இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனின் திட்டம், சித்தம் மற்றும் மனிதனின் சுயாதீனம்!


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
RE: தேவனின் திட்டம், சித்தம் மற்றும் மனிதனின் சுயாதீனம்!
Permalink  
 


//////////////இதில் யார் எப்படி செய்வார் என்பது தேவனால் முன் கூட்டியே அறிய முடியாது.///////////////

சங்கீதம் 139:23 தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

தாவீது இவ்வாறு சொல்லகிறானே.. தேவனால் முடியும் என்பதால் தானே சொல்கிறான்.

 

I நாளாகமம் 28:9 என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்..

 

ரோமர் 8:27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.

 

I சாமுவேல் 16:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

 

I இராஜாக்கள் 8:40 தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுப்புத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.

 

II நாளாகமம் 6:31 தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுபுத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலன் அளிப்பீராக.

 


எரேமியா 11:20 சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே

 

எரேமியா 17:10 கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

 

உள்ளந்திரியங்களை 

 

இருதயத்தை ஆராய்ந்து அறிந்திருக்கிறேன் என்று தேவனும்  சொல்கிறார் வேதத்தில் உள்ள மனுஷர்களும் சொல்லியிருக்கிறார்களே...

 

இவ்வாறு வசனம் சொல்ல எவ்வாறு தேவனுக்கு நம் இருதயத்தில் நாம் நினைத்து நாம் செய்ய போகின்ற காரியம் தெரியாமலிருக்கும் ? 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
தேவனின் திட்டம், சித்தம் மற்றும் மனிதனின் சுயாதீனம்!
Permalink  
 


/////////////////அறிந்திருந்தால் சவுலை ராஜாவாக்கியதற்கு அவர் மனஸ்தாப படவேண்டிய அவசியம் இருக்காது. சற்று சிந்தித்து பாருங்கள்.

I சாமுவேல் 15:11 நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்;

தேவனே சொல்கிறார் என் மனதில் தோன்றவே செய்யாத காரியத்தை எல்லாம் இந்த ஜனங்கள் செய்கிறார்கள் என்று

எரேமியா 7:31 தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை./////////////////////

சவுல் பற்றி தேவன் அறிந்திருந்தாலும் அவன் வழி விலகி போகும் போது தேவன் அவனை குறித்து வேதனை படுகிறார் மனஸ்தாபப்படுகிறார் .. இது ஒவ்வொரு மனிதனுக்கும் உரியது என்றே நான் கருதுகிறேன் ஏனெனின் ஒவ்வொரு மனுஷனும் பலவீனமானவன் என்பது தேவனுக்கு தெரியும் ஆனால் அவன் வழி விலகி போகப்போகிறான் என்பதையும் அறிந்து தான் பல நேரங்களில் அவனுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

ஆண்டவராகிய இயேசுவின் காலத்திலும் கூட யூதாஸ் தான் காட்டிக்கொடுக்கப்போகிறான் என்பதை இயேசு முன் கூட்டியே அறிந்திருந்தார் ..

இப்படி பல சம்பவங்கள் இருக்கும் போது நாம் செய்ய போகின்றதே தேவனால் அறிய முடியாது என்று சொல்ல முடியாது அல்லவா....

நான் கட்டளையிடவுமில்லை என் மனதில் தோன்றவும் இல்லை என தேவன் கூறுவது அவர் சொல்லாத காரியங்களை எல்லாம் செய்கிறார்கள் நான் சொல்ல நினைக்காத காரியங்களை எல்லாம் செய்கிறார்கள் என்று நினைத்து தான் ஒரு வேதனையோடு கூட அவ்வார்த்தைகளை தேவன் சொல்லியிருக்க கூடும் ...

மனிதர்களாகிய நமக்கே ஒரு மனிதனோடு கொஞ்ச காலம் பழகும் போது அவன் எப்படி பட்டவன் என்று அறிய முடிகிறது. அப்படியிருக்க தேவனுக்கு சர்வ வரல்லமையுள்ளவருக்கு எல்லாம் அறிய முடியுமே..

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

////////////////////(உங்களால் ஏற்கமுடியவில்லை என்றால் உங்கள் கருத்தையே எடுத்துகொள்ளுங்கள் சிஸ்ட்டர் ஏற்கவேண்டிய கடடாயம் எதுவும் இல்லை) //////////////////

இல்லை அண்ணா சில காரியங்களை ஆராய்ந்து புரிந்து அறிந்து கொள்வது நல்லது தானே .. ஆதலால் தொடர்ந்து இது பற்றி பேசலாம்..

உங்கள் கருத்துக்கு முரணாக கருத்து சொல்ல நினைக்கவில்லை உங்களின் அநேக கருத்துக்களை நான் ஏற்றுக்கொண்டுள்ளேன்..

ஆனால் இந்த திரி பற்றி மேலும் விரிவாக ஆராயலாம் ..

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: தேவனின் திட்டம், சித்தம் மற்றும் மனிதனின் சுயாதீனம்!
Permalink  
 


Debora wrote:

//////////////இதில் யார் எப்படி செய்வார் என்பது தேவனால் முன் கூட்டியே அறிய முடியாது.///////////////

சங்கீதம் 139:23 தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

தாவீது இவ்வாறு சொல்லகிறானே.. தேவனால் முடியும் என்பதால் தானே சொல்கிறான்.

  எரேமியா 11:20 சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே

 

எரேமியா 17:10 கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

 

இருதயத்தை ஆராய்ந்து அறிந்திருக்கிறேன் என்று தேவனும்  சொல்கிறார் வேதத்தில் உள்ள மனுஷர்களும் சொல்லியிருக்கிறார்களே...

இவ்வாறு வசனம் சொல்ல எவ்வாறு தேவனுக்கு நம் இருதயத்தில் நாம் நினைத்து நாம் செய்ய போகின்ற காரியம் தெரியாமலிருக்கும் ? 


 சிஸ்ட்டர் நீங்கள் முற்றிலும் வேறு ஒரு தலைப்புக்கு போகிறீர்கள்.

 
படைத்த ஒரு மனுஷனின் இருதயம் என்னவென்று அறிவது வேறு அவனை படைக்கும் முன்னரே அவன் என்ன செய்வான் என்பதை அறிவது வேறு.  அப்படி படைக்கும் முன்னே ஒரு மனுஷன் என்ன செய்வான் என்று தேவன் அறிவார் என்பதைவிட அதை அவர் அவனுக்கு செய்ய தீர்மானித்தார் என்று சொல்வதே சிறந்தது. 
 
இப்படி யோசித்து பாருங்கள் 
 
நான் ஒரு ரோபாடடை உருவாக்குகிறேன் அது  என் சொல்லை கேளாமல் 1-2 வயது பிள்ளைகளைகூட கற்பழித்து கொல்லும் என்று எனக்கு முன்கூட்டியே தெரியும் என்றால் அதை நான் உருவாக்குவேனா?  அதை முன்கூட்டியே அறிந்தும் நான் உருவாக்கினால் அதை உருவாக்கிய என்னுடைய தவறுதானே?
 
தேவன் அவ்வாறு செய்வாரா?  
 
உருவாக்கி அது கேவலமான செயலை செய்யும்போது அதை செய்யாதே இதை செய்யாதே என்று சொல்வதில் எந்த பயனும் இல்லையே? 
 
மேலும்   
 
அவ்வாறு நான் உருவாக்கி அது இரண்டு வயது பிள்ளையை கெடுத்து கொன்றபிறகு அதை உருவாக்கியதற்காக நான்  மனஸ்தாபபடுவது  எவ்வளவு கேவலமானது.  
 
தேவன் மனுஷனை உண்டாக்கியதற்கு மனஸ்தாபபடடார் என்று வசனம் சொல்கிறது 
 
மனுஷன் ஒரு செயலை தவறாக செய்துவிட்டு மனஸ்தாபப்படலாம் ஆனால் தேவன் அப்படி செய்வாரா? என்பதுதான் எனது கேள்வி  
  
இதற்க்கு பதில் தாருங்கள். 
 
 
மற்றபடி தேவன் தான் படைத்த மனுஷனின்  நினைவுளையும் சிந்தனைகளையும் அது தோன்றும் முன்னரே அறிய வல்லவர். 

சங்கீதம் 139:2 என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
 
அதாவது நமக்கு நல்ல சிந்தனைகளும் கெடட சிந்தனைகளும் வரத்தான் செய்யும் இரண்டில் நான் எதை செய்வேன் என்பது என்னுடைய கையில் இருக்கிறது அதை தேவன் தீர்மானிப்பது இல்லை.
 
முக்கியமாக யாரும் இடறுவதையோ பாவம் செய்வதையோ தேவன் முன்கூட்டியே அறிவது இல்லை அது அவனவன் சுயாதீனத்தில் அடிப்படையில் நடப்பது.  
 
இரண்டு உதாரணம் தருகிறேன் 
 
ஏசாயா 5:1. என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.
 
2. அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.
 
இங்கு தேவன் நல்ல பழம் வரும் என்றே எதிர்பார்க்கிறார் அதற்க்கான வேலையையே அவர் செயகிறார் ஆனால் அங்கே வந்ததோ கசப்பான பழம். தேவனுக்கு கசப்பான பழம்தான் வரும் என்று முன்கூட்டியே தெரியவில்லை அல்லவா?
 
 
அடுத்து 
எரேமியா 18:7. பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமா
கவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,
8. நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.
 
9 கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு
10. அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.
 
மேலேயுள்ள வசனம் தெளிவாக சொல்கிறது அந்த ஜாதி தங்களுக்கு கொடுக்கப்படட சுயாதீனத்தின்படி எப்படி  செய்யப்போகிறது என்பதை தேவன் அறிய முடியாததால் அப்படி செய்தால் நான் இப்படி செய்வேன் நீங்கள் இப்படி செய்தால் நான் அப்படி செய்வேன் என்று இரண்டு திட்ட்ங்களை சொல்கிறார்.
 
இப்படித்தான் அவர்கள் செய்வார்கள் என்பதை அவர் அறிந்திருந்தால் இப்படி சொல்ல வேண்டிய அவசியம்மே இருக்காது.
 
இதே போன்றதுதான் ஒவ்வொரு மனுஷனின் நிலைமையும். அவர் யாரையும் அவன் பாவம் செய்வான் என்று தெரிந்து படைப்பது இல்லை! 
ஆனால் நீ பாவம் செய்தால் தண்டனை உண்டு பாவம் செய்யவிடடால் நன்மை உண்டு என்று சொல்கிறார் அதில் எதை தெரிவு செய்யப்போகிறான் என்பது மனிதனின் சுயாதீனம் அதில் தேவன் போராடி தலையிடுவது இல்லை.  
 
பாவம் செய்யாதவனை தேவன் தன திடடத்தை  நிறைவேற்ற பயன்படுத்துகிறார் பாவம் செய்தவனை தேவன் ஒதுக்கி வைக்கிறார்.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

அதாவது ஒரு மனிதனை படைக்கும் முன்னர் தான் அவனைப்பற்றி தேவனால் அறிய முடியாது என்று கூறுகிறீர்களா? 

 

மனிதனை படைத்த பின்னர் அவன் செய்யும் காரியங்களை அறிய முடியும் இதுவா உங்கள் கருத்து? 

 

பாவம் பண்ணுவானா இல்லையா என்பதில் மனிதன் என்ன செய்வான் என்பதை  தேவனால் முன்கூட்டியே அறிய முடியாதா? 

 

அப்படியாயின் பாவம் செய்ய முன்னமே தடுத்தேன் என கூறுகிறாரே...

 

ஆதியாகமம் 20:6 அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.

 

தாயின் கர்ப்பத்தில் நீ மீறுகிறவன் என்பதை அறிந்திருக்கிறேன் என கூறுகிறாரே? 

 

 

ஏசாயா 48:8 நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம்பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிறவனென்று பெயர்பெற்றதையும் அறிந்திருக்கிறேன்.

 

I யோவான் 3:20 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

என்னுடைய கருத்து என்னவெனில் ஒரு மனுஷனை படைக்கும்போது அவன் பாவம் செய்வானா  அல்லது தேவன் சொன்ன  வழியில் 
சரியாக நடந்து ஜெயிப்பானா என்பதை தேவனால் முன் கூட்டியே தீர்மானிக்க முடியாது.   
 
நீங்கள் பல அருமையான கேள்விகளை முன்வைத்துள்ளீர்கள் அவைகள் எதுவும் நான் சொல்லும் கருத்துக்கு சம்பந்தப்பட்ட கேள்வியல்ல .
 
Debora wrote:

///அப்படியாயின் பாவம் செய்ய முன்னமே தடுத்தேன் என கூறுகிறாரே...

 ஆதியாகமம் 20:6 அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை./// .

 
இங்கு அவர் படைத்த ஒரு மனுஷனையே பாவம் செய்யாமல்  தடுப்பதாக வசனம் உள்ளது. 
 
 2. அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.
 
அவன் சாராள் அப்ரஹாமின் மனைவி என் அறிந்தும் அவளை  அடைய நினைக்காமல் உண்மை அறியாமல் சுத்த இதயத்தோடு இந்த காரியத்தை செய்ததை அறிந்த, இருதயங்களை ஆராயும் தேவன் அவன் பாவம் செய்யாமல் தடுக்கிறார்.
 
இன்றும் அநேக நேரங்களில் தேவனுக்கு பயந்து நடக்கும் பிள்ளைகள் பாவம் என்று தெரியாமல் சில காரியங்களை செய்ய துணியும்போது அவர் ஏதாவது தடங்கல்களை கொண்டுவந்து அதை தடுக்கிறார்.
 
ஆனால் தாவீதுபோல் பாவம் என்று நன்றாக அறிந்தும்  பத்சேபாளிடம் பிரவேசிக்க துணிந்த பொதும்,  உரியாவை கொலை செய்ய தூது அனுப்பிய போதும்  தேவன் வந்து தடுக்கவில்லை என்பதையும் நான் கருத்தில் கொள்ள வேண்டும். 
 
இந்த சம்பவங்களுக்கும் தேவன் ஒருவரை  படைப்பதற்கு முன்னரே அவன் பாவம் செய்வானா மாடடானா என்று அறிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
 
தேவன் தான் படைத்த மனுஷனின் இருதய எண்ணங்களை அவை தோன்றும் முன்னரே ஆராய்ந்து அவனவன் வழிக்கு தகுந்த பலனை தருபவர்.
 
I நாளாகமம் 28: 9 கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்;
 
நாம் எவ்வளவுதான் பரிசுத்தமாக இருந்தாலும் சில நேரங்களில் சில காரியங்களில் தடுமாறுகிறோம்.
 
ஒரு உதாரணமாக ரேஷன் கார்டில் மாதம் 10 ஆயிரத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு 5000 ருபாய் இனாமாக கொடுக்கிறார்கள் என்றால் 10 ஆயிரத்துக்கு மேல் வருமானம் உள்ள நாம் 10 ஆயிரத்துக்கு கீழ் என்று சொல்லி  அதை வாங்கலாமா கூடாதா என்ற தடுமாற்றம் அநேகருக்கு வரும். அந்த தடுமாற்றத்தை எல்லாம் அவன் இருதய நினைவுகளை  எல்லாம்  தேவன் பார்த்துக்கொண்டே இருக்கிறார் ஆனால் இறுதியில் நாம் உத்தமமாக நிற்போமா அல்லது அந்த 5 ஆயிரம் பணத்துக்கு ஆசைப்பட்டு பிறரை  ஏமாற்றி பணத்தை வாங்குவோமா என்பதை தேவன் அறிவது  இல்லை காரணம் அவர் தன பிள்ளைகள் தன்னைப்போல் பரிசுத்தமாகவே இருக்கும் என்றே எதிர்பார்க்கிறார்  ஆனால்  நாம்தான் அவர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது இல்லை  அதன் பிறகுதான் தேவன்  வருத்தத்தோடு நம் மீறுதலை  அறியமுடியும். 
 
இதுதான் என்னுடைய கருத்து.
 
இதேபோல்  5 வயதுக்கு மேற்படட பிள்ளைகளுக்கு ரயிலில் டிக்கட் உண்டு நம் பிள்ளைக்கு அப்போதுதான் 5 வயது முடிந்து ஓரிரு மாதங்கள் ஆகியிருக்கும் இந்நிலையில் நான் என்ன செய்யப் போகிறோம் என்பதெல்லாம் தேவன் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது அதை நாம் தான் தீர்மானித்து நான் ஒரு தேவபிள்ளை என்று  சாத்தான் முன் நிரூபிக்க வேண்டும்.
 
தேவன் எல்லோரிடமும் எதிர்பார்ப்பது அவர்கள் ஜெயித்து சாத்தான் முகத்தில் கரியை பூசவேண்டும் என்பதுதான். அப்படியிருக்கு அவருக்கு  முன்னமே தெரிய என்ன வாய்ப்பு இருக்கிறது?
 
அவரே சொல்கிறார் "நான்  நல்ல கணிகளைத் தரும் என்றுதான் காத்திருந்தேன் ஆனால் அதுவோ கசப்பான கனிகளை தந்தது என்று"
 
அது கசப்பான கனியைத்தான் தரும் என்று தேவன் முன்கூட்டியே அறிந்திருந்தால் அவர் நல்ல கனிகொடுக்கும் என்று காத்திருப்பது எவ்வளவு முடிடாள்தனம்.
 
உதாரணமாக  மா  மரத்தில் இருந்து மாம்பழம் வரும் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும், ஆகினும்  அது ஆப்பிள் பழம்  தரும் என்று காத்திருந்து ஏமாறுவேனா?
 
ஒரு காரியம் முன்னமே தெரிந்தால் மனுஷனே ஏமாற மாடடான் பின்னர் தேவன் எப்படி ஏமாறுவார்?
 
எனவே தேவன் தான் படைத்த எல்லோரும் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே படைப்பதால் ஒருவன்  தன வார்த்தையின்படி சரியாக நடப்பானா அல்லது மீறுதலுக்குட்பட்டு ஆகாமல் போவானா என்பது தேவனுக்கு அறிய முடியாது  அது மனுஷனின் தெரிவில்தான்  இருக்கிறது அதுவே மனுஷனின் சுயாதீனம் .    
 
 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

 
Debora wrote:

///தாயின் கர்ப்பத்தில் நீ மீறுகிறவன் என்பதை அறிந்திருக்கிறேன் என கூறுகிறாரே? 

ஏசாயா 48:8 நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம்பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிறவனென்று பெயர்பெற்றதையும் அறிந்திருக்கிறேன்.///

அதே அதிகாரத்தின் முதல் வசனம் அவர் யாரை பற்றி சொல்கிரார் என்பதை விளக்குகிறது 

1. இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும்கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.

 
யாக்கோபின் வம்சத்தாரை பார்த்து கர்த்தர் இவ்வாறு சொல்கிறார்.
 
அவ்வாறு சொல்லும்போது யாக்கோபுவுடைய குணாதிசயங்களை அங்கு சொல்கிறார்.
 
யாக்கோபு தாயின் கர்ப்பத்தில் இருந்தே தன சகோதரனின் காலை பிடித்துக்கொண்டு வெளியில் வந்தவன் அவன் பெயரே "எத்தன்
 
26. பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிடடார்கள் 
 
அடுத்து 
"யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும்", என்று யூதாவின் சந்ததியை குறித்து சொல்கிறார் அந்த யூதாவின் மகனாகிய பாரெஸோ தாயின் வயிற்றில் இருந்தே மீறி வந்தவன்,  
 
ஆதியாகமம் 38:28. அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.
 
29 அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.
 
இப்படி நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே நீ கர்ப்பத்தில் இருந்தே மீறுகிறவன் என்று ஆண்டவர் 
சொல்கிரார்.
 
ஆகினும் சிலரை தேவன் கர்ப்பத்தில் உருவாக்கும் முன்னரே தன பணியை செய்ய தெரிந்துகொள்கிறார்.  அப்படிபடட விசேஷித்தவர்கள் குறித்து ஒரு விரைவில் ஒரு விளக்கம் தருகிறேன்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

அண்ணா இருதயத்தை அறிகிறவருக்கு நாம் பாவம் செய்ய போகிறோம் என அறிய முடியாதா? இது எனக்கு பெரிய குழப்பமாக இருக்கிறது...

மனிதனுக்கு சுயாதீனத்தை கொடுத்துள்ளார் ஆனால் அவன் என்ன தீர்மானம் எடுப்பான் என்பதை அவரால் அறிய முடியாதா? அவர் எல்லாவற்றையும் அறிந்தவர் அல்லவா

நீங்கள் கூறியது போல அவர் நாம் நன்மையானதை தான் செய்வோம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார் ஆனால் பல நேரங்களில் மனிதன் தவறும் போது அவர் வேதனைப்படுகிறார் ஆதலால் தான் நல்ல கனிகளை தரும் என எதிர்பார்த்தேன் ஆனால் அது கேட்ட கனிகளை கொடுத்தது என கூறுகிறார் என்பது என்னுடைய கருத்து.

உதாரணமாக நாம் கூட சில நேரங்களில் குறிப்பிட்ட ஒருவர் கெட்டவர் என அறிந்திருப்போம் அவர் செய்கின்ற, செய்ய போகின்ற யாவும் கெட்ட செயல்கள் எனவும் அறிந்திருப்போம் ஆனால் அந்த குறிப்பிட்ட நபர் ஒரு நாள் நல்ல மனிதனாக மாறுவார் என எதிர்பார்த்திருப்போம் ஆனால் அவர் கடைசி வரை திருந்தாத போது நாமும் ஏமாற்றமடையலாம் நல்ல கனிகளை எதிர்பார்த்தோம் ஆனால் கெட்ட கனிகள் வந்தது என்று இது போல தான் தேவனும் கூறுகிறார் என்பதே எனது கருத்து..

சகலத்தையும் அறிந்தவருக்கு ஆதியும் அந்தமுமானவருக்கு மனிதனையும் அவன் செய்ய போகின்ற காரியங்களையும் அறிய முடியாது என்பது அவருடைய வல்லமையயை குறைத்து எடைபோடுவதாக உள்ளது..

நான் உங்களை எந்த வகையிலும் குற்றப்படுத்த இதை கூறவில்லை அண்ணா ஆனால் மேலும் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்.. தொடர்ந்து ஆராயலாம்.





__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தேவனின் திட்டம், சித்தம் மற்றும் மனிதனின் சுயாதீனம்!
Permalink  
 


Debora wrote:

அண்ணா இருதயத்தை அறிகிறவருக்கு நாம் பாவம் செய்ய போகிறோம் என அறிய முடியாதா? இது எனக்கு பெரிய குழப்பமாக இருக்கிறது..

மனிதனுக்கு சுயாதீனத்தை கொடுத்துள்ளார் ஆனால் அவன் என்ன தீர்மானம் எடுப்பான் என்பதை அவரால் அறிய முடியாதா? அவர் எல்லாவற்றையும் அறிந்தவர் அல்லவா

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என் இதயத்தில் நான் ஆயிரம் சிந்திப்பேன் சிஸ்ட்டர், அலுவலகத்தில் லாக்கரில் அதிகம் பணம் இருக்கிறது சமயம் வாய்க்கும்போது எடுத்துவிட வேண்டும் ஏன் பக்கத்து வீட்டுகாரன் ரொம்ப தொல்லை தருகிறான் அவனை கொல்ல  வேண்டும் என்று கூட சிந்திப்பேன் ஆனால் சிந்தனை வேறு நாம் செய்வது வேறு.  சிந்தித்தை செய்யவும் செய்யலாம், செய்யாமல் அது தவறு என்று திருந்திக்கொள்ளவும் செய்யலாம் அதுவே சுயாதீனம்.    

சிஸ்ட்டர் சுயாதீனம் என்பதன் பொருள் என்ன?  ஒருவன் எப்படி வேண்டுமானாலும் தீர்மானம் எடுக்கலாம் எப்படி வேண்டுமானாலும் இஷ்டப்படி செய்யலாம் என்பதுதான். அதை தேவன்தான் அனுமதித்து மனுஷனுக்கு கொடுத்திருக்கிறார். எனவே அவன் எப்படி வேண்டுமானாலும் தீர்மானம் எடுக்கலாம். 

இவன் இப்படித்தான் தீர்மானம் எடுப்பான் என்பதை தேவன் முன்னமே அறிந்தால் அது எப்படி சுயாதீனம் ஆகும்? தேவன் முன்னமே அறிந்தததை மனுஷன் எப்படி மாற்றமுடியும்?  அவர் அறிந்ததைத்தானே இவன் செய்வான் பின்னர் அங்கு சுயாதீனம் என்பது ஏது?   

அதாவது தேவன் அறிவாரா மாடடாரா என்பதைவிட அவன் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் நாம் பார்த்துகொள்ளலாம் என்று தேவனே விட்டுக்கொடுக்க அவருக்கு உரிமை இல்லையா?   

 

///நீங்கள் கூறியது போல அவர் நாம் நன்மையானதை தான் செய்வோம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்/// 

இவன் இப்படித்தான் தீமை செய்வான் என்பது முன்கூட்டியே திடடமாக  தெரிந்த பிறகு என்ன எதிர்பார்ப்பு வேண்டிகிடக்கிறது?  

அதாவது தனக்கு முன்கூட்டியே தெரிந்ததை மனுஷன் மாற்றிவிடுவானோ என்ற எதிர்பார்ப்பா?  அப்படி தேவன் முன்கூட்டி அறிந்ததை மனுஷனால் மாற்றத்தான் முடியுமா? 

 

///ஆனால் பல நேரங்களில் மனிதன் தவறும் போது அவர் வேதனைப்படுகிறார்///

உங்கள் கருத்துப்படி அவன் தவறுவான் என்பதுதான் தேவனுக்கு முன்கூட்டியே தெரியுமே பிறகு என்ன தவறும் போது வேதனை வருகிறது?  

   

சிஸ்ட்டர் "சர்வ வல்லமை" என்பதன் பொருள் என்ன?
 
நீங்கள் சொல்வதுபோல் ஆதாம் பாவம் செய்வான் என்று தெரிந்தே அவனை படைத்துவிட்டு பின்னர் அவன் மூலம் உலகம் முழுவதும் பாவத்தால் நிறைந்த பிறகு  திருந்துவார்கள் என எதிர்பார்த்து  ஏமாந்து, பின்னர் இப்படி மனுஷனை படைத்துவிடடேனே என்று மனஸ்தாபபட்டு,  படைத்த மொத்த மனுஷர்களையும்  குழந்தை குட்டிகளோடு ஜலத்தால் துள்ள துடிக்க அழித்து நிர்மூலமாக்குவதா சர்வ வல்லமை?
 
சற்று நினைத்து பாருங்கள் அன்று ஜலத்தால் உலகத்தை  அழிக்கும்போது அங்கு எத்தனை சிறு சிறு குழந்தைகள் இருந்திருக்கும் எத்தனை தாய்மார்கள் தகப்பன்மார்கள்  அந்த  பாவமரியா பிஞ்சு குழந்தைகளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று கடைசிவரை எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள்.
 
இப்படியெல்லாம் நடக்கும் என்பது தேவனுக்கு முன்னமே தெரியும் ஆனால படைத்துவிட்டு அதற்காக மனஸ்தாபபடுகிறாராம்.
 
இதுவா சர்வ வல்லமை? இதுவா தேவனை பற்றிய உங்கள் புரிதல்? 
 
இப்படித்தான் நடக்கும் என்று தேவனே அறிந்த  பிறகு அது மாறி நடக்க வாய்ப்பு எது?  அங்கு மனிதனின் சுயாதீனம் எது? தேவன் அறிந்ததுதான் நடக்கும்.  அப்படி ஒருவேளை மாறிவிடடால் தேவன் தவறாக நினைத்ததாக அல்லவா பொருள்படும்.  
 
ஒரு மனுஷன் திருந்திவிடலாம் என்று இன்னொரு மனுஷன் எதிர்பார்ப்பது இயல்பு,  காரணம் அவனுக்கு திருந்துவானா திருந்த மாடடானா என்பது தெரியாது.
 
ஆனால் தேவனுக்கு அவன் திருந்தமடடான் என்று முன்னமே தெரியும் என்று சொல்கிறீர்கள் பிறகு அவன் திருத்துவான் என்று எதிர்பார்த்து ஏமாறுகிறார் என்பது என்ன விளக்கமோ புரியவில்லை.
 
அப்படியெனில் இத்தனைபேர் நரகத்துக்கு போவார்கள் என்பதும் அவருக்கு முன்னமே தெரியும். தெரிந்தும் குர்ரான் சொல்வதுபோல் அவர்களை நரகத்து என்றே படைத்துவிட்டார்.   
 
தேவனே இவன் நரகத்துக்குதான்போவான் என்று தெரிந்தும் படைத்தால் பிறகு அவன் எப்படி திருந்துவான் அவனை யார் காப்பாற்ற முடியும்? 
 
  
நான் தேவனின் சர்வ வல்லமையை சிறிதும் மட்டுப்படுத்தவில்லை
 
நான்  சொல்லும் சர்வ வல்லமை என்பது இதுதான்:  
 
மனுஷனை படைப்போம் அவனுக்கு சுயமாய் காரியங்களை செய்யும் சுயாதீனத்தை கொடுப்போம் அவன் தனக்கு கீழ்ப்படிந்து  பாவம் செய்யவில்லை என்றால்  அவனை தேவ திடடத்துக்கு பயன்படுத்தி சாத்தானை ஒழிப்போம் ஒருவேளை அவன் பாவம்  செய்தாலும் அவனை எப்படியாகிலும்  மீட்டுவிடலாம் என்று நினைத்து படைப்பது சர்வ வல்லமை. 
 
சுயாதீனம் என்பது தன இஷடபடி செய்யும் அதிகாரத்தை கொடுப்பது. அப்படி கொடுத்துவிட்டு அவன் எப்படி நடந்தாலும் அவனை தேவனால் மீட்க்க முடியும் என்பதே சர்வ வல்லமை! 
 
இப்படித்தான் நடக்கும் என்று அறிந்தும்  படைத்துவிட்டு பின்னர் எதிர்பார்த்து ஏமாறுவதும் மனஸ்தாபப்படுவதும் சர்வ வல்லமை அல்ல.
 
இதற்குமேல் உங்களுக்கு எப்படி புரியவைப்பது என்பது எனக்கு புரியவில்லை சிஸ்ட்டர்.  தேவன் உங்களுக்கு புரியவைக்க விரும்பவில்லை என்பதுபோல் எனக்கு தோன்றுகிறது எனவே விட்டுவிடுவோம்.
 
உங்கள் கருத்தில் எந்த தவறும் இல்லை அநேகர் அப்படிதான் நினைக்கிறார்கள் எனவே விட்டுவிடுவோம்.
 
 
 


-- Edited by SUNDAR on Tuesday 2nd of March 2021 04:40:41 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

ஏன் அண்ணா கோபமாக பேசுகிறீர்கள்?

அதாவது மனிதனின் இருதயத்திலே அவன் நினைப்பவைகளை எல்லாம் தேவன் அறிகிறார். அத்தோடு அவன் கெட்டதை நினைத்தாலும் அறிகிறார் நல்லதை நினைத்தாலும் அறிகிறார் ஆனால் இறுதியில் அவன் எந்த தீர்மானத்தை எடுப்பான் என்பதை மாத்திரம் அவர் அறிவதில்லை.. இதுவா உங்கள் கருத்து? எனது புரிதல் சரியா?

///////////நான் சொல்லும் சர்வ வல்லமை என்பது இதுதான்:

மனுஷனை படைப்போம் அவனுக்கு சுயமாய் காரியங்களை செய்யும் சுயாதீனத்தை கொடுப்போம் அவன் தனக்கு கீழ்ப்படிந்து பாவம் செய்யவில்லை என்றால் அவனை தேவ திடடத்துக்கு பயன்படுத்தி சாத்தானை ஒழிப்போம் ஒருவேளை அவன் பாவம் செய்தாலும் அவனை எப்படியாகிலும் மீட்டுவிடலாம் என்று நினைத்து படைப்பது சர்வ வல்லமை.

சுயாதீனம் என்பது தன இஷடபடி செய்யும் அதிகாரத்தை கொடுப்பது. அப்படி கொடுத்துவிட்டு அவன் எப்படி நடந்தாலும் அவனை தேவனால் மீட்க்க முடியும் என்பதே சர்வ வல்லமை! ///////////////////

இதுதான் என்னுடைய கருத்தும் அண்ணா

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: தேவனின் திட்டம், சித்தம் மற்றும் மனிதனின் சுயாதீனம்!
Permalink  
 


சிஸ்ட்டர் நான் கோபமாக எதுவும் எழுதவில்லை. உங்கள் கருத்துக்களால் நன் இது குறித்து இன்னும் கொஞ்சம் ஆழமாக  யோசிக்கவே  தூண்டப்பட்டேன்.   

 
ஆகினும் இந்த சப்ஜக்ட் கொஞ்சம் கஸ்டமானது எனவே  புரியவில்லை என்றால் இந்த சப்ஜக்டைவிட்டு வேறு  சபிஜக்ட் குறித்து விவாதிக்கலாம் என்றே எழுதினேன்.
 
என்னுடைய  கருத்தின் ஒரே நோக்கம் என்னவெனில்  " இப்படியெல்லாம் இந்த உலகில் தீமை தலைவிர்த்தது ஆடும், கொடுமைகளும் கொடூரங்களும் அரங்கேறும்" என்று முன்பே அவருக்கு தெரிந்திருந்தால் அவர் இந்த உலகை இப்படி படைத்திருக்க மாடடாரே  என்பதுதான் எனது ஆதங்கம் 
 
அதற்க்கு ஏற்றாற்போல் தேவனும்,
 
"மனுஷனை உண்டாக்கியதற்கு மனஸ்தாபபடடார்" என்று வசனம் சொல்வதால் மனுஷன் என்ன செய்வான் என்பதை அறியாமல்தான்  அவனை படைத்துவிடடார் பின்னர் அவன் செய்யும் தீமையை பார்த்து மனஸ்தாபப்படுகிறார் என்ற கருத்தில் உள்ளேன்.
 
ஆகினும் இன்று நான் இது குறித்து தியானித்தபோது  மோசே மூலம் கர்த்தர் சொன்ன நீண்ட நாளுக்கு பின்னர் நடக்க போவது குறித்து சொன்ன சில தீர்க்கதரிசன வசனங்கள் ஞாபகத்துக்கு வந்தது 
 
உபாகமம் 31:20 நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திருப்தியாகிக் 
கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம்மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.
 
அதாவது நீண்ட காலத்துக்கு பின்னர் நடக்க போவதை முன் கூட்டியே தேவன் இங்கு சொல்கிறார் எனவே கர்த்தர் அனைத்தையும்  முன்கூட்டியே அறிந்துதான் செய்தாரா என்று என்ன தோன்றுகிறது 
 
எனவே இன்னும் இந்த கருத்து குறித்து தேவனிடம் விசாரித்து பின்னர் எழுத முயற்சிக்கிறேன்.
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
தேவனின் திட்டம், சித்தம் மற்றும் மனிதனின் சுயாதீனம்!
Permalink  
 


//////////////////இது குறித்து இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசிக்கவே தூண்டப்பட்டேன். ////////////////////

நன்றி அண்ணா


சரி அண்ணா தொடர்ந்து இது பற்றி எழுதுங்கள் தொடர்ந்து விவாதிக்கலாம்


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: தேவனின் திட்டம், சித்தம் மற்றும் மனிதனின் சுயாதீனம்!
Permalink  
 


"மனுஷன் தன் சுயாதீனத்தின் அடிப்படையில் என்ன செய்வான் என்பதை தேவன் அறியார் அப்படி ஒரு சுதந்திரத்தை தேவனே மனுஷனுக்கு  கொடுத்துள்ளார்" என்கிற என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை சிஸ்டர்.

 

தங்கள் கருத்துபடி மனுஷன் இதைத்தான் செய்வான் என தேவனுக்கு முன்னமே தெரியுமாகில் மனுஷனை படைத்ததற்கு தேவன் மனஸ்தாபபட காரணம் என்ன

6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது

ஆதியாகமம் 6

 

அதாவது நான் ஒரு குழந்தையை பெற்றால் அது 50 பேரை கொலைசெய்யும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் ஆகினும் துண்ந்து நான் பெற்றுவிட்டு அது கொலைசெய்துவிட்டாதே என வாருத்தப்படுவது நியாயமான செயலா?

 

தெரிந்தால் அப்படியொரு காரியத்தை செய்துவிட்டு பின்னர் தேவான் வருத்தப்படுவாரா இதற்கு பதில் தாருங்கள்.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

அப்படியாயின் தாங்கள் கூறிய இந்த வசனத்துக்கு அர்த்தம் என்ன அண்ணா? 
 
 
 
உபாகமம் 31:20 நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திருப்தியாகிக் 
கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம்மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.

அதாவது மனிதனின் இருதயத்திலே அவன் நினைப்பவைகளை எல்லாம் தேவன் அறிகிறார். அத்தோடு அவன் கெட்டதை நினைத்தாலும் அறிகிறார் நல்லதை நினைத்தாலும் அறிகிறார் ஆனால் இறுதியில் அவன் எந்த தீர்மானத்தை எடுப்பான் என்பதை மாத்திரம் அவர் அறிவதில்லை.. இதுவா உங்கள் கருத்து? எனது புரிதல் சரியா?


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
தேவனின் திட்டம், சித்தம் மற்றும் மனிதனின் சுயாதீனம்!
Permalink  
 


ஆமாம் சிஸ்ட்டர். அப்படி முடிவெடுக்கும் அனுமதியை சில காரணங்களினிமித்தம் தேவனே மனுஷனுக்கு கொடுத்திருக்கிறார் ஒரு தனிப்பட்ட மனுஷன் என்ன செய்வான் என்பது அவன் செய்து முடித்தபின்னரே தேவன் அறிவார். ஆனால் அவன் இருதய எண்ண ஓட்டத்தின் அடிபீபடையில் இவன் இப்படி செய்யலாம் என்பதை தேவன் அறிய முடியும்.

மற்றபடி ஒரு மனுஷன் எப்படிதான் முடிவெடுத்தாலும் தேவன் தன் திட்டத்தை நிறைவேற்றுவது தடைபடாது.

உதாரணமாக 30 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக. என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன். என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் எனறு கர்த்தர் சொல்லுகிறார். 1 சாமுவேல் 2

அவர்கள் சரியாக நடப்பார்கள் என நினைதே தேவன் அவர்களுக்கு நிச்சயமாக சில ஆசீர்வாதம் சொல்கிறார் ஆனால் அவர்கள் தவறுசெய்தபோதோ மனம்மாறுகிறார். அவன் இப்படித்தான் நடப்பான் என முன்னமே தெரிந்திருந்தால் கர்த்தர் முதலில் ஆசீர்வதித்து பின்னர் திருத்துவாரா?



-- Edited by SUNDAR on Friday 5th of March 2021 12:13:41 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard