இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நன்மைகளை வார்த்தையினால் சொல்லாமல் கைகளால் செய்யுங்கள்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 313
Date:
நன்மைகளை வார்த்தையினால் சொல்லாமல் கைகளால் செய்யுங்கள்
Permalink  
 


நன்மைகளை வார்த்தையினால் சொல்லாமல் கைகளால் செய்யுங்கள்
 
நான் வேலை செய்யும்  ஆரம்பிக்கும்   நாட்களில் ஒரு பெரிய கம்பனியில் pantry  boy  வேலை செய்து கொண்டு இருந்தேன்
அப்பொழுது என் குடும்பத்தில் வறுமை அதிகம் அந்த வேலையில் வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேன்ட் மட்டும் தான்
போடவேண்டும் என்னிடம் இருந்தது ஒரு செட் மட்டும் தான் அதுவும் மாதங்களாக ஆக  கிழிந்து போனது
நான் சட்டையில் பின் குத்தி கொண்டு தான் வேலைக்கு வருவேன் பேண்டில் கூட கிழிந்ததை தேய்த்த  நூல் அப்படியே தெரியும்
அப்பொழுது  அங்கு வேலை செய்யும்  நபர்கள் என்னிடம் வந்து சட்டையை நன்றாக போட்டு கொண்டு வேலைக்கு  வா பேன்ட்டை மாற்றி கொண்டு
நல்ல  பேட்டை போட்டு கொண்டு வேலைக்கு வா என்பார்கள் அவர்கள் என் முதலாளி அல்ல அவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள் நான் அந்த இடத்தில்  டி காபி கொடுப்பவன்
 
ஏன் இந்த சப்பவத்தை இங்கு பதிக்கின்றேன்  என்றால் எல்லோருக்கும் அவர் உடுத்து உடை நன்றாக இருக்க வேண்டும்
என்று தான் நினைப்பார்கள தவிர நான் கிழிந்து போன பேண்டை போட்டு கொண்டுதான் வருவேன் நான் கிழிந்த சட்டையை தான் போடுவேன் என்று எந்த கருத்து தெரிந்த குழந்தை முதல் பெரியோர்கள் யாரும் சொல்லமாட்டார்கள் ஒன்று
ஆவர்களிடம் உடுத்த உடை இல்லாமல் இருக்கலாம்  அல்லது வேறொரு உடை வாங்க பணம் இல்லாமல் இருக்கலாம்
இந்த இரண்டு காரியங்களை தவிர வேறொரு காரணம் நிச்சயம் இருக்காது என் கருத்து படி
 
என்னை பார்த்து கேட்ட அவர்களும் இந்த பையனிடம் உடை இருந்தால் இவன் போடாமலா இருப்பான் என்று யோசித்து இருந்தால் நன்றாக இருக்கும் அதை விட்டு விட்டு நல்ல  சட்டை போடு நல்ல  பேன்ட்டை போடு என்று சொல்லும் பொழுது  எனக்கு சிரிப்பும் மனதில் வேதனை மட்டும் தான் வரும் (எனக்கும் ஆசைதானே என்று )
 
 யாக்கோபு - 2
 
15  ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்த்திரமில்லாமலும் அநுதின ஆகாரம் இல்லாமல் இருக்கும் பொழுது
 
16  உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி நீங்கள் சமதானதோடே போங்கள், குளிர் காய்ந்து பசி ஆருங்கள் என்று சொல்லியும் ,
சரிரத்திர்க்கு வேண்டியவைகளை அவர்களுக்கு கொடாவிட்டால்  ப்ரோஜினமென்ன -? 
 
மேலே வசனம் சொல்கின்ற படியே நாம் மற்றவர்களை பசியாகவோ அல்லது உடை இல்லாமல் இருக்கும் பொழுது நம்மிடம் பணம் இருந்தால் அவர்களுக்கு புதிதாக வாங்கி கொடுக்கலாம் அப்படி நம்மிடம் கொடுக்க ஒன்றும் இல்லாமல்  இருந்தால் கடவுள் இடத்தில் அவர்களுக்காக வேண்டுதல் செய்யலாம்
 
இப்படி எதையும் செய்யாமல் மற்றவர்களை பார்த்து கிழிந்த  சட்டை போடாதே நல்ல சட்டை போடு  இப்படி பட்ட ஆகாரம் சாப்பிடாதே நல்ல ஆகாரம் சாப்பிடு  என்று சொல்லாமல் வாயை மூடி கொண்டு உங்கள் வேலையை தயவு செய்து  பாருங்கள் என்பதே என் பதில்
 
இந்த தலைப்பை பற்றி தள சகோதர்கள்  கருத்துகளை படிக்க  ஆசையாய் இருக்கின்றேன்  


-- Edited by EDWIN SUDHAKAR on Friday 18th of February 2011 08:23:36 PM

__________________

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR wrote:

 

 மேலே வசனம் சொல்கின்ற படியே நாம் மற்றவர்களை பசியாகவோ அல்லது உடை இல்லாமல் இருக்கும் பொழுது நம்மிடம் பணம் இருந்தால் அவர்களுக்கு புதிதாக வாங்கி கொடுக்கலாம் அப்படி நம்மிடம் கொடுக்க ஒன்றும் இல்லாமல்  இருந்தால் கடவுள் இடத்தில் அவர்களுக்காக வேண்டுதல் செய்யலாம்
 


சகோதரரே! நல்ல பயனுள்ள ஒரு கருத்தை  கூறியிருக்கிறீர்கள்.  வாய்ச்சொல்லில் ஜாலம் காட்டாமல், நமது  கிரியையால்  அதை பிறர்  உணரவைப்பதே சிறந்த செயல். அட்லீஸ்ட் சம்பந்தப்பட்டவரை அழைத்து ஆதரவான நான்கு வார்த்தையாவது கூறலாம்.  ஆனால் இங்கோ அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதும், அடுத்தவரை ஏதாவது ஒரு விதத்தில் குற்றம்கண்டுபிடித்து குறை கூறுவதும்தான்  எல்லோருக்கும் மிகமிக எளிதான செயலாக இருக்கிறது எனவேதான் அநேகர் அதை விரும்பி செய்கின்றனர்.  

 
தாங்கள் உலகப்பிரகாரமானவர்கள் சொன்ன காரியங்களை பற்றி சொல்கிறீர்கள். ஆனால் இங்கு ஆண்டவரின் அன்பை போதிக்கும்  விசுவாசிகள்கூட கொஞ்சமும் இரக்கமோ அல்லது அடுத்தவருக்கு  உதவி செய்யும் மனமோ  இல்லாமல், வெறும் வாய்  வார்த்தைகளால்  மட்டும்  ஜாலம்போட்டு மாய்மாலம் பண்ணும் குணமுடைவர்ககளாக  இருப்பதை அறியமுடிகிறது.
 
பிற மதத்தை சேர்ந்த மனிதர்கள் கூட "என்  கடன் பணி செய்து கிடப்பதே" என்று சொல்லி பணிசெய்து  சென்றிருக்க. அடுத்தவருக்காக தனது ஜீவனையே கொடுத்த இயேசுவை விசுவாசிக்கும் நாம், நம்மிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு நம்மால்  முடிந்த உதவிகளை நிச்சயம் செய்யவேண்டியது அவசியம். இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமாய்யிருக்கிறார் என்று வேதம் சொல்கிறது.
 
விசுவாசிகளின் காணிக்கை பணத்தால் வந்த வருமானத்தில் கூட மனதார எடுத்து தேவையுள்ள  இன்னொருவருக்கு உதவி செய்வது என்பது அநேகருக்கு கடினமான ஒன்றாக தெரிகிறது. உதவி என்று யாராவது வந்துவிட்டால் உள்ளே விடாதே என்று கதவை இழுத்து பூட்டிவிடுகிறார்கள். ஆனால் அடுத்தவர்களுக்கு போதிக்கும் போதோ "கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்" என்று போதிக்கப்படுகிறது
 
"தேவனின் கிருபை" என்பது எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் எல்லா மனுஷர்களையும்  தேவனோடு ஒப்புரவாக்குவதுதான், அனால் அதற்க்கேற்ற கிரியைகள் நமது அன்றாட வாழ்வில் வெளிப்படவில்லையெனில் அது கனியற்ற ஒரு அத்திமரத்தை போன்று சபிக்கப்பட கூடியதே.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard