என்னுடைய மெயிலுக்கு வந்ததும் எனக்கு பிடித்ததுமாகிய இந்த கட்டுரையை இங்கு பதிவிடுகிறேன் அனுப்பியவர்: Johnson kennedy
எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும் - (2 கொரி 4:3)
ஒரு தாய் தனது ஐந்து வயது மகனைக் கூட்டிக் கொண்டு, தனது கிராமத்தில் நடந்த ஒரு கண்காட்சியைக் காணச் சென்றிருந்தாள். அந்தச் சிறுவன், அங்கு காணப்பட்ட பலூன்கள், கலர் கலர் ரிப்பன்கள், விளையாட்டுச் சாமான்கள், விதவிதமான விளையாட்டுகள் இவை யாவையும் கண்டு பிரமித்து நின்றான். அவ்வப்போது, ஒரு நிமிடம் தன் தாயின் கரத்தை விட்டு;விட்டு, திரும்ப வந்து கெட்டியாக பிடித்துக் கொள்வான்;
எப்படியோ அந்தத்தாய், எதையோ வாங்கும்போது, அவனது கரத்தை தவற விட்டாள். அந்தச் சிறுவனும் கூட்டத்தோடு கூட்டமாக காணாமற்போய்விட்டான். அந்தத்தாய் மிகவும் கலங்கி, எல்லா இடத்திலும் தேடினாள். ஒலிபெருக்கியின் மூலம் அறிவிக்கப்பட்டு, கடைசியில் ஒருவர் அந்தச்சிறுவனைக் கண்டு தாயிடம் ஒப்படைத்தார். தன் தாயைக் கண்டவுடன், அச்சிறுவன் “ஏம்மா திடீரென்று காணாமற் போய் விட்டாய் என்றுக் கேட்டானே பார்க்க வேண்டும்! அவனுக்குத் தெரியவில்லை தான்தான் தொலைந்து விட்டோம் என்று!
இப்படித்தான் அநேகர் காணாமற்போன ஆட்டைப்போல வழிதவறி போனதையும் கிறிஸ்துவே வழி என்றும் றியாதவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் செல்லும் வழியே சரியென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு சகோதரி, ‘எனக்கு வேதத்தைக் குறித்து நம்பிக்கையில்லை. என்னுடைய கத்தோலிக்க குருமார்கள் சொல்லித்தரும் காரியங்களே எனக்குப் போதும், என்று என்னிடம் மிகவும் உறுதியாக கூறினார்கள். இது எல்லா கத்தோலிக்கருடைய கருத்தும் அல்ல. தேவன் இந்நாட்களில் கத்தோலிக்கரின் நடுவில் பெரிய எழுப்புதலை அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவருக்கே ஸ்தோத்திரம் உண்டாகட்டும்!
இப்படி வேதமே வேண்டாம், வெளிச்சமாகிய கிறிஸ்துவே வேண்டாம் என்று கூறும் ஆயிரமாயிரமான ஆத்துமாக்கள் உண்டு. இவர்கள் கிறிஸ்துவாகிய வெளிச்சத்தைக் கண்டுக் கொள்ள நாம் என்னச் செய்யப் போகிறோம் இவர்களுடைய இரட்சிப்பிற்காக முழங்கால் யுத்தம் செய்வோம்! மந்தையில் சேரா ஆடுகளே எங்கிலும் கோடி கோடி உண்டேசிந்தையில் ஆத்ம பாரம் கொண்டேதேடுவோம் வாரீர் திருச்சபையே!
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்தக் கடைசி நாட்களில் மந்தையில் சேரா கோடி கோடி ஆத்துமாக்களுக்காக நாங்கள் முழங்காலில் நின்று ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். அழிந்துப் போகிற ஆத்துமாக்களுக்காக திறப்பின் வாசலிலே நின்று ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)