இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆண்டவராகிய இயேசு ஒரு தேவ தூதரா?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
ஆண்டவராகிய இயேசு ஒரு தேவ தூதரா?
Permalink  
 


ஆண்டவராகிய இயேசுவை மிகாவேல் தூதனாக பாவித்து சிலர்  கட்டுரை எழுதுவது ஆச்சர்யத்தை தருகிறது. இவ்வாறு அடிப்படையையே ஆட்டினால் அனைத்தும் தவறாக போய்விடும் என்று கருதுவதால். நமது தள சகோதரர்கள் புரிந்துகொள்ளும்படி இங்கு ஒரு சிறிய விளக்கத்தை தர வாஞ்சிக்கிறேன்.  
 
ஒரு ராஜாவுக்கு,  மந்திரி,  படைதளபதி, தூதுவர் தலைவர், ஆலோசனைகாரர் போன்ற பல துணைவர்கள் இருப்பதுபோல தேவனுடைய படைகளின் தளபதியாக
மிகாவேல் என்ற தூதரும், தூது கொண்டு செல்பவர்களுக்கு தலைவராக கேப்ரியல் என்ற தூதரும் இன்னும் ஆயிரமாயிரம் தூதர்களும் இருந்தார்கள். இவர்களை பற்றிய செய்தி வேதபுத்தகத்தில் பல இடங்களில் வருவதோடு பழைய/ புதிய ஏற்பாடு மற்றும்  வெளிப்படுத்தின விசேஷம்வரை அவர்களது பெயர் தூதர்கள் என்றும் "மிகவேல்" மற்றும்  "காப்ரியேல்" என்றே அழைக்கப்படுகிறது.

இவர்களில் ஒருவரை தேவனின் தற்சொரூபமாம்  இயேசுவோடு ஒப்பிட்டு எழுதுவது மிகவும் தவறான ஒரு  நிலை ஆகும்!
 
பாவ நிவாரண பலியோ அல்லது குற்றநிவாரண பலியோ எந்த ஒரு பலியும் செலுத்த வேண்டிய முறைமைப்படியும்  எதற்க்காக செலுத்தப்படுகிறது என்ற நிச்சயத்தோடும்   செலுத்தப்படாவிட்டால் அதனால் பயனேதும் இல்லை. அதே போல் நம்முடைய பாவங்களுக்கு பலியாக வந்த இயேசுவை யாரென்று சரியாக நிதானித்து அறிந்து அவரை விசுவாசிக்கவிட்டால் அதனால் பயனில்லாமல் போக வாய்ப்பிருக்கிறது.  
 
தேவனின் வார்த்தையால் படைக்கப்படடு, பாவத்தில் வீழ்ந்த  உலகத்தை பாவத்திலிருந்து மீட்க, எந்த வார்த்தையால் இந்த உலகம் படைக்கபட்டதோ அந்த  வார்த்தையால் மட்டுமே முடியும்! எனவே தேவன் தனது வார்த்தையை  மாம்சமாக்கி இயேசுவாக மாம்சத்தில் அனுபினார்!  தேவன் ஆவியாய் இருப்பதால் இயேசுவாய்  அந்த மாம்சத்துக்குள் தானே வந்து தங்கியிருந்தார். (இந்த நிகழ்ச்சியை தேவன் மாம்சமானார் என்றே கூற முடியும்). எனவேதான் இயேசு  "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்று சொல்கிறார்.  அவ்வாறு மாம்சமாக வந்த தேவனின் இரத்தமேயல்லாமல் வேறு எந்த ஒரு இரத்தத்தாலும் மனிதனுக்கு பிறவி பாவத்தில் இருந்து நிரந்தர  மன்னிப்பு கிடையாது.    
  
தேவன் அதை சகரியா மூலம் முன்னறிவித்துள்ளார்:
 
சகரியா 9:11 உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.
 
அதற்க்கு இசைந்தால்போல் ஆண்டவராகிய இயேசுவின் இரத்தம் பற்றி இவ்வாறு கூறப்படுகிறது  
 
மாற்கு 14:24 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
 
தேவன் தன்னுடைய வார்த்தையில் இருந்து இயேசுவை மாம்சமாக படைத்ததால் அவர் தனியொரு ஆள்த்துவமாகி   தேவ குமாரன் எனப்படுகிறாறே யன்றி மற்றபடி தேவனும்  இயேசுவும் வேறு வேறு அல்ல என்பதை நாம் அறிய வேண்டும்.   
 
சுருக்கமாக சொன்னால் "தேவன் தனது வார்த்தையை    மாம்சமாக்கி தானே அதனுள்  வந்து தங்கினார். இங்கு இயேசுதான் ஒன்றான மெய்தெய்வமா என்றால் இல்லை. இயேசுவினுள் தங்கியிருந்த பிதாவின் ஆவியானவரே ஒன்றான  மெய்தெய்வம்!   
 
பிறகு ஏன் இயேசுவை மனுஷர் என்றும்  வேதம் குறிப்பிடுகிறது?

அவர் மனுஷனாக வந்ததால் மனுஷர்! அவ்வளவுதான்.
 
அவர் தேவனாகவும் அறியப்படுகிறார்! 
தேவ குமாரனாகவும் அறியப்படுகிறார்
அவர் மனுஷராகவும் அறியப்படுகிறார் 
மனுஷ குமரனாகவும் அறியப்படுகிறார்       
அவர்  ஆதியாகவும் அறியப்படுகிறார் 
ஆட்டுகுட்டியாகவும் அறியப்படுகிறார்  
அவர் கர்த்தராகவும் அறியப்படுகிறார்
கர்த்தரால் அனுப்பபட்டவராகவும் அறியப்படுகிறார்
 
பழைய  ஏற்பாட்டு காலங்களில் தேவனாகிய கர்த்தரின் ஆவியானவர்  தன்னால் மண்ணினால் படைக்கப்பட்ட  பல தேவமனிதருக்குள் வந்து பராக்கிரமம் செய்தது போல,  புதிய ஏற்பாட்டு காலத்தில் தன்னுடைய வார்த்தை என்னும் வல்லமையை பரிசுத்த  ஆவியின் மூலம் கன்னிமரியாளின் வயிற்றினில் ஜெனிப்பித்து 
மாம்சமாக்கி, அவ்வாறு   மனிதனாக  வந்து பலியாகி,  அதன் மூலம் தன்னுடைய அனைத்து  படைப்புகளின் பாவங்களுக்கும் பரிகார பலியானார்.
 
இயேசுவின்  பலி என்பது  சாதாரணமானது  அல்ல! இந்த பலியை விட்டால் நமது மீட்புக்கு வேறுஒரு பலியே இல்லை! இந்த மாபெரும் உண்மையை அறிந்து நாம் சரியாக விசுவாசியாவிட்டால் நாம் தவறு செய்துவிட வாய்ப்பிருக்கிறது.         
 
யோவான் 8:24 ; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
 
எனவே நம்முடைய பாவத்திலிருந்து நாம் நிரந்தரமாக விடுதலையடைய, இயேசு யாரென்ற உண்மையை சரியாக அறிந்து விசுவாசிப்போமாக! அவை "தூதன்" என்று எண்ணி இடரலடைந்துவிட வேண்டாம்!


-- Edited by SUNDAR on Tuesday 1st of February 2011 03:24:05 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

இயேசுவை தூதன் என்று சொல்கிறவர்கள் இங்கு சற்று  கவனிக்கும்படி வேண்டுகிறேன்!
 
இயேசு ஒரு தூதன் அல்ல அவன் தேவன்தான் என்பதை சந்தேகமற நிரூபிக்கும் இன்னொரு அருமையான வசனமும் வேதத்தில் உள்ளது. மனுஷனின் பாவத்துக்காக இரத்தம் சிந்தியவர் ஆண்டவராகிய இயேசுவே ஆனால் இங்கோ:  
 
அப்போஸ்தலர் 20:28  உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
 
இவ்வசனத்தில் இயேசுவின் இரத்தம் தேவனின் இரத்தத்துக்கு ஈடாக்கபட்டு இயேசுவின் இரத்தம் தேவனின் இரத்தம் என்ற நோக்கில் "தேவன் தன் சுய இரத்தத்தால் சம்பாதித்தது" என்று சொல்லபட்டுள்ளது. தேவனும் இயேசுவும் வேறுவேறு அல்ல என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். முக்கியமாக அவர் ஒரு தேவ தூதர் அல்ல என்பதை இவ்வசனம் நமக்கு போதிக்கிறது.

 

 


-- Edited by SUNDAR on Thursday 20th of October 2011 08:11:19 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard