தேவன் "சர்வவல்லவர்" என்றும் அவர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்றும் நாம் அறிந்திருக்கிறோம். ஆகினும் தேவன் தெரிந்துகொண்ட சில மனிதர்களின் அறிவீன செயல்களால் தேவனின் திட்டம் நிறைவேறுவதில் தமதமாகிப் போனத்தையும் நாம் தாமதமாகிப்போகும் ஆண்டவரின் வருகை! என்ற திரியில் பார்த்தோம்.
அவ்வாறிருக்க தேவாதி தேவனுக்கு ஒரு சத்துரு இருக்க முடியுமா? என்று பார்த்தால் கீழ்கண்ட வசனம் அதற்க்கு பதில் தருகிறது
II சாமுவேல் 12:14ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும்
கர்த்தருக்கு சத்துருக்கள் இருக்கிறார்கள் என்பதை இவ்வசனங்கள் நமக்கு உறுதி படுத்துகிறது. இங்கு கர்த்தர் யாரையும் தனக்கு சத்துருவாக அல்லது தனக்கு நிகராக கருதாவிட்டலும், சாத்தான் கர்த்தரை பகைத்து அவரை சத்துருவாக நோக்குவதே அதற்க்கு காரணம்.
வலை தளங்களில் எழுதும் நமக்குகூட அவ்வாறு சத்துருக்கள் உருவாகின்றனர். நான் யாரையும் இதுவரை சத்துருவாக கருதியது கிடையாது. ஏனெனில் "நமது சத்துரு மாம்சமான மனுஷன் கிடையாது" என்பதை நான் நன்றாகவே அறிவேன். ஆனால் பலர் நம்மை சத்துருவாக பாவித்துகொண்டிருக்கும்போது நம்மால் ஒன்றும் செய்யமுடியாதல்லவா? அதேபோன்ற ஒரு நிலைதான் இங்கும்!
"சத்துரு" என்ற வார்த்தைக்கு "எதிரி" என்று பொருள் கொள்ளலாம். அதாவது ஒருவருக்கு எதிரிடையான காரியங்களை செய்கிறவன் "எதிரி" எனப்படுகிறான். அதுபோல் தேவனுக்கு எதிரான காரியங்களை ஆதியில் இருந்தே செய்துவருவதால் சாத்தான் தேவனின் சத்துரு எனப்படுகிறான்.
அதாவது சாத்தான் தன்னைத்தானே தேவனுக்கு எதிரியாக்கி கொண்டான் என்றெ கூறவேண்டும். "பெருமை" என்னும் ஒரு எண்ணம் மனதில் தோன்றியதால் தனது பரிசுத்தத்தை தவறவிட்ட லுசிபர், பரிசுத்த தேவன் முன் நிக்கும் தகுதியை இழந்து வீழ்ந்து போனான். ஆனால் அவன் இன்றுவரை தன்னை திருத்திகொள்ள விரும்பாமல், தொடர்ந்து தேவனுக்கு எதிரான காரியங்களை செய்து அவருக்கு சத்துருவாகவே நடந்து வருகிறான்.
சாத்தான் எவ்வாறு தேவனின் அனைத்து செயலுக்கும் எதிரிடையாக செயல்பட்டு அவருக்கு சத்துருவாக இருந்து வருகிறான் என்பதை விளக்கும் சில வசனங்கள்:
யோவான் 3:17உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 12:47 ; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.
ஆனால் சாத்தானோ சாத்தான் உலகமனைத்தையும் மோசம் போக்குகிறான்:
வெளி 12:9உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது
இவ்வாறு, ஏறக்குறைய எல்லா விஷயங்களிலும் தேவனுக்கு எதிரிடையான செயல்பட்டு, அநீதியான காரியங்களை செய்பவனை, தேவன் "சத்துரு" என்று சொல்லாமல் வேறென்ன சொல்வார்?
உண்மையை அறியாமல் சிலர் தேவனுக்கு சத்துரு என்று யாரும் கிடையாது என்பதுபோல் பேசி வருகின்றனர். ஆனால் கர்த்தராகிய தேவனே நமது ஆண்டவராகிய இயேசுவை நோக்கி இவ்வாறு கூறுகிறார்
சங்கீதம் 110:1கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
என்ற வசனத்தின் அடிப்படையில் இந்த "சத்துரு" என்னும் "சாத்தானை" பாதப்படியாக்கி போடும் வேலையே ஆவியானவரால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
எபிரெயர் 10:13தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.
ஆவியானவரின் அந்த வேலை முடிந்ததுமே இயேசு வருவதற்காக காத்துகொண்டு இருக்கிறார்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
II சாமுவேல் 7:22ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர்
சங்கீதம் 135:5கர்த்தர்பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்
வல்லமையில் இவ்வளவு பெரிதான கர்த்தராகிய தேவனால் சாத்தானை ஏன் உடனடியாக நிர்மூலமாக்கிவிட முடியாது என்ற கேள்வி எழலாம். இது குறிந்த ஒரு உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
தேவன் மஹா பரிசுத்தர்! அவர் நியாயக்கேடில்லாத சுத்த தேவன். ஆனால் சாத்தானோ சாக்கடை போன்றவன். சாத்தான் தேவனிடம் கிட்டிசேரவும் முடியாது தேவன் சாத்தானை நேரடியாக தொடவும் முடியாது.
உதாரணமாக: அதிகமாக சாராயத்தை அடித்துவிட்டு, வருவோர் போவோரை எல்லாம் வாய்க்கு வந்தபடி துஷ்டத்தனமாக தூஷித்து கொண்டிருக்கும் சிலரை நாம் பார்த்திருக்கலாம். அவன் ரொம்பவும் நோஞ்சானாகவும் நிற்ககூட பெலனில்லாமல் தள்ளாடி கொண்டிருப்பான். ஒரு அரை விட்டால் செத்துகூட போய்விடுவான். ஆனாலும் அவனை அடிக்கமுடியும் என்பதற்காக யாருமே அவனை அடிக்க விரும்புவது இல்லை! எல்லோருமே அவனைகண்டு விலகித்தான் போவார்கள். காரணம் அசுத்தத்துக்குள் கொண்டு கைவிட்டால் நமக்குத்தான் அசிங்கம். நாமும் நமது பரிசுத்தத்தை இழந்துபோக நேரிடலாம். எனவே அவனை முறைப்படி போலீசில் சொல்லி அவர்களிடம் பிடித்து கொடுப்பதுதான் சிறந்தவழி.
இதே நிலையில்தான் இன்று சாத்தானும் இருக்கிறான் சாக்கடையிலும் அசுத்தத்திலும் புரண்டும் எழுந்து வந்து "ஓடுகிறான் ஆடுகிறான், ஜனங்களை பயம் காட்டி மோசம்போக்குகிறான், தேவனை தூஷிக்கும்படி ஜனங்களை தூண்டுகிறான். எல்லோரும் அவனைவிட்டு விலகி ஓடவே நினைக்கின்றனர். தேவன் ஒரு அரை அறைந்தால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவான் ஆனாலும் தேவன் தன்னுடைய பரிசுத்தத்திநிமித்தம் அவனை நேரடியாக தொடாமல் உறியமுறைப்படி அவனை அழிப்பதற்கு காலம் தாழ்த்தி விருகிறார்.
இந்து தர்மத்தில் " ஆணவம், கன்மம், மாயை" இம்மூன்றும் மும்மலங்கள் என்று சொல்வார்கள்.
1.நான் என்ற ஆணவம் - நான் தேவனைவிட பெரியவனாகவேண்டும் என்று எண்ணி ஆணவத்தாலேயே லூசிபர் சாத்தானாகி தள்ளப்பட்டு போனான்.
2. பழிவாங்கும் கன்மம் - கீழே தள்ளப்ட்டுபோன சாத்தான் இன்றுவரை தனது தவறை உணர்ந்து திருந்தாமல் கன்மம் வைத்து, "தேவனை வெல்லமுடியாது" என்று தெரிந்தும் அவரை பழிவாங்கும் எண்ணத்தில் செயல்பட்டு அவரது படைப்புகளை தன்வசத்தில் வைத்து துன்புருத்திகொண்டு இருக்கிறார்ன்
3. உலகப்பொருள் என்னும் மாயை - இந்த உலகமும் அதில் உள்ள எல்லாமே மாயை ஒரு நாள் எல்லாமே அழிதுவிடகூடியது அந்த மாயையான பொருட்களையே பெரிதாக காட்டி மனிதர்களை கெடுத்து வருகிறான்.
மனித மலமானது எப்படி மனிதனுக்கு அருவருப்பானதோ அதேபோல் இந்த மும் மலங்கள் தேவனுக்கு அருவருப்பானவை.
செப்டிக் டான்கினுள் விழுந்து எழுந்து உடம்பெல்லாம் மலத்தை பூசிக்கொண்டு துர்நாற்றத்துடன் வந்து நம்மிடம் பேச நினைக்கும் ஒருவரிடம் முகம்கொடுத்து பேசமுடியுமா?
அதுபோலவே பரிசுத்த தேவனது பார்வையில் சாத்தான் என்பவன் அருவருப்பான மும்மலத்தை உடலில் பூசிக்கொண்டவன் அதனால் தேவன் அவனை நேரடியாக தொடுவது இல்லை...
கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் வரும்......
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)