இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். – யோவான் - 16:33.
1989ம் ஆண்டு ஆர்மேனியா (Armenia) தேசத்தில் நடந்த நான்கு நிமிடத்திற்கும் குறைவான பூமி அதிர்ச்சியில் (ரிட்சர் ஸ்கேலில் 8.2) – (Richter scale) ஏறக்குறைய 30,000 மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது அங்கு இருந்த நிலைமையை சற்று சிந்தித்துப் பார்த்தால் தெரியும், எவ்வளவு பரிதாபமான நிலைமை என்று. எங்கு பார்த்தாலும் ஓலங்களும், தங்களுக்குரியவர்களை இழக்க கொடுத்த துயரத்தில் அழுகைகளும், உயிரோடு இருப்பவர்களை தேடிக் கொண்டிருந்த உறவினர்களும் என்று ஒரே துயரமான சூழ்நிலை.
அதில் ஒரு தகப்பன் தன் மகன் படித்துக் கொண்டிருந்த பள்ளியை நோக்கி விரைந்தார். அங்கு பள்ளிக்கு பதிலாக அந்த இடத்தில் இடிபாடுகளோடுகூட கல்லும் மண்ணும் குவியலாக இருந்தது. அதைப் பார்த்த தகப்பனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மற்ற பெற்றோர் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தியபடி தங்களது பிள்ளைகளின் பெயர்களை கூப்பிட்டுக் கொண்டே தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தத் தகப்பனோ தனது மகன் படித்துக் கொண்டிருந்த வகுப்பு இருந்த இடத்தை தேடி கண்டுபிடித்து, அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தார். அவர் தன் மகனிடம் சொல்லியிருந்தார், தான் எப்போதும் தன் மகனுடன் இருப்பேன் என்றும் அவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றும் வாக்கு பண்ணியிருந்தார்.
அவர் தோண்ட ஆரம்பித்தபோது, மற்ற பெற்றோர், ‘கால தாமதமாகிவிட்டது, எல்லாரும் மரித்து விட்டனர், இனி ஒரு பிரயோஜனமில்லை’ என்றுக் கூறி அவரை தடுத்தனர். அவரோ விடாமல் தோண்ட ஆரம்பித்தார். தீயணைப்பு படையினர் வந்து ‘எங்கும் தீ பற்றி எரிந்து, வெடிக்கிறது, நீங்கள் எது செய்தும் பிரயோஜனமில்லை வீட்டுக்கு போய் விடுங்கள்’ என்று கூறி அவரை எச்சரித்தனர். அவரோ விடாப்பிடியாக தோண்டிக் கொண்டே இருந்தார். கடைசியாக போலீஸ் படையினர் வந்து ‘உங்கள் வேதனை எங்களுக்குப் புரிகிறது. இப்போது எந்தப் பயனும் இல்லை, போய்விடுங்கள்’ என்று அவரை அந்த இடத்திலிருந்து இழுத்தனர். அவரோ தன் மகன்மேல் கொண்டிருந்த அன்பினால் தொடர்ந்து தோண்டிக் கொண்டே இருந்தார். 8மணி நேரம்.. 12.. 24.. 34 மணிநேரம் தொடர்ந்து ஓயாமல் தோண்டிக் கொண்டே இருந்தார். 38ஆவது மணி நேரத்தில் அவரது மகன் உதவிக்கு அழைக்கும் அழுகுரல் அவருக்கு கேட்டது. உடனே ‘ஆர்மண்ட்’ (Armond) என்று உரத்த சத்தமாக கூப்பிட்டு பார்த்தார். உடனே மகன், ‘அப்பா நீங்களா! எனக்குத் தெரியும் என் நண்பர்களிடம் சொல்லியிருந்தேன், என் தகப்பன் உயிரோடு இருந்தால் என்னைக் காப்பாற்ற எப்படியும் வருவார் என்று, என் நம்பிக்கை வீண் போகவில்லை’ என்று மிகுந்த சந்தோஷத்துடன் இடிபாடுகளின் மத்தியிலிருந்து பத்திரமாக தன் நண்பர்களுடன் மீட்டெடுக்கப்பட்டான்.
ஒரு உலகப்பிரகாரமான தகப்பன் தன் மகனுக்கு கொடுத்த வாக்குக்காக போராடி தன் மகனை மீட்டெடுக்க முடியுமென்றால் நம் பரம தகப்பன் நமக்கு வாக்கு பண்ணியிருக்கிறார், உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று. அவர் வாக்கு மாறாதவர். உங்கள் வாழ்க்கையில் காணப்படும் கல்லும் மண்ணும் எது? கடன் என்னும் கல்லா? பாவகட்டுகள் என்னும் கல்லா? குற்ற உணர்ச்சி என்னும் கல்லா? பிரச்சனைகள் என்னும் கல்லா? மண்ணா? எந்தக்கல்லையும் புரட்டித் தள்ளி விடுவிக்க தேவன் வல்லவராகவே இருக்கிறார். 2000 வருடங்களுக்கு முன்பு இயேசுகிறிஸ்துவின் கல்லறையை மூடியிருந்த கல்லை புரட்டித் தள்ளி, அவரை உயிரோடு எழுப்பின தேவன் இன்றும் உங்கள் வாழ்க்கையில் காணப்படும் கற்களை மாற்றி உங்களை விடுவிக்கவும், தமது வாக்குதத்தங்களை நிறைவேற்றவும் அவர் வல்லவராகவே இருக்கிறார். அவரது வாக்குதத்தங்களை பற்றிக் கொண்டு அதை உரிமைக் கொள்வோம். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். நமது பிரச்சனைகளாகிய கற்களிலிருந்து விடுபட்டு வெளியே விடுதலையோடு வருவோம். ஆமென் அல்லேலூயா!
மலைகள் பெயர்ந்து போகலாம்குன்றுகள் அசைந்து போகலாம் கன்மலையாம் கிறிஸ்துகைவிடவே மாட்டார்.
உடனே மகன், ‘அப்பா நீங்களா! எனக்குத் தெரியும் என் நண்பர்களிடம் சொல்லியிருந்தேன், என் தகப்பன் உயிரோடு இருந்தால் என்னைக் காப்பாற்ற எப்படியும் வருவார் என்று, என் நம்பிக்கை வீண் போகவில்லை’
இந்த வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்த வார்த்தைகள். அவர் நல்ல மேய்ப்பன்! ஆடுகளாகிய நமக்கு ஜீவனையே கொடுத்தவர். அவருடய சமாதானத்தையே நமக்கு தந்தவர். இந்த உலகத்தின் முடிவு பரியந்தம் நம்மோடு கூட இருந்து நம்மை ஒவ்வொருநாளும் வழி நடத்துகிறார்.
"வெளி 22:12இதோ, சீக்கிரமாய்வருகிறேன்;" என்று வாக்கு பண்ணியிருக்கும் அவர் நம்மை திக்கற்றவர்களாக விடாமல் நமை மீட்க நிச்சயம் வருவார்
I பேதுரு 1:6 , இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
I பேதுரு 5:10கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
பூகம்ப இடிபாடுகளுக்கும் சிக்கி தவிப்பதுபோல இந்த உலகின் பலவித பாடுகளின்மத்தியில் சிக்கி தவித்திருக்கும் நாம், வரப்போகும் நமது பரம தகப்பனையும், அவர் தரப்போகும் நித்தியவாழ்வையும் எதிர்பார்த்து விசுவாசத்துடனே காத்திருப்போம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)