கடந்த நாளில் ஒரு சில சகோதரர்களின் சமாதானத்துக்காக கீழ்கண்டவாறு ஜெபித்துகொண்டே சாலையில் போய்கொண்டு இருந்தேன்:
சமாதானத்தின் தேவனே சமாதானத்தை கொடுங்கள்
சமாதான கர்த்தரே சமாதானத்தை கொடுங்கள்
சமாதான காரணரே சமாதானத்தை கொடுங்கள்
என்று சொல்லிக்கொண்டு வந்த எனக்கு "என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு தருகிறேன் என்று சொன்னவரே சமாதானத்தை தாருங்கள்" என்று கூறும்போது என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடினது.
ஆம்!
இந்த உலகத்தின் நாம் எந்த ஒன்றும் இல்லாமல் வாழ்ந்துவிடலாம்! கையில்லாமல் கால் இல்லாமல் கண் இல்லாமால் வசதியிலாமல் உணவில்லாமலும் இருந்தால்கூட அனைத்தையும் பக்குவத்தோடு ஏற்றுக்கொள்ளும் மன சமாதானம் இருந்தால் மட்டும் போதும். நம்மால் வாழ்ந்துவிட முடியும்!
ஆனால்
எல்லாமே நிறைய நிறைய தேவைக்கு அதிகமாக இருந்தும், சமாதானம் மட்டும் இல்லை என்றால் ஒரு சில கணங்கள் கூட நம்மால் வாழ்வது மிக மிக கடினமாகவும் வெறுப்பாகவும் ஆகிவிடும். தனாலேயே சிலர் ஒருசில நொடிகளில் தற்கொலையை நாடி சென்றுவிடுகின்றனர். எனவேவேதான் ஒருவன் நம்மிடமிருந்து என்னத்தை கேட்டாலும் கொடுத்துவிடலாம். ஆனால் நம்முடைய சமாதானத்தை ஒருவர் கேட்பாராகில் நாம் கொடுக்கவே முடியாது. ஏனெனில் சமாதானத்தை இழந்து இந்த உலகில் வாழமுடியாது. இந்த உலகில் எல்லோருமே தேடி ஓடி அலைவது மாதானமும் நிம்மதியும் வேண்டியே!
ஆனால் இங்கோ ஆண்டவராகிய இயேசுவை பாருங்கள்:
எந்த துன்பமும் எந்த கவலையும் இல்லாமல் பிதாவினிடத்தில் நித்தம் மகிழ்ந்திருந்த அவர் பாவத்தில் வீழ்ந்த உலகை மீட்பதார்க்காக, அனைத்தையும் துறந்து அடிமையின்கோலம் எடுத்து துன்மார்க்க ஊளையாகிய பூமிக்கு வந்தார்! வந்த அவர் சொல்லும் வார்த்தை இதோ
யோவான் 14:27சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
பாவத்தில் வீழ்ந்துபோன இந்த உலகம் கொடுக்கும் சமாதானம் நீண்ட நேரம் நிலைப்பது இல்லை ஆனால் ஆண்டவரோ "தன்னுடைய" "தான் வைத்திருக்கும்" "தனக்கு ஆதியில் இருந்த" அந்த தேவ சமாதானத்தையே நமக்கு தந்துவிட்டார். அதானால் சிலுவையில் அவர் சமாதானம் இல்லாமல் "என் பிதாவே என்பிதாவே ஏன் என்னை கைவிட்டீர் என்று கதறினார்"
இன்றும் தேவ சமாதானம் ஒருவரை நிரப்பும்போது இந்த உலகில் நாம் அன்றாடம் அனுபவிக்கும் எல்லா காரியங்களும் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தரும். ஆனால் அந்த சமாதானத்தை ஒருவர் இழந்திருந்தாலோ நாம் சந்திக்கும் எல்லா காரியங்களுமே எரிச்சலையும் வேதனையையுமே தரும்!
எனவே அன்பானவர்கள் ஆண்டவர் நமக்காக வைத்து சென்றுள்ள ஒருவராலும் எடுத்துபோட முடியாத தேவ சமாதானத்தை ஜெபித்து வாஞ்சித்து பெற்று சமாதானமடைவோமாக! அப்போது நம்முள் இருக்கும் சமாதானமானது ஒரு நதியைப்போல ஓடி நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் நிரப்பும்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ஆண்டவராகிய இயேசு தன் சிலுவை மரணத்தின் மூலம் தனது சமாதானத்தையே இந்த உலகுக்கு கொடுத்தார். ஆகினும் இந்த உலகம் இன்னும் விரோதத்தலும் பகையாலுமே நிறைந்திருக்கிறது.
மனிதனுக்கு மனிதனும், ஜாதிக்கு ஜாதியும், மதத்துக்கு மதமும் வீட்டுக்கு வீடும் நாட்டுக்கு நாடும் சமாதனாமமின்றி எப்பொழுது சண்டையை துவங்கலாம் என்ற ஏக்கத்தில் காத்திருப்பதுபோல் தெரிகிறது.
நீ பெரியவனா நான் பெரியவனா? என்ற எண்ணம் என்று ஒழிந்து, நான்தான் எல்லோரையும் விட தாழ்மையானவன் என்று கருதி எல்லோருமே நம்மைவிட பெரியவர் என்ற எண்ணத்தோடு இயேசு செய்ததுபோல் "நான் உன்னுடைய காலை கழுவி விடவும் தயார்" என்று எவனொருவன் முழு மனதோடு தனது மனதில் தீர்மானம் செய்கிறானோ, அன்றுதான் இயேசு தரும் தேவசமாதானம் அவனை நிரப்ப முடியும்!
ஆனால் இந்த உலகத்தில் அநேகர் அல்ல, யாருமே அதற்க்கு தயாராக இல்லை என்றே நான் கருதுகிறேன். "நீயா நானா பார்த்துவிடுவோம்" என்றுதான் துணிந்து நிற்கிறார்கள் என்பது வேதனையே!
அதாவது இயேசு சொன்ன வார்த்தையை கைகொண்டு நடப்பதற்கோ அல்லது அவர் வாழ்ந்த பிரகாரம் வாழ்வதற்கோ இங்கு யாரும் தயாராக இல்லை. அவரை முன்னால் வைத்துகொண்டு அவருக்கு பின்னால் ஒளிந்துகொண்டு அடுத்தவரை அவமதிக்கவும் சபிக்கவும் சண்டை பிடிக்கவுமே பலர் தயாராக இருக்கின்றனர். பிறகு சமாதானத்தை எங்கேபோய் தேடமுடியும்?
இதை படிக்கும் அன்பர்களே தங்களை நான் அன்புடன் கேட்டுக்கொள்வது!
முடிந்த அளவு எல்லோருடனும் சமாதானமாக இருக்க நாடுங்கள். சண்டைகளை தவிருங்கள். பிடிக்கவில்லை என்றால் விலகிவிடுங்கள், மற்றவரை குற்றப் படுத்தாதீர்கள்.
பிறருடைய சாமாதானத்துக்காகவும் உங்களுக்கு பிடிக்காதவர்களின் சமாதானத்துக்காகவும் அதிகம் வேண்டுங்கள் அப்பொழுது உங்கள் வாசஸ்தலத்தில் சமாதானம் உண்டாயிருக்கும்!
-- Edited by SUNDAR on Tuesday 8th of February 2011 08:22:55 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)