கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ஒரு சகோதரி தனது குழந்தைகளை எல்லாம் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் காலை சுமார் 11 மணியளவில் வேலை செயது கொண்டு இருக்கும் போது, அந்த சகோதரியிடம் ஆவியானவர் "பள்ளிக்கு சென்றிருக்கும் உனது 10௦ வயது மகளுக்கு மிகப்பெரிய ஆபத்து நடக்கவிருக்கிறது உடனே ஜெபி" என்று சொன்னாராம்.
அந்த சகோதரியும் "ஆண்டவரே உம் ஒருவரால் மட்டும்தான் எனது பிள்ளையை பாதுகாக்க முடியும். என்னால் ஒன்றுமே செய்ய முடியாது, நான் பள்ளிக்கு போகும் முன்னால் எதுவேண்டுமானாலும் நடந்துவிடலாம். எனது பிள்ளையை பாதுகாத்து கொள்ளும், பாதுகாத்து கொள்ளும்" என்று கதறி ஜெபித்து மற்றாடியிருக்கிரார்கள்.
சரியாக அதேநேரத்தில் பள்ளியில் பாடம் சொல்லிகொடுத்து கொண்டிருந்த ஆசிரியை அவர்களது மகளை அழைத்து வெளியில் இருக்கும் கடையில்போய் ஏதோ ஒரு பொருள் வாங்கிவரசொல்ல, அந்த பிள்ளையும் வெளியில் வந்து வேகமாக ரோட்டை கிராஸ் பண்ணும்போது வேகமாகவந்த ஒரு பைக்கில் அடிபட்டு ஓரளவு காயத்துடன் பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் தப்பித்துகொண்டது.
நடக்கவிருந்த மிகப்பெரிய ஆபத்தானது அந்த சகோதரியின் ஜெபத்தால் சிறிய பாதிப்போடு முடிந்துவிட்டது என்பது பலரது கருத்தாக இருக்கிறது. நாமும் அதை மறுப்பதற்கில்லை
ஆனால் இங்கு எனது கேள்வி என்னவெனில் என்னதான் ஜெபித்தும் அந்த சகோதரி கதறியும் வந்த ஆபத்தை முற்றிலும் தேவனால் தவிர்க்க முடைவில்லையே ஏன்?
ஒரு குறிப்பிட்ட சம்பவம் நடக்கபோகிறது என்பது ஆண்டவருக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் அந்த சம்பவத்தை நடக்கவிடாமல் தடுக்க மனிதர்களின் ஜெபம் அவசியமாகிறதா?
இங்கு தேவனின் திட்டம் நிறைவேறுவதில் மனிதனின் பங்கு என்ன?
ஒருவேளை சாத்தான்தான் அந்த விபத்தை கொண்டுவந்ததாக இருந்தாலும், அந்த திட்டத்தை முறியடிக்க ஜெபம் எவ்விதத்தில் அவசியமாகிறது?
இன்னும் அனேக குழப்பமான கேள்விகள் இந்த சம்பவத்தின் மூலம் எழுகிறது!.
கடந்தமுறை சுனாமி வந்திருந்தபோது ஆண்டவரின் எச்சரிப்பால் பல தேவபிள்ளைகள் அதிஸ்டவசமாக உயிர் தப்பியதாக சாட்சி சொன்னார்கள். சிலர் அதை நம்புகின்றனர் பலர் அதை நம்புவது இல்லை.
இந்த சம்பவங்களில் யாருக்கு என்ன புரிகிறதோ இல்லையோ. எனக்கு ஒருகாரியம் நிச்சயம் புரிகிறது.
இந்த உலகில் நடக்கும் அல்லது நடக்கபோகும் எல்லா காரியமும் தேவனுக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் அவரால் எல்லா காரியத்தையும் தனது விருப்பபடி அல்லது அவரது சித்தப்படி மாற்றி அமைக்க முடியவில்லை. பரமண்டலங்களில் செயல்பட்ட்டுகொண்டிருபதுபோல அவரது சித்தம் பூமியில் முழுமையாக செயல்பட வில்லை. காரணம் இந்த உலகத்தின் அதிபதி சாத்தானாக இருக்கிறான். ஆகினும் உலகத்தில் இருப்பவனைவிட நம்முள் இருக்கும் தேவன் பெரியவராக இருப்பதால் "உம்முடைய சித்தம் நிறைவேறுவதாக" என்று தேவஆவியில் நிரந்து நாம் செய்யும் ஜெபத்தில் மூலம் மட்டுமே தேவன் இந்த உலகத்துக்குள் தன்னுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியும் என்று கருதுகிறேன்.
//இந்த உலகில் நடக்கும் அல்லது நடக்கபோகும் எல்லா காரியமும் தேவனுக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் அவரால் எல்லா காரியத்தையும் தனது விருப்பபடி அல்லது அவரது சித்தப்படி மாற்றி அமைக்க முடியவில்லை. பரமண்டலங்களில் செயல்பட்ட்டுகொண்டிருபதுபோல அவரது சித்தம் பூமியில் முழுமையாக செயல்பட வில்லை. காரணம் இந்த உலகத்தின் அதிபதி சாத்தானாக இருக்கிறான்.//
அன்பு சகோதரரே நீங்கள் விமர்சனத்தை சரியான முறையில் எடுத்துகொள்ளுகிறது இல்லை என்பதால் நான் உங்களுடைய தளத்தில் எழுதவேண்டாம் என்று தீர்மானித்து இருந்தேன். நீங்கள் வேதத்தை அதன் முழுமையில் அறியாமல் ஒரு வசனத்தை நேரடியாக அர்த்தத்தை எடுத்து அது 100 வசனங்களோடு முரண்பட்டாலும் கவலைப்படாமல் எழுதுகிறீர்கள். இதை வாசிக்கிற, வசனத்தை சரியாக புரிந்து கொள்ளாத ஒருவர் நிச்சயமாக வஞ்சிக்கப்படுவது உறுதி!!
நீங்கள் இங்கே எழுதுகிற பெரும்பாலான காரியங்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் மேல சொன்ன விஷயம் மிக மிக தப்பு !! தேவன் அவர் செய்யும் எல்லா காரியங்களிலும் முற்றிலும் சுதந்திரமாகவும், பிசாசுக்கும் தேவனாகவும் இருக்கிறவர். எல்லாம் அவர் திட்டமிட்டபடியே நடக்கும். பார்வோனை கடினபடுத்தி தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்துவது அவர் சித்தம். மறுபடியும் நீங்கள் "தேவனின் இரு சித்தங்கள்" என்ற பொருளில் உள்ள கட்டுரையை வாசித்தால் அது உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
கடைசியாக ஒரு சின்ன தகவல் "வேதத்தை வாசித்து ஒரு வசனத்தை புரிந்து கொள்ளும்போது, நாம் புரிந்து கொண்ட விதம் மற்றொரு வசனத்தை Contradict பண்ணினால் வசனம் தவறல்ல ஆனால் முதல் வசனத்தை குறித்த நம் புரிந்து கொள்ளுதல் தவறு என்று தீர்க்கவேண்டும்"
நான் சொன்னதை அறிவுரையாக எடுத்துகொண்டு கோபப்படாமல் சற்று சிந்திக்கும் படியும், தேவனிடத்தில் இதைக்குறித்து ஜெபிக்கும் படியும் கேட்டுக்கொள்கிறேன்.
Bro: John Wrote ///அன்பு சகோதரரே நீங்கள் விமர்சனத்தை சரியான முறையில் எடுத்துகொள்ளுகிறது இல்லை என்பதால் நான் உங்களுடைய தளத்தில் எழுதவேண்டாம் என்று தீர்மானித்து இருந்தேன்.///
அன்பு சகோதரர் ஜான் அவர்களே, தங்களின் தாழ்மையான பதிலுக்கு மிக்க நன்றி. நான் விமர்சனத்தை வெறுப்பவன் அல்ல! ஆனால், ஒருவர் எழுதிய கருத்தை தவறு என்று தீர்த்து அந்த பதிவை நீங்குங்கள் என்று சொல்வதற்கு முன், அதை விமர்சிப்பவர் அந்த கருத்தின் உண்மை தன்மை என்னவென்பதை சரியாக அறிந்திருக்க வேண்டும். அல்லது அதை புரியும்படி விளக்க தெரிந்திருக்க வேண்டும். "அதன் உண்மை தன்மை எனக்கு தெரியாது, ஆனால் நீங்கள் எழுதியது தவறு, அதை நீக்குங்கள்" என்று எழுதுவது ஒரு சரியான விமர்சனமா? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். நான் தளங்களில் எவ்வளவோ எழுதியிருக்கிறேன் அனால் யாரிடமும் (மோசமாக சாபமிட்ட ஒருவரைத் தவிர) "நீ எழுதியது தவறு உன் பதிவை நீக்கு" என்று எழுதியதாக எனக்கு நியாபகம் இல்லை. ஏனெனில் நான் அனைத்தும் அறிந்தவன் அல்ல என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. ஆனால் திரித்துவம் என்பதற்கு தாங்கள் எந்த சரியான விளக்கமும் கொடுக்காமலேயே, எனது பதிவை நீக்கும்படி எழுதியிருந்தது என்னை சற்று பாதித்தது அதேபோல் இப்பொழுதும்கூட உண்மையை அறிய விரும்பாமல் "மிக மிகதவறு" என்று அனைத்து உண்மையையும் அறிந்தவர்போல் எழுதியிருக்கிறீர்கள். நல்லது!
இப்பொழுது நான் தங்களிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்டுக்கொண்டு பின்னாலே போனால் இறுதியில் ஒரு கட்டத்தில் ஒரு சில கேள்விகளுக்கு பதில் தேவனுக்கு தான் தெரியும் எனக்கு தெரியாது என்று சொல்லி சுலபமாக எஸ்கேப் ஆகிவிடு வீர்கள். உதாரணமாக வேதத்தில் இல்லாத "திரித்துவம்" மற்றும் "தேவனின் இருசித்தங்கள்" போன்றவற்றை எடுத்து கொள்வோம். அது தேவனுக்குதான் தெரியும் என்று முடித்து விடுவீர்கள்.
அதாவது அனைத்துக்கும் அடிப்படையான ஒரு காரியம் வரும்போது அது தங்களுக்கு தெரியாது. பின்னர் மேலேயுள்ள தங்களின் கணிப்பு மட்டும் சரி என்பதை எப்படி அறுதியிட்டு சொல்கிறீர்கள்?
ஒரு கட்டிடத்தின் மேலே இருந்துகொண்டு, சிலர் சொல்லும் கருத்தின் அடிப்படையில் "இது இந்த பொருட்களால் இப்படித்தான் கட்டப்பட்டுள்ளது, இது இவ்வளவு நாள் நிற்கும், இது ரொம்ப வலிமையானது என்றெலாம் விமர்சிக்கும் நீங்கள், அதன் அடிப்படை(foundation) என்று வரும்போது "அது கட்டியவனுக்கு தான் தெரியும்" என்று சொல்வீர்களானால் தங்களின் கணிப்பு எல்லாமே தவறாக போய்விடுமே! ஓன்று அந்த கட்டிடத்தை கட்டியவரிடம் அமர்ந்து உண்மையை கேட்டு அறிந்துவிட்டு பின்னர் மேலேயிருக்கும் ஸ்திரத்தன்மையை பற்றி பேசவேண்டும் இல்லையேல் "இது இப்படித்தான் இருக்கும் என்பது எனது அனுமானம்" என்று தான் சொலவேண்டிமே தவிர இதுதான் சரி மற்றது தவறு என்று தீர்மானிக்க கூடாது.
ஆனால் நான் அறிந்தவரை "இது தேவனுக்குதான் தெரியும்" என்று சொல்லும் அளவுக்கு மறைவான கருத்துக்கள் எதுவும் இல்லாத அளவுக்கு ஆதியில் இருந்து அனைத்து கேள்விகளுக்குமே அழுது மற்றாடி தேவனிடமிருந்து பதிலை அறிந்து கொண்டுள்ளேன். யாருக்கும் தனது சாயலை காட்ட விரும்பாத தேவன் மோசே கேட்டபோது அவனுக்கு செவிகொடுக்கவில்லையா? அதுபோல் நானும் எல்லா கேள்விக்குமே தேவனிடமிருந்து பதில்லை அறிந்துகொண்டுள்ளேன். அடுத்த மனிதன் சொல்வதை நான் ஏன் கேட்கவேண்டும்?
நீங்கள் தேவனிடமிருந்து பதில் அறிந்துள்ளீர்களா? அவர் ஜீவனுள்ளவர்தானே தன்னிடம் கேட்பவர்களுக்கு உண்மையை நிச்சயம் உணர்த்துவார். ஆண்டவரிடம் அமர்ந்து விசாரித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் நாம் அதில் வேறுபாடுகள் இருக்கிறதா என்பதை ஆராயலாம். மற்றபடி ஏதோ மாம்சமான மனிதன் எழுதிய கட்டுரையை எல்லாம் கருத்தில் கொண்டு தேவன் எனக்கு தெரியப்படுத்தியவை க்ளை நான் தள்ள முடியுமா சகோதரரே?
நான் எழுதுவதற்கு "வசனஆதாரமே இல்லை" என்றால் நான் நிச்சயம் தவறான வழியில் இருக்கிறேன் என்பதை ஏற்றுக்கொள்வேன் ஆனால் "ஒருவன் என் வார்த்தையை கைகொண்டால் அவன் மரணத்தை காண்பதில்லை" என்று நேரடியான வார்த்தைகள் இணை வசனத்தோடு எழுதப்பட்டிருக்க, அந்த வசனங்களை அனைத்துக்கும் அடிப்படையாககொண்டு தேவன் எனக்கு தெரியப்படுத்தியவைகளை அது அப்படியல்ல இப்படி என்று மாற்றிசொன்னால் மனுஷனின் புரிதலுக்கு ஏற்ப தேவனின் வசனங்களை புரட்டி பொருள்கொள்ள வேண்டுமா?
நான் யார் பக்கமும் சாய்வதில்லை என்னுடய கருத்துக்கள் வேறுபட்டதாகவும், முழுமையானதாகவும் இருக்கும். எல்லா கேள்விகளுக்குமே அங்கு பதில்இருக்கும். "தேவனை பெரியவராக காண்பிக்கிறேன்" என்ற பெயரில் சாத்தானை அவரே பினாமியாக வைத்து காரியங்களை செய்கிறார் என்று அவர்மேல் பழியைபோடாது.
தேவன் எவ்விதத்திலும் நீதியுள்ளவர் குற்றமற்றவர் என்பதே எனது கருத்துக்களின் அடிப்படை. அவரே தீமையை அனுமதித்துவிட்டு பின்னர் அவரே தனது குமரனை பலியாக அனுப்பி இயேசு "இந்த பாத்திரம் நீங்க கூடுமானால் நீக்கும்" என்று ஜெபித்தும்கூட இரக்கமில்லாமல் சிலுவையில் துடிக்க துடக்க அறைவதற்கு ஒப்புகொடுத்தார் என்பதெலாம் தேவன்மேல் பழி சுமத்தும் அர்த்தமற்ற கதைகள்.
BRO. JOHN WROTE
/////நீங்கள் வேதத்தை அதன் முழுமையில் அறியாமல் ஒரு வசனத்தை நேரடியாக அர்த்தத்தை எடுத்து அது 100 வசனங்களோடு முரண்பட்டாலும் கவலைப்படாமல் எழுதுகிறீர்கள்//.
சகோதரரே வேதத்தில் தேவன் ஒரு வார்த்தையை ஒருமுறை சொன்னாலும் நூறு முறை சொன்னாலும் தேவ வார்த்தை தேவவார்த்தைதானே? பத்து முறை சொல்லபட்ட வார்த்தைக்கு வல்லமை உண்டு ஒருமுறை சொல்லபட்ட வார்த்தைக்கு வல்லமை இல்லை என்று எடுக்க முடியுமா?
லூக்கா 4:4 : மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்
என்னுடைய கருத்துப்படி பத்து முறை சொல்லப்பட்ட வரத்தை அதன்வேலையை செய்துகொண்டிருக்கும் ஒருமுறை சொல்லப்பட்ட வார்த்தை அதன்வேலையை செய்துமுடிக்கும்
ஏசாயா 55:10மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, 11. அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
தேவனின் ஒவ்வொரு வார்த்தையும் அதன் வேலையை. நிச்சயம் செய்துகொண்டு இருக்கும். இதில் ஒருமுறை சொன்னது ஒன்பது முறை சொன்னது என்ற பாகுபாடு கிடையாது என்றெ நான் நினைக்கிறேன்.
BRO. JOHN WROTE: ///இதை வாசிக்கிற, வசனத்தை சரியாக புரிந்து கொள்ளாத ஒருவர் நிச்சயமாக வஞ்சிக்கப்படுவது உறுதி!!///
சகோதரரே, நீண்ட நாட்களாக என்னுடைய கருத்துக்களில் எந்த கருத்து பிறர் வஞ்சிக்கப்பட வழி செய்யும் என்பதை நான் அறியவேண்டும் ஏற்று ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். தயவு செய்து எனது ஓரிரண்டு கருத்துக்களை சொல்லி அது எவ்வாறு மற்றவரை வஞ்சிக்கும் என்பதைகொஞ்சம் விளக்குங்கள். நான் பலரிடம் இது சம்பந்தமாக கெஞ்சி கேட்டும் பதில் எதுவும் தரவில்லை சிரமம்பாராமல் இதை செய்யுங்கள். தவறு இருந்தால் நான் என்னை நிச்சயம் திருத்திகொள்வேன்.
ஆனால் தாங்களைபோன்ற கொள்கையில் இருப்பவர்கள் கொண்டுள்ள கருத்துக்குள் அநேகரை நித்தியத்தை இழக்க வைக்கும் பாதையில் நடத்திவிடும் என்பதை ஏன் தங்களால் அறிய முடியவில்லை.
"கிறிஸ்த்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்" என்ற பவுல் வார்த்தை ஏற்கும் நாம் "அன்பினால் கிரியை செய்யும் விசுவாசமே" உதவும் என்று போதித்து விட்டு, அதே பவுல்
I கொரிந்தியர் 6:10திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.
என்று பட்டியல் போட்டு சொன்ன காரியங்களை பற்றி கவலையில்லாமல் தள்ளி விடுகிறோம். பட்டியலே வேண்டாம் என்கிறோம். இது ஜனங்களை வஞ்சித்து தேவனின் ராஜ்யத்தை விட்டு பிரிக்காதா?
அதுபோல் இந்த உலகத்தில் தேவனின் சித்தப்படிதான் எல்லாமே நடக்கும் என்று முடிவாக சொன்னால், அது இரண்டு தவறான வழியில் ஜனங்களை திருப்புகிறது.
1. நான் சுயமாக என்னதான் செய்தாலும் அதில் பலனில்லை. தேவன் என்மீது என்ன திட்டம் வைத்திருக்கிறாரோ அதுதான் நிறைவேறம். அதாவது தேவன் ஒருவரை நரகத்துக்கு என்றெ படைத்திருந்தால் அவர்கள் நரகத்துக்குதான் போவார்கள் அதில் நம்முடைய செயல்பாடுகள் எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது என்று வேடேத்தியாக செயல்பட வாய்ப்பு உருவாகும்.
2. என்னதான் ஒரு பிள்ளை மோசமான பிழையாக இருந்தாலும் ஒரு தகப்பனானவன் அந்த பிள்ளையை முற்றிலும் கைவிடுவது இல்லை. உலக தகப்பனே இவ்வாறு இரக்கமாக பாசமாக இருக்கும்போது நமது பரம தகப்பன் சில அடிகள் கொடுத்துவிட்டு நிச்சயம் நம்மை காப்பாற்றிவிடுவார் எனவே நாம் இஸ்டம்போல வாழலாம் என்ற எண்ணமும் ஏற்ப்பட வாய்ப்புண்டு. சகோதரர அவர்களே! எனது எழுத்துக்களில் எந்த காரியம் மனிதனை வஞ்சிக்கும் வழியில் திருப்பி விடுகிறது எனபதை கொஞ்சம் விளக்கமாக சொல்வீர்களானால் நான் என்னை ஆராய்ந்துகொள்ள வசதியாக இருக்கும். பொத்தம் பொதுவாக சொல்லும் காரியங்களை என்னால் ஏற்க்க முடியவில்லை மன்னிக்கவும்.
-- Edited by SUNDAR on Saturday 12th of March 2011 05:35:35 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//ஆனால் நான் அறிந்தவரை "இது தேவனுக்குதான் தெரியும்" என்று சொல்லும் அளவுக்கு மறைவான கருத்துக்கள் எதுவும் இல்லாத அளவுக்கு ஆதியில் இருந்து அனைத்து கேள்விகளுக்குமே அழுது மற்றாடி தேவனிடமிருந்து பதிலை அறிந்து கொண்டுள்ளேன். //
நீங்கள் அப்படி நினைத்தால் உங்களிடம் என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. வேதத்தை விட நீங்கள் உங்களுடைய (அதாவது தேவனிடம் இருந்து பெற்றதாக நீங்கள் நினைக்கும்) கருத்துக்களை பெரிதாக கருதுகிறீர்கள். நான் வேதத்தில் வாசித்த வரை உங்கள் அளவுக்கு தேவனுடைய ரகசியம் எல்லாம் தெரிந்த ஒருவரும் இல்லை சொல்லுவேன். கிழே உள்ள வசனத்தை படியுங்கள். அதை குறித்து நீங்கள் என்ன நினைகிறீர்கள்
ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை. (I கொரிந்தியர் 8:2)
//ஏதோ மாம்சமான மனிதன் எழுதிய கட்டுரையை எல்லாம் கருத்தில் கொண்டு தேவன் எனக்கு தெரியப்படுத்தியவை க்ளை நான் தள்ள முடியுமா சகோதரரே? //
ஒன்று சொல்லுகிறேன் கோபம் கொள்ளாதீர்கள். நீங்களும் மாம்சத்தில் தானே சகோதரரே இருக்கிறீர்கள்? இன்னொருவர் எழுதியதை வாசிக்கமறுக்கும் தங்களும் எழுதகூடாது அல்லவா?
//தேவன் எவ்விதத்திலும் நீதியுள்ளவர் குற்றமற்றவர் என்பதே எனது கருத்துக்களின் அடிப்படை. அவரே தீமையை அனுமதித்துவிட்டு பின்னர் அவரே தனது குமரனை பலியாக அனுப்பி இயேசு "இந்த பாத்திரம் நீங்க கூடுமானால் நீக்கும்" என்று ஜெபித்தும்கூட இரக்கமில்லாமல் சிலுவையில் துடிக்க துடக்க அறைவதற்கு ஒப்புகொடுத்தார் என்பதெலாம் தேவன்மேல் பழி சுமத்தும் அர்த்தமற்ற கதைகள். //
தீமையை அவர் அனுமதிக்கவில்லை ஆனால் அவர் சாத்தானை அடக்க முடியாததால் அவை நடக்கின்றன என்றால் அவர் நிச்சயமாக சர்வவல்லவர் என்ற பெயருக்கு பொருத்தமானவர் இல்லை. சுருங்க சொன்னால் தேவனில்லை.இயேசு இந்த பாத்திரம் நிங்கக்கூடுமானால்...என்று ஜெபித்தது அவருடைய மாம்சத்தில் அதே இயேசு இன்னொரு இடத்தில் சொல்லுகிறார்.
ஒருவனும் அதை (அவருடைய ஜீவனை) என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. (யோவான் 10:18)
//இப்பொழுது நான் தங்களிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்டுக்கொண்டு பின்னாலே போனால் இறுதியில் ஒரு கட்டத்தில் ஒரு சில கேள்விகளுக்கு பதில் தேவனுக்கு தான் தெரியும் எனக்கு தெரியாது என்று சொல்லி சுலபமாக எஸ்கேப் ஆகிவிடு வீர்கள். உதாரணமாக வேதத்தில் இல்லாத "திரித்துவம்" மற்றும் "தேவனின் இருசித்தங்கள்" போன்றவற்றை எடுத்து கொள்வோம். அது தேவனுக்குதான் தெரியும் என்று முடித்து விடுவீர்கள். //
நிச்சயமாக! எல்லாம் ஒருவனுக்கு தெரிந்து விட்டால் அவன் தேவனாகி விடுவான். விசுவாசம் என்று ஒன்று தேவையே இல்லை! எல்லாம் தெரியும் என்றால் எதற்கு விசுவாசம்?
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. (எபிரெயர் 11:1) //சகோதரரே வேதத்தில் தேவன் ஒரு வார்த்தையை ஒருமுறை சொன்னாலும் நூறு முறை சொன்னாலும் தேவ வார்த்தை தேவவார்த்தைதானே? பத்து முறை சொல்லபட்ட வார்த்தைக்கு வல்லமை உண்டு ஒருமுறை சொல்லபட்ட வார்த்தைக்கு வல்லமை இல்லை என்று எடுக்க முடியுமா?//
நான் அப்படி சொல்லவில்லை சகோதரரே. நான் திரும்பவும் சொல்லுகிறேன் "வேதத்தை வாசித்து ஒரு வசனத்தை புரிந்து கொள்ளும்போது, நாம் புரிந்து கொண்ட விதம் மற்றொரு வசனத்தை Contradict பண்ணினால் வசனம் தவறல்ல ஆனால் முதல் வசனத்தை குறித்த நம் புரிந்து கொள்ளுதல் தவறு என்று தீர்க்கவேண்டும்"
//சகோதரரே, நீண்ட நாட்களாக என்னுடைய கருத்துக்களில் எந்த கருத்து பிறர் வஞ்சிக்கப்பட வழி செய்யும் என்பதை நான் அறியவேண்டும் ஏற்று ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். தயவு செய்து எனது ஓரிரண்டு கருத்துக்களை சொல்லி அது எவ்வாறு மற்றவரை வஞ்சிக்கும் என்பதைகொஞ்சம் விளக்குங்கள். நான் பலரிடம் இது சம்பந்தமாக கெஞ்சி கேட்டும் பதில் எதுவும் தரவில்லை சிரமம்பாராமல் இதை செய்யுங்கள். தவறு இருந்தால் நான் என்னை நிச்சயம் திருத்திகொள்வேன். //
யெகோவாவின் சாட்சிகள், வேத மாணவர்கள், மார்மன்ஸ் எல்லாரும் உங்களை போலவே வேதத்தில் தேவன் எங்களுக்கு இதை வெளிப்படுத்தினார் என்று தங்களுடைய சொந்த வெளிப்பாட்டை வேதத்திற்கு மேலாக உயர்த்தி தங்களும் வஞ்சிக்கப்பட்டு, மற்றவர்களையும் வஞ்சித்தார்கள். நீங்கள் இப்போது செய்வதை தொடர்ந்தால் முடிவு அதே மாதிரியே இருக்கும்.
மறுபடியும் கேட்கிறேன். நான் கொடுத்த 2 தொடுப்புகளையும் (திரித்துவம் மற்றும் தேவனில் இரு சித்தங்கள்) வாசித்தீர்களா? அதிலே என்ன தவறு கண்டீர்கள்?
சகோதரர் ஜான் அவர்களே, தங்கள் கேள்விகள் நியாயமானதும் சரியான விளக்கம் தரவேண்டியதும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. தங்கள் விமர்சனத்துக்கு நான் முடிந்த வரை ஒவ்வொன்றாக விளக்கம் தருகிறேன்.
அவைகளை தனி திரியாக விவாதிக்கலாம். அதில் ஒரு முக்கிய கருத்துக்கு என்னுடைய விளக்கம் கீழ்கண்ட திரியில் இருக்கிறது. அதை படித்து தங்கள் கருத்தை கூறவும்.
இந்த திரி தலைப்பை விட்டு மாறி செல்வதாக நான் கருதுவதால் இந்த திரியில் ஜெபத்துக்கும் உலக சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றிய கருத்தை மட்டும் இங்கு பதிவிடலாம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)