இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குயவனே குயவனே


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
குயவனே குயவனே
Permalink  
 


நான்  படித்து ரசித்த பயனுள்ள ஒரு கட்டுரை: எழுதியவர்  Johnson kennedy

இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.- (எரேமியா. 18:6)

ஒரு கணவனும் மனைவியும் ஒரு அழகான கலைபொருட்கள் விற்கும் கடைக்குச் சென்றார்கள். அங்கு ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டு வரும்போது காப்பி குடிக்கும் கிண்ணங்கள்; அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு கிண்ணம் மிகவும் இவர்களை கவர்ந்தது. அதை வாங்கும் நோக்கத்துடன் அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது அந்தக் கிண்ணம் அவர்களோடு பேச ஆரம்பித்தது.“இப்போது நீங்கள் பார்க்கிற நான் ஆரம்பத்தில் இதுப்போல இல்லை. நான் வெறும் சிவப்பான களிமண்ணாகத்தான் இருந்தேன். என்னை உருவாக்கின குயவனார் என்னை உருட்டி திரும்ப திரும்ப அடித்து என்னை மெதுவாக்கினார். நான் அவரிடம் ‘போதும் என்னை விட்டு விடுங்கள், என்று கெஞ்சினேன். அவர் இன்னும் முடியவில்லை என்றார். பிறகு என்னை திரிகையிலே போட்டு சுற்ற ஆரம்பித்தார். எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. நான் என்னை விட்டுவிடும் என்று கதறினேன். ஆனால் அவரோ இன்னும் முடியவில்லை என்றார். பின் தனக்கு பிடித்தமான ஒரு பாத்திரமாக என்னை உருவாக்கி, என்னை நெருப்பில் இட்டார். எனக்கு தாங்க முடியாத உஷ்ணம், என்னை வெளியே எடுத்துப் போடும் என்று கதறினேன். அவரோ இன்னும் முடியவில்லை என்றார். பின்னர் என்னை எடுத்து குளிர்ச்சியாக்கும்படி வெளியே வைத்தார். அப்பா! என்ன ஒரு விடுதலை! நான் குளிர்ந்து கொண்டிருக்கும்போதே என்மேல் படங்களை வரைய ஆரம்பித்தார்.

பின் நான் மூச்சு விடுவதற்குள் திரும்பவும் என்னை நெருப்பில் இட்டு காய வைத்தார். அது முன் இருந்ததுப் போல அல்ல, இரண்டு மடங்கு சூடு அதிகம். நான் அவரிடம் கெஞ்சினேன், கதறினேன், அழுதேன் இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது என்று நான் என் நம்பிக்கையை இழக்கும் நேரத்தில், அவர் என்னை வெளியே கொண்டு வந்து ஆற வைத்தார். இன்னும் என்னச்செய்யப் போகிறாரோ என்று மிகவும் அஞ்சியிருந்த நேரத்தில், என்னிடம் ஒரு கண்ணாடியைக் கொண்டு வந்து காட்டி, ‘பார் உன்னைப் பார்’ என்றார். நான் பார்த்தபோது, என்னால் நம்பவே முடியவில்லை நானா அது என்று. அத்தனை அழகாய் மாறிவிட்டேன். பிறகு என்னிடம் பேச ஆரம்பித்தார்: ‘நான் உன்னை தட்டி உருட்ட ஆரம்பித்தபோது உனக்கு வேதனையாய் இருந்திருக்கும் ஆனால் நான் உன்னை அப்படியே விட்டிருந்தால் நீ காய்ந்துப் போயிருப்பாய். உன்னை திருகியில் வைத்து சுற்றும்போது உனக்கு தலை சுற்றியிருக்கும் ஆனால் நான் அதை செய்யாதிருந்தால் நீ உதிர்ந்திருப்பாய். உன்னை நெருப்பில் சுட்டு காய வைக்காதிருந்திருந்தால் நீ காய்ந்து கடினமாகாதிருந்திருப்பாய். இத்தனைக்கும் பிறகு நீ இப்போது நான் விரும்பும் பாத்திரமாக வனைந்து உருவாக்கப் படடிருக்கிறாய்’ என்றுக் கூறினார் என்றது”.

நம்மில் அநேகர் இந்த உலகத்தின் பாடுகளை அனுபவித்து போதும் ஆண்டவரே என்று கதறிக் கொண்டிருக்கிறோமா? உங்களை இந்த உபத்திரவத்தின் குகையில் தெரிந்துக் கொள்ளவும், உங்களை தனக்கு பிரயோஜனமான பாத்திரமாக உருவாக்கவுமே கர்த்தர் இதை அனுமதித்திருக்கிறார். அவர் உருவாக்கி முடித்த பின்பு அனைவரும் வியக்கும்வகையில் அற்புத பாத்திரமாக தேவனால் விரும்பி பயன்படுத்தும் பாத்திரமாக திகழ்வோம். ஆமென் அல்லேலூயா!

குயவனே குயவனே படைப்பின் காரணனேகளிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே

ஜெபம்:
எங்கள் அன்பின் பரம பிதாவே, குயவனுடைய கரத்தில் உள்ள களிமண்ணாக எங்களை படைக்கிறோம் சுவாமி. எடுத்து உமக்கு உகந்த பாத்திரங்களாக மாற்றும் ஐயா. எத்தனை இடர்கள் வந்தாலும் எஜமானுக்கு பிரயோஜனமாகும் பாத்திரங்களாக எடுத்து பயன்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்  எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.   


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard