எந்த ஒரு வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும், கட்டினவன் இல்லாமல் ஒரு வீடும் உண்டாகாது. இதன்படி நாம் காண்கிற எல்லாவற்றையும் உண்டு பண்ணினவர் ஒருவர் இருக்கவே வேண்டுமென்றும் அவரைத்தான் தேவன் அல்லது கடவுள் என்றும் நாம் அறிய முடியும். (எபி. 3:3,4) இக்காரணத்தைக் கொண்டு தான் தாவீது “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது”. ஆகாய விரிவு, அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளை பொழிகிறது. இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது” என்று பாடினார். சங் 19 : 1,2 ;
தேவனைக் குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே (அதாவது மனிதர்களுக்குள்ளே) வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும். ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. ரோமர். 1 : 19,20.
துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான். அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே. தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். சங் 10:4, 14:1,53:1.
தேவன் உண்டென்று அறிந்துகொள்வதர்க்கு வசன ஆதாரத்துடன் அருமையான கருத்துக்களை கூறியுள்ளீர்கள். இது நிச்சயம் பலருக்கு பயனுள்ள கருத்து நன்றி.
தேவனை அறியாதவர்கள் ஒருபுறமிருக்க, அறிந்துகொண்டவர்கள் அவரைபற்றி தவறாக அறிந்து கொண்டதுதான் இங்கு மிகுந்த வேதனையை தருகிறது.
தாங்கள் வெறும் வசனங்களை காட்டி தேவன் உண்டு என்பதை நம்புங்கள் என்று சொல்கிறீர்கள் நல்லது! ஆனால் பைபிளை தேவனுடைய வார்த்தை என்று நம்பாதவர்களை எப்படி நம்பவைப்பது? அவர்கள் பரிணாம வளர்ச்சியால் எல்லாம் உருவானது என்றொரு கொள்கையை தெளிவாக சொல்கிறார்களே!
இந்நிலையில் இந்த காலத்தில் தேவனை அனுபவபூர்வமாக தன்னை ஒருவருக்கு வெளிப்படுத்த முடியுமா? என்று கேட்டால்
எனது பதில் ஆம் என்பதே!
எவ்வாறு தெரியுமா?
"பரிசுத்த ஆவி" என்னும் மனிதர்களுக்குள் தங்கும் வரம்பெற்றுள்ள தேவனின் மூலமே!
தேவன் இன்றும் தன்னை வெளிப்படுத்தமுடியும் முழு மனதோடு நம்பி திறந்த மனதோடு ஒருவன் வந்தால் அவர்களுக்கும் தேவனை அனுபவபூர்வமாக அறிய வைக்க முடியும். ஆம் தேவனை அறிந்துகொண்டேன் என்று அவர்களால் துள்ளி குதிக்க முடியும். தான் பாவி என்று தேவனால் இருதயத்தில் உணர்த்தப்பட்டு கண்ணீர் சிந்தி கதறவைக்க முடியும்!
தேவனை நிச்சயம் தரிசிக்க முடியும்!
மத்தேயு 5:8இருதயத்தில்சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
"நாம் தேவன் ஜீவனுள்ளவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்" எனவே வெறும் வசனத்தை காட்டி மட்டுமல்ல, அனுபவபூர்வமாகவும் தேவன் தன்னை இன்றும் ஒருவருக்கு நிச்சயம் வெளிப்படுத்த முடியும்! அதற்காக அருளப்பட்டவரே மனிதனுக்குள் தங்கும் வரத்தை பெற்று, நமக்குள் வந்து தங்கி வாசம்செய்து, நம்மை கடிந்துகொண்டு போதித்து நம்மை சாத்தானின் தந்திரங்களை முறியடிக்கும் சரியான வழியில் நடத்தி தேவனிடம் கொண்டு சேர்க்கும் ஆவியானவர்!
யோவான் 14:17அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
சுருக்கமாக சொன்னால் ஒருவர் தேவனை திறந்த மனதோடு விசுவாசித்தால் என்னோடு சேர்ந்து விசுவாசத்துடன் விடாது ஜெபித்தால் அவரை அனுபவ பூர்வமாக ஒருவருக்கு உணரவைக்க முடியும் என்பதே!
எனவே "தேவன் உண்டு" என்று அறிவதற்கு இந்த வழியும் இருப்பதால் என்னுடைய இக்கருத்தையும் கூடுதலாக இங்கு சேர்த்துகொள்ளலாம்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)