அப்படியாயின் தாங்கள் கூறிய இந்த வசனத்துக்கு அர்த்தம் என்ன அண்ணா?
உபாகமம் 31:20 நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திருப்தியாகிக்
கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம்மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.
உபாகமம் 31:20 நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திருப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம்மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.
நோவா காலத்து நிகழ்வுக்கு பிறகும் தேவன் ஒன்றை புரிந்து கொண்டார் இந்த மனுஷர்களுக்கு என்னதான் நன்மை செய்தாலும் அவர்கள் சீர்கேட்டுக்கு நேராகத்தான் போவார்கள் என்பதை அன்றே அவர் அறிந்துகொண்டார்.
மேலும் இந்த இஸ்ரவேல் ஜனங்களால் வனாந்திரத்தில் நடத்திவரும் போது எந்தனை நன்மைகள் செய்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் தேவனை கோபமூட்டிய சம்பவங்கள் அநேகம் உண்டு இதன் அடிப்படையிலேயே மனுஷன் இப்படித்தான் செய்வான் என்று தீர்மானித்து இவ்வசனங்களை கூறுகிறார்.
இங்கு முக்கியமான ஒரு விஷயம் என்னவெனில்,
இந்த உலகை குறித்து தேவன் ஒரு திடடம் வைத்துள்ளார் அது நிறைவேறும் பாதையிலேயே உலகம் போகும் ஆகையால் இது இப்படித்தான் நடக்கும் என்று தேவன் முன்னமே சொல்கிரார், ஆனால் அதில் யாரோ ஒரு தனி மனுஷன் தேவனுக்கு கீழ்ப்படிந்து நடந்து தேவன் எதிர்பார்ப்பதை நிறைவேற்ற மாடடானா என்பதே தேவனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதேபோல் தேவன் வழித்தப்பி போவார்கள் என்று சொன்ன இஸ்ரவேல் கூடத்திலும் தானியேல் / எசேக்கியேல் / எரேமியா போன்ற தேவனுக்கு முழுவதும் கீழ்ப்படிந்து நடந்த மனுஷர்கள் உண்டு அவர்கள் மூலம் தேவன் அநேக காரியங்களை செய்து முடித்திருக்கிறார்.
முக்கியமாக நான் சொல்ல வருவது என்னவெனில்
மனுஷ குமாரன் பாவங்களுக்காக மரிக்க வேண்டும் வேண்டும் ஒரு தேவ நியமணம்/திடடம் ஆனால் அது யாரால் நடக்கும் என்பது தேவன் நியமனம் அல்ல.
இங்கு இயேசு சொல்வதை ஆழமாக கவனிக்க வேண்டும்:
மத்தேயு 26:24மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.
மத்தேயு 18:7இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்குஐயோ!
இந்த இரண்டு வசனங்களும் தெளிவாக சொல்கிறது இப்படி நடக்க வேண்டும் என்பது அவசியம் ஆனால் எந்த ஒரு தனிப்படட மனுஷனால் அது நடக்கிறதோ அவனுக்கு ஐயோ.
அந்த தனிமனிதன் யார் என்பதை அவன் சிந்தனையில் எண்ணம் தோன்றியவுடன் ஆண்டவரால் அறியமுடியும் ஆகினும் அவன் சிந்தனையை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள அவகாசம் இருக்கிறது.. உதாரணமாக ஆண்டவர் "உங்களில் ஒருவன் என்னை காட்டிக்கொடுப்பான்" என்று சொல்லும்போதாவது யூதாஸ் உணர்த்து மனம்மாறியிருந்தால் இயேசு வேறு விதமாக பிடிக்கப்பட்டிருக்கலாம் "ஐயோ" என்ற பழியில் இருந்து யூதாஸ் தப்பியிருக்கலாம் .
அதாவது ஒரு தனிப்படட மனுஷனின் சுதந்திரமான செயல்பாட்டில் தேவன் தலையிடுவது இல்லை ஆகினும் அவன் இருதய நினைவுகளை வைத்து அவன் செய்யப்போகும் தவறை அறிந்து கடைசிவரை அவனை எச்சரிக்கிறார் அவன் எந்த நிலையிலும் தன்னை மாற்றிக்கொள்ள அவனுக்கு அவகாசம் கொடுக்கிறார் ஆனாலும் அவன் அதை அசடடை பண்ணி தன இருதய கடினத்தில் நடந்து அந்த செயலை செய்து முடிக்கும்போதுதான் தேவன் இவன் இப்படி செய்வான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லையே என்று எண்ணி மனஸ்தாபகபடுகிறார்.
அவன் தன சொல்லக்கேட்டு மாறுவானா அல்லது இருதய கடினத்தில் நடந்து தவறு செய்வானா என்பதை தேவன் அறிவதில்லை அவன் தானாக செயல்படும் சுதந்திரத்தை தேவனே அவனுக்கு கொடுத்திருக்கிறார் என்பதே நான் ஆண்டவர் மூலம் அறிந்த உண்மை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)