இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாத்தானின் திட்டங்களை தனக்கு சாதகமாக்கிகொள்ளும் தேவன்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
சாத்தானின் திட்டங்களை தனக்கு சாதகமாக்கிகொள்ளும் தேவன்!
Permalink  
 


மும்பை  பட்டணத்தில் எந்த கொள்கையும் இல்லாமல் கடவுள் யாரையும்  நம்பாமல் கை நிறைய சமாதித்து மனதுக்கு பிடித்த இன்பங்களை எல்லாம் அனுபவித்து கவலையற்று   வாழ்ந்திருந்த என்னை, மாந்த்ரீக வசியமருந்து என்னும்  வஞ்சக வலையால் சாத்தான்  வீழ்த்த திட்டமிட்டான்.  அவ்வாறு சாத்தான் என்னை வீழ்த்த திட்டமிட்டு, எனக்கு அந்த மருந்தை ஒரு பெண் மூலம் கொடுக்க வில்லை என்றால் நான் ஒருவேளை தேவனை அறியாமல் போயிருக்கலாம். இன்னும் அதே அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்து அழிவை நோக்கி போய்க் கொண்டு இருந்திருக்கலாம். எனவே நான் தேவனை அறிந்து கொண்டதர்க்கும் அல்லது அவரது மகத்துவத்தை அதிகமாய் புரிந்து கொண்டதற்கு சாத்தான்தான் முக்கிய காரணம் என்று எண்ணி அவனுக்கு நன்றி சொல்லலாமா?
 
இந்த கேள்வி எனக்குள் நேற்று எழுந்தது. இது சம்பந்தமாக வேத சம்பவங்கள் அடிப்படையில் நான் ஆராய்ந்த பொது.
 
சாத்தானின் கையாளாக செயல்பட்டு  இயேசுவின் நாமத்தை வணங்கும் ஜனங்களை கொல்லவும் அழிக்கவும் துணிந்து, தமஸ்க்குவுக்கு போன சவுலை  இயேசு இடையில் தடுத்து அவனை பவுலாக்கி தன்னுடைய சுவிசேஷம் சொல்லப்படுவதற்கு பயன்படுத்திகொண்டார் என்பது நாம் அறிந்தது. இங்கு சாத்தான் பவுலை கிறிஸ்த்தவர்களை கொல்லும்படி தூண்டவில்லை என்றால் ஒருவேளை பவுல் கிறிஸ்த்துவை அறியாமலே போயிருக்கலாம் அல்லவா?  தொடர்ச்சியாக அவன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட எத்தனையோ சபைகள் உருவாகாமல் இருந்திருக்கலாம் நாம்கூட ஆண்டவரிபற்றி அதிகமாக அறியும் அளவுக்கு வேத புத்தகம் நமக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம்  எனவே அவனை கிறிஸ்த்தவர்களை கொல்லும்படி பவுலை வழிநடத்திய சாத்தானுக்கு நன்றி சொல்வது தகுமா?
 
இந்த கேள்வியை சற்று ஆழமாக ஆராய்ந்ததில்  நான் அறிந்துகொண்ட உண்மை என்னவெனில்:
 
சாத்தான் எனக்கு வசியமருந்து கொடுக்க வைத்ததால் நான் தேவனை அறிந்து கொள்ளவில்லை. மாறாக சாத்தான் செய்யும் காரியங்களை எல்லாம் தேவன் தலைகீழாக மாற்றிவிட்டதாலேயே நான் தேவனை அறிந்துகொண்டேன். விளக்கமாக சொன்னால் சாத்தான் ஒரு திட்டத்தை போட்டு அதன் மூலம்  தன்னை தானே கெடுத்துகொள்கிறான்  என்பதுவே எனது தீர்மானம்.
 
உதாரணமாக:

ஆண்டவராகிய இயேசு பூமிக்கு வந்தபோது, "அவர்தான் தேவ குமாரன் அவர்தான் சர்வத்திற்கும்  சுதந்திரவாளி என்று அறிந்துகொண்ட சாத்தான், இவரை கொன்று விட்டால் எல்லாமே முடிந்துவிடும்.
இந்த உலகத்தில் நாமே என்றென்ற்றக்கும தேவனாக நிலைத்திருக்கலாம்" என்று திட்டமிட் டு அனேக ஜனங்களை அவருக்கு விரோதமாக எழுப்பி, இயேசுவை தோட்டத்துக்கு புறம்பே தள்ளி கொலைசெய்ய தூண்டினான். ஆனால் அவனின் இத்த திட்டமே அவனுக்கு விரோதமாக திரும்பி, அவனுக்கு சாவுமணியாகவும் தேவனின் மீட்பின் திட்டத்துக்கு அடிப்படையாகவும் ஆகிப்போனது.  இப்பொழுது தனக்கு கொஞ்ச காலமே உண்டென்று அறிந்து வேறு திட்டத்தை போட்டு எல்லோரையும் குழப்பி வருகிறான்.
 
இவ்வாறு  அவன் தனக்கு நன்மையுண்டாகும் என்று கருதி செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் தேவன் அவனுக்கு எதிராகவே மாற்றி, அதன் மூலமே தனது திட்டத்தி நிறைவேற்றிக்கொள்கிறார் என்பதுவே எனது கருத்து!
 
இங்கு சாத்தானின் திட்டம் மற்றும்  நோக்கம் எப்பொழுதுமே யாருக்கும் நன்மையை தருவது அல்ல "கொல்வதும் அழிப்பதுவுமே அவனது வேலை" எனவே அவனது திட்டங்களால் யாருக்கும் எந்த நன்மையும் எக்காலத்திலும் ஏற்படவே  ஏற்ப்படாது. தேவனின் திட்டத்தில் சாத்தனின் திட்டமும்  அடங்கும் என்றுஎண்ணி
சாத்தானுக்கு கீழ்படிந்தால் அவன் நம்மை சாவுக்கு நேராகவே வழி நடத்துவான்.    
 
எனவே நமக்கு வோரோதமாக உருவாகும் எல்லா உபாயங்களையும் வாய்க்காதே போகபண்ணி  அவைகளை எல்லாம் நமக்கு சாதகமாகவும் சாத்தானுக்கு எதிராகவும் திருப்பி நம்மை என்றென்றைக்கும்  தற்காக்கும் மஹா தேவன் ஒருவருக்கே சதாகாலமும்  நன்றியும் கனமும் மகிமையும் செலுத்துவோமாக!


-- Edited by SUNDAR on Monday 28th of February 2011 10:01:27 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard