கர்த்தர் "யோனா" எனப்படும் ஒரு தீர்க்கதரிசியை அழைத்து அவனை நோக்கி:
யோனா 3:2நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார்.
முதலில் கர்த்தரின் கட்டளையை ஏற்க்க மறுத்த யோனா, பின்னர் கர்த்தருடைய வார்த்தைபடியே நினிவேக்கு போய் நகரமெங்கிலும் சுற்றி திரிந்து
"யோனா 3:4நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்" என்று கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கிக்கிறான்.
ஆனால் நாற்ப்பது நாட்கள் கழித்தபோது நடந்தது என்னவெனில், யோனா சொன்ன கர்த்தரின் வார்த்தைபடி நினிவே நகரம் அழிக்கப்படவில்லை. இந்த காரியத்தை கீழ்கண்ட வசனத்தின் அடிப்படையில் நாம் ஆராய்ந்தால்
உபாகமம் 18:22ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.
ஒரு தீர்க்கதரிசி சொல்லி நிறைவேறாமல் போன வார்த்தை கர்த்தர் சொல்லாத வார்த்தை என்றும், அதன் அடிப்படையில் யோனா கர்த்தர் அனுப்பாத ஒரு கள்ள தீர்க்கதரிசிபோல் தெரியலாம்.
ஆனால் உண்மை அதுவல்லவே! யோனா தேவனால்தான் அனுப்பபட்டவந்தான். தேவ வார்த்தைதான் அவன் பேசினான். ஆகினும் யோனாவின் எச்சரிப்பை கேட்ட நினிவே ஜனங்கள் தங்கள் பாவங்களுக்கு மனஸ்தாபபட்டு தேவனை நோக்கி மன்றடியதால் நினிவே நகரம் அழிவுக்கு தப்பியது.
யோனா 3:10அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.
நமது தேவன் தீங்கிற்கு மனஸ்தாபபடுகிறவரும் இரக்கமுள்ளவராகவும் இருக்கிறபடியானால் நினிவே மக்கள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டு மனம்திரும்பியபோது அவர்கள் மன்னித்து தான் செய்ய நினைத்ததை செய்யவில்லை!
நடந்த இந்தகாரியத்தின் உண்மை தேவனுக்கும் யோனாவுக்கும் மட்மே தெரியும். மற்ற சாதாரண ஜனங்களுக்கு பெரிய அறிவாளிகளுக்கோ இந்த உண்மை தெரிய வாய்ப்பில்லை. இந்நிலையில் இன்றுபோல் ஞானம்மிக்க? சில அதிமேதாவிகளிடம் அந்நாட்களில் ஒருவேளை இருந்திருந்தால் யோனாவை "கள்ள தீர்க்கதரிசி" என்று பெரிய முத்திரை குத்தி, "அவர் அதை செய்தார் இதை செய்தார்" என்று இடக்கும் கேலியும் செய்து, நிந்தையும் பரியாசம்மும் செய்திருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன் .
ஆனால் நடந்த இந்த காரியம் உண்மையும் தேவனால் நடந்த அவரால் உருதி செய்யபட்ட ஒரு உண்மை செயலே! தேவனின் இந்த செய்கையையும், வேதாகம வார்த்தை அடிப்படையில் தேவனால் உறுதி செய்யும் ஒரு செயலாகவே இருக்கிறது
எரேமியா 18:7பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில் நான் விரோதமாய் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.
எனவே தேவன் தான் நிறைவேற்றபோகும் ஒரு காரியத்தை ஒரு தீர்க்கத்ரிசி மூலம் சொல்லவும், பின்னர் அவரே தனது மனதை மாற்றி அந்த காரியத்த்தை செய்யாமல் கைவிடவும் வாய்ப்பு இருப்பதால், எந்த ஒரு தீர்க்கதரிசி சொன்னதும் அப்படியே நிறைவேறவில்லை என்பதர்க்ககாக அவர் ஒரு "கள்ள தீர்க்கதரிசி" என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
எல்லா தீர்க்கதரிசனத்தையும் ஏற்க்க வேண்டும் என்ற கட்டாயம் நிச்சயம் இல்லை. நீ ஏற்றும் ஒன்றும் ஆகப்போவது இல்லை நீ ஏற்காமல் போனாலும் உன்னால் தேவனுக்கு எந்த பயனும் இல்லை! ஆனால் "எனக்கு பெரிய ஞானம் இருக்கிறது" என்று எண்ணிக்கொண்டு, எந்த ஒருவர் சொல்வதையும் சரிவர ஆராயாமல், அதை "கள்ள தீர்க்கதரிசனம்" என்று விமர்சித்து அவரை கேலி கிண்டல் பரியாசம் செய்பவன் கேட்டில் விழுந்து போவது உறுதி!
-- Edited by SUNDAR on Wednesday 2nd of February 2011 09:57:23 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
வரங்களில் விசேஷ வரமான "அன்பை" பற்றி பவுல் குறிப்பிடும்போது மிக அருமையாக:
I கொரிந்தியர் 13:7சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
"பூரண அன்பானது பயத்தை புறம்பே தள்ளும்" என்று குறிப்பிட்ட பவுல் அப்படிபட்ட தெய்வீக அன்பு "சகலத்தையும் விசுவாசிக்கும் / நம்பும்" என்று குறிப்பிட்டுள்ளார். அன்பானது சகலத்தையும் சந்தேக கண்களோடு பார்க்காது சாத்தானை கண்டு பயப்படாது. இவன் திருடனா? இவன் கள்ளனா? என்ற சந்தேக நோக்கிலேயே எல்லோரையும் பார்க்காது.
நான் எல்லோரு சொல்வதையும் கேட்கிறேன், எல்லோரையும் மதிக்கிறேன், எல்லோரையும் நம்புகிறேன் ஆனால் தேவனை மட்டுமே சார்ந்து, என்னை சரியான வழியில் நடத்தும்படி அவரிடம் மட்டுமே பிரார்த்திக்கிறேன். அவர் என்னை சரியான வழியில் நடத்துவார் என்ற மாறாத விசுவாசம் எனக்குள் உண்டு! தேவனோடு நாம் கொண்டுள்ள ஐக்கியமே நம்மை பாதுகாக்கும் கேடகம்! மற்றபடி அற்ப்புத அதிசயங்களையோ அல்லது ஆசீர்வாத வாழ்க்கையையோ, மாம்சமான எந்த ஒரு மனிதனையோ பாஸ்டரையோ நம்பி ஓடினீர்களானால் வஞ்சிக்கப்படு போகலாம் என்பதை மறக்க வேண்டாம்!
சகலத்தையும் நம்பினால் நாம் எமாற்றப்பட்டு விடுவோம் என்று எண்ணுகிறீர்களா? அது ஒரு காலும் நடக்கவே நடக்காது! நமது தேவன் ஜீவனுள்ளவர்! தேவனை உறுதியாய் பற்றிகொண்டவர்களை பாதுகாக்க கர்த்தருடைய கண்கள் எப்பொழுதும் நோக்கிக்கொண்டு இருப்பதால் நாம் சிறிதும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை!
I பேதுரு 3:12கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது;
இந்த உலகில் ஆயிரம் விதமான உபதேசங்கள் இருக்கின்றன ஆனால் அவை எல்லாம் தேவனின் பார்வைக்கு உத்தமனாய் வாழ்பவனை சற்றேனும் அசைத்துவிட முடியாது!
தம்மை பற்றிய உத்தம இருதயத்தோடு இருப்பவர்களை கர்த்தருடைய கண்கள் எப்பொழுதும் நோக்கிக்கொண்டு இருப்பதால், அவர்கள் ஒருவேளை தவறினாலும் ஆண்டவர் எப்படியாவது தன் பக்கம் இழுத்துகொள்வார். ஆனால் பாதகனான மாருபாடானான ஒருவன் என்னதான் ஆராய்ந்து கர்த்தரின் வழியை கண்டுபிடிக்க முயன்றாலும் அதை காணமுடியாது அவன் இடறிப்போவான் என்பது உண்மை!
எனவே அன்பானவர்களே! நாம் தவறிவிடுவேனோ என்று பயம் உள்ளத்தில் வேண்டாம். உண்மையும் செம்மையுமாய் நடப்பவர்களை தேவன் ஒருபோதும் கைவிடவே மாட்டார்.
ஏசாயா 30:21நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.
இவை எல்லாம் வெறும் விளையாட்டு வசனங்கள் அல்ல! ஜீவனுள்ள தேவன் சொன்ன ஜீவ வார்த்தைகள்! அவ்வார்த்தைகள் விசுவாசியுங்கள்! தேவன் உங்கள் வாழ்வில் இடைபட்டு நிச்சயம் உஙகளை வழிவிலகாமல் பாதுகாப்பார்! மற்றபடி நமது சுயபுத்தியின்மேலும் சுய திறமையின் மீதும், சுய ஞானத்தின் மீதும் நம்பிக்கை வைத்தால்தான் நாம் இடறிப்போவ்து உறுதி.
ஆண்டவராகிய இயேசு " சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்".(மத் 10:16 ) என்று சொன்னார் . ஆனால் இன்றோ அநேகர் தாங்களே சர்ப்பங்களாக மாறிபோனதோடு புறாக்களை துரத்தி துரத்தி வேட்டையாடும் நிலையில் இருப்பது வேதனையே!
ஒரு சிறு பிள்ளையானது எந்த ஒன்றை சொன்னாலும் உடனே நம்பும்! அது போன்றதொரு குழந்தை நிலையே தேவன் எதிர்பார்க்கும் நிலை.
மத்தேயு 19:14 : சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது
அப்படி ஒரு குழந்தை நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தேவன் தனது இருதயத்தை வெளிப்படுத்த முடியும்! எனவேதான் இந்த வார்த்தைகள் மூன்று சுவிஷேஷங்களிலும் இடம்பெற்றுள்ளன என்று கருதுகிறேன்.
எனவே வசனம் சொல்வதுபோல் "சகலத்தையும் நம்புங்கள், எல்லோரோடும் சமாதானமாயிருக்க நாடுங்கள், ஒருவரையும் பழிக்காதீர்கள், எவரையும் அற்பமாக எண்ணாதிருங்கள், இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தை விட்டுவிடாதீர்கள்" தேவன்தாமே நாம் ஒவ்வொருவரையும் சரியான வழியில் நடத்துவாராக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)