சகோதரர் அவர்களே வேதத்தை படிக்க தாங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வழியும் ஏற்ப்புடயதே ஆகினும் ஒரே ஒரு காரியத்தை தாங்கள் சற்று அவதானிக்க வேண்டும். ஒருவேளை படிப்பறிவில்லாத, மூல பாஷையை ஆராய தெரியாத ஒருவராக இருந்தால் அவர் எப்படி வேதத்தை தாங்கள் சொல்வதுபோல் படிக்க முடியும்? தேவன் அவர்களுக்கு உண்மைகளை தெரிவிக்க விரும்ப வில்லையா?
பிதா உண்மைகளை ஞானிகளுக்கு மறைத்து பாலகருக்கு வெளிப்படுத்தினார் என்றல்லவா வேதம் சொல்கிறது? இந்த பாலகர்கள் எப்படி மூலபாஷையை போய் ஆராயமுடியும்? மனுஷன்தான் ஒருவரது படிப்பையும் முகத்தையும் பார்ப்பான் கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறவர் அல்லவா? அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் ஆடுமேயத்துகொண்டு இருத்த தாவீதும் அலை கடலில் மீன்பிடித்து அன்றாடம் பிளைப்பு நடத்திவந்த பேதுருவும் ஆயக்காரனாகிய மத்தேயுவுமல்லவா ஆண்டவரால் நண்பர்களாக தெரிவுசெய்யப்பட்டார்கள்!
எனவே எனது கருத்து என்னவெனில் "தேவன் ஒருவனுக்கு உண்மையை உணர்த்த சித்தம் கொண்டால் எப்படிவேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும் என்பதே.
ஓரளவுக்கு படித்து ஞானம்பெற்ற நம்போன்றவர்கள் வேத வார்த்தைக்கு கீழ்படித்து இரவும் பகலும் தேவனின் வார்த்தைகள்மேல் தியானமாக இருக்கவேண்டியது மிக மிக அவசியம்! ஆகினும் நாம் தேவனை சார்ந்து கொள்ளாமல் நமது ஞானத்தை மட்டும் நம்பினால் சாத்தானால் நிச்சயம் திசை திருப்பபடுவோம். எனவே வெறும் ஆராய்வதினால் மட்டும் உண்மையை அறிந்துவிடுவோம் என்று சொல்லமுடியாது,. ஏனெனில் தேவன் பல உண்மைகளை ஞானிகளுக்கு மறைக்கிறார்.
எனவே தாங்களின் கருத்துடன் நான் இன்னொரு கருத்தையும் செர்த்துகொள்கிறேன்.
I கொரிந்தியர் 2:10நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
அதாவது தேவனுடய ஆழங்களை அறிந்த ஆவியானவர் ஒருவரே நமக்கு சரியான உண்மையை போதித்து நம்மை ஏற்ற வழியில் நம்மை நடத்த முடியும்! மனித ஞானத்துக்கு முன்னால் தேவனின் உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கிறது!
எனவே அன்பான சகோதரரே, தாங்கள் சொல்வதுபோல் நாம் வேதத்தை ஆராய வேண்டியது அவசியமே அத்தோடு நாம் ஜெபித்து ஆவியில் நிறைந்து "ஆண்டவரே நான் படிக்கும் வேத பகுதியின் உண்மையை அறியும்படிக்கு எனது இருதயத்தை திறந்தருளும் நான் தவறான கருத்துக்கு திசைதிருப்பபடாதபடிக்கு காத்துகொள்ளும் " என்ற வேண்டுதலுடன் படிப்பது நலம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நன்றி நண்பரே தங்களின் ஆலோசனைக்கு. நான் வேதத்தை அறிவதில் ஒரு பாலகனாகவே தற்பொழுது இருக்கிறேன். வேதத்தை கூட அண்மையில் தான் படிக்க ஆரன்பிதேன். மற்றும் நீங்கள் எல்லோரும் எழுதும் பதிவுகளை தினம் தோறும் வாசித்து சத்தியத்தை அறிந்து கொள்கிறேன். அடுத்து நீங்கள் //வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை கண்டறிதல்!// என்ற தலைப்பில் எழுதிய பதிவுகளையும் வாசித்தேன். அருமையாகவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி
நன்றி நண்பரே தங்களின் ஆலோசனைக்கு. நான் வேதத்தை அறிவதில் ஒரு பாலகனாகவே தற்பொழுது இருக்கிறேன். வேதத்தை கூட அண்மையில் தான் படிக்க ஆரன்பிதேன். மற்றும் நீங்கள் எல்லோரும் எழுதும் பதிவுகளை தினம் தோறும் வாசித்து சத்தியத்தை அறிந்து கொள்கிறேன். அடுத்து நீங்கள் //வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை கண்டறிதல்!// என்ற தலைப்பில் எழுதிய பதிவுகளையும் வாசித்தேன். அருமையாகவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
ஆண்டவராகிய இயேசுவின் இரட்சிப்பு என்பது நமக்கு கிருபையால் இலவசமாக கிடக்கிறது! ஆனால் கிறிஸ்த்துவுக்குள் ஒரு ஜெயம்கொள்ளும் வாழ்க்கை வாழ்வதற்கு அவரது வார்த்தைகளை நமது அன்றாட வாழ்வில் கைகொண்டு நடக்க வேண்டியது மிக மிக அவசியம்.
யோவான் 14:15நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
யோவான் 14:23ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,
மத்தேயு 7:24ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
எனவே சகோதரரே நான் முக்கியமாக போதிப்பது கிருபையை பெற்றுக்கொண்ட நாம் அதில் நிலைநிர்ப்பதோடு நமது கிரியைகளாலும் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்பதே!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)