தானியேல் 4:2உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது. என்ற வார்த்தைகள்படி நான் இந்த தளத்தில் எழுதுவதற்க்கான காரணம் கீழ்கண்ட திரியில் இடம்பெற்றுள்ளது
நான் இந்த தளத்தில் எழுத ஆராம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது அதற்காக என் தேவனை ஸ்தோத்தரிகிறேன். நான் எழுத ஆரம்பித்ததில் இருந்தே நமக்கு விரோதமான சக்திகளும் தங்கள் வேலையே ஆரபித்து முடிந்தவரை நம்மை மட்டம் தட்டவும் நமது வளர்ச்சியை தடுக்கவும் எவ்வளவோ முயன்று வருகின்றன என்பது நாம் அறிந்ததே.
முன்பெல்லாம் உள்ளே இருந்து முருமுருத்துகொண்டிருந்த அவைகள் இப்பொழுது பக்கத்து வீட்டில் இருந்து நம்மையே கவனித்துகொண்டு என்ன எழுதுவான் எங்கு குற்றம் காணலாம் எப்படி பரியாசம் பண்ணலாம் என்பதில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றன. நமக்கு அது மிகுந்த மன வேதனையை தருகிறது. நாமும் எவ்வளவோ சமாதானமாக போய்விட முயன்றும் முடியாத நிலையே உருவாகிறது பரியாசம் பண்ணுவதையும் சபிப்பதையும் பண்பாய் கொண்டவர்களிடம் இனியும் நாம் நல்லுறவை எதிர்பார்ப்பது வீணே!
நாம் எதுவும் புதிய வெளிப்பாட்டை இங்கு எழுதவில்லை எழுதப்பட்டுள்ள வசனத்துக்கு சற்று மாறுபட விளக்கம் கொடுக்கிறேன் ஆனால் எந்த கருத்துக்கு வசனஆதாரம் மற்றும் விளக்கம் கொடுத்தாலும் நமது விளக்கங்கள் அவர்களின் பாரம்பரிய உபதேசத்துக்கு சற்று மாறுபடுவதால், ஜீரணிக்க முடியாமல் தவிப்பதும், கள்ள ஊழியர்களை கண்டுபிடிக்கிறேன் என்றொரு வெளிப்புற போர்வையை போர்த்திக்கொண்டு நம்மேல் வீண்பழியை சுமத்தி எதையாவது எழுதுவதும், "மும்மூர்த்தி" "பிரகஸ்பதி" "சுந்தர நபி" "பேலியாள்" போன்ற புதுபுது பட்டபெயர் வைத்து ஒன்றாம் வகுப்பு பையனை போல் பரியாசம் பண்ணுவதும் அவரது பரியாசத்தை சிலர் சரிதான் என்று பாராட்டுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.
அவர்கள் பண்ணுவது மட்டும்தான் வியாக்கீனமாம் நாம் பண்ணினால் அது தவறான வெளிப்பாடாம், பொதுவாக வெளிப்பாடு எல்லாமே சாத்தானிடம் இருந்துதான் வருமாம்" ஆனால் திரித்துவம் என்ற வெளிப்பாடு மட்டும் தேவனிடம் இருந்து வந்ததாம். அதைப்பற்றி யாரும் சரியாக விளக்காமல் கமுக்கமாக வைத்துகோடு ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லுவார்களாம்.
மரத்தை மேலிருந்து கீழ்நோக்கி பார்த்துகொண்டு வருவதற்கும் வேரில் இருந்து மேல் நோக்கி பார்த்துகொண்டு போவதற்கும் அதிக வேறுபாடு உண்டு. எதையும் வேரிலிருந்து ஆராயபவ்னுக்கே அனைத்து உண்மையும் தெரியும்! மேலேயிருந்து ஆராய்ந்து வருபவனுக்கு சில மகிமையானவற்றை மேலேயே பார்த்து விடுவதால் வேரின் மகிமை மற்றும் அதன் முக்கியத்துவம் தெரியாது ஆனால் வேறில்லை என்றால் மரம் மடிந்துவிடும் என்று உண்மையும் புரியாது!
அதுபோல் இன்றைய கிறிஸ்த்தவத்தில் அநேகருக்கு பிறமதத்தவர் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு சரியான பதில் தெரியவில்லை என்றாலும் சப்பைகட்டு கட்டி சமாளிக்கின்றனர் இன்னும் கொஞ்சம் அதிகம் கேட்டுவிட்டால் உங்கள் மதம் என்ன யோக்கியமா? என்று கேட்டு விரட்டுகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு அனைத்தையும் அறிந்துவிட்டோம் என்கிற பெருமை விட்டபாடில்லை! நாம் வேரில் இருந்து காரியங்களை எடுத்துரைத்தால், வேரை அறியாத அவர்களுக்கு அது புரியாததால், நான் அறியாமல் ஏதோ புதியதாக எழுதுகிறேன் என்று என்னை மாறுபாடாக பார்க்கிறார்கள்.
ஆனால் அவர்களும் தேவனால் தாங்கப்படும் மரத்தின் ஒரு பகுதியாகையால் நம்மால் அவர்கள் குற்றம் குறை சொல்ல முடிவதில்லை. நாம் என்னதான் எடுத்து சொன்னாலும் நம்மை குறைகூருவதிலேயே நோக்கமாக இருப்பதால் தேவன் யாருடைய இருதயத்தை திறக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே நான் எழுதுவது புரியம் என்றே கருதுகிறேன்.
ஆகினும் நாளை நான் தேவன் முன்னால் நிற்கும்போது எனக்கு ஒப்புவிக்கப்பட்டவைகளை நான் எழுதிவைக்கவில்லை என்ற அவப்பெயர் எனக்கு ஏற்ப்படாதபடிக்கு, வசனம் குறித்த வெளிப்பாடுகளில் முக்கியமான அனேக காரியங்களை இங்கு எழுதிவைத்து விட்டேன். இவைகளை நம்பாதவர் ஆயிரம்பேர் இருந்தாலும் இவ்வார்த்தைகளை நம்பி பின்தொடரும் ஒரு சிலர் இருந்தாலும அதுவே எனக்கு போதும் தேவனுக்கும் அந்த ஒருசிலரே வேண்டும்.
எனது பதிவுகளை படிக்கும் மனுபுத்திரர்களுக்கு சாத்தானின் தந்திரங்கள் என்ன வென்பது நிச்சயம் புரியும்! இன்னும் அவன் தனது தந்திரத்தால் உலகையே திசைதிருப்பி வைத்திருப்பதும் புரியவரும். ஏன் இந்த உலகம் இன்னும் முடிவில்லாம் போய்கொண்டு இருக்கிறது என்பது புரியவரும். ஏன் தேவன் கணக்கற்ற மக்களை படைத்து கொண்டே இருக்கிறார் போன்ற கேள்விகளுக்கும் பதில் அறியவரும். "அது மறைவாய் இருக்கிறது" "இது தெரியவில்லை" "இது தேவனுக்கே தெரியும்" என்று சொல்லும் எந்த பதிலும் கிடையாது!
தேவன் "என்னை கேள்" என்று சொல்லி தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் தன்னிடம் கேட்பவகளுக்கு வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறார். எனவே பதில் தெரியாத எந்த ஒரு கேள்விக்கும் அவரிடமிருந்து பதிலை பெற முடியும்! தேவன் வார்த்தைமேல் விசுவாசம் இல்லாமல் அவர் "நம்பாதே" என்ற சொன்ன நம்மைபோல நாசியில் சுவாசமுள்ள பாஸ்டரை நம்பி, அவரிடம் கேட்டால் அவர் மீண்டும் உங்களை அதே பழைய பாதைக்குத்தான் திருப்புவார்! நான் பல பாஸ்டர்களிடம் கேட்டு பதில் அறியமுடியாமல் போனதாலேயே சந்தேகம் என்று வந்தால் தேவனை தேடி ஓடுகிறேன்.
முக்கியமாக தேவனை பற்றி எந்த மத சகோதரர்கள் கேட்கும் எல்லாவித கேள்விக்கும் என்னிடம் பதில் உண்டு! பதில் இல்லாத கேள்வி என்பது எதுவுமே இல்லை! அனால் அதை பலருக்கு ஏற்க்க மனதில்லாத காரணத்தால் இனி சில செய்திகளை பகிரங்கமாக எழுதாமல் தவிர்த்து, வேண்டுபவர்களுக்கு தனி மடலில் மாத்திரம் அனுப்ப நினைக்கிறேன் தளத்தில் பொதுவான சத்தியங்களை மட்டுமே எழுதலாம் என்று கருதுகிறேன்!
இனி வசனங்களை பற்றிய வெளிப்பாட்டின் அடிப்படையிலான விளக்கங்கள் குறித்த பதிவுகளை மட்டும் சில காலம் நிறுத்தி வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
அதற்க்கு காரணம் இவர்களுக்கு பயந்து அல்ல!
கர்த்தரே பல கருகலான சத்தியங்களை எல்லோருக்கும் வெளிப்படுத்த சித்தம் இல்லாதவராய், நமக்கு விரோதமாக சிலரை எழுப்பி, நமது பதிவுகளை தொடர்ந்து குறைகூற அனுமதித்திருக்கலாம். ஒருவேளை அவ்வாறு இருக்குமாயின் தேவனுக்கு விரோதமாக நாம் செயல்படாதபடிக்கு அதன் உண்மை தன்மையை அறியும்படிக்கே இதை செய்கிறேன்.
எல்லாவற்றிக்குமே ஒரு முடிவு உண்டு! நான் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பவன் அல்ல, எதிலும் ஒரு முடிவற்றவனாய் தெளிவில்லாதவனாய் எதையும் தொடர்பவனும் அல்ல! எனவே நமக்கு விரோதமாகவே பரியாசம்பண்ணி எழுதிக்கொண்டிருக்கும் சகோதரரை கர்த்தரே எடுத்து விட்டிருப்பாரானால், நான் நிச்சயம் நிரந்தரமாக கருகலான சத்தியங்களை பதிவிடுவதை நிறுத்திவிடலாம் என்றே முடிவெடுத்துள்ளேன்.
ஒருவேளை இச்செயல்கள் அகங்காரம் பிடித்த தீய ஆவியால் உருவானது என்றால்!
நான் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ளவர்! அவர் எனக்காக வழக்காட முடியாதவர் அல்ல! அப்படி வழக்காட முடியாத ஒரு தேவனை நான் வணங்கவில்லை! எனவே அவர் இங்கு இடைபட்டு தடைகளை தகர்த்து போடுகிறவராக எனக்கு முன்சென்று தடைகளை தகர்த்துபோடுவாராக!
தேவன் தாமே இடைபட்டு தடைகளை நீக்கும்படி ஜெபிக்கிறேன்!
ஆனால் எல்லாம் சமாதானத்துடனே நடக்கும்படி மன்றாடுகிறேன்!
இது கர்த்தரின் பணி! எனவே அவரின் கட்டளைப்படியே செய்ய வாஞ்சிக்கிறேன் அவருக்கு சித்தம் இல்லையாகில் பழைய ஊழியத்தை தொடரலாம் என்று கருதுகிறேன்! "தேவனுடைய சித்தத்தை அறிந்து எதையும் செய்யவில்லை என்றால் செய்யும் எல்லாமே வீண்" என்பது எனக்கு நன்றாக தெரியும் எனவேதான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்!
தேவன் தாமே தமது சித்தத்தை வெளிப்ப்டுத்துவாராக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எனவே நமக்கு விரோதமாகவே பரியாசம்பண்ணி எழுதிக்கொண்டிருக்கும் சகோதரரை கர்த்தரே எடுத்து விட்டிருப்பாரானால், நான் நிச்சயம் நிரந்தரமாக கருகலான சத்தியங்களை பதிவிடுவதை நிறுத்திவிடலாம் என்றே முடிவெடுத்துள்ளேன்.
கழுகின் சத்தம் கேட்டவுடன், பாம்பு பதுங்கிகொள்ளும்.
இது ஒரு தேவ மனிதருக்கு கர்த்தர் கொடுத்த வெளிப்பாடு!
சகோதரி அவர்களே. இதுபோன்ற வார்த்தைகள் வேதத்தில் இல்லை எனவே தவறான வெளிப்பாடு என்று சொல்லி பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனது முடிவுக்கும் கருத்துக்கும் வேதத்தில் இருக்கிற பிரகாரம் ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.
சவுல் தாவீதை துரத்தி துரத்தி வேட்டையாடினான். தாவீது எவ்வளவோ விலகிப்போக நினைத்து சவுல் அவனை விடாமல் துரத்தினான். தாவீது பதுங்கி பதுங்கி மறைந்துதான் வாழ்ந்தான். ஆனால் அவன் அப்படியே மறைந்துபோகவில்லை என்பதை நாம் அறிவோம். ஒருநாள் கர்த்தர் அவனை உயர்த்தினார் என்பதை நீங்கள் வேதத்தில் படிக்கவில்லையா?
அதுபோன்ற நிலைதான் இங்கும். சில நேரங்களில் கர்த்தரை கிரியை செய்யவிட்டு நாம் சும்மா இருப்பதே சிறந்தது.
பதுங்குவது எல்லாம் பாம்பும் அல்ல! பறப்பது எல்லாம் கழுகும் அல்ல!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என்றாலும் பாம்புக்குட்டியைவிட இன்னும் கண் திறக்காத, சரியாக பறக்கத் தெரியாத கழுகுக் குஞ்சு அல்லது கண் operation தேவைப் படுகிறகழுகு, மேல் தான்.
தங்கள் கருத்து ஒரு நல்ல கருத்துதான் அதிலுள்ள ஆழம் புரிகிறது சகோ. கோல்டா அவர்களே,
ஆகினும் தாங்கள் எதன் அடிப்படையில் யாரை பாம்பு என்று சொல்கிறார்கள்? யாரை கழுகு என்று சொல்கிறார்கள்? என்று சற்றேனும் விளக்குவீர்களானால் படிப்பவர்களுக்கு ஏதாவது புரிய வாய்ப்புண்டு! சம்பந்தப்பட்டவரும் தன்னிலை விளக்கம் தர வாய்ப்பு ஏற்ப்படுமே!
நமது தளத்தில் பின்நூட்டமிட்டுள்ள சகோ. எட்வின் அவர்களை பக்கத்து தளகாரர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
chillsam wrote:
////எட்வின் சுதாகர் எனும் சிறுவன் இரைத்துச் சென்றிருப்பவை; இந்த கரிச்சான்குஞ்சு இப்படியாகக் கூவுகிறது;////
சகோதரரே, இதை குறித்து நீங்கள் சற்றும் வருந்தபட வேண்டாம் நம்மை மட்டுமல்ல சாது சுந்தர் செல்வராஜ், சாம்.செல்லதுரை, எசேக்கியா பிரான்சிஸ், ஆலன் பால், பால் தினகரன், ஜியாப்ரீ போன்ற மிகப்பெரிய போதகர்களே இவரால் பந்தாடப்ப்படும்போது நம்மை போன்ற சிறியவர்கள் இவருக்கு எம்மாத்திரம்.
இவர் பயன்படுத்துவதுபோல் பரியாச வார்த்தைகளை யும் மட்டமான சொல்களையும் பயன்படுத்த நமக்கு தெரியாமலில்லை. ஆனால் அது நம்போன்ற கிறிஸ்த்தவனுக்கு ஏற்றதல்ல.மற்றும் இவரிடம் வாய் கொடுத்தால் நமக்குதான் அவமானம் என்று எண்ணி விலக நினைக்கிறோம் ஆனால் "ஓடுகிறவனை கண்டால் துரத்துகிறவனுக்கு தொக்கு" என்றொரு பழமொழி உண்டு. அதுபோல் நாம் ஓட ஓட நம்மை துரத்துகிறார் அராஜகத்தால் யாரையும் அமுக்கிவிட முடியாது என்பதையும் நமது இறைவன் எளியவனுக்காக வழக்காடுபவர் என்பதையும் அவர் விரைவில் உணரும் நாள் வரும்.
அவர் தளத்தில் எழுதப்பட்டவைகளை இங்கு வைத்து விவாதிக்கவும் விளக்கம் கூறவும் நமக்கு நேரமில்லை. நாமெல்லாம் அனேக வேலைகளின் மத்தியில் இந்த பதிவுகளை தருகிறோம். எனவே வேலையற்றவர்களின் வெட்டி பதிவுகளை சற்றும் பொருள்படுத்த வேண்டாம் என்பதை அன்புடன் வேண்டுகிறேன்.
-- Edited by இறைநேசன் on Tuesday 25th of January 2011 03:21:28 PM
//சகோதரரே, இதை குறித்து நீங்கள் சற்றும் வருந்தபட வேண்டாம் நம்மை மட்டுமல்ல சாது சுந்தர் செல்வராஜ், சாம்.செல்லதுரை, எசேக்கியா பிரான்சிஸ், ஆலன் பால், பால் தினகரன், ஜியாப்ரீ போன்ற மிகப்பெரிய போதகர்களே இவரால் பந்தாடப்ப்படும்போது நம்மை போன்ற சிறியவர்கள் இவருக்கு எம்மாத்திரம்.//
சகோ. இறைநேசன் அவர்களே உங்கள் கருத்தும் ஏற்கத்தக்கதுதான். ஆயினும் சில உண்மைகளை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த சாது பரலோகம் போய்வந்தேன், காலில் விழுவது தவறுஅல்ல. இன்னும் இந்துமத கிரியைகளை கிறிஸ்தவத்தில் திணித்தல், பால்தினகரனின் ஆவியானவர் உரைத்தார் எனக்கூறும் தீரக்கதரிசனங்கள். (இவர் சில இலங்கை வருடங்களுக்கு முன் இலங்கை வந்திருந்தபோது இனி இலங்கையில் யுத்தமிராது என ஆவியானவர் பெயரால் தீரக்கதரிசனம் உரைத்தார் சில மாதங்களிலே கடும் யுத்தம் ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்டது அறிந்ததே). இன்னும் பணம் செலுத்தி ஜெபிக்கும் திட்டம், இளம்பங்களார் திட்டம், தங்கசாவி , தற்போதும் கூட பாருங்கள் 2011 தீர்க்கதரிசனம் என்ற பெயரால் உளறி வைத்துள்ளதை. இப்படி போன்றவர்களை அடையாளம் காட்டுவது காலத்தின் தேவை, மிக அவசியமானதும் கூட. ஆயினும் சில ஒழுங்குமுறைகள் உள்ளன. நாம் பாவிக்கும் வார்த்தைகள் தகுதியானவைதானா? என சிந்திக்க வேண்டும்.
நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 12-35-36) என ஆண்டவர் மொழிந்துள்ளார்.
கிறிஸ்தவர்களாகிய நம் வாழ்வு மற்றவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை விடுத்து தகுதிகுறைவான மோசமான சாப வார்த்தைகளை இடுவதும் இதற்கு ஆதரவாக வேதத்தில் இல்லாததையா சொல்லிவிட்டேன் என வேஷமிடுவதும் தேவனின் கட்டளைகளை மீறிய செயல்களாகும். இத்தகைய நிலைகளின் போது நாம் இவற்றை ஓரளவுக்கு கண்டுகொள்ளாமல் விடலாம்.
ஆயினும் எல்லாவற்றுக்கும் நி்ச்சியமாகவே ஒரு முடிவு உண்டு. வேலைவெட்டி இல்லாதவர்கள் எதையும் இப்படிதான் எழுதிக் கொண்டிருப்பார்கள். அப். பவுல் கூட தனது ஜீவியத்திற்கா தனது உழைப்பையும் தேவனையுமே நம்பி இருந்தார். இதுவே சிறந்த முன்மாதிரி. ஆனால் இன்றைய கலியுக கண்ணர்களுக்கு இது புரிவதில்லை. நாம் அவருக்காக தொடர்ந்து ஜெபிப்போம். ஆண்டவர் நிச்சியமாகவே அவரை மாற்றுவார் எ நம்புவோம்
சகோ.கொல்வின் அவர்களே ஒருவர் வேத வார்த்தைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் போது அதை சுட்டிகாட்டி கடிந்துகொண்டு புத்தி சொல்வது வேத வசன அடிப்படையில் ஏற்றதுதான். ஆகினும் அதற்கென்று ஒரு முறைமை அபிஷேகம் / தகுதி மற்றும் வார்த்தைகளை சரியாக கையாளும் தன்மை வேண்டும். காமாலை நோய் வந்தவனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம் அதுபோல் களை எது பயிர் எதுவென்று தெரியாத ஒருவன் களை பிடுங்கபோனால் வெள்ளாமையே இருக்காது யாருடைய வாழ்வை நோண்டி பார்த்தாலும் ஏதாவது குறை இருக்கத்தான் செய்யும். அதுவா நமக்கு வேலை? போலீஸ்காரர்களுக்கு திருடனை பற்றியும் அவன் திருடும் விதம் பற்றியும் அதிக அறிவு உண்டு, அதற்காக அவர் பரிசுத்தவானாகிவிடமுடியாது. தனக்கு பங்குதரவில்லை என்றுதான் பல திருடர்கள் பிடித்து கொடுக்கப்ப்டுகின்றனர்
ஒரு குறிப்பிட்ட போதகரை எடுத்துகொண்டால் அவர் ஒரு காலத்தில் தேவனுக்காக பிரகாசித்தவரே! ஒரு வேளை வழி தவறி சென்றிருந்தாலும் அவரால் இரட்சிப்பை பெற்ற அநேகர் சரியான வழியில் பயணிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே பொதுவான தளங்களில் அவர் அப்படி இவர் இப்படி என்று பெயர் சொல்லி வெளிச்சம்போடுவது சகோதரரின் நிர்வாணத்தை வெளிச்சம்போடுவது போன்றதே என்றே நான் கருதுகிறேன்.
மேலும் நான் உறுதியாக நம்புவது என்னவெனில் இறை ஆவியை பெற்ற ஒருவன் அவ்வளவு சீக்கிரத்தில் அடுத்தவரை சபிக்க துணிய மாட்டான(பிலேயாம் என்னும் புரஜாதியான் கூட) அதனால் பன்றியை அடையாளம்காட்ட போகிறேன் என்று சொல்லிக்கொண்டு நாமும் ஒரு பன்றியாகி விடுவதை காட்டிலும் பற்றிகளை விட்டு தூரவிலகி இருப்பது நல்லது என்பது எனது கருத்து.
வசன அடிப்படையில் சாதுஜி காலில் விழ சொன்னது தவறு என்று போதிக்கும் நாம், அதே வசன அடிப்படையில் "தேவனாகிய கர்த்தர் ஒருவரையே பணிந்துகோள்ளவேண்டும்" என்று இன்னொரு சகோதரர் சொல்லும்போது அவரை பிசாசு என்று தீர்ப்பது ஏனோ? ஓன்று வெளிப்பாடு என்றால் வெளிப்பாட்டின்படி அனைத்தையும் ஏற்க்க வேண்டும் இல்லையேல் வசனத்தின்படி அனைத்தயும் ஏற்க்க வேண்டும்.
"எனக்கு திரித்துவம் பற்றி வெளிப்பாடு உண்டு அதனால் வசனத்தில் இல்லாவிட்டலும் அதை நான் ஏற்பேன், இல்லாத வசனத்தை கூட ஆதாரமாக காட்டுவேன், ஆனால் மற்றவர் வெளிப்பாடு அது இது என்று எதாவது சொல்லிவிட்டால் அது பிசாசுதான் தருவான் என்று அதை மறுப்பேன். அதற்கு அவர்
வசன அதாரம் தந்தாலும் ஏற்க்க மாட்டேன்" என்றால் அது நியாயமான நிலை அல்ல!
இறுதியாகதேவ சித்தத்துக்கு முரணாக பேசி "அப்பாலே போ சாத்தானே" என்று கடிந்து கொள்ளபட்ட பேதுருவை பற்றியோ அல்லது சாத்தானால் நிறப்பபட்டு தன்னை காட்டிகொடுத்த யூதசையோ பற்றியோகூட இயேசு யாரிடமும் குறை சொல்லிக் கொண்டு திரியவில்லை. அவரது வழியை வார்த்தையை பின்பற்றாது அவரை கடவுளாக்கி கும்பிட்டுவிட்டால் தப்பித்துவிடலாம் என்று கனவு காண்பது தவறு.
இயேசு அத்திமரத்தை சபித்தார் அது பட்டுபோயிறு, அவர் பரிசேயரை பகிரங்கமாக "உங்களுக்கு ஐயோ" என்று சொல்லி கடிந்து கொண்டார் என்றும் எலிசா குழந்தைகளை சபித்தான் கரடி பீறிப்போட்டது எனவே சபிப்பது தவறில்லை என்று சொல்வார்கள்.
அவர்கள் வேலையே அவர்கள் செய்யட்டும் நாம் என்ன ஆவியை உடையவர்கள் என்றறிந்து மேன்மையானது எதுவென்று ஆராய்ந்து அதன்படி நமது பணியை செய்வோம்.
கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதை செய்யட்டும்!
நமது கருத்துக்கள் அவர்கள் தளத்திலும் காப்பி பேஸ்ட் செய்யப்படவேண்டும் என்பது தேவ சித்தம் என்று கருதுகிறேன். எனவே எல்லாம் நன்மைக்கே என்றே ஏற்றுக்கொள்வோம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நமது தளத்தில் எழுதப்படும் செய்திகளை எல்லாம் குற்றம் கண்டுபிடித்து, குறை கூறி தகாத வார்த்தைகளால் விமர்சித்து மனமடிவை ஏற்ப்படுத்தும் பரியாசக்காரர்கள் பற்றிய ஒரு தெளிவை எனக்கு தரும்படி ஆண்டவரிடம் கேட்டு, எனது வெளிப்பாடுகள் அடிப்படையிலான கருத்துக்களை பதிவிடுதில்லை என்ற முடிவுடன் சிலகாலம் நிறுத்தி வைத்திருந்தேன் .
ஆனால் ஆண்டவர் எனக்கு உணர்த்தியபடி இனி அவர்கள் தளத்தில் எழுதப்படும் எந்த ஒரு காரியத்தையும் படிக்ககூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். அங்குபோய் படிப்பதால்தானே அவர்கள் பரியாசங்களை நாம் அறிய முடிகிறது! எனவே அவர்கள் என்னவும் எழுதிவிட்டு போகட்டும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை.
இயேசுவின் "தாலந்து" குறித்தான உவமையில் சொல்லப்பட்டதுபோல் அவனவனுக்கு ஒப்புவிக்கப்பட்டவைகளுக்கு அவனவன்தான் கணக்கு கொடுக்க வேண்டும். நமக்கு ஒப்புவிக்கப்பட்டவைகளுக்கு நம்மிடமே கணக்குகேட்கப்படும். எனவே நாம் எழுதுவதற்கு அதிக நேரம் கிடைப்பதில்லை என்றாலும் நமது கடமையை நாம் செய்வோம்.
நான் யாருக்கும் எதிரியல்ல! யாரையும் தரக்குறைவாக விமர்சிபபவனும் அல்ல. எனவே எனது கருத்துக்கு விளக்கம் வேண்டுவோர் இங்கே வந்து தங்கள் கேள்விகளை முன்வைக்கட்டும். அதற்க்கு முடிந்த அளவு விளக்கம் கொடுக்கலாம்.
இங்கு யாரும் தாங்கள் கொண்டிருக்கும் அடிப்படை கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்பது மட்டும் நமக்கு நன்றாகவே புரிகிறது. எனவே நான் என்ன சொன்னாலும் எத்தனை வசன ஆதாரம் கொடுத்தாலும் யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு மட்டுமே புரியும்.
புரியாதவர்கள், புரிந்துகொள்ள விரும்பாதவர்கள், ஞாநிங்கள் மற்றும் பரியாசக்காரர்கள் என்னவேண்டுமானாலும் விமர்சித்துவிட்டு போகட்டும். இனி அவர்கள் விமர்சனத்தை நாம் கவனிக்கபோவது இல்லை!
இவ்வாறு முடிவெடுக்கும்படி என்னை வழிநடத்திய தேவனுக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)