இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இருக்கும் நிலையில் உத்தமத்தை காப்பதுவே தேவனுக்கு பிரியம்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
இருக்கும் நிலையில் உத்தமத்தை காப்பதுவே தேவனுக்கு பிரியம்!
Permalink  
 


நான் வேலைபார்க்கும் அலுவலகத்தில் எனது வயதுக்குஒத்த டைரக்டர் ஒருவர்  உண்டு. அதிகமாக சம்பளத்தை பெற்று செல்லும் இவருக்கு வேலை என்பதோ  எதுவும் இல்லை. நினைத்த நேரத்தில் வந்து நினைத்தநேரத்தில் வெளியேறிவிடும் இவர் அலுவலகத்தில் இருக்கும் நேரம் முழுவதும்  தனது கணினியின் முன்னால் எந்த வேலையும் இல்லது அமர்ந்திருப்பார்.
 
நான் யாரைப்பார்த்தும் பொறாமைபடுவது கிடையாது, ஆகினும் இவரை பார்க்கும் போதெல்லாம் என்னுடைய மனதில் "ஒருவேளை தேவன் இதுபோன்றதொரு  நிலையிலே நம்மை வைத்திருப்பாரானால், நாம் ஆண்டவருக்காக எவ்வளவு காரியங்களை செய்ய முடியும். எவ்வளவு கட்டுரைகளை எழுதமுடியும்?" என்று யோசித்ததுண்டு. ஏனெனில்  நான் எனது டைரக்டர்களுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும். நானாக எதுவும் செய்ய முடியாது. ஒருகுறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமாக  இங்கு நேரத்தை  செலவிட்டால் சாத்தான் குற்றமனசாட்சியை கொண்டுவந்து விடுகிறான். நான் வீட்டில் இருக்கும் நேரம் மிககுறைவு எனவே வீட்டிலும் என்னால் வலைதளங்களில் எழுத நேரம் செலவிடமுடியாது.
 
இந்நிலையில் ஆண்டவரிடம் "ஆண்டவரே எனக்குஒத்த வயதுடைய என்னைவிட அதிக படிப்புகூட இல்லாத டைரக்டர் இவ்வளவு சம்பளம் வாங்குவதோடு அவருக்கு அனேக  ப்ரீரீ டைம் கிடைக்கிறது. ஆனால் உம்மைப்பற்றி இன்னும் அதிகம் எழுதவேண்டும் என்ற ஏக்கம் உள்ள என்னை  இதுபோன்றதொரு இக்கட்டான நிலையில் வைத்திருக்கிறீரே. அவரைபோன்று அதிக  நேரம் எனக்கு கிடைத்தால் என்னால் இன்னும் அனேக கட்டுரைகள் எழுத முடியுமே. இப்பொழுதோவெனில் நான் எழுத நினைக்கும் அனேக கருத்துக்கள் கூட எழுதமுடியாமல் போய்விடுகிறதே என்று  அக்கலாய்த்தேன்.
 
அதற்க்கு ஆண்டவர் " உனக்கு என்ன கொடுக்கபட்டுள்ளதோ அல்லது உன்னிடம் என்ன ஒப்படைக்கப்பட்டுள்ளதோ அதில் நீ உத்தமமாகவும் உண்மையாகவும் இரு! அதுவே நான் எதிர்பார்ப்பது. பிறருக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்கும் பணத்துக்கும அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள். எல்லோரிடமுமே அவரவருக்கு ஒப்புவிக்கப்பட்டவைகளுக்கு  கணக்கு கேட்கப்படும்.
 
லூக்கா 12:48   எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; 
 
இன்னொருவருக்கு கொடுக்கபட்டதர்க்கு உன்னிடமோ அல்லது  உன்னிடம் கொடுக்கப்பட்டதற்கு இன்னொருவரிடமோ கணக்கு கேட்கப்படாது!. எனவே  உன்னுடைய இந்த நிலையில் நீ  உத்தமத்தை விட்டுவிடாதே என்று போதித்தார்.      
 
காணிக்கைபெட்டியில் இரண்டு காசு போட்ட விதவையே இயேசுவின் பார்வைக்கு உயர்ந்தவராக தெரிந்தார்! அதுபோல் நாம் எவ்வளவு செய்தோம் என்பது பெரிதல்ல, எப்படி செய்தோம் எதற்காக செய்தோம் என்பதுவே தேவனின் பார்வையில் விலையேறபெற்றது 
 
எனவே எனக்கு இறக்கை இருந்தால் நான் வானத்தில் பறந்து விடுவேன் என்றோ, எனக்கு இவ்வளவு பணம் இருந்தால் இவ்வளவு ஏழைக்கு கொடுப்பேன் என்றோ, நான் இந்த நிலையில் இருந்தால் தேவனுக்கு இவ்வாறு செய்வேன் என்றோ புலம்பாமல், நாம்  இருக்கும் நிலையில் தேவனுக்கு என்ன செய்ய முடியும், ஏழைகளுக்கு என்ன உதவ முடியுமோ அதை உத்தமமாக செய்வோமாக இருப்பதை கொண்டு எப்பொழுதும்  மன ரம்யமாக வாழ பழகுவோமாக!
 
அதுவே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியம்!


            


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
Permalink  
 

சகோதரர் சுந்தர் அவர்களே

மிகவும் அருமையான் கருத்துகளை  பதித்து உள்ளீர்கள்

நீங்கள் சொல்வது போலவே அனேக முறை நானும் இவர்களை போல நமக்கும் பணம் இருந்தால்  பெரிய வீடு இருந்தால் நம் தகப்பனும் பெரிய அதுகாரியாய் இருந்தால் நாமும் கடவுளுக்கு உண்மையாய் இருக்கலாமே என்று பல முறை நினைத்து இருக்கின்றேன்

நான் மட்டும் அல்ல இன்று இந்த பூமியில் எல்லோரும் அப்படியே

சுந்தர் எழுதியது 
_____________________________________________________________________________________
அதற்க்கு ஆண்டவர் " உனக்கு என்ன கொடுக்கபட்டுள்ளதோ அல்லது உன்னிடம் என்ன ஒப்படைக்கப்பட்டுள்ளதோ அதில் நீ உத்தமமாகவும் உண்மையாகவும் இரு! அதுவே நான் எதிர்பார்ப்பது. பிறருக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்கும் பணத்துக்கும அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள். எல்லோரிடமுமே அவரவருக்கு ஒப்புவிக்கப்பட்டவைகளுக்கு  கணக்கு கேட்கப்படும்
________________________________________________________________________________________________

தேவன் வந்து வேதத்தில் தீர்கதர்சிகளுக்கு சொன்னது போல இருக்கின்ற(எரோமிய எசேக்கியல் மற்றும் டானியேல் )

உங்கள் கருத்தும் ஆப்டியே இருக்கிறது  
இதுபோல சத்தியங்களை கேட்க முடியவே இல்லை இந்த காலத்தில்


-- Edited by EDWIN SUDHAKAR on Friday 4th of February 2011 10:33:31 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
RE: இருக்கும் நிலையில் உத்தமத்தை காப்பதுவே தேவனுக்கு பிரியம்!
Permalink  
 


நான் வேலைபார்க்கும் கம்பனியின் முதலாளி அடிக்கடி சொல்லும் வார்த்தை "எனக்கு மாதம்  ஐந்து லட்சம் வருமானம் கிடைத்தல் அதில்  50% ஏழைகளுக்கு  கொடுத்துவிடுவேன்" என்பதே.  இதுபோல் பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கலாம்.  இவர்கள் எல்லாம் இறைவனுக்கும் மனிதனுக்கு இடையில் 50௦% கமிசன் அடிப்படையில்  தரகர் வேலை பார்க்க நினைக்கின்றனர்.

அனால் கடந்த பத்து வருடமாக அவரை பார்க்கிறேன் அவருக்கு மாதம் ஐந்து லட்சம் வருமானம் வரவுமில்லை அவர் எனக்கு தெரிந்து  ஏழைகளுக்கு எதுவும் கொடுக்கவும் இல்லை.
 
"நான் பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்று  நினைக்கிறேன் கடவுள் எனக்கு  பணத்தைதராமல் யார் யாருக்கோ அள்ளி அள்ளி கொடுக்கிறார் " என்பதுபோன்று பேசிக்கொண்டு இருக்கிறார்.  
 
ஏழை விதவை தனது கையில் இருந்த அந்த இரண்டு காசையுமே காணிக்கை போட்டதுபோல நாம் செய்யா விட்டாலும்,  நாம் இருக்கும் நிலையில் நமது கையில் வரும் வருமானத்தில் ஏதாவது நம்மால் முடிந்ததை பிறருக்கு உதவியாக செய்யவில்லை என்றால் பிறகு நமக்கு  ஐம்பது லட்சம் கிடைத்தாலும் பிறருக்கு உதவிசெய்ய மனம் வரும் என்பதில் எந்த நிச்சயமும் இல்லையே.  
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard