrote
////இரண்டாம் வருகை இயேசுகிறிஸ்துவுக்கே தெரியாதது என்று அவரே சொல்லியிருக்க உங்களுக்கு எப்படி வெளியாக்கப்பட்டது? என்று சொல்லுங்கள் வேதத்தில் எங்காவது நான் வரும்வேளையை சகோ சுந்தர் அவர்களின் வாழ் நாட்களுக்குள்ளாக சம்பவிக்கும் என்று எழுதப்பட்டுள்ளதா?////
ராஜ்குமார் ஐயா அவர்களே குறை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் இப்படியெல்லாமா குறை சொல்வது?
லுக்:11உம்முடைய ராஜ்யம் வருவதாக!
என்று ஜெபிக்க சொன்ன ஆண்டவர் "இதோ சீக்கிரமாய் வருகிறேன்" என்று சொல்லி சென்றிருக்கிறார். என்னுடைய நாளில் அவர் வருவார் என்ற விசுவாசம் கூட இல்லாமல் "உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக" என்று ஒப்பிக்க சொல்கிறீர்களா? அல்லது அந்த ஜெபத்தை நீங்கள் சிறிதும் விசுவாசமே இல்லாமல் சொல்கிறீர்களா?
II பேதுரு 3:12தேவனுடையநாள்சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்;
அவ்வாறு ஆவலோடு காத்திருக்கும் நாம், நமது காலத்துக்குள் அவர் வருவார் என்று எதிர்பார்ப்புடன் கூடிய நம்பிக்கைகூட இல்லாமல் நீங்கள் வேண்டுமானால் இருங்கள் எனக்கு அந்த அவிசுவாசத்தை கற்று கொடுக்க வேண்டாம்!
எப்பொழுது ஒரு சகோதரரை பெயர்சொல்லி "பிசாசு" என்று சொல்ல துணிகிறீர்களோ அப்பொழுதே நீங்கள் ஆண்டவராகிய இயேசுவின் தரத்துக்கு உயர்ந்துவிட்டீர்களே! இங்கு நான் சொல்ல என்ன இருக்கிறது?
சகோதரர் அவர்களே! நான் ஏற்கெனவே ஒருவருக்கு பதில் சொல்லி சொல்லி அலுத்துவிட்டேன் இப்பொழுது மைக்கோ கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தால் அதில் உள்ள எந்த கருத்தையும் ஏற்காமல் நீங்கள் இடையில் புகுந்து "அப்பாவின் சத்தத்துக்கும் அடுத்த வீட்டுக்காரன் சத்தத்துக்கும் வேறுபாடு தெரியாது" என்பதுபோல் பிசாசுதான் எல்லா வெளிப்படுமே கொடுப்பான் என்று சொல்கிறீர்கள். அதற்கும் வசன ஆதாரத்துடன் என்னால் பதில் தரமுடியும் ஆனால் உங்களுக்கு பதில் கொடுத்தால் இன்னொருவர் வருவார் அல்லது நீங்களே இன்னொரு கேள்வியை எழுப்புவீர்கள். உங்களுக்கு நான் நல்ல போதகன் என்று நிரூபிப்பதில் நேரம் செலவழிப்பதில் யாருக்கு என்னபயன் சொல்லுங்கள்?
அது தேவையில்லை கேட்பவர் கேட்கட்டும் நிராகரிப்பவர் விட்டுவிடட்டும் என்று எண்ணிதான் நான் தனியாக எழுதிவந்தேன். ஆனால் இடையில் ஒருவர் புகுந்து நம்மிடையில் உள்ள கொஞ்ச நஞ்ச உறவையும் வெட்டியே தீருவேன் என்று விடாது தொடர்கிறார். இதுவும் தேவனின் செயலோ என்னவோ யார் அறிவார்?
நல்லது ஐயா! எனது கருத்துக்களை எனது தளத்திலேயே தொடர்கிறேன்! தங்கள் கூட்டத்தில் என்னை ஏற்றுக்கொண்டாலும் சரி, நிராகரித்தாலும் சரி, அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை! ஆனால் இங்குள்ளவர்களின் அனேக கருத்துகளுக்கு நான் முரணானவன் அல்ல என்பது மட்டும் உறுதி!
கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதை செய்யட்டும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உங்கள் குற்றச்சாட்டில் சிறு சந்தேகம் இருந்தால்கூட, உங்கள் குற்றச்சாட்டை வாபஸ் பெறுங்கள்.
அபாண்டமான சொல்லை நாம் ஏற்கக்கூடாது என்பதைவிட மிகமிக முக்கியம், மற்றவர்களை நாம் அபாண்டமாக எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதே.
என்பெயரில் இவ்வாறு தவறான பதிவிட்டு கெடுக்கும் தன்மைகொண்ட வேறு ந்த எதிரியும் எனக்கு கிடையாது சகோதரரே! இப்படி ஒரு பதிவு என் பெயரில் ழுதப்பட்டுள்ளது என்று நம் சகோதரர்கள் எனக்கு போன்பண்ணி சொன்னபோது நான் மிகவும் ஆடிவிட்டேன். இவ்வாறு கீழ்த்தரமான ஒரு காரியத்தை செய்ய அதிகமான வெறுப்பு அல்லது பகை வேண்டும். எனக்கு அப்படிப்பட்ட யாரும் கிடையாது. இவர் ஒருவர்தான் நமது எல்லா கருத்தையும் திரித்து விமர்சிப்பவர் எனவேதான் நான் அவ்வாறு அனுமானித்தேன்.
ஆகினும் தங்களின் இந்த சுட்டுதலுக்கு மிக்க நன்றி.
நாம் அறியாமல்கூட தவறு செய்துவிடாதபடிக்கு நூற்றுக்கு நூறு உண்மை என்று தெரியாத அந்த குற்றசாட்டை தங்கள் அறிவுருத்துதலின் அடிப்படையில் நீக்கி விடுகிறேன். அது ஒருவேளை தவறான அனுமானமாக இருக்குமாயின் ஆண்டவரிடமும் சம்பந்தபட்ட்வரிடம் மன்னிப்பு கோருகிறேன்!
I சாமு 25:39தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்குஸ்தோத்திரம்;
நன்றி
சுந்தர்
-- Edited by SUNDAR on Thursday 13th of January 2011 02:53:04 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)