இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வயல்களில் வளரும் மூன்றுவித களைகளும் தவறான உபதேசமும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
வயல்களில் வளரும் மூன்றுவித களைகளும் தவறான உபதேசமும்!
Permalink  
 


"நெற்பயிர்" விவசாயம் செயும் விவசாயிகளின் வயல்களில் அவர்கள் நாற்று நட்டு நீர்பாய்த்து, பாதுகாத்து வளர்க்கும் நல்ல பயிர்களூடே, அவர்கள் அனுமதி யில்லாமலே சேர்ந்து  வளரும் களைகள்பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பு  உண்டு. அதேபோல் தேவனால் இந்த உலகத்தில் பாதுகாத்து வளர்க்கப்படும் தேவ பிள்ளைகள் மத்தியில் தேவனின் விருப்பமின்றி வளரும் களைகள் போன்ற மனுஷர்கள் பற்றி இங்கு அறிந்துகொள்வது நல்லது என்று கருதுகிறேன்.
 
இந்த களைகளை மூன்று வகையாக பிரித்து அடையாளம் காணுவதற்கு எதுவாக விளக்கி காண்பிபப்பது பலருக்கு பனுள்ளதாக அமையும்.  
 
1. எழிதில் அடையாளம்  கண்டுகொள்ளகூடிய களைகள்!
 
இந்தவகை  களைகளை நாம் பார்த்தஉடன் அடையாளம் கண்டிகொள்ள முடியும். ஏனெனில் இவைகள் புல்வகையை சார்த்த தவரமாக இல்லாமல் வேறு வித தாவரங்களாக தோற்றத்தில்  காட்சியளிப்பதால், இவ்வகை களைகளை பார்த்ததும் அடையாளம் கண்டு அதை சுலபமாக பிடுங்கி எறிந்துவிட முடியும். உதாரணம்: நெல்லோடு வளரும் நீர்தாமரை மற்றும் பல செடிவகைகள்.   
 
நெல்லானது "ஒன்றை விதையிலை" தாவரம் ஆகும்! அதேபோல் "ஒரே தேவனை" வணங்காமல் "பலவித தேவர்களை வணங்கும் மனிதர்களை" இவ்வகை மக்களுக்கு உதாரணமாக கூறலாம். இவர்கள் நம்மைவிட அனேக கொள்கை கோட்பாடுகளில் மாறுபடுவதால்  இவர்களை நாம் சுலபமாக அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும்.   
  
2. கூர்ந்து கவனித்து அடையாளம் கண்டுபிடித்துவிடக்கூடிய களைகள்:  
 
இவ்வித களைகளை பார்த்தஉடன் அடையாளம் கண்டுகொள்ள முடியாவிடினும் சற்று கூர்ந்து கவனித்தல் மூலம்  அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும். நெற்பயிரை போலவே புல் வகையை சார்ந்த இந்த தாவரங்கள், தோற்றத்தில் நெற்பயிரைவிட  சற்று மாறுபட்டு காட்சி தருவதால் கொஞ்சம் கவனத்தோடு பார்த்தாலே இவற்றை கண்டுகொள்ள முடியும். உதாரணம்: வயல்களில் பயிர்களோடு வளரும் கோரைபுற்கள், அருகம்புற்கள் போன்றவை.
 
இப்படிபட்ட மனிதர்கள் "ஒருவரே இறைவன்" என்ற கோட்பாடு உடையவர்களாக இருந்தாலும் தேவனின் பிரதான திட்டத்துக்கு ஒத்துவராத கொள்கையை  உடையவர்களாக இருப்பார்கள். பார்ப்பதற்கு எல்லாவிதத்திலும்  தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் போன்றே தெரிந்தாலும் இவர்களின் "வேதம்" மற்றும் செயல்பாடுகள் எல்லாமே தேவனின் திட்டத்துக்கு ஒத்துவராதவைகள். இவர்களின் வேதம் மற்றும் கொள்கை கோட்பாடுகளை சற்று ஆழமாக ஆராய்ந்தால் அவர்களின் களைதன்மையை கண்டுகொள்ள முடியும். 
 
3. கண்டுபிடிக்கவே முடியாத களைகள்!
 
இந்த களைகளை பற்றித்தான் நாம் இங்கு அதிகமாக ஆராயப்போகிறோம். முதலில்சொல்லப்பட்ட களைகள் இரண்டுமே ஒரு சாதாரணமனிதரால் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளக்கூடியவை. ஆனால் இவ்வகை களைகளையோ ஒருவர் எளிதில்  அடையாளம் காண்பது முடியவே முடியாது என்றே நான் கருதுகிறேன். 
 
அதாவது நேர்ப்பயிரோடு  அச்சுஅசல் நெல் போலவே காட்சியளித்து வளரும் இவைகள்  நெல் நாற்றோடு நாற்றாக,  அதன் மூட்டோடே இணைந்து  இருக்கும். அதை தனியாக பிரித்து எடுப்பது என்பது கைதேர்ந்த  களை எடுப்போருக்குகூட கடினமான காரியமாக இருக்கும்.
 
இவ்வித களைகளை "கிறிஸ்த்தவன் என்ற போர்வையில் இருந்துகொண்டு கிறிஸ்த்தவர்கள் போலவே இயேசுவையும் ஏற்றுக்கொண்டு  கிறிஸ்த்த வத்துக்குள்ளே தப்பும் தவறுமான  உபதேசத்த்தை பரப்பி தேவனின் சித்தம் நிறைவேறுவதை கெடுத்துக்கொண்டு இருக்கும் தவறான உபதேசக்காரர்களுக்குஒப்பாக கூறலாம்.
 
இவ்வித களைகளை  ஒருவரால் எளிதில் அடையாளம் காணமுடியாது என்பதாலும் அவ்வாறு நான் அடையாளம் கணடுகொண்டேன் என்று கருதி பிடுங்கபோனால், நெற்பயிரும் கூட பிடுங்கப்பட்டு போகலாம்  என்பதாலும், அக்களைகளை பிடுங்காமல் அப்படியே வளரவிட்டுவிடுவார்கள். வயலின் அறுப்பு நாட்களில் மட்டுமே இவைகள் அடையாளம் காணப்பட்டு வேறுபிரிக்கப்படும்.
 
இவ்வகை களைகளைபற்றிதான் நமது ஆண்டவரும் மிக அருமையான சில வசனங்களை கூறியிருக்கிறார்.
 
மத்தேயு 13:30 அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்  
 
மத்தேயு 13:40 ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.

உலக முடிவிலேயே இந்த "அடையாளம் காணப்பட்டு வேறு பிரிக்கும்"  காரியம் தேவ தூதர்களால் 
நடைபெறபோவதால் காலம் வரும்முன்னே எவரொருவரையும் குறித்து நாம் நியாயம் தீர்க்காமல் வசனத்துக்கு கட்டுபட்டு பொறுமையோடு இருப்பது அவசியம். 
 
ஆகினும்,  இவ்வகை களைகளை கண்டும் காணததுபோல் இருக்காமல்  வேத வசனத்தின் அடிபடையில்  இவ்வகை களைகளை சற்று அடையாளம் காட்டுவது ஒரு ஆவிக்குரிய மனிதனின் கடமையே!  இவ்வாறு அடையாளம் காடுவதர்க்கு
முக்கிய  காரணம்  இவ்வகை களைகளைவிட்டு தேவபிள்ளைகள் விலகி  இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல இப்படிப்பட்டவர்கள் தங்களை தாங்களே சோதித்து அறிந்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா? என்ற ஒரு நப்பாசையும் கூட ஒரு காரணம்தான்!  
 
கர்த்தருக்கு சித்தமானால்  இவ்வகை களைகளை எவ்வாறு அடையாளம்காண்பது என்பதை வேத வார்த்தைகள் அடிப்படையில் தொடர்ந்து ஆராயலாம்.....  


-- Edited by SUNDAR on Wednesday 16th of February 2011 11:34:50 AM

-- Edited by SUNDAR on Friday 18th of February 2011 08:53:01 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
RE: வயல்களில் வளரும் மூன்றுவித களைகள்!
Permalink  
 


மிக அருமையாகவும் எல்லாருமே எளிதில் புரிந்து கொள்ளும்வண்ணமாகவும் உவமைகளோடு தங்கள் குறிபிட்டுள்ள வேத சத்தியம் அருமை.

தங்கள் பணியை தொடருங்கள். நன்றி.


__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
வயல்களில் வளரும் மூன்றுவித களைகளும் தவறான உபதேசமும்!
Permalink  
 


வயலில்  உள்ள  நெற்பயிர் போலவே நாற்றோடு நாற்றாக சேர்ந்து வளரும் ஒருவித களையை அடையாளம்காண்பது மிகவும் கடினமானகாரியம் என்றும் சொல்லியிருந்தேன். அதேபோல் "இயேசுவையும் ஏற்றுக்கொண்டு தேவனின் பிள்ளைகளோடு சேர்ந்தே மாறுபாடான உபதேசத்தை போதிப்பவர்களை அடையாளம் காண்பது எப்படி?" என்பதை மூன்று தலைப்புகளின் அடிப்படையில்
இங்கு பார்க்கலாம்!
 
1. பரிசுத்த ஆவியானவரை நிராகரிப்பவர்கள்!
 
யோவான் 14:16 நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

யோவான் 14:17
  ; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

ஒரு மனுஷனின் "மீட்பின் நிலை" என்பது பரிசுத்த ஆவியானவர் என்னும் முத்திரையை பெற்றுக் கொண்டு அவர் நடத்துதலின் அடிப்படையின்கீழ் வரும்போதே முழுமை அடைகிறது. காரணம்  எந்த மனிதனும் தனது சுயநீதியால் தேவனுக்கு ஏற்ற நீதியை நடப்பிக்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் ஒருவரே நம்மை தேவனுக்கு ஏற்ற நீதியின்படி நடத்துவார். மேலும் தேவன் ஒரு மனுஷனை அவனுள் தங்கியிருக்கும்  பரிசுத்த ஆவியிநூடே பார்க்கும்போது  மட்டுமே அவன் தேவனுக்கேற்ற வகையில் தென்பட முடியும்.
 
இந்த "முழுமை நிலையை" அடைந்துவிடாதபடி சாத்தானானவன் ஏதாவது ஒரு புள்ளியில் திசை திருப்ப பல்வேறு வழிகளில் போராடுகிறான் அதில் பரிசுத்த ஆவியானவரைபற்றிய தவறான போதனையும் அடங்கும்.    
 
பரிசுத்தஆவி என்று எதுவும் கிடையாது
பரிசுத்தஆவி வெறும் வல்லமைதான் ஆள்தத்துவம் உள்ளவர் அல்ல
ஞானஸ்தானம் பெரும்போதே ஆவியானவர் வந்துவிடுவார் 
 
போன்றவைகள்  இவ்வித சாத்தானின்  திசை திருப்பும் போதனையை சார்ந்தவைகள். 
 
"ஆவியின் அபிஷேகம்" எனபது ஒரு தனிப்பட்ட அனுபவம். ஒருவர் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்தானம் எடுத்தபின் தனியாக வாஞ்சித்து ஆவியானவரை பெற்றுக்கொள்ள வேண்டும். அதைபற்றிய விளக்கம் அறிய நான்  பலமுறை சுட்டியுள்ள கீழ்கண்ட சுட்டியை சொடுக்கவும்      
 
 
இவ்வாறு ஒருவருக்குள்ள ஆவியானவரைபற்றிய அபிப்ராயத்தின் அடிப்படையில் அவர்  தவறான நிலையில் இருக்கிறாரா? என்பதை சுலபமாக அறியமுடியும். ஒருவர் ஆவியானவரை அறியாதவரை அவரால் தேவனின் உண்மை தன்மையை அறியவும் முடியாது தேவனுக்கேற்ற சரியான நிலையை அடையவும் முடியாது என்றே நான் கருதுகிறேன் (அதற்க்கு மீறியது தேவனின் சித்தம்) ஆகினும் சிலர் உண்மையை சரிவர அறியாமையினால்  அப்படிஇருக்கலாம் அவர்களை தவறான உபதேசம் என்று ஒதுக்காமல் அவர்களுக்காக  ஜெபித்து அவர்களை சரியான வழியில் நடத்த முயல்வதே  சிறந்தது.
 
இவ்வாறு பரிசுத்த ஆவியை பெற்றிருப்பவர் நிச்சயம் தவறான போதனையில் இருக்க மாட்டார்  ஆகினும்  "ஒருவர் பரிசுத்த ஆவியை பெற்றுள்ளாரா" என்பதை ஒரு சாதாரண விசுவாசியால்  நிதானிப்பது கடினம். மேலும் ஒருவருக்கும் வந்து தங்கிய  பரிசுத்த ஆவியானவர்  அந்த மனிதனிடம் தொடரும்  தரம்கெட்ட வசன விரோத போக்கை / செயல்களை கண்டு துக்கப்பட்டு அவனை விட்டு வெளியேறி விட்டால்,  உடனே அவருள் "பரிசுத்த ஆவி" போன்ற ஒரு "வஞ்சகஆவி" ஓன்று வந்து தங்கிவிடும். இந்த ஆவியை அடையாளம் காம்பது மிக மிக கடினம். எனவேதான் யோவான்:
 
I யோவான் 4:1 நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்  
 
என்று கூறுகிறார்.  
  
இவ்வாறு ஒருவர் பரிசுத்த ஆவியை பெற்று அதன் அடிப்படையில் செயல்படுகிராறாரா என்பதையும் ஒருவருக்குள் இருப்பது உண்மையான பரிசுத்த  ஆவியா அல்லது வஞ்சக ஆவியா? என்பதையும்  எவ்வாறு அறியலாம் என்பதை கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த இரண்டு தலைப்பின் கீழ் ஆராயலாம்..
 


-- Edited by SUNDAR on Friday 18th of February 2011 08:55:12 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

தவறான போதகத்தை நாம் அடையாளும் காண்பதற்கு அடுத்த வழி,. ஆண்டவராகிய இயேசுவின் வாயில் இருந்து புறப்பட்டு, நாம் எல்லோரும் செய்ய வேண்டும் என்று  கட்டளையிட்ட இந்த கடைசி இரண்டு காரியங்களை ஒருவர் கைகொள்ளுகிறாரா? என்பதை ஆராய்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்:
 
மாற்கு 16:15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;    
 
1.ஆத்துமா பாரமும் - சுவிசேஷம் சொல்லுதலும்:
 
இரட்சிப்பை பெறாத  ஆத்துமாக்கள்  மீதான பாரமும் பரிதபிப்பும் ஒருவருக்கு இல்லை என்றால் அவர் தவறான உபதேசத்தில் இருக்கிறார் என்பதை நாம் சுலபமாக கண்டுகொள்ளலாம். பெரும்பாலான பிற மத சகோதரர்கள் இன்னொரு வரிடம்போய் எங்கள் கடவுளை ஏற்றுக்கொள் என்றோ அல்லது எங்கள் மதத்துக்கு நீவந்துவிடு என்றோ அழைப்பதுஇல்லை. அதற்க்கு காரணம் அவர்கள் உண்மையான தேவஅன்பை ருசிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். தானே  தனது  மதத்தைபற்றியோ அல்லது தங்கள் தெய்வத்தை பற்றியோ மேன்மையான ஒன்றை அறிந்திராததினால் அடுத்தவருக்கு எடுத்துசொல்ல அவர்களிடம் எதுவும் இல்லை.    
 
ஆனால் நமக்கோ  "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், (ரோமர் 5.5), அழிந்துபோகும் ஆத்துமாக்களை எப்படியாவது மீட்கவேண்டும் என்ற பரிதபிப்பு, ஒரு உண்மையான தேவ பிள்ளைக்கு  உண்டாகிறது. அந்த பரிதபிப்பு ஆண்டவருக்காக எதையாவது செய்வதற்கு நம்மை தூண்டுவதோடு இயேசுவை அறியாத ஜனங்களிடம் எப்படியாவது ஆண்டவரை பற்றியும் அவரின் அன்பை பற்றியும், இனி வரும் நித்தியத்தையும் நியாயதீர்ப்பை  பற்றியும் சொல்ல தூண்டுகிறது.   
 
ஆண்டராகிய இயேசுவுடன் இருந்து பின்னர் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம பெற்ற எல்லா அப்போஸ்த்தலர்களும் அவர்களோடு இருந்த ஆதி சபையார் எல்லோருமே சுவிசேஷத்தை எங்கும் சென்று பிரசங்கித்தனர். 
 
அப்போஸ்தலர் 8:40 பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம் பண்ணி செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டுவந்தான்
அப்போஸ்தலர் 14:7 அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 8:4 சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.

தங்கள் ஜீவனை துச்சமாகஎண்ணி சுவிசேஷம் சொல்வதற்காக தங்களையே  தேவனுக்காக
அர்ப்பணித்தவர்கள் பலர். அவர்களின் அத்தகைய தன்னலமற்ற  செயல்களால்தான் நாம்கூட இன்று தேவனை அறிந்திருக்கிறோம். அதேபோல் நாமும் நம்மால் இயன்றவரை இயேசுவை அறியாதவர்களுக்கு அவரை அறிவித்தலும் அவர்களுக்காக ஜெபித்தாலும் அவசியம்
 
மேலும்  ஆண்டவரின் திட்டம் முழுமயாக பூர்த்தியடையவும் இந்த "சுவிசேஷம் சொல்லுதல்" என்ற கடமையை நாம் நிறைவேற்றுதல் அவசியமாகிறது.  
 
மத்தேயு 24:14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

இவ்வாறு ஆண்டவரின் அன்பை அடுத்தவருக்கு எடுத்துசொல்ல விருப்பமில்லாத அழிந்துபோகும் ஆத்துமாக்கள் மேல் கரிசனை இல்லாத ஒரு நிலை
 ஒருவருக்கு இருக்குமானால் அவர் தவறான உபதேசத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்வது நல்லது.  
 

 

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

தவறான  உபதேசத்தை  அறிந்துகொள்ளும் வழிமுறைகளை பற்றி ஆராய்ந்து வருகிறோம். 
 
மத்தேயு 28: 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;    
 
3. இயேசுவின் வார்த்தைகளை கைக்கொள்ளும்படி உபதேசித்தல்:  

மேலே சொல்லப்பட்ட வசனத்துக்கு ஏற்ப, எவரொருவர் இயேசுவின் "இயேசுவின் வார்த்தைகளை கைக்கொள்ளும்படி போதிக்க வில்லையோ" அவர் தவறான ஒரு
உபதேசத்தில் இருக்கிறார்! அலலது  ஆரோக்ய உபதேசத்தை விட்டு சாத்தானால் திசைதிருப்ப பட்டிருக்கிறார் என்பதை சுலபமாக அறிந்துகொள்ள முடியும்.
 
புதியஏற்பாடு புத்தகம் முழுவதும் அனேக வசனங்கள்  மிகதெளிவாக இயேசுவின்
கற்பனைகளை கைக்கொள்ளவேண்டும் என்பதை நமக்கு திரும்ப திரும்ப போதிக்கின்றன.
 
இயேசுவிடம் அன்பாயிருக்கிறேன் என்று சொல்லிதிரிபவர்கள் எல்லோரும்  அவரது கற்பனையை கைக்கொள்ளவேண்டும்
 
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
யோவான் 5:3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்
யோவான் 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்
 
அவ்வாறு இயேசுவின் கற்பனையை கைகொள்ளுபவரிடத்தில பிதாவும் அன்பாயிருப்பார்:
 
யோவான் 14:21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்
 
இயேசுவின் கற்பனையை கைக்கொள்ளுவதால்  மட்டுமே அவரின் ஒருவர் நிலைத்திருக்க முடியும்:

I யோவான் 3:24 அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்
 
இயேசுவின்  வார்த்தைகளை கேடடு அவைகளின்படி செய்கிறவனே காற்றினாலும் புயலினாலும் அசைக்கமுடியாத கன்மலையின்மேல் வீட்டை கட்டிய புத்தியுள்ள
மனிதன். இயேசுவின் வார்த்தைப்படி செய்ய விரும்பாதவன் மணலின்மேல் வீடு கட்டியவன். சோதனை வந்தால் அது வீழ்ந்து நொறுங்கும்     
 
மத்தேயு 7:24 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு,இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.

இயேசுவை அறிந்திருக்கிறேன் அவரைத்தான்  நான்  தெய்வமாக 
கும்பிடுகிறேன் என்று சொல்லியும்  அவரது கற்பனையை கைகொள்ள விரும்பாதவன்  ஒரு பொய்யன்!  
 
I யோவான்2:4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான்,அவனுக்குள் சத்தியமில்லை.
 
அவரது கற்பனையை நாம் கைக்கொள்ளுவதால்  மட்டுமே நாம் அவரை
அறிந்திருக்கிறோம்  என்பதை  நம்மாலேயே  அறிய 
முடியுமாம்
.
I யோவான் 2:3 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்
 
இதுபோல்  இன்னும்  அனேக  வசனங்கள் இயேசுவின் கற்பனையை கைக்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன  
 
எனவே அன்பானவர்களே:
 
எளிதில் அடையாளம் காணக்கூடிய களைகளாகிய  மாம்சத்தில்வந்த இயேசுவை அறிக்கை பண்ணாதவர்களை பற்றி நாம் சுலபமாக  அறிந்துகொள்ளலாம். 
 
மாம்சத்தில் வந்த இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவரை தேவனாக  அல்லது தேவனின் குமாரனாக ஏற்காதவர்களை நாம் சற்று ஆழ்ந்து ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும்.
 
ஆனால்:

கிறிஸ்த்தவத்துக்குள்ளே கிறிஸ்த்தவர்போல இருந்துகொண்டு தேவனை விட்டு தவறான வழியில் விசுவாசிகளை திசைதிருப்பும் சாத்தானின் தந்திரத்தை அறிந்து கொள்ள மூன்று வழிகளை  சொல்லியிருக்கிறேன்.
 
1. பரிசுத்த ஆவியானவரை  ஏற்காத நிலை.
2. ஆத்தும பாரம் அல்லது சுவிசேஷபாரம் இல்லாமை
3. இயேசுவின் கற்பனைகளை கைக்கொள்ளும்படி போதிக்காத நிலை  
 
இக்காரியங்களை கருத்தில்கொண்டு சரியான உபதேசத்தை கண்டுகொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.    


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard