இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாதி கீழ்படிதல் + மீதி மீறுதல் = மரணம்


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
பாதி கீழ்படிதல் + மீதி மீறுதல் = மரணம்
Permalink  
 


ஆதாமின் மீறுதலில்  இருந்து இன்றுவரை மனுஷனுக்கு "கீழ்ப்படிவது" என்பது ஒரு கடினமான காரியமாகவே உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. 

ஒரு நல்லகாரியத்தை ஒருவரின்  நன்மைக்காகவே சொல்லி "இந்த காரியத்துக்கு கீழ்படி"  என்று சொன்னால் உடனே அவர், ஏன் கீழ்படியவேண்டும்? அதனால் எனக்கு என்ன பயன்? இவன் யார் என்னை கீழ்படிய சொல்ல?  இவன் பெரிய யோக்கியனா என்னை கீழ்படியசொல்கிறான், என்பதுபோன்ற பல்வேறு கேள்விகளை அடுக்குகிரான். ஆனால் சாத்தானின்  காரியங்களுக்கோ எந்த ஒரு  நிர்பந்தமும் இல்லாமல் தானாகவே  கீழ்படிகிறான். அது மனுஷனின் இயற்க்கை   குணமும், மனுஷன் என்பவன் என்றுமே  நித்யமானவைகளைவிட அனித்தயமான சந்தோசத்தின்மேலேயே நாட்டம் கொண்டவனாக இருக்கிறான் என்பதை உணர்த்தும் ஒருகாரியமாகவும் இருக்கிறது 
எனவேதான் பவுல் "நிர்பந்தமான மனுஷன்" என்று குறிப்பிடுகிறார்.   
 
தேவன் நம்மை கைகொள்ளும்படி கட்டளையிட்ட எல்லா காரியங்களும் நமது நன்மைக்காகவே என்பதை சற்றும் அறியவிரும்பாத மனுஷன் தேவன் நேரடியாக சொல்லிய வர்த்தைகளைகூட புறம்பே தள்ளுவதற்கு பைபிள்முழுவதும் ஏதாவது  வசனத்தை தேடுகிறான். ஒரு வசனத்தை உருட்டி பிரட்டி போதித்து தனது நிலையை தக்கவைத்து கொள்கிறான்.
 
"நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையை கைக்கொள்" என்பதுவும் "ஒருவன் என்மேல் அன்பாய் இருந்தால் ஏன் வார்த்தையை கைகொள்ளுவான்" என்பதுவும் எந்த ஒரு விளக்கமும் தேவையில்லாத, இயேசுவின் வாயாலேயே சொல்லப்பட்ட நேரடியான வசனங்கள். ஆனால் இந்த தெளிவான வசனங்களை கூட ஏதாவது மாற்று காரியங்களை சொல்லி புரட்டி  தனது கீழ்படியாமையை  தக்கவைத்து கொள்ள போராடுவோரும் உண்டு.
 
ஆண்டவரின் வார்த்தைகளுக்கு  எந்த ஒரு சிறு அல்டரேசணும் இல்லாமல் அப்படியே  கீழ்படியவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்  என்பதற்கு  
1 ராஜாக்கள்  புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு அருமையான சம்பவம் நம்மெல்லோருக்கும்  ஒரு பயங்கரமான
எச்சரிக்கையாகவும் ஆழ்ந்து ஆராய்ந்து உண்மையை அறியவேண்டிய ஒன்றாக்கவும்  உள்ளது:
 
இஸ்ரவேலின் ராஜாவாகிய எரேபெயாம் என்பவன்  கர்த்தரின் கட்டளைகளை விட்டு பின்வாங்கி,  மேடைகளை கட்டி அந்நிய தேவர்களுக்கு தூபம்காட்ட ஆரம்பித்தான்.  

இவ்வாறு
 
I ராஜா 13:1 யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே 2. அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறினான்.  
 
தனக்கு பிடித்தமான  செய்கைக்கு விரோதமான வந்த  இந்த வார்த்தையை கேட்ட  ராஜாவாகிய எரேபெயாம், சொன்னவர் யார்? அதில் என்ன உண்மை இருக்கிறது என்பதை எல்லாம் சற்றும் யோசிக்காமல்  அந்த தேவமனிதன் மீது கடும்கோபம் கொள்கிறான்: 
 
4. 
அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.

தேவ மனிதனைபர்த்து கோபத்தோடு  நீட்டிய  கை மடக்க முடியாமல்
மரத்துப் போனதால் அங்கு தேவன் கிரியை செய்கிறார் என்பதை அறிந்த ராஜா, மீண்டும் தனது கர்த்தருக்கு விரோதமான போக்கைபற்றி சற்றும் வருத்தம் கொள்ளாமல், தன்னுடய 
சுகத்துக்காக மட்டும் அந்த தேவ மனிதனிடம் வேண்டுகிறான்.     

6.அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன் போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது.

தனக்கு மீண்டும் சுகம் கிடைத்துவிட்டதை அறந்த ராஜா, அந்த தேவ மனிதனை விருந்துக்கு அழைக்கிறான்

7. அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்.


ந்த தேவமனிதனோ கர்த்தர் தனக்கு திடமாக கட்டளையிட்டுள்ள சில வார்த்தைகளை ராஜாவிடம் சொல்லி நான் அவருடன் வரமாட்டேன் என்று மறுத்து விடுகிறான்.

8. தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை. 9. ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போன வழியாய்த் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்
 
என்று  சொல்லி,  இந்த தேவனுடைய மனுஷனாகிய தீர்க்கதரிசிக்கு கர்த்தர் நேரடியாக  கட்டளையிட்ட  "நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாமலும் இரு" என்ற காரியத்தில் உறுதியாக நிற்கிறான்.
 
அவ்வாறு  கர்த்தர் சொன்ன கட்டளையை சரியாக கைகொண்டு நடந்த அவன் அந்த முதல்கட்ட  சொதனையில் ராஜாவிடம் இருந்து தப்பி, கர்த்தர் காட்டிய
வழியில்
சரியாக நடந்தான்  
 
10. அவன் பெத்தேலுக்கு வந்தவழியாய்த் திரும்பாமல், வேறுவழியாய்ப் போய்விட்டான்.
 
ஆகினும், இந்த காரியங்களை அறிந்த பெத்தேலில் குடியிருந்த   கிழவனான இன்னொரு தீர்க்கதரிசி  அந்த தேவனின் மனிதன்  எந்த வழியாக போனான் என்று விசாரித்து,

14. தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு:  அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.

இங்கு அந்த தேவமனிதனுக்கு  இரண்டாம்கட்ட சோதனை தன்னை போன்றதொரு தீர்க்கதரிசி மூலமே  ஆரம்பமாகிறது:

16. அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன். 17. ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போனவழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.
 
இந்த இரண்டாம்கட்ட சோதனையிலும் தன்னை தர்க்காத்துகொண்ட அந்த தேவமனிதர் கர்த்தரின் வார்த்தையின்மேல் உறுதியாகநிற்ப்பதை அறியமுடிகிறது. ஆகினும் அந்த கிழவனான தீர்க்கதரிசி அவரை விடவில்லை அந்த தேவ மனிதனிடம் கூசாமல்  ஒரு பொய் கூறுகிறார்

18. உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.
 
இங்கு மூன்றாவதான ஒரு கடினமான சோதனை ஆரம்பமாகிறது. தேவன் தனக்கு சொன்னதை நம்புவதா? அல்லது தேவன் தூதன் தன்னைப்போல் இன்னொரு தீர்க்கதரிசிக்கு சொன்னதை நம்புவதா? என்ற குழப்பத்தில் இருந்த அந்த தேவமனிதன், கர்த்தர் தனக்கு கட்டளையிட்ட காரியத்தை சற்றே  புறம்பே தள்ளி, பொய்சொன்ன தீர்க்கதரிசியை நம்பி அவர் பின்னால் போகிறான்.    
 
19. அப்பொழுது அவன் இவனோடே திரும்பிப் போய், இவன் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தான்.

அவன் புசித்து குடித்த சந்தோசம் அதிக நேரம் நீடிக்கவில்லை அவன் பந்தியில் அமர்ந்திர்க்கும்போதே அவரை பொய்சொல்லி அழைத்து வந்த அந்த கிழவனான தீர்க்கதரிசிக்கு கர்த்தரின் உண்மை வார்த்தை வருகிறது
 
21. அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி, 22.
அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

"பாவம்" அந்த தேவமனிதன்! அவர் பட்டபாடுகள் மற்றும் பிரயாசம் எல்லாம் தன்னைபோன்ற ஒரு சக தீர்க்கதரிசியாலேயே வீணாகி போனது. இரண்டு சோதனையில் ஜெயித்த அவர் சற்று வேறுபாடான இன்னொரு சோதனையில் ஜெயிக்க முடியாமல் விழுந்து தேவவார்த்தையை மீறினார்.  அதனால்  
  
26. 
கர்த்தர் அவனுக்குச் சொன்ன வார்த்தையின்படியே, கர்த்தர் அவனை ஒரு சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தார்; அது அவனை முறித்துக் கொன்றுபோட்டது. 
 
இந்த சம்பவம்  என்னை அதிகமதிகமாக பாதித்த வேத பகுதிகளில் ஓன்று. இங்கு இரண்டுபேருமே கர்த்தரின் வார்த்தையை பேசியவர்கள்தான் ஆகினும் அந்த கிழவனான தீக்கதரிசி போலவே "பாதி பொய்யும் பாதி உண்மையும் பேசி" அநேகரை மதிமயக்கி தவறான வழியில் அழைத்து செல்லும் அநேக தவறானவர்கள் இந்த கடைசி காலத்தில் எங்கும் நிறைந்து கிடப்பதால்,  நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது!        

இந்த பகுதியின் மூலம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய  அனேக
முக்கிய பாடங்கள் உண்டு. விளக்கமறிய இங்கே சொடுக்கவும்  கீழ்படிதலில் வரும் மூன்று முக்கிய சோதனைகள்!      

 

-- Edited by SUNDAR on Tuesday 15th of February 2011 02:49:23 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

தேவனின் வார்த்தைக்கு விரோதமாக பாவம் செய்து தண்டனை பெற்றவர்கள் பலரின் வாழ்க்கை சம்பவங்கள்  வேதாகமத்தில்  இருந்தாலும், நாம் மேலே ஆராய்ந்த இந்த  தேவமனிதனை போன்று தேவனுடய வார்த்தையை கைகொள்ள வாஞ்சை இருந்தும் அதை அப்படியே கைகொள்ளாமல் பாதியை  கைகொண்டு மீதியை  தன்னடைய  மாம்சநிலைக்கு ஏற்ப சிறிய மாறுதல்கள் செய்து, அதனால் கீழ்படிதலில் சோரம்போய் மரித்துப்போன  முக்கியமான சிலரைபற்றி இங்கு பார்க்கலாம் என்று கருதுகிறேன். 
 
1. முதலில் வருவது தேவ மனுஷனாகிய மோசேதான்!
 
மிகவும் மேன்மையானவனும்  தேவனால் மிகுந்த சாந்த குணம் உள்ளவன் என்று புகழப்பட்ட இவன், ஒரு சிறிய கர்த்தரின் வார்த்தையை, அவர் சொன்னபடி செய்யாத காரணத்தால் தேவ கோபத்துக்குஆளாகி மரிக்கநேர்ந்தது
 
கர்த்தர் சொன்னது!
 
எண்ணாகமம் 20:8 நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்
 
மோசே செய்தது     
 
எண்ணாகமம் 20:11 தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது.
 
கர்த்தரின் கோபம்!
 
உபாகமம் 32:50 நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே, 52.நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.
 
"மலையை பார்த்து பேசு" என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை ஏதோ காரணத்தால் மோசே சற்று மாற்றி மலையை கோலால் தட்டினான் அதனால் அவர் கானானுக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை இழந்தான். 
   
2. அடுத்து வருவது ராஜாவாகிய சவுல்!
 
இஸ்ரவேலின் ராஜாவாக முதல் முதலில் தேவனாலேயே தெரிவு செய்யப்பட்டவன் இந்த சவுல்ராஜா!  அவனைபற்றி சாமுவேல் சொல்லும்போது:  
 
I சாமுவேல் 10:24 அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்துகொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்
 
இந்த சவுல் ராஜாவிடம் கர்த்தர் கட்டளையிட்டது:
 
I சாமுவேல் 15:2 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.

I சாமுவேல் 15:3
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
 
சவுல் செய்தது:  
 
I சாமுவேல் 15:7 அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,
I சாமுவேல் 15:8 அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான். 9. சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும்,
ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.
 
கர்த்தர் கட்டலயிட்டத்தல் பாதியை சரியாக செய்த இவன் மீதியில் சோரம் போனான். அதாவது  கர்த்தர் சொன்னதுபோல் அமலேக்கியரை முறியடித்தான் அனால் அவர் கட்டளையிட்டதுபோல் எல்லா மிருக ஜீவன்களையும் கொன்று போடவில்லை.
  
கர்த்தரின் தீர்ப்பு:
 
I சாமுவேல் 15:26 சாமுவேல் சவுலைப் பார்த்து:  கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
 
இவ்வாறு கர்த்தரால் கடிந்துகோள்ளப்பட்ட சவுல் பின்னாளில் பெலிஸ்தியர்  கையால் மாண்டு போனான்.  
 
3. சோதாம் கோமரா அழிவை    திருப்பி பார்த்து உப்புதூண்ஆன
லோத்தின் மனைவி  
 
சோதாம் கோமரா அழிவிலிருந்து தப்பிகொள்ளும்படிஅறிவுரை கூறிய கர்த்தர் இவ்வாறு கட்டளையிடுகிறார் 
 
ஆதி 19 :17. அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
 
தேவனின் கட்டளைக்கு கீழ்படிந்து பாதி  ஓடிய லோத்தின் மனைவி மீதியை கைகொள்ள முடியாமல் திரும்பி பார்க்கிறார்
 
26. அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
 
இன்னும் சில சம்பவங்களை சுர்க்கமாக சொல்ல விளைகிறேன்:
 
4.  கர்த்தர் கட்டளையிடாத  அந்நிய அக்கினியை கர்த்தரின் சமூகத்துக்கு கொண்டுவது மடிந்துபோன நாதப் அபியு!    
 
லேவியராகமம் 10:1  ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்
 
2. அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
 
5. ஆசாரியர்கள் சுமக்க வேண்டிய  கர்த்தருடைய பெட்டியை மாட்டுவண்டியில் கொண்டுவந்து மடிந்துபோன ஊசா!
 
II சாமுவேல் 6:3. தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்துகொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்
 
6. அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
7 அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.
 
இப்படி கர்த்தர் தான் சொன்ன வார்த்தைகள் சரியாக கைகொள்ளப்படுகிறதா என்பதுகுறித்து  கவனமாக இருக்கிறார். கர்த்தரால் சொல்லப்பட்ட வார்த்தைகளை சிறிது மாற்றியதால் மடிந்து போனவர்களின் சோக கதைகள் பலவற்றை நாம் வேதாகமத்தில் பார்க்கமுடியும். இவ்வாறு தேவனின் வார்த்தைகளை சிறிது வளைத்து மனுஷர்களை தண்டனைக்குள் நடத்துவது என்பது  சாத்தானுக்கு கைவந்த கலை ஆகும். ஆதாம் ஏவாளில் இருந்து இன்றுவரை  அவன் அதைதான் செய்துகொண்டு இருக்கிறான்.   
 
இவர்களின் கதைகள்  எல்லாம் நமக்கு எதற்கு திருஷ்டாந்திரமாக உள்ளது? என்று ஆராய்வோமாகில், தேவனின் வார்த்தைகளை சந்தர்ப்ப  சூழ்நிலைக்கு ஏற்ப  புரட்டி பொருள்கொள்ளகூடாது என்பதற்காகவே!  
 
அனால் இன்றோ  கிறித்துவத்தை ஆட்கொண்டுள்ள  ஆவிகளால் தேவனால் சொலப்பட்ட எல்லா வார்த்தைகளுமே முடிந்த அளவு  புரட்டப்படுகின்றன. முக்கியமான கட்டளைகள் புறம்பே தள்ளப்படுகின்றன. அவரவர்  விருப்பத்துக்கு ஏற்ப அவரவர் கொள்கைக்கு ஏற்ப வார்த்தைகள்  வளைக்கப்படுகின்றன.  "வசன ஆதாரம்" "வசன ஆதாரம்" என்று கேட்கும் அவர்களுக்கு சொல்லபட்ட வார்த்தைகளை அப்படியே விசுவாசிக்கும் அளவுக்கு திறந்த இருதயம் இல்லை.  
 
பழயஏற்பாட்டு காலத்தைபோல இப்பொழுது உடனடி நியாயதீர்ப்பும் மரணமும் இல்லை என்றாலும், மீறுதல் ஒரு பாவமே!  இறுதி நியாயதீர்ப்பின்போது வசனத்துக்கு விரோதமான  நம்முடைய  எல்லா மீருதல்களுக்கும் நிச்சயம் கணக்கு கேட்கப்படும்!
  
யோபு 10:14 நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.
 
பிரசங்கி 11:9  இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
 
இந்த காரியங்கள் எல்லாம் இந்த நாட்களில்  நமக்கு தேவையில்லாத  அற்ப காரியம்போல தோன்றாலாம். இருதயம் அடைக்கபட்ட  நமக்கு அனேக முக்கிய காரியங்கள் அப்படித்தான் தேவையில்லாததுபோல தெரிகின்றன. ஆனால் இந்த முழுமயான கீழ்படிதலால் வரும் மேன்மை என்னவென்பதை இன்னும் ஆழமாக ஆராய்ந்தால்தான் அறிய முடியும்!  நான் ஏன் "கீழ்படிதல்"  "கீழ்படிதல்" என்று அதிகமதிகமாக எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்பதை பற்றிய விளக்கத்தை கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த பதிவில் பார்க்கலாம்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

சிறந்த பதிவு.. அபரிவிதமான விளக்கங்கள்.. தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard