(2) தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலிருந்து என்றும் மாறாமல் இருக்கிறவராகவே இருக்கிறார். அவர் ஒருவரே இருந்தவரும், இருக்கிறவரும், இருக்கப்போகிறவருமான நித்திய தேவன். அவர் எவ்விதமான அவதாரமெடுத்து மாறுகிறவர் அல்ல. யாத் 3:14, மல்கியா 3:6. வெளி 1:8.
(3) தேவன் ஒருவரே சாகாமையுடையவராய், தம்மில் தாமே ஜீவனுள்ளவராயிருக்கிறார். எரே 10:10. 1தீமோ 6:16. யோவான். 5:26. இவர் எவ்விதத்திலும் சாகவே முடியாது.
(4) தேவன் ஆவியாயிருக்கிறார். அதாவது எலும்பு, மாம்சம், இரத்தம் முதலியவை இல்லாமல் ஆவிக்குரிய தேகத்தில் செரூபியாயிருக்கிறார். யோவான் 4:24, 5:27, 6:46, ஆதி 1:26, லூக்கா 24:39, அவருக்கு ஒர் ரூபம் உண்டென்று அறிகிறோம்.
(5) தேவன் மனிதக்கண்களுக்கு காணப்படாதவராயிருக்கிறார். யாத் 33:20,யோவா1:18, 1தீமோ.6:16,17; 1யோவா 4:12 தேவனுடைய பிரசன்னத்தை சிலர் தரிசனங்களில், அக்கினி, மேகம், மின்னல், மற்றும் தேவதூதருடைய தோற்றங்கள், அசரிரி வாக்குகள், மூலமாய் அறிந்துக்கொண்டார்கள். ஆனால் ஒரு மனிதனும் தேவனுடைய சுய ரூபத்தைக்கண்டதில்லை. ஆதி 16 :7-13, யாத் 3:2-4, 33 : 20 -23, ஏசாயா 6:1-5.
(6) தேவன் தூணிலும், துரும்பிலும், எங்கும் நிறைந்தவரல்ல, ஆனால் சர்வ உலகங்களின் ஓர் மத்திய, முக்கிய ஸ்தானமாகிய பரலோகம் என்னும் தம்முடைய வாசஸ்தலத்திலே இருக்கிறார். ஆனால், அவருடைய சர்வ வல்லமையுள்ள ஆவி, சர்வ உலகமெங்கும் சென்று கிரியைச் செய்யக்கூடியதாயிருக்கிறது. அவருடைய ஆவிக்கு மறைவான இடமே கிடையாது. 2 நாளா 6 : 21, 30, 39, மத் 6:9, சங் 139 : 5-10, எரே 23 : 23, 24, ஆமோஸ் 9 :2,3.
(7) தேவன் சர்வவல்லமையுடையவராயிருக்கிறார். ஆதி 17 :1, 35:11. யாத் 6:3, சங் 91:1, 2 கொரி 6:18, வெளி 1:8, 4:8, 21:22.