இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விசுவாசித்தால் மரணத்தை ஜெயம்கொள்ள முடியும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
விசுவாசித்தால் மரணத்தை ஜெயம்கொள்ள முடியும்!
Permalink  
 


உள்ளங்கை  நெல்லிக்கனிபோல  இணை வசனங்களுடன்  மிகதெளிவாக சொல்லப்பட்டுள்ள வசனத்தை அப்படியே  விசுவாசிக்க முடியாமல் விசுவாச மற்றவர்களாகவும், வேத வசனத்தின் வல்லமை தெரியாதவர்களாகவும் இருப்பவர்கள், என்னை பார்த்து வசனத்துக்கு சரியான வெளிப்பாடு இல்லை என்று குற்றம்சாட்டி வருகிறார்கள்! 
 
வசனம் மிக தெளிவாக சொல்கிறது
 
யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
 
யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
 
இவ்வளவு தெளிவுக்கு மேல் இன்னும் என்ன தெளிவு வேண்டும் என்பது புரியவில்லை! வியாக்கீனம் என்றபெயரில்  அநேகரின்  விசுவாசத்தை மட்டுப்படுத்துவதுதானே சாத்தானின்  தந்திரமேயன்றி வேறல்ல. வசனத்தின்மேல் உறுதியான விசுவாசமற்றவர்கள் அதை திரித்து ஏதாவது ஒப்புக்கு  விளக்கம்  கொடுப்பதை நாம் நம்பவேண்டிய அவசியமில்லை.  

வசனம்  மிகத்தெளிவாக சொல்லும் பொருளை நாம் விசுவசித்தால் நமக்கு தவறான வெளிபாடாம் வசனத்துக்கு வெளியே  போகிறோமாம். பவுல் ஏன் செத்துபோனார் என்று கேள்வியை எழுப்புகிறார்கள்?  இயேசுவின் வார்த்தையை திசைதிருப்ப நீங்கள் பவுலை பயன்படுத்துகிறீர்களா?   
 
எனது வெளிப்பாடுகள் எதையும் யாரும் நம்பவேண்டாம் முதலில் வசனத்தை உறுதியாக விசுவாசியுங்கள்  பின்னர்  எல்லாம்  உங்களுக்கு தானாக புரியும்!
 
மாற்கு 9:23 இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
 
தேவனால் எப்படி எல்லாம் கூடுமோ அதுபோல் விசுவாசித்தவனுக்கும் எல்லாம் கூடும் என்றுதான் வேதம் சொல்கிறது? விசுவாசத்தின்மூலமல்லவா தேவன்  கிரியை செய்கிறார் அவிசுவாசம் உள்ள இடத்தில் இயேசுவாலேயே ஒன்றும் செய்யமுடியவில்லையே! நீங்களும் விசுவாசமில்லாதவர்களாக இருந்துகொண்டு அடுத்தவரையும் அதே  அவிசுவாசகுழிக்குள் தள்ளுகிறீர்களே!    
 
மேலும்
 
மத்தேயு 8:13, நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது
  
என்று இயேசு சொல்லியிருக்கிறாரே! நான் வேத வார்த்தையின்  அடிப்படையில் மரணத்தை ஜெயம்கொள்ள முடியும் என்று திடமாக விசுவாசிக்கிறேன் எனது வாழ்க்கையில் அது நிறைவேறினால் நிறைவேறட்டும், இல்லையேல்  நான்  இயேசுவின் வார்த்தையை சரியாக கைகொள்ளவில்லை அதனால் மரணத்தை ஜெயிக்க முடியவில்லை" என்பதைதான்  ஏற்றுக்கொள்வேனேயன்றி  அதக்காக வசனத்தின் வல்லமையை ஒருபோதும் நான் குறைக்க மாட்டேன்!
 
நான் எழுதுவதற்கு வசனஆதாரம் தரவேண்டும் என்று கேட்கிறீர்கள் கொடுத்தால்  அத்தோடு  நீங்கள் நம்பும் பாரம்பரிய  நம்பிக்கையையே நானும்  ஏற்க்கவ வேண்டும் இல்லையேல் அவன் தவறான போதகன்  என்று  விமர்சிப்பது  என்ன நியாயம்?    
 
"வெளிப்பாடுகள்" என்ற வார்த்தையை நான் பயன்படுத்துவதால் எல்லோரும் "ஏதோ புதியதான வெளிப்பாடு" என்று கருதி குறைகூற வேண்டாம்.  இருக்கும் ஒரு வசனத்தை மனிதர்கள் பாஸ்டர்கள் பைபிள் காலேஜ் நிர்மாணித்து வைத்திருக்கும்  பாரம்பரிய நம்பிக்கையின் அடிப்படையில் பொருள்கொள்ளாமல், அதை எழுதிகொடுத்த தேவனின்சமூகத்தில் அமர்ந்து மற்றாடி விசாரித்து பொருள் கொள்வதையே வெளிப்பாடு என்று எழுதியுள்ளேன். தாங்கள் ஜெபித்தாலோ அல்லது தேவனிடம் விளக்கம் கேட்டாலோ பிசாசுதான் முன்னால் வருகிறான் என்றால் நான் என்ன செய்ய முடியும்?
 
எனக்கு தேவன் மேலேயுள்ள வசனத்தை சுட்டி "இயேசுவின் வார்த்தையை சரியாக கைகொண்டால் மரணம் இல்லாமல்  மறுரூபம் ஆக முடியும் என்று திட்டமாக போதித்திருக்கிறார். நான் அதை உறுதியாக விசுவாசிக்கிறேன். அதைப்பற்றி எல்லோரிடமும் விசுவாசத்துடன் அறிக்கை செய்து வருகிறேன்.  இது என்னால் உருவாக்கப்பட்ட விசுவாசம் அல்ல விசுவாசத்தை தொடங்குகிறவரும் அதை முடிக்கிரவருமாகிய தேவனால் உண்டான விசுவாசம் அதனால், இந்த உலகத்தில் எவன் செத்தான் எவன் இருக்கிறான் என்று  நான் பார்ப்பது இல்லை. எந்த உலக சம்பவமும் எனது விசுவாசத்தை குறைக்கவும் முடியாது.  நீங்கள் வசனத்தை உண்மையாக விசுவாசிப்பவரானால் அவ்வாறு நான் சொல்வதை விசுவாசிப்பதை  வசனத்தின் அடிப்படையில் யாரும் தவறு என்று சொல்லவும் முடியாது ஏனெனில்
 
மாற்கு 10:27  தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும்.      
 
மேற்கூறிய வசனம் சொல்லும் "எல்லாம்" என்ற வார்த்தைக்குள் எனது விசுவாசமும் அடக்கம்!

 

-- Edited by SUNDAR on Friday 14th of January 2011 09:02:36 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: விசுவாசித்தால் மரணத்தை ஜெயம்கொள்ள முடியும்!
Permalink  
 


மாம்ச மரணத்தையும் ஜெயம்  கொள்ள முடியும் என்ற விசுவாசத்தை என்னுள் கொண்டுவர தேவன் எனக்கு தெரிவித்த வசனங்கள்:

 
  1. ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்துக்கு நீங்கும் வழிகள் உண்டு (சங்:68:20)
  2. நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அங்கே மரணம் இல்லை (நீதி: 12:28)
  3. அவர் (கர்த்தர்) மரணத்தை ஜெயமாக விழுங்குவர் (ஏசா:25:8)
  4. அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; (ஓசி 13:14)
  5. என் கட்டளைகளின் படி நடந்து, என் நியாயங்களை கைக்கொண்டு உண்மையாக இருப்பானாகில் அவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் (எசே:18:9)
  6. ஒருவன் என் வார்த்தையை கை கொண்டால் அவன் என்றென்றும் மரணத்தை காண்பதில்லை.(யோ:8:51)
  7. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்(யோ:8:26)
  8. தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்பிப்பார் (ரோ: 8:11)
 
இன்னும் பல வசனங்களும் எனது விசுவாசத்துக்கு ஆதாரமாக உள்ளது. 
 
ஆனால் 
 
யோவான் 12:38 கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?     
 
என்று வசனம் சொல்வதுபோல், கிறிஸ்த்தவர்கள் இந்த "மரணத்துக்கு நீங்குதல்" என்ற வார்த்தையை "இரண்டாம் மரணம்" என்று தவறாக எடுத்துகோள்கிரார்கள்.
 
ஆனால் இரண்டாம் மரணத்தையோ வசனம் "இரண்டாம் மரணம்" என்று தெளிவாக குறிப்பிடுகிறது. 
 
வெளி 20:14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
 
ஆனால் மேலேயுள்ள வசனத்தில் எங்கும் "இரண்டாம் மரணம்" என்று வசனம் குறிப்பிடவில்லை. எனவே  இங்கு "மரணம்" என்று வரும் வார்த்தைகள் இந்த மாம்ச மரணத்தை ஜெயித்து மருரூபமாகுதலையே குறிக்கிறது என்ற உண்மையை அறிய விரும்புவோர் அறிந்து கொள்ளவும்.
 
விசுவாசிக்க முடியாதவர்களுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை.
     
லூக்கா 1:45 விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும் என்றாள்.
 
என்ற வார்த்தைகள் அடிப்படையில் எனக்கு சொல்லபட்டது நிச்சயம் நிறைவேறும் என்று நான் விசுவாசிக்கிறேன்! 
 
     


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard