சரீரப்பிரகாரம் பிதா, குமாரன் இருவரும் தனிப்பட்ட ஆட்களாயிருந்தாலும், தேவனுடைய பிள்ளைகளாகிய விசுவாசிகள் அனைவரையும் பாதுகாத்து அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும் கிரியையில் இயேசு பிதாவோடு ஐக்கியப்பட்டு ஒன்றாயிருக்கிறார். யோவான் 10:26-30.
பிதாவும், குமாரனும் ஒன்றாய் இருப்பது போல விசுவாசிகளாகிய சபையார் யாவரும் ஒன்றாய் இருக்க வேண்டுமென்று இயேசு ஜெபித்தார். யோவான் 17:11; 21-23.
ஒருமைப்பாட்டில் குமாரன் பிதாவிலும், நாம் குமாரனிலும், குமாரன் நம்மிலும் இருக்கிறார்.