இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "கிறிஸ்த்தவ விசுவாசம்" என்றால் என்ன?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
"கிறிஸ்த்தவ விசுவாசம்" என்றால் என்ன?
Permalink  
 


அன்புள்ள  தள சகோதர சகோதரிகளே நான் ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளபடி நான் யாரும் சொல்லியோ அல்லது யாருடைய நிர்பந்தத்தின் அடிப்படயோலோ இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல். மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டி  சாவின்  விளிம்பில்  இருந்த என்னை, ஒரு வேதாகம புத்தகத்தின் மூலம் தேவன் என்னை சந்தித்து  அபிஷேகித்த்தால் , கிரிஸ்த்தவம்தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்த்தவனாக இருக்கிறேன்.
 
"ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு, ஞானஸ்தானம் பெற்று பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்று, இயேசுவின் கற்பனைகளுக்கு கீழ்படிந்து  பரிசுத்தமாக வாழ்வதுதான்" கிறிஸ்த்துவ விசுவாசம் என்று நான் கருதிக்கொண்டு இருக்கிறேன். இந்நிலையில்  எனது விசுவாசத்தின் அடிப்படையில் ஆவியானவர் துணையுடன் வேதத்தை ஆராய்ந்தும் எனது அனுபவத்தின் அடிப்படையிலும் நான் எழுதும் அனேக கருத்துக்கள் "கிறிஸ்த்தவ விசுவாசத்துக்கு எதிரானது" என்பது போன்ற கருத்துடன் பலரால் விமர்சிக்கபடுகின்றன. ஆனால் ஒரே விசுவாசம் என்று சொல்லி இருக்கும் சகோதரர்களுக் கிடையேகூட சிலபல கருத்துக்களில் ஒற்றுமை இல்லாத நிலையே இருக்கிறது.
 
எனவே " அடிப்படை கிறிஸ்த்தவ விசுவாசம் என்றால் என்ன?" என்பது குறித்து அறிந்துகொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்.  உலக தோற்றத்தில் இருந்து முடிவு வரை  கிறிஸ்த்தவ விசுவாசம் என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொண்டால்  என்னை நான் சரிபார்த்துகோள்ள எதுவாக அமையும் என்று கருதுகிறேன்.
 
எனவே தள சகோதரர்களில் யாராவது அவர்கள் பையில் போதிக்கப்பட்ட அல்லது அவர்கள் அறிந்த  கிறிஸ்த்தவ விசுவாசம் என்ன? என்பதை சுருக்கமாக விளக்கினால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும். அல்லது அதுபற்றிய செய்தி எந்த தளத்தில் இருக்கிறது என்று தொடுப்பு கொடுத்தால் கூட நான் படித்து அறிந்து கொள்ளலாம்.   
 
சகோ. சந்தோஷ் அவர்கள் தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் இது குறித்து ஒரு கேள்வியை முன்வைத்திருந்தார்கள். நல்ல சமயத்தில் எழுப்பபட்ட அந்த கேள்விக்கு பதில் வரும் நாமும் உண்மையை அறிந்துகொள்ளலாம் என்று எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஆனால் அந்த கேள்விக்கு இதுவரை யாராலும் பதில் சொல்லப்படவில்லை.
 
எனவே அன்பானவர்களே "கிறிஸ்த்தவ விசுவாசத்தை" பற்றி சுருக்கமாகவும் முழுமையாகவும் யாராவது எனக்கு சற்று விளக்குங்களேன்!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

SUNDAR wrote:

எனவே தள சகோதரர்களில் யாராவது அவர்கள் பையில் போதிக்கப்பட்ட அல்லது அவர்கள் அறிந்த  கிறிஸ்த்தவ விசுவாசம் என்ன? என்பதை சுருக்கமாக விளக்கினால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.  
 

எனவே அன்பானவர்களே "கிறிஸ்த்தவ விசுவாசத்தை" பற்றி சுருக்கமாகவும் முழுமையாகவும் யாராவது எனக்கு சற்று விளக்குங்களேன்!



வேதத்தை ஆராய்ந்து ஆண்டவர்  எனக்கு  வெளிப்படுத்தினவைகளின் அடிப்படையில் அனேக பதிவுகளை எழுதியிருக்கும் நான் இவ்வாறு  கேட்பதற்கு காரணம் என்னவென்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

"தேவன் எனக்கு தெரியப்படுத்திய "கிறிஸ்த்தவ விசுவாசத்துக்கும்" மனிதன் நிர்மானித்துள்ள   கிறிஸ்த்தவ விசுவாசத்துக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது. "மனுஷ போதனைகள்" தேவனைவிட்டு எவ்வளவு தூரம் விலகி வந்திருக்கின்றன" என்ற உண்மையை அறிவதற்காகவே  இந்த கேள்வியை முன் வைத்தேனேயன்றி மற்றபடியல்ல.
 
மனுஷ போதனைகளை கற்பனையாக போதிக்கும் நிலைமை ஆண்டவராகிய இயேசுவின் காலத்தில் இருந்தே இருந்திருக்கிறது
 
மத்தேயு 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.

அதேபோல், இந்த காலத்திலும் சாத்தான் தந்திரமாக  வேதத்தில் இல்லாத சில  மனுஷ உபதேசத்தை கிறிஸ்த்தவ விசுவாசத்துக்குள் புகுத்தி, அதற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உண்மை விசுவாசத்தைவிட்டு மனுஷர்களை வழி விலகும்படி செய்து வருகிறான்.
 
அன்றில் இருந்து இன்றுவரை சாத்தானின் வேலையே இதுதான். சரியான
வழியில்  போய்க்கொண்டிருக்கும்  விசுவாச வண்டியை  ஒரே ஒரு இடத்தில் சிறிது திசை திருப்பி விட்டுவிடுவான்.  பிறகு மொத்த கூட்டமும் திசைமாறி போய்விடும்.   
பொதுவான கிறிஸ்த்தவ விசுவாசம் என்ன என்பதை அறிந்துகொண்டால் நாம் எழுதும் கட்டுரைகளில் அதைபற்றிய உண்மையை ஆராய்ந்து பதிவிடலாமே  என்ற எண்ணத்திலேயே இந்த கேள்வி கேட்கப்படுகிறது.    
 
மற்றபடி, ஆண்டவராகிய இயேசுவின் கீழ்கண்ட வார்த்தைகள் படி:
 
மத்தேயு 12:35 நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.

பொல்லாத  மனதில் இருந்து அள்ளி தெளிக்கப்படும் பரியாசங்கள், வஞ்சனைகள் பொறாமைகளால் நிறைந்த  இவர்களா தேவன் எதிர்பார்க்கும் சரியான விசுவாச நிலையை போதித்துவிட போகிறார்கள்?  அவரவர் கனியை பார்த்தே அவர்கள் விசுவாசம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாமே!


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

கிறிஸ்தவ விசுவாசம் என்றால் என்னவென்பதை விவரித்து சொல்வதற்கு பலர் தயங்கும்போது  சகோ. ஜான் அவர்கள் கிறிஸ்த்தவ விசுவாசம் என்ற தலைப்பில் கீழ்கண்ட  பத்து பாயின்ட்களை பதிவிட்டுள்ளார்கள். நீண்ட  நாட்களாக தேடிய  கிறிஸ்த்தவ விசுவாசத்துக்கு  பதில்  கிடைத்து விட்டது.  
 
சகோ. ஜான் wrote in யௌவன ஜனம்

///////1. தேவன் தம்முடைய குமாரனை நேசித்து அவர்மேல் கொண்டிருந்த அன்பால் எல்லாவற்றையும் உருவாக்
கினார்.

2. குமாரன் பிதாவை நேசித்து அவர்மேல் கொண்டிருந்த அன்பால் எல்லாவற்றையும் சகித்து, தன்னுடைய அன்பை கீழ்
ப்படிதலின் மூலம் வெளிப்படுத்தினார்.

3. மனிதனை தேவன் உருவாக்கினதின் நோக்கமே அவர்கள் தங்களுடைய விருப்பத்தின்படி தம்முடைய குமாரனை நேசித்து அவருக்கு
கீழ்ப்படிந்து இருக்க வேண்டும் என்பதே.

4. சாத்
தானுக்கு நன்றாய் தெரியும், தேவன் தோற்கடிக்க முடியாதவர் என்று; ஆனாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், அவ‌னுடை நோக்கம் அவருடைய படைப்பை பிரித்து, குமாரனுக்கு பிதா கொடுக்க இருந்த கத்தையும் மகிமையையும் குலைப்பதே.

5. மனிதன் சுயாதீனமாய் படைக்கப்பட்டாலும், அவன் தேவனை எல்லா விஷயங்களிலும் சார்ந்து இருக்கவே (உதாரணம்: இயேசு மாம்சிகத்தில் பிதாவை சார்ந்து இருந்தது போல) அழைக்கப்பட்டவன். ஆனால் அவன் தனக்கு தேவன் கொடுத்த சுயாதீனத்தை பிசாசிடம் இழந்து ஜீவவிருட்சத்தின் கனியை புசிக்காதபடி துரத்தப்பட்டான். தேவனைப் போல ஆக வேண்டும் என்ற அவனுடைய இச்சை அவ‌னுள் பாவத்தை பிறப்பித்தது. பாவம் என்றால் என்ன?

6. மனிதனின் கீழ்ப்படியாமையால் தேவன் அவர்களை பாவத்திற்கு ஒப்புக்கொடுத்தார். இருந்தாலும் குமாரன் மீதும், மனிதன் மீதும் கொண்டிருந்த நேசத்தால் பாவனையாக மீட்பின் வழியையும் உண்டாக்கினார். மனிதன் தேவனிடம் இழந்து போன உறவை தேவன் திரும்பவும் அவனுக்கு பெற்று தர சித்தம் கொண்டார்.

7. மனிதன் பாவத்தால் தேவனின் எதிரியானான், தேவன் அவருடைய சுபாவத்தின் படி மனிதர்களை அழிக்கவேண்டும், ஆனால் அவர் அப்படி செய்யாததினால் தேவன் அநீதியுள்ளவரானாரா?

8. தேவனுடைய கிருபை என்றால் என்ன? ஒரேபேறான குமாரனுடைய ரத்தத்தால் தேவனிடத்தில் நாம் இழந்து போன உறவு எப்படி சரி செய்யப்பட்டது?

9. தேவனுக்கு எதிரியாய் இருந்த மனிதன் எப்படி தேவனிடத்தில் ஒப்புரவாகமுடியும்?

10. ஒப்புரவான மனிதன் எப்படி வாழ வேண்டும்?////

சுருங்க சொல்லின் "பிதா""குமாரன்"  இருவரும் ஒருவர் மேல் ஒருவர்கொண்ட அன்புக்காக, மனுஷர்களையும்  எல்லா ஜீவனையும் படைத்து இத்தனை பாடுகள் துன்பங்களுடே நடத்திக்கொண்டு இருக்கிறார். சிறு குழந்தைக்கு விளையாட்டு சாமான்  வாங்கி  கொடுப்பது போல, பிதா தன் குமாரன்மேலுள்ள அன்பால்  மனிதர்களையும் இந்த உலகத்தையும் படைத்து கொடுத்தார் என்பதுபோல் இந்த கருத்து உள்ளது. 

நமது தளத்துக்கு வரும் சகோதரர்கள் இன்னும் ஏதேனும் விடுபட்டிருந்தாலோ அல்லது மாற்று கருத்து இருந்தாலோ தங்களுக்கு தெரிந்ததை பதிவிடலாம்

 

 

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

பரியாசக்காரர்களின் தளத்தில் இருந்து எந்த பதிவையும் இங்கு  மீள்பதிவு செய்ய வேண்டாம் என்று  சகோதரர்களை அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
 
சகோ. ஜான் அவர்கள் "கிறிஸ்த்தவ  விசுவாசம் என்றால் என்ன" என்ற தலைப்பில்
"யௌவன ஜனம்" தளத்தில் பதிந்திருந்த சில கருத்துகள்  நமது தளத்தில் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருந்தது.  அடுத்த சில மணி நேரங்களில் "தனது வழக்கப்படி" பரியாசவார்த்தைகளால் நிறைந்த பதிவொன்றை பதிவிட்ட  அந்த தளத்தின் நிர்வாகி அவரது   "கிறிஸ்த்தவ அன்பு"  என்னவென்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
 
"கிறிஸ்த்தவ அன்பை" சரியாக கடைபிடித்தால் இங்கு ஏன் கிரியைகளை பற்றி அதிக முக்கியத்துவபடுத்தி  நாம்  எழுதப்போகிறோம் "அன்பு அன்பு" என்று சொல்லிக்கொண்டு அட்டூழியம்  பண்ணும் கிறிஸ்த்தவர்கள் ஆண்டவரிடம் அடிவாங்கி சாகாதபடிக்கு,  அட்லீஸ்ட்  கொஞ்சமாவது திருந்த வேண்டும் என்ற நோக்கிலேயே கிரியைகளின் அவசியத்தை  எழுத வேண்டிய கட்டாயம்
உண்டாகிறது.
 
எசேக்கியேல் 5:7 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ..... என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே,

எசேக்கியேல் 5:6
அது புறஜாதிகளைப்பார்க்கிலும் என் நியாயங்களையும், தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைப்பார்க்கிலும் என் கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; 

இது ஆண்டவர் இன்றும் ஆதங்கத்துடன் சொல்லும் வார்த்தை.

இயேசுவின் சிலுவை மரணத்தை காரணம்காட்டி புறஜாதியார் செய்யும் நீதியைகூட செய்யாமல் தேவனின் வார்த்தைகளை அவமாக்கி போடுகிறார்கள்.  அதுபோல் கிரிஸ்த்தவத்துக்கே அவப்பெயர் உண்டாக்கும்   அனேக கிறிஸ்த்தவர்களை  நாம்  அன்றாட வாழ்க்கையில் பார்ப்பதால்தான் தேவனுக்கு பயந்து நடவுங்கள் என்று இங்கு போதிக்கிறோம்.  
 
சகோ. ஜான் அவர்கள் "கிறிஸ்த்தவ விசுவாசம் பற்றி"  அடுத்து சில நல்ல கருத்துக்களை அங்கு பதிவிட்டிருந்தாலும் "கிறிஸ்தவ அன்புக்கு" புதிய இலக்கணம் சொல்லிகொண்டிருக்கும் அந்த தளத்தில் உள்ள  கருத்துகள்  எதையும் எடுத்து இங்கு பதிவிடவும் வேண்டாம், அது குறித்து இங்கு விவாதிக்கவும் வேண்டாம்! அந்த தளத்தில் என்ன எழுதபடுகிறது என்பதை பார்க்கவும் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம்!
 
பன்றியின்  மூக்கில்  பொன்  மூக்குத்தியே  இருந்தாலும்  அது  நமக்கு தேவையில்லை 
 


-- Edited by SUNDAR on Thursday 10th of March 2011 08:51:16 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

கிறிஸ்தவ விசுவாசம்

1. மெய்யான ஒரே தேவனை விசுவாசித்தல்

யோவான் 5:24  என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

(இயேசுவை அனுப்பியது யார்? இக்கேள்விக்கு பின்வரும் வசனத்தில் இயேசுவே பதில் தருகிறார்)

யோவான் 17:1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: 2 பிதாவே, வேளை வந்தது, ... 3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

2. தேவனுடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை விசுவாசித்தல்

யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

யோவான் 20:31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

இயேசுவை தேவனென்று அல்ல, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என விசுவாசிப்பவனுக்கே நித்திய ஜீவன்.

3. தேவனிடமும் இயேசுவிடமும் விசுவாசமாயிருத்தல்

யோவான் 14:1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

இவரே அவர், அவரே இவர் என்றல்ல; இவரிடமும் அவரிடமும் தனித்தனியே விசுவாசம் வைக்கும்படி இயேசு கூறுகிறார்.

4. இயேசு தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தவர் என விசுவாசித்தல்

யோவான் 16:27 நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்.

தேவனே இயேசுவாக வந்தார் என விசுவாசிப்பது விசுவாசமல்ல; பிதாவாகிய தேவனிடமிருந்து புறப்பட்டு வந்தவரே இயேசு என விசுவாசிப்பதுதான் மெய்யான விசுவாசம். அப்படி விசுவாசிப்பவர்களையே பிதா சிநேகிப்பார். மற்றபடி, பிதாவாகிய தேவனே இயேசுவாக வந்தார் என விசுவாசிப்பவர்களை பிதா சிநேகிக்க மாட்டார்.

5. மனுஷன் நியாயப்பிரமாண கிரியைகளால் அல்ல, விசுவாசத்தாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்பதை விசுவாசித்தல்

ரோமர் 3:28 மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்.

6. கிரியையில்லாத விசுவாசம் செத்தது

ரோமர் 2:6,7 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுபவன் அதிலேயே திருப்தியுடன் இருந்துவிட்டால், அவனது விசுவாசம் செத்துப்போய்விடும். அவனது விசுவாசம் உயிருள்ளதாக இருக்கவேண்டுமெனில், அவனிடம் கிரியை வேண்டும். கிரியை இருந்தால்தான் அவன் நித்தியஜீவனைப் பெறுவான்.

7. உலகத் தேவைகளுக்காக கவலைப்படாமல் தேவனையே விசுவாசித்தல்

மத்தேயு 6:30 அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். 32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். 33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். 34 ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.

தேர்வு எழுதும் பிள்ளைகளுக்காக உபவாசமிருந்து ஜெபித்தல் போன்றதைச் செய்பவர்கள், விசுவாசிகளிடையே அற்ப விசுவாசத்தை வளர்க்கின்றனர்.

8. இயேசு ஒரு வார்த்தை சொன்னாலே பிணிகள் நீங்கி அற்புத சுகம் கிடைக்கும் என விசுவாசித்தல்

மத்தேயு 8:7 அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். 8 நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். ... என்றான்.
10 இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


ஊழியர்களின் அற்புத(?) கூட்டங்களுக்குச் சென்று ஊழியர்கள் மூலம் ஜெபித்தால்தான் அற்புத சுகம் கிடைக்கும் எனும் விதமான அற்ப விசுவாசத்தை இன்றைய ஊழியர்கள் வளர்த்து வருகின்றனர். ஆனால் தேவனை மெய்யாகவே விசுவாசிப்பவன், எந்த ஊழியரையும் தேடிச் செல்லவேண்டியதில்லை. வீட்டிலிருந்தபடியே, இயேசுவிடம் “ஒரு வார்த்தை சொன்னால் போதும்” என ஜெபித்தால் போதும்.

9. இயற்கை சீற்றங்களைப் பார்த்து அஞ்சாதிருப்பதும் கிறிஸ்தவ விசுவாசமே

மத்தேயு 8:26 அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.

கிறிஸ்தவ விசுவாசத்தில் பிரதானமானவைகளும் சில துளிகளுமானவைகளை தந்துள்ளேன். இன்னும் அதிகமானவற்றை வேதாகமத்தைப் படித்து தெரிந்துகொள்வோம்.


-- Edited by anbu57 on Thursday 10th of March 2011 10:34:30 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சகோ. அன்பு அவர்களே அநேகர் அவரவர் விசுவாசம் என்னவென்பதை விளக்கி சொல்ல தயங்கும்போது தாங்கள் வசன ஆதாரத்துடன்  தாங்கள் விசுவாசம் என்ன வென்பதை விளக்கி அருமையாக சொன்னதற்காக நன்றி.
 
இயேசுவை தேவனின் குமாரன் என்றும் அவரும் தேவன்தான் என்றும் ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அத்தோடு முடித்துகொள்ளாமல் அதற்க்கு மேல் ஆராய்ந்து, சரியான  எந்த வசன ஆதாரமும் இல்லாமல் அவரை "மிகாவேல்" தூதனோடு
ஒப்பிட்டு பார்க்க முயல்வது தங்களின் கருத்தாகிய "அவர் தேவனின் குமாரன்" எனவே அவருக்குள் தேவத்துவம் இருந்தது என்ற கருத்தை முற்றிலும் திசை திருப்புகிறது என்பதை கருத்தில் கொள்க. 
 
என்னை பொறுத்தவரை ஆண்டவராகிய இயேசுவை கர்த்தர் ஒரே ஒரு இடத்தில்தான் தூதன் என்று சொல்லியிருக்கிறார் 
 
மல்கியா 3:1 இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
 
அந்த வார்த்தையிலும் "நீங்கள் தேடுகின்ற ஆண்டவர்" என்ற பதத்தை சேர்த்து அவர் புதிய உடன்படிக்கையை ஸ்தாபிக்க வந்ததால்"உடன்படிக்கையின் தூதன்"
 என்று சொல்லியிருக்கிறார்.   
 
"என் தூதன் எனக்கு முன்னேபோல் வழியை ஆயத்தப்படுத்துவான்" என்று கர்த்தர் சொன்னனத்தாலும் அந்த ஆயத்தப்படுத்தபட்ட வழியில் வந்தவர் இயேசுவே என்பதாலும்  கர்த்தரே  அவரை "ஆண்டவர்" என்று சொல்லியிருபதாலும் அவர் நம்மெல்லோருக்கும் ஆண்டவர் என்றும்,  கர்த்தரும் ஆண்டவாகிய இயேசுவும் முற்றிலும் வேரானவர்கள் அல்ல என்பதை அறியமுடியும்! எனவே அவரை  எந்த தூதனுக்கும் சமமாக்க முயல்வது கொஞ்சமும் சரியான கருத்து அல்ல என்றே நான் தீர்மானிக்கிறேன்.     


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

sundar wrote:

//இயேசுவை தேவனின் குமாரன் என்றும் அவரும் தேவன்தான் என்றும் ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அத்தோடு முடித்துகொள்ளாமல் அதற்க்கு மேல் ஆராய்ந்து, சரியான  எந்த வசன ஆதாரமும் இல்லாமல் அவரை "மிகாவேல்" தூதனோடு ஒப்பிட்டு பார்க்க முயல்வது தங்களின் கருத்தாகிய "அவர் தேவனின் குமாரன்" எனவே அவருக்குள் தேவத்துவம் இருந்தது என்ற கருத்தை முற்றிலும் திசை திருப்புகிறது என்பதை கருத்தில் கொள்க.//

அன்பான சகோதரரே!
எனது நித்திய ஜீவன் தளத்தில் இயேசுகிறிஸ்து தேவதூதராக இருந்தவரா? என்ற திரியில் நீங்கள் கூறுகிற வண்ணமாக நான் ஆய்வு செய்வது மெய்தான். ஆனால் நான் வசன ஆதாரமின்றி அவ்வாறு செய்கிறேன் என எப்படிச் சொல்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.
எனது பதிவில் எதையும் மேற்கோள் காட்டாமல் இப்படி மொட்டையாகச் சொல்வதைவிட, எனது பதிவின் குறிப்பிட்ட பகுதியை எடுத்துப்போட்டு விமர்சனம் செய்யலாமே! அல்லது எனது திரியிலேயே தங்கள் கேள்விகளை வைக்கலாமே!
அப்படிச் செய்ய மனமில்லாவிடினும், இத்தளத்தில் இயேசு கிறிஸ்து யார்? எனும் திரியில் நான் பதித்துள்ள பதிவிற்காவது பதில் தாருங்கள்.



-- Edited by anbu57 on Tuesday 29th of March 2011 07:41:45 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

anbu57 wrote:
அன்பான சகோதரரே!
எனது நித்திய ஜீவன் தளத்தில் இயேசுகிறிஸ்து தேவதூதராக இருந்தவரா? என்ற திரியில் நீங்கள் கூறுகிற வண்ணமாக நான் ஆய்வு செய்வது மெய்தான். ஆனால் நான் வசன ஆதாரமின்றி அவ்வாறு செய்கிறேன் என எப்படிச் சொல்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.
எனது பதிவில் எதையும் மேற்கோள் காட்டாமல் இப்படி மொட்டையாகச் சொல்வதைவிட, எனது பதிவின் குறிப்பிட்ட பகுதியை எடுத்துப்போட்டு விமர்சனம் செய்யலாமே! அல்லது எனது திரியிலேயே தங்கள் கேள்விகளை வைக்கலாமே!
அப்படிச் செய்ய மனமில்லாவிடினும், இத்தளத்தில் இயேசு கிறிஸ்து யார்? எனும் திரியில் நான் பதித்துள்ள பதிவிற்காவது பதில் தாருங்கள்.

 


சகோதரர்  அன்பு  அவர்களே, தாங்கள் சுட்டியுள்ள கட்டுரையில்  மிகாவேல் தூதனுக்கும் இயேசுவுக்கும் இருந்த சில ஒற்றுமைகளை சுட்டிகாட்டி இயேசு மிகவேல் தூதனாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்று அனுமானித்து தீர்த்துவிட்டீர்கள். தங்களின் அனுமானத்தில் நான் குறுக்கிட விரும்பாமல் விட்டுவிட்டேன். ஏனெனில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அனுமானித்து கொள்ளலாம்.  

ஆகினும் தங்கள் அனுமானத்தைவிட  கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து என்று வேதம் அனேக  இடங்களில்  சொல்வதால் இயேசுதான் கர்த்தர் என்று நாம் அனுமானிக்கவே இன்னும் அதிக வாய்ப்பிருகிறது . அதை தாங்கள் ஏற்க்க விரும்பவில்லை.    
 
இயேசு என்னும் தூதன் என்றோ, மனுஷ குமாரனாகிய தூதன், அல்லது மிகவேலாகிய மனுஷ குமாரன் என்பது போன்ற எந்த வார்த்தையும் இல்லாத பட்ச்சத்தில் நாம் உறுதியாக எந்த முடிவும் சொல்லமுடியாது.
 
மிகவேலை பற்றி  வரும்  இடங்களில் வேதம் தெளிவாக "பிரதான தூதன்" "மிகாவேல்" என்று சொல்வதை அறிய முடிகிறது. பின்னர் இவர்தான் அவர் என்ற அனுமானம் தேவையா என்று புரியவில்லை.
 
ஒருவேளை மிகாவேல் தூதந்தான் இயேசுவாக வந்தார் என்ற தங்கள் கருத்தை உண்மை என்று எடுத்துகொண்டார். புதிய ஏற்பாடு முழுவதும்  "இயேசு" என்றே அழைக்கபட்டவர்,  பின்னர் வெளிப்படுத்தின விசேஷத்தில்  மீண்டும்  "மிகாவேல்" என்ற நாமத்தில் வருவது முரணாக உள்ளது.   
 
வெளி 12:7 வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை.
 
அதன் பின்னர் இயேசுவை குறித்து கீழ்கண்ட வசனம் வருகிறது: 
வெளி 19:13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
 
மேலும் அவரின் நாமம் மிகாவேல் அல்ல!
 
16. ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
 
இவைகளை ஆராயும் பட்சத்தில் ஆண்டவராகிய இயேசு மிகாவேல் தூதன் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதை புரியமுடிகியது.
 
அனால் தாங்கள்  இயேசு கிறிஸ்து யார்? என்ற திரியில் குறிப்பிட்டுள்ள தேவ தூதர் குறித்த காரியங்களுக்கான விளக்கம்  ஓரளவுக்கு ஒத்துவருதால், அதை குறித்து தியானித்து விரைவில் விளக்கம் தர வாஞ்சிக்கிறேன்.       
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

பிரதான தூதனாகிய மிகாவேல் யார் ?

மிகாவேல் என்றழைக்கப்படுகிற ஆவி சிருஷ்டியைப் பற்றி பைபிள் அதிகமாக குறிப்பிடுவதில்லை. ஆனால் அப்படி குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள், மிகாவேல் மும்முரமாய்ச் செயல்பட்டு வருவதாக சொல்கின்றன. பொல்லாத தூதர்களோடு அவர் போரிட்டுக் கொண்டிருப்பதாக தானியேல் புத்தகம் சொல்கிறது; சாத்தானோடு விவாதித்துக் கொண்டிருப்பதாக யூதாவின் நிரூபணம் சொல்கிறது; பிசாசோடும் அவனுடைய பேய்களோடும் யுத்தம் பண்ணிக்கொண்டு இருப்பதாக வெளிப்படுத்தல் புத்தகம் சொல்கிறது. ''கடவுளுக்கு நிகர் யார்''? என்ற தம் பெயரின் அர்த்தத்துக்கு ஏற்ப, மிகாவேல் யெகோவாவின் ஆட்சியை ஆதரித்து, கடவுளுடைய எதிரிகளோடு போரிடுகிறார். அப்படி என்றால், மிகாவேல் யார் ?
சில சமயங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களினால் சில நபர்கள் அறியப்படுகிறார்கள். உதாரணமாக, முற்பிதாவான யாக்கோபுவுக்கு இஸ்ரவேல் என்ற பெயரும் இருந்தது. அப்போஸ்தலன் பேதுருவுக்கு சீமோன் என்ற பெயரும் இருந்தது.(ஆதியாகமம் 49:1,2 / மத் 10:2 ) அதுபோலவே, இயேசு கிறிஸ்துவின் மற்றொரு பெயர்தான் மிகாவேல் என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது; பூமிக்கு வருவதற்கு முன்னும், பரலோகத்துக்குச் சென்ற பின்னும் அவருடைய பெயர் அதுதான். இந்த முடிவுக்கு வருவதற்கான வேதபூர்வ காரணங்களை இப்போது நாம் சிந்திப்போம்.

பிரதான தூதன். மிகாவேலை 'பிரதான தூதன்'' என்று கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுகிறது. (யூதா 9 ). இதன் அர்த்தம் ''தலைமைத் தூதன்''  என்பதாகும். பைபிளில், பிரதான தூதன் என்றவார்த்தை ஒருமையில் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது, பன்மையில் ஒருபோதும் கொடுக்கப்படவில்லை. எனவே, அப்படி ஒரேயொரு தூதன் மட்டுமே இருக்கிறார் என்பதை இது காண்பிக்கிறது. அதோடு, இயேசு பிரதான தூதனின் ஸ்தானத்தோடு சமந்தப்படுத்தி பேசப்படுகிறார். உயிர்தெழுப்பப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து 1 தெசலோனிக்கேயர் 4:16 இவ்வாறு சொல்கிறது: ''ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும்( அதாவது, குரலோடும்), தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்'':.  இவ்வாறு இயேசுவின் குரல் பிரதான தூதனுடைய குரலாக இருக்கிறதென விவரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இயேசு பிரதான தூதனாகிய மிகாவேல் என்பதை இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது.

சேனைத் தலைவர். ''மிகாவேலும் அவரைச் சேர்ந்த தூதர்களும் வலுச்சர்ப்பதோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணினார்கள்'' என்று பைபிள் தெரிவிக்கிறது (வெளிப்படுத்தல் 12 :7). ஆகவே, விசுவாசமிக்க தேவ தூதர்களின் சேனைக்கு மிகாவேல் தலைவராக இருக்கிறார். அதே வெளிப்படுத்தல் புத்தகத்தில், தேவ தூதர்களின் சேனைக்கு இயேசு தலைவராக இருக்கிறார் என்று விவரிக்கப் பட்டிருக்கிறது. (வெளிப்படுத்தல் 19 :14 -16 ) ''கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடு'' வருவதாக அப்போஸ்தலர் பவுலும் தெளிவாய்க் குறிப்பிடுகிறார். (2 தெசலோனிக்கேயர் 1 :8 ) ஆக, மிகாவேல் மற்றும் 'அவரைச் சேர்ந்த தூதர்கள்' பற்றியும் இயேசு மற்றும் 'அவருடைய தூதர்கள்' பற்றியும் பைபிள் சொல்கிறது (மத் 13 :41 /16 :27 /24 :31  ::::: 1 பேதுரு 3 :2 ). பரலோகத்தில், விசுவாசமிக்க தேவதுதர்களான இரண்டு வெவ்வேறு சேனைகள் இருப்பதாக, அதாவது மிகாவேலைத் தலைவனாக கொண்ட ஒரு சேனையும், இயேசுவைத் தலைவராக கொண்ட வேறொரு சேனையும் இருப்பதாக கடவுளுடைய வார்த்தையில் எங்குமே குறிப்பிடப்படவில்லை; எனவே பரலோக இஸ்தானத்தில் உள்ள இயேசு கிறிஸ்துதான் மிகாவேல் என்ற முடிவுக்கு வருவது நியாயமாகவே இருக்கிறது.

அடுத்து வேதத்தில் இருந்து சில வசனங்களை எடுத்து பொய்யாக, புரியாமல் போதிக்கும் ஒரு சில துர்உபதேசம் கொண்ட தளத்தின் கேள்விகளை எனது அடுத்த பதிவுகளில் ஆராய்வோம்.....

இந்த மிகாவேலின் பெயர் பைபிளில் ஐந்து தடவைகள் மாத்திரமே காணப்படுகிறது. இந்தப் பெயரைக் கொண்டுள்ள அந்த மகிமையான ஆவி ஆள், ''பிரதான அதிபதிகளில் ஒருவன்'', ''உன் (தானியேலின்) ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதி'' எனவும் ''பிரதான தூதன்'' எனவும் குறிப்பிடப்படுகிறார். (தானி 10:13; 12:1; யூதா 9). மிகாவேல் என்பதன் பொருள் ''கடவுளைப்போன்றவர் யார்?” என்பதாகும். இவ்வாறு இந்தப் பெயர் மிகாவேலை, “யெகோவாவின்  ஈடற்றப் பேரரசை உறுதியாய் கடைப்பிடித்து நிற்பதிலும், கடவுளுடைய சத்துருக்களை அழிப்பதிலும் தலைமை தாங்குவார்” என சந்தேகம் இல்லாமல் குறித்துக் காட்டுகிறது.

1 தெசலோனிக்கேயர் 4:16-இல், உயிர்த்து எழுவதை தொடங்குவதற்கு இயேசு கிறிஸ்து கொடுக்கும் கட்டளை '' பிரதான தூதனுடைய சத்தம்'' என விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் யூதா 9-இல் இந்தப் பிரதான தூதன் மிகாவேல் எனச் சொல்லிருக்கிறது. இயேசுவின் கட்டளைக்குரிய சத்தத்தை, அதிகாரத்தில் குறைந்தவரான ஒருவருடைய சத்தத்துக்கு ஒப்பிடுவது தகுதியாய் இருக்குமா? அப்படியானால், நியாயமாகவே, அந்தப் பிரதான துதனான மிகாவேல் இயேசு கிறிஸ்துவே. (கவனத்தைக் கவருவதாய், ''பிரதான தூதன்'' என்ற சொற்றொடர் வேத எழுத்துக்களில் பன்மையில் ஒருபோதும் காணப்படுகிறதில்லை; இவ்வாறு ஒரே ஒருவரே அவ்வாரிருக்கிறார் எனக் குறிப்பாய் உணர்த்துகிறது).

வெளிப்படுத்தல் 12:7-12-இல், கிறிஸ்துவுக்கு அரசதிகாரம் அளிப்பதன் சம்பந்தமாக, மிகாவேலும் அவனுடைய தூதர்களும் சாத்தானுக்கு எதிராகப் போர்செய்து அவனையும் அவனுடைய பொல்லாத துதர்களையும் பரலோகத்தில் இருந்து வெளியே தள்ளிப் போடுவார்கள் என சொல்லியிருக்கிறது. பின்னால் இயேசு பரலோக சேனைகளை இவ்வுலக ராஜ்யங்களுக்கு எதிராக போர் செய்வதில் தலைமை வகித்து நடத்துவதாக சித்தரித்துக் காட்டுகிறது (வெளி. 19:11 -13). அப்படியானால், ''உலகத்தின் அதிபதி'' என்று தாம் விவரித்த பிசாசான சாத்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பவரும் இயேசுவே என்பது நியாயமாய் இருக்கிறது அல்லவா ? (யோவான்  12 :31 ). தானியேல் 12:1-இல் அதிகாரத்துடன் செயல்படும்படி ''மிகாவேல் எழும்பி நிற்பது'' ''யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்கால மட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலத்தோடு சமந்தப்படுத்தி இருக்கிறது. இது, கிறிஸ்து, பரலோகத் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுபவராக ராஜ்யங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கையில் அவற்றின் அனுபவத்துக்கு நிச்சயமாகவே பொருந்தும். ஆகையால், கடவுளுடைய குமாரன் தாம் பூமிக்கு வருவதற்கு முன்னால் மிகாவேல் என அறியப்பட்டார் எனவும், மேலும் அவர் கடவுளுடைய மகிமைப்படுத்தப்பட்ட ஆவிக் குமாரனாக இப்பொழுது வாசம்செய்கிற பரலோகத்துக்கு திரும்பிச் சென்ற முதற்கொண்டும் அவ்வாறு அறியப்படுகிறார் எனவும் அத்தாட்சி குறித்துக் காட்டுகிறது.
 
திருத்துவத்தின்  பாகமாய்   இருப்பதாகச் சொல்லப்படுவோர் எல்லோரும் நித்தியர், ஒருவருக்கும் தொடக்கம் கிடையாதென பைபிள் போதிக்கிறதா?

மேலே கூறிய தலையங்கத்துக்கு பொருத்தமாகவும், என் நண்பர்களின் பல கேள்விகளை கருத்தில் கொண்டும் கொலோ. 1 :15 ,16 என்ற வசனத்தை ஆதாரமாக எடுத்து பதில் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  அடுத்து இந்த தளத்து நிர்வாகியாகிய  ''
பெரியன்ஸ்'' என்பவர்   இதன் விளக்கத்தை  ''கிறிஸ்து சிருஷ்டிப்பின் ஆதியானவர்''!!  என்ற திரியில் மிகவும் அழகாகவும் , விவரமாகவும் விளக்கியுள்ளார். அடுத்து இதன் மேலதிக தகவலாக சில கிரேக்க வார்த்தைகளை ஆராய்ந்து பார்த்து விளக்கத்தை பெறுவது இன்னும் அதிகமான நம்பகத் தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

கொலோ. 1 :15 ,16 .... ''அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.  ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய''

என்ன கருத்தில் இயேசு கிறிஸ்து ''சர்வ சிருஷ்டிக்கும் முதற் பேறுமானவர்'' என்று எழுதப்பட்டு இருக்கு?

(1 ) ''முதற் பேறு'' என்பது இங்கே பிரதான, மிக அதிக மேம்பட்ட, மிக அதிக மேன்மை வாய்ந்த என்பதைக் குறிக்கிறது எனவும், இவ்வாறு கிறிஸ்து சிருஷ்டிப்பின் பாகமல்ல, ஆனால் சிருஷ்டிக்கப் பட்டவர்களோடு சம்மந்தப்பட்டதில் மிக அதிக மேன்மை வாய்ந்தவர் என விளங்கிக் கொள்ளப் படவேண்டும் எனவும் திருத்துவ கோட்பாட்டாளர் சொல்கின்றனர். அவ்வாறிருந்தால், மேலும் திருத்துவக் கோட்பாடு உண்மையாய் இருந்தால், பிதாவும் பரிசுத்த ஆவியும் சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறானவர்கள் என்று ஏன் சொல்லப்படவில்லை? பைபிள் இந்தச் சொற்களை குமாரனுக்கு மாத்திரமே பயன்படுத்துகிறது.''முதற்பேறு'' என்பதன் வழக்கமான அர்த்தத்தின்படி, யெகோவாவின் குமாரர்களடங்கிய குடும்பத்தில் இயேசு எல்லாரிலும் மூத்தவர் என அது குறிக்கிறது.

(2)
கொலோ. 1 :15 .க்கு முன்னால் ''முதற்பேறான'' என்ற இந்தச் சொற்றொடர் 30 க்கும் மேற்பட்ட தடவைகள் பைபிளில் காணப்படுகிறது. உயிருள்ள சிருஷ்டிகளுக்கு அது பயன்படுத்துகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதே அர்த்தத்திலே பயன்படுத்தி உள்ளது. --- அதாவது அந்த முதற்பேறு அந்தத் தொகுதியின் பாகம் என்பதாகும். ''இஸ்ரவேலின் முதற்பேறானவன்'' இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனே; ''பார்வோனின் முதற்பேறானவன்'' பார்வோனின் குடும்பத்தில் ஒருவனே;  ''மிருகத்தின் முதற்பேராக'' இருப்பவை மிருகங்களே. அப்படியானால், கொலோ. 1:15 இல் அதற்கு வேறுபட்ட அர்த்தத்தை குறித்துக் காட்டும்படி சிலரை செய்விப்பது எது? அது பைபிள் பயன்படுத்தும் முறையா அல்லது அவர்கள் ஏற்கனவே கொண்டுள்ளதும் அதற்கு நிருபணத்தை தாங்கள் தேடுவதுமாகுமா?

(3 )
கொலோ. 1 :16 ; 17 இல் ''அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது ......சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப் பட்டது.'' என்று சொல்லி இருப்பது, இயேசுவையே சிருஷ்டிக்கப்படவில்லை என தவிர்த்து வைக்கிறதா? ''சகலமும்'' என்று இங்கே மொழிபெயர்த்துள்ள கிரேக்க சொல் பான்ட்டா என்பதாகும். இது பஸ் என்பதன் உருமாற்றமாகும் (மிகுதி சேர்க்கப்பட்டு மாறியது) லூக்கா 13:2 இல்; ''மற்ற ...எல்லா'' என மொழிபெயர்த்திருக்கின்றது. JB ''மற்ற எவரை'' என்றிருக்கிறது. NE  ''வேறு எவரை'' என்று சொல்லி இருக்கிறது. (மேலும் NE இல் லூக்கா 21:29-ஐயும் JB இல் பிலிப்பியர் 2 :21-ஐயும் பாருங்கள்). குமாரனைப் பற்றி பைபிளில் சொல்லி இருக்கும் மற்ற எல்லாவற்றுடனும் பொருந்த, NW கொலோ. 1 :16 ; 17 இல் பான்ட்டா என்பதற்கு அதே அர்த்தத்தையே கொடுக்கிறது. இவ்வாறு அதில் ஒரு பகுதியாக; ''அவரைக் கொண்டு மற்ற எல்லாக் காரியங்களும் சிருஷ்டிக்கப்பட்டன ..... மற்ற எல்லாக் காரியங்களும் அவர் மூலமாயும் அவருக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டன'' என்று வாசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் சிருஷ்டிக்கப்பட்டவராக, கடவுள் சிருஷ்டித்த சிருஷ்டிப்பின் பாகமாகக் காட்டப்படுகிறார்.

வெளிப். 1 :1 / 3 :14 ''இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தல், இதைக் கடவுள் அவருக்குக் கொடுத்தார்'' (RS ) ''லாவோதிக்கா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும்,தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாய் இருக்கிற (கிரேக்கில், ஆர்கி) ஆமென் என்பவர் சொல்கிறதாவது''.
(KJ ;DY ;CC ;மற்றும் NW ; அவற்றோடு மற்றவற்றிலும், இவ்வாறு இருக்கிறது) இந்த மொழிபெயர்ப்பு திருத்தமானதா?
இங்கே குமாரன் 'கடவுளுடைய சிருஷ்டிப்பை தொடங்கினவர்' எனவும், அவரே அதன் 'ஆதி மூலகாரணர்' எனவும் பொருள்படுகிறது என்ற கருத்தைச் சிலர் ஏற்கின்றனர். ... 

ஒக்ஸ்போர்ட், 1968  , பக்கம், 252 - இல் சொல்லப்பட்டபடி நியாயமுறைப்படியான முடிவு என்னவெனில், வெளிப்படுத்தல் 3 :14 இல்  குறிப்பிடப்பட்டுள்ளவர் சிருஷ்டிக்கப்பட்டவர், கடவுளுடைய சிருஷ்டிப்புக்களில் முதல்வர், அவருக்கு ஒரு தொடக்கம் இருந்தது என்பதே. இதை நாம் நீதிமொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.   இங்கே, பைபிள் உரை ஆசிரியர்கள் பலர் ஒப்புக்கொள்கிறபடி, நீதிமொழிகள் 8 :1 இன் வசனமாகிய ''ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ''? இங்கே ''ஞானம்'' என்ற சொல் இயேசுவையே குறிக்கின்றது.  அதனை தொடர்ந்து நீதிமொழிகள் 8:22-30  வரை உள்ள வசனம் இவ்வாறு வாசிக்கிறது.
22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
23.
பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.
24. ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
25. மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
27.
அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
28. உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,
29. சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
30.
நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
ஆகவே இந்த வசனங்களின்படியும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவரும்,   தேவனின் மகனாகவும் இயேசு திகழ்கிறார் என்று நியாயம் ஆகின்றது. நன்றி 


__________________

கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.



இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

இயேசு கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதால்,  காலத்திலும், வல்லமையிலும், அறிவிலும் இரண்டாந்தர நிலையிலே  இருக்கிறார்!!!!  இதை அடிப்படையில் கொண்டு  ஜோனின் கேள்வியாகிய "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை"  என்ற பதிவுக்கும் விடை.  அடுத்து இயேசு பூமியில் இருந்தபோது, இயேசு மனிதனாய் இருந்தார். எனினும் கடவுளே இயேசுவின் உயிர் - சக்தியே மரியாளின் கர்ப்பத்துக்கு மாற்றி இருந்ததால் பரிபூரணராய் இருந்தார். ஆனால் அவர் தொடக்கம் அவ்வாறில்லை. தாம் "பரலோகத்திலிருந்திறங்கின" ரென அவர் தாமே  அறிவித்தார். (யோவான்  3 :13 ) ஆகவே, தம்மைப் பின்பற்றினோரிடம்: "மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?" என்று பின்னால் அவர் சொன்னது இயல்பானதே!!! (யோவான் 6 :62 )

இவ்வாறு,  இயேசு பூமிக்கு வருவதற்கு முன்னால் பரலோகத்தில் வாழ்ந்திருந்தார். ஆனால் சர்வவல்ல, நித்திய திருத்துவ கடவுளடங்கிய ஆட்களில் ஒருவராகவா?  இல்லை, ஏனெனில், தம்முடைய மனித வாழ்க்கைக்கு முன்னான வாழ்கையில், இயேசு, தூதர்கள்  கடவுள் சிருஷ்டித்த ஆவி ஆட்களாய் இருந்தது போல், சிருஷ்டிக்கப்பட்ட ஆவி ஆளாய் இருந்தாரென  பைபிள் தெளிவாய் கூறுகிறது. தூதர்களோ இயேசுவோ தாங்கள் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்னாள் இருக்கவில்லை.

இயேசு, தம் மனிதவாழ்க்கைக்கு முன்னான வாழ்கையில், "சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறு" ஆக இருந்தார். (கொலேசயர் 1 :15 )  அவர் "கடவுளுடைய சிருஷ்டிப்பின் தொடக்கம்" (வெளிப் 3:14 ).  "தொடக்கம்" (கிரேக்கில், (அரக்கே) ) என்பதை இயேசு கடவுளுடைய சிருஷ்டிப்பைப்  'தொடங்கினவர்'  என்று பொருள் கொள்ளும்படி விளக்குவது சரியல்ல. யோவான், தன் பைபிள் எழுத்துக்களில்
அரக்கே என்ற கிரேக்க சொல்லின் பற்பல உருவகைகளை 20 -க்கு  மேற்பட்ட தடவைகள் பயன்படுத்துகிறான். இவை எப்பொழுதும் "தொடக்கம்" என்ற இந்தப் பொதுவான பொருளையே கொண்டு இருகின்றன.  ஆம், இயேசு கடவுளுடைய காணக்கூடாத சிருஷ்டிகளின்  தொடக்கமாகக்
கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டார்.

பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளில், உருவகமான "ஞானம்" கூறும் சொற்களோடு இயேசுவின் தொடக்கத்தைக் குறிப்பிடும் இந்தக் மேற்கோள் குறிப்புகள் எவ்வளவு நெருங்க ஒன்றுக்கொன்று இணைகிறது என்பதைக் கவனியுங்கள்:

12. ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
25. மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.


கடவுள் சிருஷ்டித்தவரை உருவகம் செய்ய "ஞானம்" என்ற பதம் பயன்படுத்தி இருக்கையில், அது உண்மையில் தம்முடைய மனித வாழ்க்கைக்கு முன்னால் ஆவி சிருஷ்டியாக இருந்த இயேசுவுக்குச் சொல்லணியென அறிஞர் பெரும்பான்மையர் ஒப்புக்கொள்கின்றனர்.

அடுத்து இந்த பதிவுகளுக்கான மேலதிக தகவலைப் பெற என் நண்பர் தேநீர் பூக்கள் எழுதிய பிரதான தூதனாகிய மிகாவேல் யார் ? என்ற திரியில் மிக அழகாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தம்முடைய மனித வாழ்க்கைக்கு முந்திய வாழ்க்கையில் "ஞானம்" என்பவராக இயேசு, தாம் "அவருடைய பக்கத்தில், கைதேர்ந்த தொளிலாளனாக" இருந்தார் என நீதிமொழிகள் 8:30 தொடர்ந்து கூறுகிறது. கைதேர்ந்த தொளிலாளனாக அவர் வகித்த இந்தப் பாகத்துக்கு ஒத்திசைய, கொலேசெயர் 1:16 - ல் இயேசுவைக் குறித்து
"அவர்மூலம் கடவுள் வானத்திலும் பூமிலுள்ள எல்லாவற்றையும் சிருஷ்டித்தார்" என சொல்லப்படுகிறது. இதுவே ஜோன் அவர்கள் கேட்ட கேள்வியாகிய  "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை".  க்கும் பதில்

ஆகவே, தமக்குக் கீழ்ப் பணியாற்றுபவர் என்பதுபோல், இந்தக் கைதேர்ந்த வேலயாலனைக் கொண்டு சர்வவல்லமை உள்ள கடவுள் மற்ற எல்லாவற்றையும்  சிருஷ்டித்தார். பைபல் இந்தக் காரியத்தைப் பின்வருமாறு சுருக்கிக் கூறுகிறது: "பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். (1 கொரிந்தியர் 8 :6 )

இந்தக் கைதேர்ந்த தொளிலானடிடமே கடவுள்: "நமது சாயலாக ...  மனுஷனை உண்டாக்குவோமாக", என்று சொன்னதில் சந்தேகமில்லை. (ஆதியாகமம் 1 :16 )  இந்தக் கூற்றில் "நமது" "உண்டாக்குவோம்" என்ற சொற்கள் திருத்துவதைக் சுட்டிக் காட்டுகின்றன வென சிலர் விவாதிக்கின்றனர். ஆனால், 'நமக்காக ஏதாயினும் ஒன்றைக் செய்வோம்' என்று நீங்கள் சொன்னால், இது பல ஆட்கள் ஒருங்கிணைந்து உங்கள் உட்புறத்தில் ஒருவராக இருப்பதைக் குறிப்பாய் உணர்த்துகிறதென ஒருவரும் பொதுவாய் விளங்கிக்கொள்ள மாட்டார்கள். வெறுமெனே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்கள் ஏதோவொன்றில் ஒன்றாய்ச் சேர்த்து உழைப்பார்கள் என்றே நீங்கள் பொருள் கொள்கிறீர்கள். அவ்வாறே, கடவுள் "நமது"  "உன்காகுவோம்" என்பவற்றைப் பயன்படுதினபோது, அவர் வெறுமென மற்றொரு ஆளை, தம்முடைய முதல் ஆவி சிருஷ்டியே, அந்தக் கைதேர்ந்த தொளிலாலனை, மனிதனாவதட்கு முன்னாளில் இருந்த இயேசுவை, நோக்கிப் பேசினார்.



__________________

கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.



இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

///இவ்வளவு விவரமா இருக்கவனுங்கள என்ன செய்யமுடியும்? சுந்தர் போன்றவர்களை வஞ்சிக்க இதுபோதாதா..? அழகா ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யறானுங்க‌...இப்போதைக்கு நம்மால் வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறேதும் செய்யமுடியாது என்ற நிலை;ஆனாலும் நம்முடைய தமிழ் கிறித்தவத்துக்குள் ஊடுறுவியிருக்கும் இதுபோன்ற புல்லுருவிகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்;ஒரு முகமதியனைக் கலந்து அவனோடு விருந்துண்ணலாம்,காரணம் அவன் இன்னான் என்பதை அவன் குல்லா காட்டிவிடும்;ஒரு இந்துவுடன் வியாபாரம் செய்யலாம்,ஏனெனில் அவனுடைய முன்நெற்றியில் அதற்கான அடையாளம் காணப்படும்;ஆனால் இதுபோன்ற இனதுரோகிகளை (மேசியாவின்) எதிரிகளை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ அவனிடம் கிறித்துவின் குணாதிசயங்களை வெளிப்படுத்தவோ முடியாது,அது கூடாது;மாதாவை தெய்வநிலையில் வைத்து தொழும் கத்தோலிக்கர்களின் பெலவீனம் அதனைப் பார்த்தவுடனே தெரிகிறது;ஆனால் சிந்தையில் மாசுபட்ட விபச்சாரிகளான இரஸலின் சிஷ்யக்கோடிகளைக் கண்டதும் காத தூரம் காதைப் பொத்திக்கொண்டு ஓடிவிடவேண்டும்;அவர்களைக் குறித்து மனதை மயக்குகிறவர்கள் என்று அப்போஸ்தலன் எச்சரிக்கிறான்;கிறித்தவர்களே ஜாக்கிரதை...ஓநாய் கூட்டமே வருகிறது...அது கூட்டமாய் வருகிறது..!////

மேலே இருக்கும் பதிவு சில்சாம் என்ற ஒருவரால் எழுதப்பட்டது:-  இதற்கு நான் எவ்வாறு ( வேறுவிதத்தில் ) பதில் கொடுக்கவேண்டும் என்று தெரியும். இருந்தாலும் சுந்தர் அவர்கள் எம்மிடம் கேட்டுகொண்டதிநிமிதம் தங்களின் கருத்துக்கு எந்த பதிவும் கொடுக்கப் போவதில்லை. இந்த தளத்தில் யார்வேண்டும் என்றாலும் கருத்து எழுதமுடியும் அல்லது விவாதம் செய்ய முடியும். சில்சாம் சும்மா என்னை வன்புக்கு இழுக்காதே பின்பு தமிழ் கிறிஸ்தவ தளம் முதல் கொண்டு உன்னை நாறடித்து விடுவேன். போதும் இத்துடன் உன் கோமாளித்தனத்தை நிறுத்திக் கொள்!!!!!



__________________

கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

சகோதரர் ரோஷன் அவர்களே தாங்கள் வேதத்தின் அனேக ஆழமான கருத்துக்களை எடுத்து விளக்குகிறீர்கள்   எனக்கு இவ்வளவு வேதஅறிவு கிடையாது,  ஜெபத்தின் மூலம் மட்டுமே  ஆண்டவரிடமிர்ந்து உண்மையை அறிய விரும்புகிறவன்.  அவ்வாறு அறிந்ததன் அடிப்படையில் தாங்கள்  இயேசுவை மிகவேல் தூதன் என்று சொல்வதன் மூலம் அடிப்படையிலேயே தவறுகிறீர்கள் என்பதை மாத்திரம் என்னால் அறிய முடிகிறது. இவ்வாறு அடிப்படை தவறாக இருக்கும்போது மேலே கட்டப்படும் கட்டிடம் முழுவதுமே தவறாகிவிடும் வாய்ப்பிருக்கிறது.
 
தேவன் இயேசுவை சிருஷ்டித்தார் என்று சொல்வது ஏற்புடையது அல்ல! அவர் இயேசுவை ஒரு குறிப்பிட்ட நாளில் ஜெநிப்பித்தார் என்பதை நான் ஏற்கிறேன் ஆனால்:
 
தானியேல் 10:13 பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடே எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்
 
தேவனுக்கு  ஒன்றுக்கு மேற்பபட்ட  பிரதான அதிபதிகள் இருந்தார்கள் என்பதையும் அதில் ஒருவரே மிகாவேல் தூதன் என்பதையும் இந்த வசனம் நமக்கு தெளிவாக்குகிறது.  
 
ரோமர் 8:3  தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
 
ஆதியிலே தேவனோடு தேவனாக தேவ வார்த்தையாக இருந்து அந்த வார்த்தை என்னும் கருப் பொருளால் அவரது குமாரனாக ஜெனிப்பிக்கப்பட்டு  மாம்சத்தில் வந்து பலியான கர்த்தராகிய இயேசுவை அதாவது கடவுளாகிய இயேசுவை "தேவ குமாரனான மிகாவேல் தூதன்" என்று விளக்குவதன் மூலம்  நீங்கள் தேவனை அறியும் விதமாக  அறியவில்லையோ என்று கருத தோன்றுகிறது.
 
சகோதர் கொல்வின் பதிவிட்டுள்ள சகோ. வசந்த குமார் அவர்களின் விளக்க கட்டுரையை இங்கு
தருகிறேன் தாங்கள் விளக்கத்தை தாருங்கள்.  
 
நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி    

தேவனால் முதலாவதாகச் சிருஷ்டிக்கப்பட்ட தேவதூதனாகக் காண்பிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் உபயோகிக்கும் வேதவசனம் தானியேல் 10:13 ஆகும். இவ்வசனத்தில் “மிகாவேல்“ எனும் தேவதூதன் “பிரதான அதிபதிகளில் ஒருவன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இவ்வசனத்தையும் தானியேல் 10:21, 12:1 ஐயும் ஆதாரமாகக் கொண்டு இயேசுக்கிறிஸ்து மனிதனாக வருவற்கு முன்பு. அவர் பிரதான தூதன் மிகாவேலாக இருந்ததாகக் கூறுகின்றனர்.  தானியேல் 12:1 இல் மிகாவேல் எழும்புவதைப் பற்றிய தீர்க்கதரிசனம் 1914 இல் இயேசுக்கிறிஸ்து பரலோக சிங்காகனத்தில் ராஜாவாக முடிசூட்டப்படதைப் பற்றியது(80) என்று கருதும் யெகோவாவின் சாட்சிகள் இவ்வசனத்தில் “எழும்புதல்“ எனும் பதததை.“அதிகாரத்தைக் கைப்பற்றி ராஜாவாய் அரசாளுதல்“ என்று விளக்குகின்றனர். (81) 

தானியேல் 10:13 இல் மிகாவேல் “அதிபதிகளில் ஒருவன்“ என்றே குறிப்பிடப்பட்டுள்ளான் எனவே, மிகாவேலைப் போன்று இன்னும் பல தூதர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. ஆனால் தானியேல் 10.21 இல் “உங்கள் அதிபதி“ என்றும் 12:1 இல் “பெரிய அதிபதி“ என்றும் மிகாவேல் குறிப்பிடப்பட்டுள்ளமையாலும் 1 தெசலோனிக்கேயர் 4:16 இல் “பிரதான தூதன்“ எனும் பதம் சுட்டுச் சொல்லுடன் ஒருமையில் இருப்பதனாலும் மிகாவேல் என்பவன் மட்டுமே பிரதான தூதன் என்று யெகாவாவின் சாட்சிகள் கூறுகின்றனர். (82) ஆனால் தெசலேனிக்கேயர் 4:16 இல் சுட்டுச்சொல்லும் ஒருமையும் ஒரேயொரு பிரதான தூதன் மட்டுமே இருக்கிறான் என்பற்கான ஆதாரம் அல்ல. பிரதான தேவதூதர்களில் ஒருவனைக் குறிப்பிட்டுச் சொல்லுவதற்காகவே இவ்விரு இலக்கணக் குறிப்புகளும் உள்ளன. (83) தானியேலின் புத்தகத்தில் முதல் தடவை மிகாவேல் “அதிப்திகளில் ஒருவன்“ என்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளமையால் (தானி 10:13) அதன்பின்னர் அவனைப் பற்றிக் கூறும்போது, பிரதான தூதர்கள் பலர் இருப்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஆனால்,  மிகாவேலைப போன்று ஏழு பிரதான தூதர்கள் இருக்கிறார்கள் என்பதே அக்காலத்தைய யூதர்களது நம்பிக்கையாக இருந்த்து(84) எனவே மிகாவேல் தனித்துவமானவனாக இல்லை. ஆனால் இயேசுக்கிறிஸ்துவோ தனித்துவமானவராக என்று யோவான் 3:16 கூறுகிறது. நாம் ஏற்கனவே பார்த்தபடி, இவ்வசனத்தில் “ஒரேபேறான குமாரன்“ என்பதற்கு மூலமொழியில் தனித்துவமானதுமான தன்மையை சுட்டிக் காட்டுகிறது. (85) அதாவது “பலரில் ஒருவர் என்பதல்ல, ஒரேயொருவர்“ என்பது இதன் அர்த்தமாகும். மேலும், இயேசுக்கிறிஸ்து வேதத்தில் “பிரதான அதிபதி“ என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதும் யெகோவாவின் சாட்சிகளின் விளக்கம் தவறானது என்பதற்கான ஆதாரமாகவுள்ளது. இயேசுக்கிறிஸ்து பிரதான அதிபதியாக அல்ல, முழுமையான அதிகாரமும் ஆளுகையும் கொண்ட “ராஜாதிவாகவும் கர்த்தாதி கர்த்தராகவும் இருக்கிறார். (வெளி. 19:16)

உண்மையில் இயேசுக்கிறிஸ்துவை தேவதூதன் என்று கூறுவது முழுமையான வேதப்புரட்டாகும். ஏனென்றால் இயேசுக்கிறிஸ்து தேவதூதர்களை விட மேலானவர் என்பது வேதாகமத்தின் தெளிவான போதனையாக உள்ளது. எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபத்தில் முதலாம் அதிகாரம் 4ம் வசனத்திலிருந்து இரண்டாம் அதிகாரம் 18ம் வசனம் வரை தேவதூதர்களைவிட இயேசுக்கிறிஸ்து மேலானவர் எனும் சத்தியம் விளக்கப்பட்டுள்ளது. இப்பகுதியானது, இயேசுக்கிறிஸ்து  இவர் தேவதூதரைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.“ என்று ஆரம்பமாகின்றது. (எபி. 1.4) இயேசுக்கிறிஸ்து தேவதூதரை விட மேலானவர்(86) என்பதை இவ்வசனம் உறுதிப்படுத்துகின்றது. (87) மேலும் இவ்வசனத்தில் “நாமம்“ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதம் மூலமொழியில் பெயர், பட்டம், பதவி, அந்தஸ்து, புகழ், நபர் என்று பலவித அர்த்தங்க்ளைக் கொண்டுள்ளது. ஆரம்பகாலத்தில் தேவனைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்ட இப்பதம் பிற்காலத்தில் யூத கிறிஸ்தவர்களால் இயேசுக்கிறிஸ்துவினுடைய பெயராகக் கருதப்பட்டது. (88) எனவே 1:4 இல் இயேசுக்கிறிஸ்து “விசேஷித்த நாம்முடையவராய்“ இருக்கிறார் எனும்போது அவர் தேவனாய் இருக்கிறார் எனும் அர்த்த்த்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. (89) “இயேசுக்கிறிஸ்து தேவதூதரைவிட மேலான அந்தஸ்தும், அதிகாமும், ஆளுமையும் உடையவராய் இருப்பதையே இவ்வசனங்கள் அறியத் தருகின்றன. (90) எனவே அவரைத் தூதன் என்ற கூறுவது மிகப்  பெரிய தவறாகவே உள்ளது.

இயேசுக்கிறிஸ்துவைத் தம் குமாரன் என்று கூறிய தேவதூதரை இவ்வாறு அழைக்கவில்லை என்றும் (எபி 1:5) அவர்கள் தேவனுடைய ஊழியக்கார்ர்களாகவே இருக்கிறார்கள் என்றும் (எபி. 1:7) எபிரேயர் நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இயேசுக்கிறிஸ்து தேவனுடைய குமாரனாய் இருப்பதனாலும், தூதர்களைத் தேவன் தம் குமாரன் என்று அழைக்காதமையினாலும் மிகாவேல் எனும் தேவதூதன் இயேசுக்கிறிஸ்து அல்ல என்பது தெளிவாகின்றது. (91) மிகாவேல் தேவதூதனே இயேசுக்கிறிஸ்து என்றால் இவ்விரு வசனங்களிலும் தேவன் கூறியவை பொய்யாகவே இருக்க வேண்டும். மேலும், தேவதூதர்கள் யாவரும் தம் குமாரனை வழிபட வேண்டும். என்று தேவன் கட்டளையிட்டதாகவும் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (எபி. 1:6) வேதாகமத்தில் தேவனை வழிபடுவதற்கு உபயோகிக்கப்பட்ட பதமே இவ்வசனத்தில் தேவதூதர்கள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதைப் பற்றிய தேவகட்டளையிலும் உள்ளது. தேவதூதர்கள் மட்டுமல்ல பிசாசுக்களும இயேசுக்கிறிஸ்துவுக்கு முன்பாக விழுந்து அவர் தேவனுடைய குமரன் என்று அறிக்கையிட்டன. (மாற். 3:11) தேவன் மட்டுமே வழிபாட்டுக்கு உரியவராய் இருப்பதனால் (மத். 4:10) தேவதூதர்கள் இயேசுக்கிறிஸ்துவை வழிபடுவதானது அவர் தேவதூதர்களைவிட மேலானவராய இருப்பது மட்டுமல்ல “அவர் தேவனாய் இருப்பதையும் அறியத் தருகிறது. (92) மேலும், பிதாவினுடைய வலது பரிசத்தில் உட்காரும் சிலாக்கியம் இயேசுக்கிறிஸ்துவுக்கு கிடைத்த்து போல தேவதூதர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் எபிரேயர் நிருப ஆசிரியர் சுட்டிக் காட்டுவதும் (எபி. 1:13) தேவதூதர்களை விட இயேசுக்கிறிஸ்து மேலானவராய் இருப்பதற்கான ஆதாரயமாய் உள்ளது. மலும், தேவதூதர்கள் அனைவரும் இயேசுக்கிறிஸ்துவினால் சிருஷ்டிக்கப்பட்டவர்களாக இருப்பதும் (கொலோ. 1.16)(93) தேதூதர்களைவிடவும் மேலான நிலையில் அவர் இருப்பதை அறியத் தருகிறது. 

மிகாவேலும் இயேசுக்கிறிஸ்துவும் ஒருவர் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னொரு வசனம் 1 தெசலோனிக்கேயர் 4:16 ஆகும். இவ்வசனத்தில் இயேசுக்கிறிஸ்து பிரதான தூதனுடைய சத்தத்தோடு வருவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளமையால், இயேசுக்கிறிஸ்துவின் சத்தமே இவ்வசனத்தில் பிரதான தூதனுடைய சத்தமாக வர்ணிக்கப்பட்டுள்ளது(97) கூறுகின்றனர். எனினும் 2 தெசலேனிக்கியேர் 1:8 இன்படி இயேசுக்கிறிஸ்து தமது மறுவருகையில், வல்லமையின் தூதர்களோடு வருவதனால், பிரதான தூதனுடைய சத்தத்தோடு வருவார் என்ற 1 தெசலோனிக்கேயர் 4:16 இல் குறிப்பிடப்பட்டிருப்பது அவரோடு பிரதான தூதன் மிகாவேலும் வருவான் என்பதையே அறியத்தருகின்றது. எனவே இயேசுக்கிறிஸ்து மிகாவேல் தூதன் எனக் கூறுவது தவறாகும்.



-- Edited by SUNDAR on Wednesday 6th of April 2011 11:53:41 AM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

நன்றி சகோதரர் சுந்தர் அவர்களே, தங்களின் பதிவுகளில் உண்மை அல்லாமலும் அல்ல!!!  இதை ஒவ்வொருவரும் அவர்களின் அறிவுக்கும், தேவனின் விருப்பத்துக்கும்  ஏற்றாற்போலவே  சில இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். அத்துடன் நான் எழுதும் பதிவுகள் கூட 100 % சரியாக இருக்கும்  என்றும் சொல்ல மாட்டேன்.  இதை இன்னும் ஆராய்ந்தால் ஒரு விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

/// தேவன் இயேசுவை சிருஷ்டித்தார் என்று சொல்வது ஏற்புடையது அல்ல! அவர் இயேசுவை ஒரு குறிப்பிட்ட நாளில் ஜெநிப்பித்தார் என்பதை நான் ஏற்கிறேன் ஆனால்:
///

வேதப்பதிவுகள்  இயேசுவை  சிருஷ்டித்தார்  என்றே நமக்கு சொல்கின்றது.  வெளிப் 3 :14    கொலேசெயர் 1 :15 -17
மனிதனாக வருவதற்கு முன்பிருந்ததை விட உயர்ந்த நிலையே பெற்றார்   பிலி 2 :9 ,10

///
தானியேல் 10:13 பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடே எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்

 தேவனுக்கு  ஒன்றுக்கு மேற்பபட்ட  பிரதான அதிபதிகள் இருந்தார்கள் என்பதையும் அதில் ஒருவரே மிகாவேல் தூதன் என்பதையும் இந்த வசனம் நமக்கு தெளிவாக்குகிறது.  ///

இங்கு நீங்கள் குறிப்பிட்ட தூதரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. என்றாலும் தானியேல் கண்ட தரிசனத்தை  அவருக்கு விளக்குமாறு கப்ரியேல்யிடம் சொன்னவர் இவரே என தெரிகிறது. ( தானியேல் 8 :2 ,15 ,16 ஐ 12 :7 ,8 வசனங்கோளோடு ஒப்பிட்டு பாருங்கள்)  மேலும் ''பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய'' மிகாவேல் இந்த தூதரின் உதவிக்கு வந்ததாக தானியேல் 10 : 13 சொல்கிறது. ஆகவே பெயரிடப் படாத  இந்தத் தூதர் காபிரிஎலோடும் மீகாவேலோடும் நெருக்கமாக சேவை செய்யும் பாக்கியம் பெற்றவராய் இருக்கவேண்டும்.

மற்றும் இந்த பதிவையும் பாருங்கள் :-
சேனைத் தலைவர். ''மிகாவேலும் அவரைச் சேர்ந்த தூதர்களும் வலுச்சர்ப்பதோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணினார்கள்'' என்று பைபிள் தெரிவிக்கிறது (வெளிப்படுத்தல் 12 :7). ஆகவே, விசுவாசமிக்க தேவ தூதர்களின் சேனைக்கு மிகாவேல் தலைவராக இருக்கிறார். அதே வெளிப்படுத்தல் புத்தகத்தில், தேவ தூதர்களின் சேனைக்கு இயேசு தலைவராக இருக்கிறார் என்று விவரிக்கப் பட்டிருக்கிறது. (வெளிப்படுத்தல் 19 :14 -16 ) ''கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடு'' வருவதாக அப்போஸ்தலர் பவுலும் தெளிவாய்க் குறிப்பிடுகிறார். (2 தெசலோனிக்கேயர் 1 :8 ) ஆக, மிகாவேல் மற்றும் 'அவரைச் சேர்ந்த தூதர்கள்' பற்றியும் இயேசு மற்றும் 'அவருடைய தூதர்கள்' பற்றியும் பைபிள் சொல்கிறது (மத் 13 :41 /16 :27 /24 :31  ::::: 1 பேதுரு 3 :2 ). பரலோகத்தில், விசுவாசமிக்க தேவதுதர்களான இரண்டு வெவ்வேறு சேனைகள் இருப்பதாக, அதாவது மிகாவேலைத் தலைவனாக கொண்ட ஒரு சேனையும், இயேசுவைத் தலைவராக கொண்ட வேறொரு சேனையும் இருப்பதாக கடவுளுடைய வார்த்தையில் எங்குமே குறிப்பிடப்படவில்லை; எனவே பரலோக இஸ்தானத்தில் உள்ள இயேசு கிறிஸ்துதான் மிகாவேல் என்ற முடிவுக்கு வருவது நியாயமாகவே இருக்கிறது.  

கொல்வினின் விவாதத்தை அடுத்த பதிவில் கொடுக்கிறேன்.


__________________

கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.



இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

நண்பர்  சுந்தர் அவர்களே,  கொல்வின் அவர்கள் கேட்ட கேள்வி  வசந்தகுமார் என்ற ஒருவரின் ஆய்வுக் கட்டூரையாகும்.  அதை கொல்வின் அவர்கள் காபி பாஸ்ட் செய்தும், அவரின் தரவுகளே இங்கு பதிந்தும் ஒரு சில கேள்விக்கு பதிலையும்  அறியமுனைவது  அவரின் சுயநலமாக இருக்கு!!!  இங்கு கேள்வியே அவரின் சொந்த கேள்வியாக இருக்கும் பட்சத்தில் நிட்சயமாக பதில்கொடுக்கப்படும். இதில் இன்னும் ஒன்று என்னவென்றால் கேள்வியே  கேட்டு பின்பு இவற்றை தமிழ் கிறிஸ்தவ தளத்துக்கு கொண்டு செல்கிறார். கேட்கும் கேள்வி அவருடையதாக இருக்கும் பட்சத்தில் பதில் கொடுக்கப்படும். வசந்தகுமார் எழுதும் கட்டுரைக்கும் கேள்விக்கும் பதில் கொடுக்க, எமக்கு அவசியம் இல்லை. நன்றி



__________________

கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

delated 


-- Edited by SUNDAR on Wednesday 6th of April 2011 03:17:01 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard