இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவம் என்ற உபதேசம் சரியானதா?


இளையவர்

Status: Offline
Posts: 13
Date:
திரித்துவம் என்ற உபதேசம் சரியானதா?
Permalink  
 


திரித்துவம் என்ற உபதேசம் சரியானதா? (சுட்டது)

1. “திரியேக தேவன்” என்ற உபதேசம் சத்திய வேதாகமத்திற்கு நேர் விரோதமானது.

2. “ திரியேக தேவன்” என்னும் வார்த்தையே bible-ல் கிடையாது.

1இராஜா 8:23;  இஸ்ரயேலின் தேவனாகிய யேகோவாவே மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை.
சங் 86:8;  ஆண்டவரே தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை.
சங் 113:5;  உன்னதங்களில் வாசம் பண்ணுகிற நம்முடைய தேவனாகிய யேகோவாவுக்குச் சமமானவர் யார்?
யாத்  15:11;  யேகோவாவே , தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்?
எசா 46:9;  நானே தேவன் . வேறொருவரும் இல்லை.
நானே தேவன் எனக்கு சமானமில்லை.
2சாமு 7:22;  தேவர்க்கு நிகரானவர் இல்லை.
ஏசா 40:25 ;  இப்படியிருக்க , என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
எனக்கு யாரை நிகராக்குவீர்கள் ? என்று பரிசுத்தர் சொல்கிறார்.
ஏசா 46:5;  யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும் படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?


சத்திய வேதம் இவ்வாறு சொல்லியிருக்க சரிசமானவர்கள் சமநித்தியர் என்று கூறுவது பொய் உபதேசம்.

லூசிபர்” என்னும் தேவதூதனைப்பற்றி ….
ஏசா 14:14;  நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்.உன்னதமானவர்க்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
லூசிபர் என்னும் தேவதூதன் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று பெருமைப்பட்டதால் அவனே தேவனுக்கு விரோதியான சாத்தானும் பிசாசுமானவன்.


இயேசு கிறிஸ்துவைப்பற்றி…..
பிலி 2:6-11;  அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கினார்.
… கீழ் படிந்தவராகி இதம்மைத்தாமேதாழ்த்தினார்.
• இயேசுவானவார், சாத்தானைப்போல் கொள்ளையாடி தேவனுக்கு சமமாய் இருக்க எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, மரண பரியந்தம் கீழ்படிந்தபடியால் தேவனே ஓர் விஷேச மகிமைக்கு உயர்த்தினார்.

கிறிஸ்துவத்தில் திருத்துவம் தொடங்கப்பட்டது எப்போது?

கி.பி. 325-க்கு பிறகு (Nicea counsil) நிசியா கவுன்சிலில்
முடிவெடுக்கப்பட்ட மூன்று தெய்வ வணக்கம் (or) திரியேக தேவத்துவம், திருத்துவம் என்ற வணக்கம் துவங்கப்பட்டது

.
ஏற்கனவே திருத்துவம் வணக்கம் உலகத்தில் இருந்தது.

1. எகிப்து –      - ஓசீரியஸ்,  இஸிஸ்   , நிப்திஸ்
2. பாபிலோன் - சீயூஸ்    ,   ஹீரா      ,  ரீயா
3. ரோமாபுரி – -  ஜீபிடர்    ,   தியானா , மொர்குரி
4. ஜப்பான் -     - பான்       ,   போ         ,  பூ
5. இந்தியா-    -  சிவன்     ,   பிரம்மா   , விஷ்ணு.
6. ஜெர்மனி  -   தோர்         ,  வெட்டன் ,வ்ரிட்கோ.

“தேவன் ஒருவரே”

1தீமோ.1:17 ; நித்தியமும் அழிவில்லாமையும் (சாகாமை) அதரிசனமுமுள்ள ராஜனுமாய் (invisible king) “ஒருவரே” ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் , மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக . ஆமென்.

சங் 83:17;  யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் “ஒருவரே” பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி.

1தீமோ. 2:5 ;  “தேவன் ஒருவரே” தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

யோவா 17:3;  “ ஒன்றான”மெய் தேவனாகிய (only true God) உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்”

1தீமோ 6:16 ;  “ஒருவராய் ” சாகாமையுள்ளவரும் , சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும்….

உபா 32:39;40; நான் நானே அவர் ,”என்னோடே வேறே  தேவன் இல்லை.”( சாகாதவர்)

ஏசா 45:5-9;   நான்,யேகோவா ; வேறொருவர் இல்லை. என்னைத்தவிர தேவன் இல்லை.
சங் 136:4;  “ஒருவராய்” பெரிய அதிசயங்களைச் செய்கிவரைத் துதியுங்கள்.

உபா 6:4;  இஸ்ரவேலே கேள்.நம்முடைய தேவனாகிய கர்த்தர், ஒருவரே கர்த்தர்

மல் 2:10  நம் எல்லோருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஓரே தேவன் நம்மை சிருஷ்டித்ததில்லையோ?

ரோம. 3:29-30;  தேவன் யூதருக்கு மட்டுமா தேவன்  ? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா?
ஆம். புறஜாதிகளுக்கும் அவர் தேவன் தான்.….  நீதிமானாக்கிற தேவன் ஒருவரே.

ஆக உலக மக்கள் அனைவருக்கும் யூத கடவுளாகிய யேகோவாவே மெய்யான கடவுள்.  அவர் ஒருவரே

யாரை தொழுது கொள்ள வேண்டும்?

யோவா14:1;தேவனிடத்தில் விசுவசமாயிருங்கள்.என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

1தீமோ.2:5; தேவன் ஒருவரே ,தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.”

எனவே ஒரே தேவனாகிய யேகோவாவை ஒரே மத்தியஸ்தரான இயேசு கிறிஸ்து வழியாகத் தொழுது கொள்ள வேண்டும்.

கொலோ 1:14-16; குமாரன் வழியாக சகலத்தையும் சிருஷ்டித்த தேவன்.

1பேது 1:19-20 ; குமாரன் வழியாக இரட்சிப்பை உண்டாக்கிய தேவன்.

எபே 1:4-12;  குமாரன் வழியாகவே தன்னை தொழுது கொள்ள வேண்டும் என சித்தம் வைத்துள்ளார்.

யோவா 14:6 ; நானே விழி யோவா.10:9;  நானே  வாசல்.

இதை இயேசு

யோவா  16:23; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்கு தருவார்.

• பவுல் இதை
ரோமர்.16:27 ; தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசு     கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

கொலோ 3:17; வார்த்தையினாலாவது கிரியை யினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியங்கள்.

• இயேசு கூட ஒரே தேவனை மட்டுமே தொழுது கொள்ள சொல்கிறார்.

மத் 7:6; உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. 7:8; 7:9;

மத் 4:10 உன் தேவனாகிய யேகோவாவையே பணிந்து கொண்டு ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.

யோவா 4:21-23 “ பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும் ”

ஏசா 42:8 என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

சங் 29:1 யேகோவாவுக்கு மகிமையும் வல்லமையையும் செலுத்துங்கள்.
யேகோவாவுக்கே அதை செலுத்துங்கள். நாளா 16:28.

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். யோவா 10:30 ; இதன் அர்த்தம் என்ன?

யோவா 10:26-30; சரீரப்பிரகாரம் பிதா, குமாரன் இவரும் தனிப்பட்ட ஆட்களாயிருந்தாலும், தேவனுடைய பிள்ளைகளாகிய விசுவாசிகள் அனைவரையும் பாதுகாத்து அவர்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்கும் கிரிகையில் இயேசு பிதாவோடு ஐக்கியப்பட்டு ஒன்றாயிருக்கிறார்.

யோவா 17:11; பரிசுத்த பிதாவே , நீர் எனக்கு தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு…

யோவா 17:21-23; அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே நீர்  என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது   போல  அவர்களெல்லாம்      நம்மில்    ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.  
நாம் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி…..

“ ஒருமைப்பாட்டில்” அவர்கள் தேறினவர்களாய் இருக்கும்படிக்கும்….
நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும் படி வேண்டிக் கொள்கிறேன்.
பிதாவும், குமாரனும் ஒருமைப்பாட்டில் ஒன்றாயிருப்பது போல சபையார் அனைவரும் பிதாவினுடைய , குமாரனுடைய (நம்மில்) ஒருமைப்பாட்டில் ஒன்றாயிருக்க இயேசு ஜெபித்தார்.

ANS : யோவா 17:21;
ஒருமைப்பாட்டில் நீர் என்னிலேயும் நாம் உம்மிலேயும்  இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்கிறேன்.

நானும் , பிதாவும் என்று கூறும் போது 2 பேரைக் குறிக்கிறது.
ஒருமைப்பாடு: ஒரே சிந்தை , ஓரே எண்ணம்.

1கொரி. 3:5-8; நடுகிறவனும் நீர்பாச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்.
அப்படியானால் பவுலும் அப்பெல்லோவும் ஒரே ஆளா?

மத் 19:5-6;  கணவனும் மனைவியும் ஒரே மாமிசமாயிருக்கிறார்கள். ஒரே ஆளா? எபே 5:31;

என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்? யோவா 14:9;

பிலிப்பு என்னும் சீஷன் இயேசுவிடம் “பிதாவை எங்களுக்குக் காண்பியும்” என்று கேட்டான்.

யோவா 1:18; பிதாவை ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை.

யாத் 33:20;  ஒரு மனுஷனும்  என்னைக் கண்டு உயிரோடுயிருக்க கூடாது என்றார்.
(யோவா.5:37; கொலோ.1:18; 1தீமோ.6:16-17)
ஆகிய வசனங்கள் பிதா அதரிசனமானவர் என்று கூறக்கூடியதாக உள்ளது.

யோவா 14:7; என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரை கண்டும் இருக்கிறீர்கள். யோவா 8:19;

எபே 1:17-19;  இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர். தம்மை நீங்கள், அறிந்து கொள்வதற்காக…
தாம் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி …
தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும் ,நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

இயேசு பிதாவுக்கு “நித்திய பிதா” (Everlating father)என்னும்
பெயர் ஏன் கொடுக்கப்பட்டது?  ஏசா 9:6;

ஜீவன் கொடுக்கிறவர் - Father

1. பரம பிதாவின் குமாரன் ஆதாம்.
2. தற்காலத்தில் உள்ள சகல மனித ஜாதியாருக்கும் பிதா.
3. பிதாவாகிய ஆதாம், பாவம் செய்து , தனக்கும் தன் சந்ததியார் அனைவருக்கும் மரணத்தை வரப்பண்ணினார்.

ரோம 5:12;  இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும்….)

பரலோகத்திலிருந்து வந்த தேவகுமாரன் இயேசு. கடைசி ஆதாம்.

(1கொரி. 15:45; முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான்.பிந்தின ஆதாம் உயிர்பிக்கிற ஆவியானார்.)
பிந்தின ஆதாமாகிய இயேசு ,முந்தின ஆதாம் மற்றும் அவன் சந்ததியார் அனைவருக்காக தன் ஜீவனைக் கொடுத்து அவர்களை உயிரோடே எழுப்பி,அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும் உயிர்பிக்கிற ஆவியானார்.

இக்காரணத்தினாலே நித்திய பிதா என்ற நாமம் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ரூதரஆம், மாபெபட், ரோமன் கத்தோலிக்கியரின் டூவே (D way)என்னும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் 
Father of Futurity – “எதிர் கால பிதா”
Father of the World to come “ இனி வரப்போகும் யுகத்தின் பிதா”
என்று சரியாய் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

“எதிர்காலபிதா
இயேசுவின் இரண்டாம் வருகையையொட்டி இனிவரப்போகும் புதிய யுகத்தில் இயேசு மரித்தோரை எழுப்பி ஜீவனை கொடுக்கப்போகும் திட்டத்தின் நிமித்தம் இப்படி       மொழிபெயர்த்துள்ளனர்.

“நித்திய பிதா
வரப்போகும் யுகத்தில் இயேசுவின் மூலம் ஜீவனை பெற்றுக்கொண்ட ஆதாமின் சந்ததியார் அனைவரும் நித்திய காலத்திற்கு (நித்திய ஜீவனை)பெற்றுக் கொள்வதால் நித்திய காலத்திற்கு இயேசு பிதாவாக இருப்பதால் நித்திய பிதா என்று பெயர்கொடுக்கப்பட்டுள்ளது.

சங் 45:16 ; உமது பிதாக்களுக்கு பதிலாக உமது குமாரர்கள் இருப்பார்கள்.

1. பரம பிதாவின் குமாரன் இரண்டாம் ஆதாமாகிய இயேசு.
2. இனிவரும் யுகத்தில் உள்ள சகல ஜாதியாருக்கும் பிதா.
3. பிந்தின ஆதாமான இயேசுவின் வழியாக அனைவரும் நித்திய ஜீவனை பெற்றுக்கொண்டு நித்திய காலத்திற்கும் உயிரோடே இருப்பார்கள்.

ANS:

ஆதாம் இயேசு

சகலஜாதியாரும்மரித்ததால்             சகலஜாதியாரும் ஜீவனைபெற்றுக்கொண்டு நித்திய

நித்திய பிதாவாகயிராமல்                 காலத்திற்கும் உயிரோடே இருப்பதால்  நித்திய

தற்காலத்தில் மட்டும் பிதா               காலத்திற்கும் பிதாவாகிறார். SO.நித்திய பிதா

எபே. 4:30;   “அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப்பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்”

• பரிசுத்த ஆவி  - வல்லமையைக் குறிக்கும்
சில இடங்களில் பரிசுத்த ஆவி - தேவனுடைய சிந்தையை குறிக்கும்.
எப்படியெனில்,

• தங்களுடைய சுய சிந்தனையை விட்டு விட்டு, தேவனோடு உடன்படிக்கை பண்ணினவர்கள், பரிசுத்த ஆவியை பெறுகிறார்கள்.

• இப்படி மாமிச பிரகாரமான சிந்தனை நீக்கப்பட்டு, தெய்வீக சிந்தனை கொடுக்கப்படுகிறது.

இப்படி தெய்வீக சிந்தனையைப் பெற்றவர்கள் மாமிச சிந்தனைக்கு அடிமையாகி, ஆவிக்கேற்ற கிரிகையை அவர்கள் செய்யும்போது தெய்வீக சிந்தனையை (பரிசுத்த ஆவியை) துக்கப்படுத்துகிறார்கள்.

பிதாவாகிய தேவனே, மாம்சத்தில் அவதரித்தார் என்று காட்ட ஓர் தவறான மொழிபெயர்ப்பு உண்டு. அதாவது”தேவனே மாம்சத்திலே வெளிப்பட்டார்.” 1தீமோ 3:16. இதை எல்லாத்திருத்திய வேதாகமங்களில் “அவர்” (அதாவது கிறிஸ்து) “மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டார் ” என்று சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. see any english bible

1யோவான் 5:7யில் (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே; இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள், பரலோகத்திலே) என்று பிராக்கட்டுக்களுக்குள் காணப்படும் இந்த வசனம், திரியேகத் தத்துவத்தை ஸ்தாபிக்க ஏதோ ஒரு குருவானவரால்  வேதாகமத்தில் கி.பி.500க்கு பிறகு தவறாக சேர்க்கப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த வசனம் கி.பி.மூன்றாம் நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வெகு பூர்வ கிரேக்க வேதாகமங்களில் இல்லாததால் இப்போது அச்சிடப்படும் எல்லா திருத்திய மொழிபெயர்ப்புகளிலும் இந்த வசனம் நீக்கப்பட்டிருக்கிறது.

தேவனுடைய வேதாகமத்தில் “ஒன்றும் கூட்டவும், ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்” என்ற கட்டளைக்கு நேர் விரோதமாய்ச் சேர்க்கப்பட்ட வசனம். நியாயப்படி இப்போது அது நீக்கப்பட்டிருக்கிறது உபா 4:2, வெளி 22:18-19.

ஒன்றான மெய்த்தேவனாகிய யேகோவா, அவர் அனுப்பிய அவருடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்து நமது இரட்சகர்; பரிசுத்த ஆவி, தேவனிடமிருந்து வரும் உன்னத பலன் என்று வேதாகமம் திட்டவட்டமாய் கற்பிக்கிறது.



-- Edited by abreham1975 on Friday 14th of January 2011 03:12:41 PM

__________________


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

"தனக்கு சமானமில்லை" என்றும்  "எனக்கு முன் எந்த தேவனும் இல்லை  பின்னால் இருக்க போவதும் இல்லைஎன்றும் "நான் ஒருவரே" என்றும் இறைவன் பல வசனங்களில் திட்டமாக் கூறிவிட்டார்  இந்நிலையில் மூவராய் இருக்கும் ஒருவர் என்பதோ  மூவரும் ஒருவரல்ல என்ற கருத்து சரியாக பொருந்த வாய்ப்பு இல்லை.திரித்துவம் என்ற வார்த்தை தவறே ஆனாலும் தேவனின் செயல்பாட்டைப்ற்றி  நமது தளத்தில் எழுதப்பட்டுள்ள கீழ்கண்ட கட்டுரைகளை படித்து தங்கள் கருத்துக்களை கூறவும்.
 
 
 
விரைவில் தங்கள் கருத்துக்கு தள சகோதரர்கள்  விளக்கம் கொடுபார்கள்.  
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard