/// தேவன் இயேசுவை சிருஷ்டித்தார் என்று சொல்வது ஏற்புடையது அல்ல! அவர் இயேசுவை ஒரு குறிப்பிட்ட நாளில் ஜெநிப்பித்தார் என்பதை நான் ஏற்கிறேன் ஆனால்: ///
Roshan wrote: வேதப்பதிவுகள் இயேசுவை சிருஷ்டித்தார் என்றே நமக்கு சொல்கின்றது. வெளிப் 3 :14 கொலேசெயர் 1 :15 -17 மனிதனாக வருவதற்கு முன்பிருந்ததை விட உயர்ந்த நிலையே பெற்றார் பிலி 2 :9 ,10
சகோதரர் அவர்களே இயேசுவானவர் தேவனின் சிருஷ்டி என்ற தாங்கள் கருத்துக்கு ஆதாரமாக தாங்கள் சுட்டியுள்ள வசனங்களை கீழே கொடுத்துள்ளேன்.
வெளி 3 :14. லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
கொலோ 1 15.அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். 16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. 17. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
பிலி 2 9.ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, 10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
இந்த வசனங்களில் எங்குமே "தேவன் இயேசுவை சிருஷ்டித்தார்" என்ற வார்த்தை இல்லையே அனால் இவ்வசனங்கள் இயேசுவைபற்றிய கீழ்கண்ட உண்மைகளை அறிய தருகின்றன
1. தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற
2. சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்
3. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர்
4. தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி
அவர் எல்லா சிருஷ்டிக்கும் முந்தியவர் என்றவுடன் அவரும் ஒரு சிருஷ்டி என்று நீங்கள் எடுத்து கொள்வது தவறு என்றே நான் கருதுகிறேன்.
ஆனால் எனது கருத்தாகிய ஜெநிப்பிக்கப்பட்டவர் என்பதற்கு கீழ்கண்ட வசனங்கள் ஆதாரமாக உள்ளது.
எபிரெயர் 1:5நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார்