ஆதியில் தேவன் மனுஷர்களை படைத்த போது அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் குறைவற்ற நிலையில் படைத்து, அவர்களை அதிகமதிகமாக ஆசீர்வதித்து மிகுந்த மேன்மையான நிலையிலேயே அவர்களை வைத்தார்.
ஆதியாகமம் 1:28பின்பு தேவன் அவர்களை (மனுஷர்களை) நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்
பாவத்தின் விளைவால் தேவனிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்கள் அனைத்தையும் சாத்தானிடம் இழந்துபோன மனிதன், உண்மையான் ஆசீர்வாதம் தற்போது எங்கு இருக்கிறது என்று அறியாமல் சபிக்கப்பட்ட இந்த பூமியில் ஆசீர்வாதத்தைதேடி ஆலயங்களுக்கும் ஆசீர்வாத கூட்டங்களுக்கும் அன்றாடம் படை எடுக்கிறான்.
பழையஏற்பாட்டு காலங்களில் தேவன் இம்மைக்குரிய ஆசீர்வாதத்தை அதிகமாக வாக்கு பண்ணியிருந்தார் என்பதை கீழ்கண்ட அனேக வசனங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.
எண்ணாகமம் 24:1இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் ஆகாய் 2:19நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான். ஆதியாகமம் 26:3; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்
ஆதியாகமம் 22:17நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்
இவ்வசனங்கள் எல்லாம் நமக்கு ஆசீர்வாதமான வசனங்கள் என்பது உண்மைதான், என்றாலும் இந்த புதியஏற்பாடு ஆவிக்குரிய காலத்திலும் அந்த வசனங்களை வாக்குதத்தம் என்று அநேகர் எழுதி வைத்துகொண்டு, அல்லது வீட்டில் மாட்டி தொங்க வைத்துகொண்டு "அதுபோல் ஒரு இம்மைக்குரிய ஆசீர்வாதம் வராதா" என்று ஏங்கி கொண்டு அங்கும் இங்கும் அலைவது ஆச்சர்யமே!
ஒரு குடும்பத்துக்காக ஜெபிக்க போவோமாகில், அவர்கள் குறைகளை சுட்டிகாட்ட பட்டு, கடிந்து புத்தி சொல்லப்படுவதைவிட, ஆசீர்வாதமான வார்த்தைகளையே எதிர்நோக்கியே காத்திருப்பதை அறியமுடிகிறது. ஒரு சிலர் காணிக்கை கொடுப்பதுகூட பாஸ்டரின் ஜெபத்தில் எத்தனை ஆசீர்வாதம் வார்த்தை வந்தது என்பதை கருத்தில்கொண்டு செய்வதுபோல உள்ளது. அதாவது, அதிகம் ஆசீர்வதித்தால் அதிகம் காணிக்கை குறைவாக ஆசீர்வதித்தால் குறைந்த காணிக்கை, கடிந்து புத்திசொன்னால் காணிக்கையே இல்லை என்பது போன்றதொரு நிலை.
விசுவாசிகளின் இந்த ஆசீர்வாத எதிர்பார்ப்பால் தேவ ஊழியர்களும் ஆசீர்வாத வார்த்தைகளை அள்ளிவீச தயங்குவது இல்லை. ஆசீர்வாத திட்டங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை.
எசேக்கியேல் 13:10சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்;
விசுவாசிகளின் குறை குற்றங்களை எடுத்து சொல்லி திடமா கண்டிப்பவர்கள் ஒரு சிலரே. அதிலும் அநேகர் தாங்கள் பின்பற்றும் பாரம்பரிய போதனைக்கடுத்த விஷயங்களிலேயே குறை கண்டு பிடிக்கிரார்களேயன்றி, தேவனுக்கு ஏற்றபிரகாரமாக ஒரு விசுவாசி ஜீவிக்கிறாரா? என்பதை பற்றி அதிகம் அக்கறைப்படுவது இல்லை.
"புதியஏற்பாடு கால ஆசீர்வாதம் என்பது இந்த பூமிக்குரிய ஆசீர்வாதம் அல்ல" என்பதை நாம் அறியவேண்டும். அது உன்னதங்களிலே நமக்கு கிடைப்பதும் விலையேரப்பெற்றதும் ஆகும்!
எபேசியர் 1:3நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
அதை பூமியில் தேடினால் கிடைக்காது. அப்படியெனில் இயேசுவானவர் ஒரு ராஜா வீட்டில் பிறந்திருக்க முடியும் அவர் அடிமைகோலம் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த பூமியை பொறுத்தவரை தேவ பிள்ளைகளுக்கு ஒரு சோதனைகளமும் பவுலை போல இயேசுவைபோல பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்து நித்தியத்தை சுதந்தரிப்பதர்க்கு கொடுக்கபட்ட ஒரு சந்தர்ப்பமுமாகவே நாம் எடுத்துகொள்ளவேண்டும். இந்த உலகில் இன்பத்தையும் ஆசீர்வாதத்தையும் தேடி அலைந்தால் நாம் நித்திய ஆசீர்வாதத்தை இழந்துபோகலாம்.
அப்படியெனில் இந்த உலகத்தில் நமக்கு எந்த ஆசீர்வாதமும் கிடையாதா? என்ற கேள்வி எழலாம்:
இந்த உலகத்தில் சிலருக்கு ஆசீர்வாதம் கிடைக்கலாம் சிலருக்கு கிடைக்காமலும் போகலாம் தேவன் எவருக்கு எதை நியமித்திருக்கிராரோ அது அவர்களுக்கு கிடக்கும்.
பிரசங்கி 2:26தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ் செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்.
அதைஎல்லாம் ஒரு பொருட்டாக நாம் எண்ணாமல், இந்த உலக ஆசீர்வாதத்தை தேடி அங்கும்இங்கும் ஓடாமல் நித்திய ஆசீர்வாதத்தை நோக்கியே நமது கண்கள் இருக்க வேண்டும் என்பதுவே இங்கு நான் இந்த கட்டுரையை எழுதுவதன் நோக்கம்.
தேவனுகுள்ளான வாழ்க்கை என்பது உண்ணவும் உடுக்கவும் உண்டாயிருந்தால் போதும் அடிப்படை தேவைகள் இருந்தால் போதும் என்ற எண்ணத்தோடு தேவனினில் நிலைத்திருப்பதுவே ஆகும். தம்மை பற்றிய உத்தம இருதயத்தோடு இருப்பவர்களை தேவன் எந்நிலையிலும் போஷித்து நடத்த வல்லவர். சங்கீதக்காரனின் வாக்கு மூலம் இதோ:
சங்கீதம் 37:25நான் இளைஞனாயிருந்தேன், முதிர் வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.
அதே சாட்சியை நானும் துணிந்து சொல்வேன். அதாவது தேவனை நம்பி வாழும் ஒருவருக்கு இந்த உலகத்தில் அவர் உயிர்வாழ தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் சரியான கணக்கு போட்டு கூட்டாமல் குறைக்காமல் சரியான நிலையில் சரியான நேரத்தில் நமக்குதர நமது தேவன் வல்லவர். அவர் அளந்து கொடுக்கும் இந்த காரியத்தில் நாம் அதிகமாக திருப்தியடைந்து விடுவதே சாலச்சிறந்தது
எபிரெயர் 13:5நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்;
இந்த உலகில் வாழும்வரை சமாதானமான வாழ்க்கையை தேவனிடம் வாஞ்சித்து கெட்டு பெற்றுக்கொள்ளுங்கள் அவர் அதை தர தயாராக இருக்கிறார். ஆனால் இந்த சபிக்கபட்ட உலகத்தில் அதிகமான ஆசீர்வாதத்தை தேடி ஒடுவீர்களானால் நீங்கள் இறுதியில் வழிதவற அதிகம் வாய்ப்புள்ளது. ஏனெனில் ஒருவன் இரண்டு எஜமானுக்கு ஊழியம் செய்யமுடியாது என்று இயேசு திட்டமாக கூறியிருக்கிறார்.
அதேநேரத்தில், மறுமைக்குரிய நித்திய ஆசீர்வாதங்களை தேவனிடமிருந்து சம்பாதிப்பதற்கு செய்யவேண்டிய காரியங்களில் நாம் அசதியாக இருக்ககூடாது என்பதையும் இங்கு நான் தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.
மறுமைக்குரிய ஆசீர்வாதங்களை தேவனிடமிர்ந்து நமக்கு பெற்றுத் தருவது எதுவென்பதை கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து பார்க்கலாம்...
-- Edited by SUNDAR on Monday 14th of February 2011 03:23:11 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அப்போஸ்தலர் 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி,
அந்த ஒரே இரத்ததம் ஆதாம்!! ஆதாமிலிருந்து ஏவாள், அதன் பின் அவர்களின் சந்ததிகள்!! வம்சவரலாறு சொல்லும் லூக்காவிலும்,
லூக் 3:38...............ஆதாம் தேவனால் உண்டானவன்.
இப்படி ஆதாம் மாத்திரமே தேவனால் உண்டானவன் என்பதற்கு நிறைய வசனங்கள் இருக்கிறதே!! அப்படி என்றால் தாங்கள் ()ல் போட்டிருக்கும் "மனுஷர்களுக்கு" என்பதற்கு என்ன அர்த்தம்!?
முதலில் ஆணான ஆதாமை படைத்து, அவரிலிருந்து ஸ்திரியான ஏவாளை படைத்தை தான்,
ஆதி. 1:27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். So God created man in his own image, in the image of God created he him; male and female created he them.
அவர்களை சிருஷ்டித்தார் என்று வசனம் சொல்லுவதை,
ஆதியாகமம் 1:28 பின்பு தேவன் அவர்களை (மனுஷர்களை) நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்,
என்று எழுதியிருக்கிறீர்களே!! மனுஷர்களை என்பது ஆதாம் மற்றும் ஏவாளை குறித்து மாத்திரமா அல்லது ஒரு பெரிய கூட்டமா? தெளிவு படுத்துங்கள்!!
எனது இந்த கேள்வி தங்களின் தலைப்பிலிருந்து திசை மாறியதாக இருப்பதால், வேறு ஒரு திரியில் கூட இதற்குண்டான பதிலை தரலாம்!! நன்றி!!
ஆதியாகமம் 1:28 பின்பு தேவன் அவர்களை (மனுஷர்களை) நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்,
என்று எழுதியிருக்கிறீர்களே!! மனுஷர்களை என்பது ஆதாம் மற்றும் ஏவாளை குறித்து மாத்திரமா அல்லது ஒரு பெரிய கூட்டமா? தெளிவு படுத்துங்கள்!!
சகோதரர் வேத மாணவன் அவர்களே, சொல்லப்பட்ட வசனத்தில் "தேவன் அவர்களை"என்று பண்மையில் குறிப்பிட்டிருப்பதால் நானும்
மனுஷர்களை" என்றுபண்மையில் எழுதினேன் மற்றபடி வேறு எந்த உள் நோக்கமும் இல்லை.
வேதம் எந்த கருத்தில் "அவர்களை" என்று குறிப்பிட்டதோ அதேகருத்தில் தாங்களும் எடுத்துகொள்ளுங்கள்.மற்ற வெளிப்பாடுகள் குறித்து நான் சிலகாலங்கள் எழுதுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.
தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதுவே சிறந்தது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)