வலை தளங்களில் எழுத்து அனேக சகோதர/சகோதரிகளில் "தேவத்துவம்பற்றிய கொள்கை அடிப்படையில்" நம்மால் யாருடனும் இணைந்து செயல்பட முடியவில்லை என்பதை மிகுந்தவருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
வேதவசனங்களை அதிகமதிகமாய் அறிந்திருக்கும் அனேக கிறிஸ்த்தவர்கள் அதை எழுதிகொடுத்த தேவனை அறியும் அறிவு இல்லாமல் இருப்பதால், வீண் பெருமை, வஞ்சம், பொறாமை, பரியாசம் பண்ணுதல், பரிகசித்தல், சபித்தல், துன்மார்க்கனுக்கு துணைபோதல் போன்ற தேவன் விரும்பாத தேவனுக்கு விரோதமான காரியங்களை துணித்து செய்பவர்களாக இருக்கும் இவர்களிடம் போதிய "தெய்வபயம் இல்லை" என்பதை நம்மால் அறியமுடிகிறது! எனவே முடிந்த அளவு இவர்களை விட்டு விலகியிருக்கும் நோக்கத்துடனே தனியாகவே இந்த தளம் செயல்படும்!
(மரணமில்லா வாழ்வுக்கு வழிகாட்டும் வேதாகமம்!) என்று ஏழு வசன ஆதாரங்களுடன் நாம் எழுதும் வார்த்தையைகூட நம்புவதற்கு அநேகருக்கு மனதில்லை, பிறகு ஓரிரண்டு வசன ஆதாரம் கொடுத்தால் அதை எப்படி நம்பபோகிரார்கள்? அவரவருக்கு தேவனே வந்து உண்மையை உணர்த்தினால் மட்டுமே அவர்களால் அறிய முடியுமேயன்றி நாம் என்ன சொன்னாலும் இங்கு ஏறப்போவது இல்லை.
"எழுத்து கொல்லும்" என்ற வார்தையையும் தன்னகத்தே கொண்ட "கொல்லும் எழுத்தால் எழுதப்பட்ட" வார்த்தையை கையில் தூக்கி வைத்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் காரசாரமாக எதிர் கொண்டால் இவர்களுக்கு ஒருநாளும் உண்மை புரியப்போவது இல்லை. "ஆவி மட்டுமே உயிர்ப்பிக்கும்" என்ற வார்த்தையில் உள்ள உண்மையை சரியாக அறியாதவர்களில் யாரை குறை சொல்ல யாரை சரியென்று சொல்ல என்பதே நமக்கு புரியவில்லை!
வேத வார்த்தைகள் ஆவியும் ஜீவனுமாய் இருப்பதால் "ஒருவர் எழுதப்பட்ட எழுத்தாகிய வேதவார்த்தைகளை சுயமுயற்சியில படிக்கும்போது அது வேறுபட்ட பொருள் தரும் ஆனால் அதேவசனத்தை தேவ ஆவியால் நிறைந்து படிக்கும் போது அதன் தன்மை பொருள் எல்லாமே மாறுபடும். அத்தோடு நமது விசுவாச அளவு, மற்றும் நம்மிடம் தேவனின் எதிர்பார்ப்பு யாவற்றுக்கும் ஏற்ப அதன் தன்மை மாறிக்கொண்டே போகும். எனவேதான் "வேதத்தில் அதிசயத்தை இருக்கிறது" என்று தாவீது சொன்னான் என்பதை நாம் அறியவேண்டும். இல்லையெனில், நாம் நமது அறிவால் வசனத்தை ஆராய்ந்து கொண்டே இருக்கவேண்டியதுதான். நாம் ஆராய்ந்து அறிந்ததை இன்னொருவர் தவறு என்று சொல்லுவார் இன்னொருவர் ஆராய்ந்துஅறிந்தது நமக்கு தவறுபோல் தெரியும்.
மற்ற கிறிஸ்த்தவ சகோதரர்களின் நம்மால் ஒத்துபோகமுடியாத கொள்கைகள் சிலவற்றை இங்கு பதிவிடுவது நல்லது என்று கருதுகிறேன்.
1. ஆண்டவராகிய இயேசு "தேவனின் வார்த்தை"யாக இருப்பதால் அவரும் தேவன்தான் அல்லது அவருக்குள் தேவத்துவத்தின் அனைத்து தன்மைகளையும் காணமுடியும் என்பதை ஏற்க்காதவர்களுடன் நம்மால் ஒத்துபோக முடியவில்லை.
2. பிதாவாகிய தேவனை பற்றிய அனேக உண்மைகளை சரியாக எழுதினாலும், மிகாவேல் என்னும் பிரதான தூதர் நிலையில் இயேசுவை தாழ்த்தி, இயேசுவின் பலியின் மேன்மையை அறியாமல் விமர்சிக்கும் சில சகோதரர்களுடன் நம்மால் ஒத்துபோக முடியவில்லை.
3. வேதம் சொல்லும் பல்வேறு கருத்துக்களில் ஒருவருக்கொருவர் நேர் எதிர்நிலையில் செயல்படும் இவர்கள் "தேவ உழியர்களை குறை சொல்வது மற்றும் நடைபெறும் ஊழியங்களை குற்றம்சாட்டுவது போன்ற காரியங்களில் மட்டும் மிகுந்த ஒருமனப்பாட்டுடன் செயல்படுகின்றனர். அதை நம்மால் ஏற்க்க முடியவில்லை.
4. ஆண்டவராகிய இயேசுவைபற்றிய அனேக உண்மையை சரியாக அறிந்துக்ள்ள சகோதரர்கள், அவரை பிதாவாகிய தேவனுக்கு மேலாக உயர்த்ததி பிதாவாகிய தேவனை ஒருபொருட்டாகவே எண்ணாமல் ஆண்டவராகிய இயேசுவை மாத்திரம் ஆராதிக்க நினைப்போருடன் நம்மால் ஒத்துபோக முடியவில்லை.
5. இயேசுவும் தேவனும் நிச்சயம் "வேறு வேறு" அல்ல! பிதாவில் இயேசுவும், இயேசுவில் பிதாவும் இருக்கும்பட்சத்தில,அதை உறுதியாக விசுவாசிப்போர், இயேசுவின் நாமத்தை தொழுது கொள்வதை தவறு என்று சொல்வதையும் நம்மால் ஏற்க்கமுடியவில்லை. இயேசுவின் நாமத்தை தொழுது கொள்பவர்களுக்கு தான் பவுல் நிரூபங்களை எழுதியிருக்கிறார். (1கொரி 1:2)
6. அடுத்து "யோகோவா சாட்சிகள்" என்றொரு சற்று மாறுபட கொள்கையுடைய ஒரு கூட்டம் உலகில் செயல்படுவதால், அதை காரணமாக காட்டி:
ஏசாயா 46:9 ; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. என்று திரும்ப திரும்ப சொல்லியிருக்கும் யகோவா தேவனாகிய சர்வ வல்ல கர்த்தர், சிலரால் மிகவும் தரம்தாழ்த்தபடுகிறார். பரிசுத்த ஆவியானவர் யாரென்று சரியாக அறியாமல் இவ்வாறு பரிகசிப்போருடன் நம்மால் ஒத்துபோக முடியவில்லை.
ஒரேதேவனின் "ஒருநிலையை" பிடித்துகொண்டு இன்னொரு நிலையை தாழ்த்தும் "யகோவா சாட்சிகள்" தவறு செய்வதுபோலவே, அதே தேவனின் வேறொரு நிலையை பிடித்துகொண்டு முந்தய நிலையை தரம் தாழ்த்துகிறவர்களும் தவருகின்றனர். இரண்டுமே தேவனை விசனப்படுத்தும் காரியம்தான் என்பதை அறியவேண்டும்.
7. "இயேசுவை தெய்வமாக்கி கும்பிடுகிறோம்" என்று பெரிதாக பேசவிரும்பும் அநேகருக்கு, அதே இயேசு நமக்கு கட்டளையிட்டு சொல்லிய " நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.(யோ 14:15)"என்ற வார்த்தைக்கு சற்றும் செவிகொடுக்க மனதில்லாமல் சொன்னதை விட்டுவிட்டு சுரை பிடுங்கியதுபோல் செயல்படும் கூட்டத்த்தொடு நம்மால் ஒத்துபோக முடியவில்லை. "தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கும்" ஒருவரைகூட காண்பது மிக அரிதாகவே இருக்கிறது. அவ்வசனத்தின் பொருள் புரியவில்லையா? அல்லது புரிந்தும் அதை ஏற்க்க மனதில்லையா புரியவில்லை.
8 நான் பல கிறிஸ்த்தவ தளங்களில் எழுதப்பட்டவைகளை படித்து அராய்ந்து பார்த்ததில் ஓன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. அதாவது "தேவன் இனிமேல் எங்கும் நேரடியாக செயல்படவே மாட்டாராம் (இஸ்லாமியரும் அதைதான் சொல்கின்றனர்) அவர் செய்ய வேண்டியதை எல்லாம் செய்தும் எழுதியும் கொடுத்து விட்டாராம்" இப்படி உறுதியாக நம்பும் பலரின் எழுத்துக்களை பார்க்கமுடிகிறது. இதையும் நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை!
தேவன் நேரடியாக பேசி செயல்பட்டதை அனுபவத்தில் அறிந்த உயிருள்ள சாட்சி நான் இருக்கிறேன். நான் பணத்திற்காகவோ புகழுக்காகவோ அல்லது பிழைப்புக்காகவோ கூட இங்கு எழுதவில்லைஅவ்வாறிருக்க, தேவன் மிக தெளிவாக
எரேமியா 33:3என்னைநோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்" என்று சொல்லியிருக்க, "தேவன் இனி எதுவுமே பேசமாட்டார்" என்பது போன்ற உண்மைக்கு புறம்பான வார்த்தைகளை உபயோகித்து, அதையே விசுவாசித்து, சர்வவல்ல தேவனின் கரத்தை கட்டிபோட்டு மட்டப்படுத்து கிரவர்களுடன் ஒத்துபோக முடியவில்லை. அதாவது இந்நாட்களில் தேவன் இங்கு நேரடியாக வந்து "நான்தான் தேவன்" என்று சொன்னாலும் இங்கு யாரும் நம்பபோவது இல்லை. (அப்படி எதுவும் வசனம் இல்லையே என்பார்கள். அதாவது இயேசு வாழ்ந்தகாலத்தில் இயேசுவை கேள்விகள் கேட்டு தங்களை பெரியவர்களாக காண்பித்த அதே பரிசேயர்களின் நிலைமை அப்படியே இன்று இருப்பதை காணமுடிகிறது.)
வேதத்தில் எழுதப்பட்ட ஒரு வசனத்தின் அடிப்படையிலேயே நாம் யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய காரியத்தை தேவனால் செய்துவிட முடியும் என்ற எளிய உண்மையைகூட அநேகரால் புரிய முடியவில்லை அல்லது ஏற்க்க மனதில்லை. காரணம் இவர்கள் அறிந்ததற்கு மீறி தேவனால் எதுவும் செய்யமுடியாது என்ற மமதையே!
இவர்கள் தேவனை அறிந்தால்தானே தேவத்துவத்தின் உண்மையை அறிய முடியும்! தேவனை அறிவதற்கு தேவையான "உண்மை, அன்பு, இரக்கம், தாழ்மை, விட்டுகொடுத்தல் போன்ற எந்த பண்பும் இல்லாதவர்களுக்கு தேவன் தன்னை வெளிப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லையே! மேலும் இவர்களுக்குத்தான் "தேவன் இன்றும் தன்னை ஒருவருக்கு முழுமையாக வெளிப்படுத்த முடியும்" என்ற விசுவாசம்கூட இல்லையே! ஞானிகளை அவர்கள் ஞானத்தின் வழியிலேயே விட்டு மடக்குவதுதானே தேவனின் தனிதன்மை.
மொத்தத்தில் தேவத்துவத்தின் உண்மையையும் அவரின் வல்லமையையும் சரியாக அறியாத இவர்களிடம் இணைந்து நம்மால் செயல்படவே முடியாது அத்தோடு உண்மையை அறிய வேண்டும் என்ற நோக்கில் அழுது மன்றாடி தேவனிடமிருந்தே நேரடியாக உண்மையை அறிந்த என்னையும் அப்பப்போ ஆசைவரும் போதேல்லாம் வசைமாரி பொழிவதோடு "பதிவை நீக்கு" என்று அறிவுறுத்துகின்றனர். இனி அதுபோன்ற சாத்தானின் மிரட்டல்களிமித்தம் சோர்ந்துபோகாமல் தேவன் நமக்கு கட்டளையிட்டதை செய்வோம். ஆண்டவர்தாமே அவரது சித்தபடி நம்மை வழிநடத்துவாராக நாம் எல்லோருடனும் சமாதானமாக இருபதையே விரும்பினாலும், கொள்கை விஷயத்தில் எவருடனும் கூட்டு இல்லாமல் இந்த தளம் தனித்தே செயல்படும் என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறோம்.
-- Edited by SUNDAR on Friday 25th of February 2011 09:33:55 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இன்னும்ஒரு முக்கியமான கருத்துகூட இங்கு விடுபட்டிருக்கிறது என்று கருதுகிறேன்.
அதாவது "மனுஷர்களை சோதிப்பதற்காக இறைவன் வேண்டுமென்ற சாத்தானை தனது பினாமிபோல உருவாக்கி, உலகில் எல்லா தீமைகளையும் செய்ய அனுமதித்தார்" என்பது போன்ற ஒரு கருத்து அநேகரிடையே நிலவுகிறது. இந்த கருத்தையும நாங்கள் ஏற்க்கவில்லை.
நமது இறைவனை பற்றி வேதம் சொல்லும்போது:
சங்கீதம் 145:8கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். சங்கீதம் 103:8கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்
அதாவது இறைவன் "மிகுந்த இரக்கம் மற்றும் மனதுருக்கம் நிறைந்தவர்". லாசரு மரித்தபோது கண்ணீர்விட்டு அழுதவர் நம் இயேசு. அவ்வாறு இருக்கையில் இன்று உலகில் நடக்கும் கொடுமைகள் குண்டுவெடிப்புகள் கைகாலற்ற நிலை, கண்பார்வையற்ற நிலை இவற்றுடன் அவதிப்ப்படும்படி ஜனங்களை தானே வேண்டுமென்றே அனுமதித்தார் என்ற கருத்தையும் நம்மால் ஏற்க்க முடியவில்லை.
இறைவன் சர்வவல்லவர்! ஆனால் சாத்தான் யோபுவை சோதிக்க சொன்னபோது, ஒரு நிர்பந்ததின் அடிப்படையில் கர்த்தர் அவனுக்கு துன்பங்களை அனுமதித்தார். அதேபோல் இன்று உலகில் நடக்கும் எல்லா துன்பங்கள் துயரங்களையும் இறைவனின் விருப்பத்தின் பேரில் செய்யப்படாமல் எதோ நிர்பந்தத்தின் அடிப்படயிலேயே செய்யப்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும் இறைவன் நியாயக்கேடில்லாத மிகுந்த நீதியுள்ளவர்:
உபாகமம் 32:4கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர்நீதியும் செம்மையுமானவர்.
இவ்வளவு விளக்கமாக இறைவனின் நீதி தன்மைபற்றி வேதம் சொல்லும்போது, "பொய்யனும் பொய்க்கு பிதாவாகிய" சாத்தான் என்னும் ஒருவனை தனது திட்டங்களை நிறைவேற்றும் பினாமியாக இறைவன் நிச்சயம் வைத்திருக்க மாட்டார் என்றே நம்புகிறோம்.