1) பரிசுத்த வேதாகமமாகிய “பைபிள்” புத்தகத்தை எழுதியது யார்?
தேவனுடைய பரிசுத்த மனிதர்களாகிய மோசே யோசுவா தாவீது மற்றும்
பல தீர்க்கதரிசிகளும் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களும் தேவ ஆவியால் ஏவப்பட்டு
பரிசுத்த வேதாகமத்தை எழுதினார்கள் . 2தீமோ.3:16-17; 2பேதுரு.1:20-21 ; உபா.31:9-13;
யோசுவா.24 :26 – 28; யோவான் 21 : 24 - 25 ; லூக்கா.1 : 1-4;
பழைய ஏற்பாடு 39 புத்தகங்கள் எபிரேய பாஷையிலும் புதிய ஏற்பாடு 27
புத்தகங்களும் கிரேக்கு பாஷையிலும் எழுதப்பட்டுள்ளது. அவைகள் முழுவதும்
மற்றும் சில பாகங்களுமாகச் சேர்ந்து 1250 மொழிகளில்
மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது.முதல் முதலாக 1715-யில் தமிழ் வேதாகமம்
சீகென்பால்க் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது.