இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தெய்வ பயமில்லாதவர்களின் முடிவு!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
தெய்வ பயமில்லாதவர்களின் முடிவு!
Permalink  
 


சமீப காலமாக தெய்வத்துக்கு  பூஜை செய்யும் பூசாரிகளில் இருந்து போலியாக "சாமியார்" என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் வரை,  அநேகர் மாம்ச இச்சையால் பீடிக்கபட்டு, தெய்வம் இருக்கும் இடம்  என்று நம்பப்படும் இடத்திலேயே தங்கள் மாம்ச இச்சையை  தணித்துகொள்ளும் அளவுக்கு சல்லாப விளையாட்டுக்களில் ஈடுபடும் அளவுக்கு மிகமோசமானநிலை உருவாகியுள்ளது. அதற்க்கு காரணம், "தாங்கள் நம்பும் தெய்வம் நாம் செய்யும் அட்டூழியத்தை பார்க்கும்,  அதைபற்றி நம்மிடம் விசாரித்து தண்டனை தரும்" என்று பயமில்லாது போனதே.
 
"தெய்வம் என்று ஓன்று இருக்கிறது, அது நம்முடைய ஒவ்வொரு  அசைவையும் செயல்களையும் கவனிக்கிறது"  என்ற பயம் ஒருவர்  மனதில் இருந்தால், ஒருவர் துணிந்து தவறு செய்யவேமாட்டார். ஆனால் தான் நம்பும் தெய்வத்துக்கு காதும் கண்ணும் இல்லை! நாம் என்ன செய்தாலும் அது கண்டுகொள்ளப்போவது இல்லை. என்று ஒருவர் கருதினால் அவர் ஆலயத்துக்குள்ளேயே அருவருப்பான செய்கைகளை செய்வதில் இருந்து,  யாருக்கும் எந்தபெரிய  துரோகவும் செய்ய சற்றும் தயங்கவே  மாட்டான்.
 
சங்கீதம் 36:1 துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.
 
"துன்மார்க்கனின் கண்களுக்கு முன்னால் தெய்வபயம் இல்லை" என்று சொல்லும் வசனம், அவர்கள் தேவனே என்று யாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டு மதிகேடான காரியங்களை செய்து வருகின்றனர் என்பதை தெரிவிக்கிறது .
 
இவர்களை குறித்து வேதம் கீழ்கண்டவாறு விளக்குகிறது
 
பிலிப்பியர் 3:19 அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
 
இப்படி பூமிக்கடுத்தவைகளை நோக்கிக்கொண்டே வாழும் உலக  மனுஷர்களை பற்றி நாம் அதிகம்பேசுவதற்கில்லை காரணம் இவர்கள் உலகப்பிரகாரமானவர்கள் இவர்கள் தேவனை அறியவில்லை! மேலும் இவர்கள் அறிந்துகொண்ட விக்கிரகமாகிய தெய்வங்களைப் பற்றி  வேதம் இவ்வாறு சொல்கிறது 
 
சங்கீதம் 115:5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

எனவே அதை தெய்வமாக பாவித்து வணங்குகிறவர்கள் அதை அவ்வாறே நினைத்துகொண்டு தவறான காரியங்களில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது!
  
அனால் ஜீவனுள்ள தேவனை அறிந்து, அவரை ஆராதிக்கும் சபையில் உள்ள அனேக விசுவாசிகள் மற்றும் பாஸ்டர்களுக்குகூட தெய்வபயம் இல்லாமல் காரியங்களை நடப்பித்ததாக வரும் செய்தியை பார்க்கும் போது மிகுந்த  வேதனையை தருகிறது!     
 
சமீபத்தில் ஒரு பாஸ்டர் ஆண்டவர் சொன்னார் என்று சொல்லி இரண்டு திருமணமான பெண்களை ஏமாற்றி தன் இச்சையை தீர்த்துகொண்டதாக ஒரு அருவருப்பான காரியத்தை படிக்க நேர்ந்தது.  
 
இவர்கள் எப்படி கிறிஸ்த்தவர்கள் ஆனார்கள்? இவர்கள் தேவனையும் அவர் மகத்துவத்ததையும் உண்மையாக அறிந்தார்களா இல்லையா? இன்னும் இது போல் வெளிக்கு தெரியாமல் எத்தனைபேர் கள்ளத் தனமான காரியங்களை திரை மறைவில் துணிந்து செய்துக்கொண்டு இருக்கின்றனர்? இன்னும் எத்தனைபேர் பாஸ்டர் என்றபெயரில் பகல் கொள்ளயராக திரிகின்றனர் ஜீவனுள்ளதேவனை வணங்கும் கிறிஸ்த்தவத்தில் இதுபோன்ற கரைகள் தோன்ற காரணம் என்ன? இவர்கள் தேவனை சரியாக அறியவில்லை! எனவே இவர்களுக்கு தெய்வபயம் இல்லாமல் போய்விட்டது!       
 
யோபு 31:23 தேவன் ஆக்கினையிடுவார்
எபிரெயர் 12:29 நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
 
என்ற பயம் மனதில் இருந்தால், நிச்சயம் துணிந்து இதுபோன்ற பாவ  காரியங்களை ஒருவரால்  செய்ய முடியாது! ஒருபுறம் அன்புள்ள தேவனாக காட்சியளுக்கும் அவர் இன்னொருபுறமோ அடித்தே கொல்லக்கூடிய அளவுக்கு கொபமுள்ளவர் என்பதை வேதம் நமக்கு உணர்த்துகிறது.   
 
பரிசுத்தமிகுந்த தேவனை தொழுதுகொண்டு இதுபோன்ற தெய்வ பயமின்றி பாவ காரியங்களை  செய்யும்  இவர்களுக்கு காரிருளே வைக்கப்பட்டுள்ளது! .
 
 II பேதுரு 2:17 இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
 
நாம் ஒவ்வொருவரும் கர்த்தருக்கு முன்பாக அவர் கண்பார்வையில்  நிற்கும் அவரது படைப்புகள்! அவரது பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை!  
 
I இராஜாக்கள் 18:15  சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான்.
 
என்ற வார்த்தையை எலியா உபயோகித்ததுபோல, எந்தஒரு மனிதன் "தன்னை  தேவனுக்கு முன்னாக எந்த மறைவும் இல்லாமல் வெளியரங்கமாக நிற்கும் ஒரு வேலைக்காரன்போல்  எண்ணிக் கொண்டு காரியங்களை நடப்பிக்கிராரோ அவருக்கு தெய்வபயம் தானாக வரும்!  அவர் அருவருப்பான காரியங்களை ஒருபோதும் செய்யதுணியவே மாட்டார்!   
  
 நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.நீதி 23:17  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 146
Date:
Permalink  
 

sundar wrote
\\..............................
I இராஜாக்கள் 18:15
  சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான்.
 
என்ற வார்த்தையை எலியா உபயோகித்ததுபோல, எந்தஒரு மனிதன் "தன்னை  தேவனுக்கு முன்னாக எந்த மறைவும் இல்லாமல் வெளியரங்கமாக நிற்கும் ஒரு வேலைக்காரன்போல்  எண்ணிக் கொண்டு காரியங்களை நடப்பிக்கிராரோ அவருக்கு தெய்வபயம் தானாக வரும்!  அவர் அருவருப்பான காரியங்களை ஒருபோதும் செய்யதுணியவே மாட்டார்!   
  
 நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.நீதி 23:17 
 .................................//


இந்நாட்களுக்கு தேவையான அருமையான பதிவு......
 
ஏற்ற சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தை வெள்ளி தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமானம். 


__________________

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான். (பிரசங்கி 8 :5 ) 
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard