"பரமபதம்" எனப்படும் "பாம்புகட்ட விளையாட்டை பற்றி அனைவரும் அறிந்திருப்போம்! அந்த விளையாட்டை சிலர் நேற்று ஆடிக்கொண்டு இருக்க அதை பார்த்துகொண்டிருந்த எனது மனதில் தோன்றிய கருத்துக்களை இங்கு பதிவிடுகிறேன்.
ஒருவர் "தாயம்" போட்டு அந்த விளையாட்டுக்குள் நுழைவதை, ஒருவர் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்த்தவத்தில் ஆவிக்குரிய வாழ்வில் அடியெடுத்து வைப்பதற்கு ஒப்பாக எடுத்து கொள்ளலாம். இவ்வாறு அடியெடுத்து வைத்த ஒருவர் அதன்பின்னர் தனது கிடியைகளின் அடிப்படையில் ஆவிக்குரிய வாழ்வின் ஒவ்வொரு படியாக முன்னேறிக் கொண்டே போகிறார்.
ஆவிக்குரிய வாழ்வில் தேவனுக்கேற்ற கிரியையும் மிகமிக முக்கியம் என்பதை வெளிப்படுத்தின விஷேஷத்தில் ஒவ்வொரு சபைக்கும் ஆண்டவர் உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்" (வெளி 3:1) என்று சொல்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்
இவ்வாறு கிரியின் அடிப்படையில் முன்னேறி போகும் வழியில், ஒவ்வொரு கட்டத்திலும் "ஆண்டவரின் வார்த்தைகள்" அடிப்படையில் சோதனைகள் அவரை புடமிடுகின்றன. சோதனை இல்லாத மனிதனே இந்த உலகில் கிடையாது. அவரவர் அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போல் இச்சையால் இழுப்புண்டு தேவனின் வார்த்தைகள் அடிப்படையில் சோதிக்கப்படுகின்றனர்.
யாக்கோபு 1:14அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
ஆண்டவராகியே இயேசுவே பிசாசினால் சோதிக்கபட்டார். அத்தோடு பரிசெயரும் கூட அவரை சோதிக்கும்படி அனேகதரம் கேள்விகளை கேட்டார்கள். எனவே சோதனை என்பது ஒரு மனிதனுக்கு நிச்சயம் வரவே வரும்! ஆவ்வாறு சோதனைகள் வரும்போது அதில் தேவனுடைய பட்சத்தில் அவர் வார்த்தையில் உறுதியாக நின்று சோதனையை ஜெயித்தால் அவர் ஆவிக்குரிய ஏணியில் ஏற்றப்பட்டு சற்று உயர்ந்த நிலைக்கு கொண்டு போகப்படுகிறார்.(யோபுவைபோல)
ஒருவேளை ஒருவர் எதிர்கொள்ளும் சோதனையில் நிலைநிற்க முடியாமல் தடுமாறி வீழ்ந்துபோனால் சாத்தான் என்னும் பாம்பால் கடிக்கப்பட்டு ஆவிக்குரிய நிலையில் தரம் தாழ்த்தாழ்த்தப்படுகிறார். (பாவம்செய்து தவித்த தாவீதைபோல)
ஆகினும் என்னதான் ஒருவர் பாம்பால் கடிக்கப்பட்டு கீழே இரங்கி வந்தாலும் அந்த விளையாட்டு கட்டத்தைவிட்டு வெளியே போகமாட்டார் மீண்டும் மீண்டும் அவர் முன்னேற அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
நீதிமொழிகள் 24:16 நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்
அதன்படியே ஆண்டவர் நமக்காக பிதாவிடம் பரிந்துபேசி, மீண்டும் நாம் முன்னேறி செல்வதற்கு நம்மை உக்குவிக்கிறார் என்பது நமக்கு ஒரு நல்ல செய்தி.
ஆகினும், ஒரு குழந்தை பிறந்து பத்துமாதம் வரை நடக்க முடியாமல் விழுந்து விழுந்து எழுந்தால் நாம் அதைப்பற்றி கவலைப்படாமல் அது நடப்பதற்கு அதிகமதிகமாக உக்குவிப்போம். ஆனால் அதே பிள்ளை பத்து வயதாகியும் தனியே நடக்க முடியாமல் விழுந்து விழுந்து எழுந்தால் அது அந்த பெற்றோருக்கு மிகுந்த வேதனையே தரும்.
அதுபோல்தான் நமது ஆண்டவருக்கும் ஒருவர் எத்தனை வருடம் ஆவிக்குரிய வாழ்வில் இருக்கிறார் என்பது முக்கியமல்ல! அவர் சத்தியத்துக்குள் அல்லது இயேசுவின் வார்த்தையின்படி வாழ்வதற்கு அல்லது இயேசுவைப்போல் மாறுவதற்கு எவ்வளவு முன்னேறியிருக்கிறார் என்பதுவே முக்கியம்.
ஆவிக்குரிய சோதனைகளில் நிலைநிற்க முடியாமல் அடிக்கடி விழுந்து விழுந்து எழும்பும் ஒரு அனுபவம் மிக்க விசுவாசியால் ஆண்டவருக்கு எந்த பயனும் இல்லை.
"சாத்தனின் சோதனைகள்" என்னும் பாம்புகள் நிறைந்த இந்த மாம்ச உலகில் ஆண்டவரின் வார்த்தைகள்படி வாழ்ந்து, எல்லா சோதனைகளையும் ஜெயித்து தேவனிடம் சேர்பவனே "ஜெயங்கொண்டவன் ஆவான்"
வெளி 21:7ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கிருஸ்துவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கை எப்படி என்பதை அறிய பரமபதம் விளையாட்டை விளையாடலாமா?
சகோதரர் சந்தோஷ் அவர்களே தாங்கள் ஆண்டவருக்காக அதிக வைராக்கியம் காட்டுவதற்கு நன்றி.
ஆகினும் "ஒப்பிடுதல்" என்பது புரியாத ஒரு கருத்தை புரியக்கூடியவிதத்தில் சொல்வதற்கு எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஒரு வழிதான் என்பது தாங்கள் அறிந்ததே.
ஆண்டவராகிய இயேசுகூட இதே விதத்தில் அனேக உவமைகளை கூறி புரிய முடியாத ரகசியங்களை புரியும்படி போதித்தார்.
வேதத்தில்கூட கெட்டுபோன அத்திபழங்களுக்கு ஒப்பாக, வயல் களைகளுக்கு ஒப்பாக, மேய்ச்சலை காணாத மான்களுக்கு ஒப்பாக, காட்டு கழுதைக்கு ஒப்பாக இப்படி அனேக காரியங்களுக்கு ஒப்பான காரியங்கள் விளக்கப்பட்டுள்ளன. அதை சரியாக அறிவதற்காக நாம் மானாகவோ அல்லது கழுதயாகவோ மாறித்தான் உண்மையை அறியவேண்டும் என்ற அவசியம் இல்லையே!
எனவே சொல்லும் கருத்தை பாமரருக்கும் புரியவைக்க, எளிய உதாரணங்களை கூறுவதில் எந்த தவறும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)