கிறிஸ்த்தவத்தில் இருப்பவர்கள் அநேகர் இயேசுவையே தேவனாக பாவித்து அவரையே ஆராதித்து வருகிறதை நாம் அறிவோம். ஆனால் அது ஒரு சரியான நிலைதானா? நாம் யாரை தேவனாக தொழுது கொள்ளவேண்டும் என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளதால் நானும் எனது பங்குக்குக்கு நாமறிந்த உண்மைகளை இங்கு அறிவிப்பது நல்லது என்று கருதுகிறேன்.
இங்கு நாம் நாமறிந்த உண்மையை எடுத்து சொல்லாவிட்டால சுவரில் உள்ள கல்லோ அல்லது கழுதையோகூட இந்த உண்மையை சொல்லகூடும்!
"நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்று இயேசு சொல்வதால் இயேசுவை ஆராதிப்பவர்கள் பிதாவும் இயேசுவும் ஒருவருக்குள் ஒருவர்தான் என்ற நோக்கில், இயேசுவுக்குள் ஆவியாயிருக்கும் பிதாவைகண்டு விசுவாசித்து ஆராதிக்க வேண்டும். அது ஒரு சரியான முறை
அல்லது
அனேகரது கூற்றுபோல் "தேவன் மூன்று தனிப்பட்ட ஆள்தத்துவம் உள்ளவர்" என்று கருதினால் "ஆவியோடும் உண்மையோடும் இயேசுவின் வழியாக தேவனையே தொழவேண்டும்" அதுதான் தேவனை ஆராதிக்கும் சரியான வழிமுறை என்றே நான் கருதுகிறேன்.
ஓரு சிறு உதாரணத்தை சொல்கிறேன்:
ஒரு கப்பல் கடலில் மூழ்க போகிறது அதில் இருக்கும் அநேகர் உயிர் பிழைக்க தங்கள் நாட்டின் பிரதமரிடம் அபயமிடுகின்ற்றனர். அல்லது அந்த கப்பல் மூழ்க போவதை அறிந்த பிரதமர் அதன் கப்பலில் உள்ளவர்களை மீட்கும் சித்தம் கொண்டு, அவர்களை காப்பாற்ற தனது மகனை அனுப்புகிறார். தகப்பனின் சித்தம் செய்யவந்த அவரது மகனும் தன் ஜீவனை கொடுத்து ஆபத்தில் மாட்டியவர்களை ரட்சிக்கிறார்.
இதை இரண்டு கான்செப்ட் அடிப்படையில் ஆராயலாம்:
1. ஆண்டவராகிய இயேசு தேவனின் வார்த்தையால் ஜெனிப்பக்கபட்ட தேவ குமாரன்!
சாவின் விளிம்பில் இருந்தபோது, பிரதமரின் குமாரனாக வந்து அவர்கள காப்பாற்றியவரின்மேல் மிகுந்த பாசம் கொண்ட மீட்கப்பட்டவர்கள். அவருக்கே அதிகமாய் நன்றி செலுத்தி அவரையே பெரியதாகவும் பெரியவராக நோக்குகின்றனர். ஆனால் அவரோ இவர்கள் செலுத்திய நன்றியை நிராகரிக்கவும் இல்லை அதே நேரத்தில் "என்னை அனுப்பிய எனது அப்பாவாகிய பிரதமர் அவர் என்னைவிட பெரியவர் அவர் சொன்னதைத்தான் நான் செய்தேன் நீங்கள் உங்கள் நன்றியை அவருக்கு செலுத்துங்கள்" என்று சொல்லி சென்றுவிட்டார்.
அதுபோல் அழிவுக்கு நேராக இருக்கும் இந்த உலகத்தில் இருந்து, நம்மை காப்பாற்ற வந்த தேவனின் குமாரன் இயேசு நமக்காக ஜீவனையே கொடுத்ததால், அழிவில் இருந்து மீண்டவர்கள் அவர் மேல் மிகுந்த அன்புகொண்டு தன்னை காப்பாற்றிய இயேசுவை தேவனாககருதி அவர்மேல் மிகுந்த அன்பு செலுத்தவும் தொழவும் சேவிக்கவும் விரும்புகின்றனர். ஆனால் இயேசுவோ "நான் உங்களை ஜீவனை கொடுத்து காப்பாற்றியதால் நீங்கள் என்னைத்தான் தொழவேண்டும்" என்று எங்கும் சொல்லாமல் "பிதாவை தொழ வேண்டும்" என்றே அவர்களிடம் சொல்லுகிறார். ஏனெனில் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பிதாவின் கட்டளை இல்லை என்றால் இவர் இங்கு வந்திருக்கவேமாட்டார். அவர் இயேசுவை அனுப்பி என்ன செய்யவேண்டும் என்று சொன்னாரோ, அதை மட்டுமே இயேசு நிறைவேற்றினார். எனவே இயேசுவுக்கு நன்றாக தெரிந்தது "பிதாதான் எல்லோரிலும் பெரியவர்" எனவே அவரை தொழுவதுதான் சிறந்தது என்று சொல்லிசென்றார்.
2. இயேசுவே " பிதாவாகிய தேவன்" என்ற கருத்தின் அடிப்படையில் நோக்கினால்:
ஒருவேளை அழிவில் இருந்தவர்களை மீட்க, "மகன்" என்ற வேறொரு பெயரில் பிரதமரே வந்தார் என்று வைத்துகொள்வோம் அதாவது அவரது செயல்கள் மூலமோ, அல்லது அவரது தன்மைகள் மற்றும் வார்த்தைகள் மூலமோ, வந்தவர்தான் பிரதமர்தான் ஆனால் வேறுஒருரூபத்தில் காப்பாற்ற வந்திருக்கிறார் என்று எல்லோரும் அறிந்துகொண்டு, அவருக்கு நன்றி சொல்லி அவர்தான் பிரதமர் என்றுசொல்லி அவரை உயரத்த விரும்புகின்றனர். அது உண்மையாகவே இருந்தாலும். இங்கு சாதாரண மனிதனாக காப்பாற்ற வந்த பிரதமரே சொல்கிறார் "நீங்கள் பதவியில் இருக்கும் பிரதமருக்கு நன்றி செலுத்துங்கள்" என்று.
அதாவது அநேகர் கருதுவதுபோல் "இயேசுவே பிதாவாக இருந்தாலும்" அல்லது அந்த "பிதாவே இயேசுவாக பூமிக்கு மாம்ச ரூபத்தில்" வந்திருந்தாலும் கூட, அவர் தன்னுடைய எந்த நிலையை தொழ சொல்கிறாரோ அந்த நிலையை தொழுவது தானே சரியான செயல் அவ்வாறு செய்யாமல் "நீர்தான் பிதா என்று நாங்கள் அறிந்து கொண்டோம் அதனால் உம்மைதான் நாங்கள் தொழுவோம்" என்றுசொல்லி பிடிவாதம் பிடிப்பதும் தேவனின் சித்தத்துக்கு விரோதமாக செயலப்டும் செயல்தான் என்றே நான் கருதுகிறேன்.
அதாவது பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசு, பரிசுத்தஆவியானவர மூவரும் ஒரேதேவனின் வெவேறு ஆள்த்துவங்களாக இருந்தாலும், தேவன் தன்னில் உள்ள ஆள்த்துவங்களில் யாரை தொழுதுகொள்ள வேண்டும் என்று நமக்கு கட்டளையிட்டுள்ளாரோ அவரை தொழுவது கொள்வதுதானே சிறந்ததும் ஏற்ப்புடயதுமாக இருக்கும்?
"சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவன்" ஒருபுறம். அவர் எதிரே பாவங்களுக்காக மரித்து ஜெயம்கொண்ட "தேவாட்டுகுட்டி இயேசு", இவரும் அவரும் ஓன்று" "இவர்தான் அவர் அவர்தான் இவர்" ஆனால் நிலைதான் வேறு என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் வேதம் யாரை தொழுதுகொள் என்று கைகாட்டுகிறது?
வெளி 19:10 தேவனைத் தொழுதுகொள்
வெளி 22:9தேவனைத் தொழுதுகொள் என்றான்
I நாளாகமம் 16:29கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
மத்தேயு 4:10உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக
இவ்வாறு "தேவனை தொழுதுகொள்" என்று திடமாக கட்டளையிடும் நேரடி வசனங்கள் வேதத்தில் இருக்க, அதை அப்படியே ஏற்க்க மனதில்லாமல், "இவர் "அவர் காலில் விழுந்தார்"அவர் "ஆண்டவர் என்று சொன்னார்" அதனால் "இயேசுவைத்தான் தொழ வேண்டும் என்று சொல்லி வியாக்கீனம் செய்வது சரியா?
இயேசுவின்மேல் மிகுந்த அன்புகொண்டு "என் அன்பு தெய்வம்" என்று சொல்பவர்கள் என்ன செய்யவேண்டும் என்று இயேசு சொல்கிறார்? ஒருவன் என்மேல் மிகுந்த அன்பாயிருந்தால் என்னை தேவனாக்கி கும்பிடுங்கள் என்றா சொல்கிறார்?
இல்லையே:
யோவான் 14:15நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். யோவான் 14:23ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்
அதாவது இயேசு மிக தெளிவாக சொல்கிறார் நீ ஜெபம்பண்ண வேண்டுமா?
மத்தேயு 6:9 பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்று ஜெபம் பண்ணு
தொழுதுகொள்ள வேண்டுமா?
யோவான் 4:24தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
இல்லை நான் உன்னை பாவ படுகுழியில் இருந்து மீட்டதால் என்மேல் உனக்கு மிகுந்த அன்பு உண்டாகியிருக்கிறதா? என் அன்பு தெய்வம் என்று கருதுகிறாயா? நான் தெய்வம்தான் மறுப்பதற்கு இல்லை! ஆனால் நீ செய்யவேண்டியது என்னை தொழுவது அல்ல! "என்மேலுள்ள உன் அன்பைகாட்ட என் கற்பனையை கைக்கொள்"
யோவான் 14:23ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்
இதுவே இயேசு சொல்வது!
ஆனால் நாமோ, அவர் வார்த்தையை கைகொள்வதற்கு மிகவும் வருத்தப்படுகிறோம். அதை நிராகரிப்பதற்கு ஆயிரம் சாக்கு சொல்லுவோம். அதை கைகொள்ளாமல் தவிர்ப்பதற்கு எங்காவது வேறு வசனஅதாரம் இருக்கிறதா என்று மூலை முடுக்கெல்லாம் தேடுவோம். ஆனால் அவர் சொல்லாத காரியமாகிய "அவரை தொழுவதற்கோ" அதிகஅதிகமாக ஆர்வம் காட்டுகிறோம். ஏனெனில் கட்டளையை கைக்கொள்ளுவது என்பது மிகமிக கடினம் ஆனால் அவரை சாமியாக்கி தொழுவது என்பது மிக மிக சுலபம்.
(புறம்த ஜனங்கள் கூட ஒரு சாமிமீது மிகுந்த அன்பு வந்துவிட்டால் அங்கு கிடக்கும் நாலு செங்கல்லை தூக்கிவைத்து சந்தனம் குங்குமம் பூசி, பய பக்தியோடு கும்பிடுகின்றனர். ஆனால் சண்டை வந்து விட்டாலோ அந்த சாமிக்கு எதிரேயே இன்று காதால் கேட்ககூட முடியாத வார்த்தைகளை எல்லாம் பேசுகிறார்களே)
அதற்காக இயேசுவை வணங்குகிறவர்களை எல்லாம் தேவன கைவிடுவார் என்று நான் சொல்லவரவில்லை! நான் யாரையும் நியாயம் தீர்க்க விரும்பவில்லை! இவர்கள் உண்மை நிலை என்னவென்பதை ஆண்டவர்தாமேதீர்மானிக்க வேண்டும்!
இயேசுவே தேவனாக இருந்தும் அவர் அவ்வாறு "தேவனை தொழுதுகொள்" என்று கைகாட்டவும் ஒரு காரணம் இருக்கிறது. ஒருவர் மனிதனாக உலகத்தில் வந்துவிட்டால் அவருக்கென்று ஒரு உருவம் வந்துவிடுகிறது. ஆனால் தேவனோ ஆவியாயிருக்கிறார். எந்நிலையிலும் "ஒரு உருவம் நமது மனதில் சிறிதேனும் தொழபட கூடாது" என்பதில் தேவனும் இயேசுவும் மிகுந்த கவனமாக இருக்கின்றனர். அதற்க்கு "மந்திரங்கள்" சம்பந்தமான பல முக்கிய காரணங்கள் உண்டு. அடைபட்டுபோன இருதயத்துக்கும் கண்களுக்கும் அது தெரியாததால், நாம் தேவையற்ற இடும்பு பிடிக்கிறோம்
பரிசுத்தஆவியின் நிறைவோடும் உண்மையோடும், துதிக்கும் கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரராகிய இயேசு வழியாகசின்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனை தொழுவதே சிறந்தது! என்று தொழுதுகோள்கிறேன்.
அதே நேரத்தில் எனக்காக ஜீவனை தந்து என்னை பாவ படுகுழியில் இருந்து தூக்கி எடுத்த இயேசுவை எனது உயிராக நேசிக்கிறேன் அவருக்கு கனத்தையும் மகிமையையும் செலுத்துவதோடு அவரது வார்த்தையை கைக்கொண்டு நடப்பதற்கு மிகுந்த சிரமம் எடுத்து செயல்படுகிறேன்
இவர்களில் ஒருவரை தாழ்த்தி இன்னொருவரை உயர்த்த நினைத்தாலும் அல்லது ஒன்றை குறைத்து ஒன்றி கூட்டினாலும் அவர்கள் சரியான உண்மையை அறியவில்லை! என்றே நான் கருதுகிறேன்! இடும்பு பிடிக்கும் மனுஷர்களிடம் விவாதித்து எந்த பயனுமில்லை.