இயேசு சிலுவையில் அறையப்படவில்லை அவருக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டார் என்றே வைத்துக்கொள்வோம். இந்த உண்மையை ஏன் இயேசு அல்லது இறைவன் சீடர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை?
இயேசு தன்சீடர்களிடம் இந்த உண்மையைச் சொல்லத் தான் செய்தார். அவரது சீடர்களுக்கும் அதுதெளிவாக விளங்கத் தான் செய்தது. கிறித்தவ பாதிரிமார்கள் தவறான கொள்கை காரணமாககண்ணை மூடிக் கொள்வதால் அவர்களுக்கு அது விளங்காமல் போய் விட்டது. அதன் காரணமாககிறித்தவ அப்பாவிகளுக்கும் விளங்காமல் போய் விட்டது.
இயேசு சிலுவையில்அறையப்பட்டதாக அவரது சீடர்கள் எண்ணிக் கொண்டிருந்த போது இயேசு அவர்கள் முன்காட்சியளித்து கூறியதைக் கீழே காணுங்கள்.
இவைகளைக்குறித்துஅவர்கள் பேசிக் கொண்டிருக்கையில்,இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம்என்றார்;.
44.அவர்களை நோக்கி: மோசேயின்நியாயப் பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்துஎழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று,நான் உங்களோடிருந்த போது உங்களுக்குச்சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.
லூக்கா24:37-44
இயேசு அவளை நோக்கி:என்னைத் தொடாதே,நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை;நீ என் சகோதரரிடத்திற்குப்போய்,நான் என்பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும்,என் தேவனிடத்திற்கும் உங்கள்தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
19.வாரத்தின் முதல் நாளாகியஅன்றையத்தினம் சாயங்கால வேளையிலே,சீஷர்கள் கூடியிருந்த இடத்தில்,யூதர்களுக்குப்பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில்,இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச்சமாதானம் என்றார்;.
யூதர்களிடமிருந்துதப்பித்து வந்த போது சீடர்கள் ஆவி என்று நினைக்கிறார்கள். ஆனால் இயேசு அதை மறுத்துநன் ஆவி அல்ல என்கிறார். மாமிசம் எலும்புகள் தனக்கு இருப்பதை காட்டுகிறார். தொட்டுப்பார்க்கச்சொல்லி உறுதி படுத்துகிறார். மேலும் அவர்களிடம் உணவை வாங்கி சாப்பிட்டுகாட்டியுள்ளார். இதில் இருந்து சிலுவையில் அவர் அறையப்படவில்லை. அவர் தப்பித்துஉயிருடன் ஓடி வந்து விட்டார் என்பதை அறியலாம். மேலும் அவர் கொல்லப்பட்டு ஆவியாகஇருந்தால் அவர் நடைப் பயணமாக பல ஊர்களைக் கடந்து சீசட்ர்களை சந்திக்க தேவை இல்லை. அடுத்தவிநாடியே சீட்ர்கள் முன் தோன்றி இருப்பார்.
இயேசு தப்பிப்பிழைத்து தான் சீட்ர்கள் முன் காட்சி அளித்தார் என்ற உண்மையுடன் பவுலடிகள் கலந்துவிட்ட பொய்யும் சேர்ந்து விட்டதால் கிறித்தவர்களுக்கு உண்மை புரியாமல் போய்விட்டது.
சகோ. சிட்டிக் அவர்களே, தங்களுக்கு திருக்குர்ஆன் மீதுள்ள நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன் அதற்காக பைபிளில் உள்ள ஒரே ஒரு வசனத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் இயேசு மரணிக்கவில்லை என்று சிலர் எழுதிய கட்டுரைகளை இங்கு பதிவிடுவதால் என்ன பயன் ஏற்ப்படபோகிறது சொல்லுங்கள்.
தனது ஊழியத்தின் தொடக்கத்தில் இருந்தே இயேசு "தான் பாடுபடவும் மரிக்கவும் மூன்றாம் நான் உயிர்க்கவும் வேண்டும்" என்பதை பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
லூக்கா 9:22மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்
அதுமட்டுமல்ல அவர் உயிர்த்த பிறகு பூட்டிய வீட்டுக்குள் பிரவேசிக்க முடிந்தது.
யோவான் 20:19வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்
நம்போன்ற சாதாரண மனிதனால் அது முடியாது.
அடுத்து தோமா என்னும் சீஷன் அவரை சந்தேகப்பட்டு தொட்டு பார்க்கிறான்
27. பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
அதுபோக பழையஏற்பாட்டு தீர்க்கதரிசிகளில் இருந்து வேதாகமம் முழுவதும் அவர் மரித்ததற்க்கான ஆதாரங்கள் எழுதப்பட்டுள்ளது. அவ்வளவு பட்டபகலில் நடந்த அந்த சம்பவத்தை, "இல்லை" என்று மறுப்பதன் மூலமே திருக்குர்ரானின் உண்மை தன்மை கேள்விக்குறியாகிறது. ஒருவேளை இயேசு அவ்வாறு மரிக்காமல் உயர்த்தப் படுவதாக இருந்தால் நிச்சயம் தன் சீஷர்களுக்கு சொல்லியிருப்பார். அதுபற்றி யாரும் எழுதவில்லை. எல்லோரும் சேர்ந்து மொத்தமாக மறைத்து விட்டார்கள் என்பது தவறான கருத்து. ஒரே ஒரு ஆள் எழுதிய வேதமாகிய திருக்குரானை நிரூபிக்க பலரால் எழுதப்பட்ட வார்த்தைகளை தவறு என்று தீர்ப்பது சரியா?
வேறு எங்காவது இருந்து ஆதாரம் எடுத்து "இயேசு மரிக்கவில்லை" என்று சொன்னாலாவது நாம் ஓரளவுக்கு அது குறித்து விவாதிக்கலாம். அவர் மரித்து உயிர்த்து மற்றவர்களுக்கு காட்சி கொடுத்த ஒரு சம்பவத்தை எடுத்து அவர் மரிக்கவில்லை என்று சொல்வது என்ன நியாயம். அவர் சாப்பிட்டார் அவருக்கு எலும்பும் மாம்சமும் இருந்தது என்பது உண்மை! அதைதானே நாங்களும் சொல்கிறோம் மரித்து கல்லறையில் வைக்கப்பட்ட அவர் மரணத்தை ஜெயம் கொண்டு அப்படியே இருந்தபிரகாரம் எழுதுவிட்டார். அது பின்னாளில் மனுஷர்களுக்கு நடக்கபோகும் நிகழ்வுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது. தாங்கள் சுட்டும் வசனத்தில் இயேசு எங்காவது"நான் மரிக்கவில்லை பிதா என்னை மரிக்காமல் உயர்த்திவிட்டார்" என்று சொல்லியிருக்கிறாரா?
மேலும் இந்த தளத்தில் 90௦% சொந்த கருத்துக்கள்தான் இடம்பெற்றுள்ளது எனவே தாங்களும் முடிந்தவரை தங்கள் சொந்த கருத்துக்களை எழுதும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
-- Edited by SUNDAR on Monday 14th of March 2011 03:36:20 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
"இயேசு சிலுவையில் மரித்தார்" என்று மக்கள் அனைவரும் நம்பும்படி அல்லா எல்லா மக்களையும் ஏமாற்றினார் என்று குர்-ஆன் சொல்கிறது. இயேசுவை கொல்ல நினைத்தவர்களை மட்டும் ஏமாற்ற வேண்டும் என்பது தான் அல்லாவின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கும். ஆனால் இயேசுவின் உண்மையாக பின்பற்றிய சீடர்களும் அல்லாவால் ஏன் ஏமாற்றப்பட்டனர்? அவர்களுக்கு தெரியுமா இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று.
யூதர்களுக்கு மறைக்கப்பட்ட இந்த உண்மை இயேசுவின்சீடர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் பின்னாளில் மத குருமார்கள் மறைத்துவிட்டனர் என்பதே உண்மையாகும்.
இயேசுவின் சீடரான பர்னபா அவர்கள் எழுதியசுவிஷேசத்தில் இந்த உண்மைகள் தெளிவாக சொல்லப்பட்டன. அதை இருட்டடிப்பு செய்ததால்இன்றைய அப்பாவி கிறித்தவர்களுக்கு இது தெரியாமல் போய் விட்டது.
பர்னபாஸின் சுவிசேஷம் (ஆங்கிலத்தின் தமிழாக்கம்)
பர்னபாஸின் சுவிஷேசம் 222 அதிகாரங்களைக் கொண்டது. இதில் இயேசுவை சிலுவையில் அறைவதற்காகஎதிரிகள் திட்டமிட்ட போது என்ன நடந்தது என்பதை 215 முதல் பர்னபா விரிவாகவிளக்குகிறார். அதில் 215, 216 217 ஆகிய அதிகாரங்களை மட்டும் கீழே தருகிறோம்.
215.
When the soldiers with Judasdrew near to the place where Jesus was, Jesus heard the approach of many people,wherefore in fear he withdrew into the house. And the eleven were sleeping.
Then God, seeing the dangerof his servant, commanded Gabriel, Michael, Rafael, and Uriel, his ministers, totake Jesus out of the world.
The holy angels came and tookJesus out by the window that looketh toward the South. They bare him and placedhim in the third heaven in the company of angels blessing God for evermore.
இயேசு நின்ற இடத்திற்கு அருகே யூதாசும் படையாளிகளும்வந்தடைந்த போது இயேசு ஜனங்களின் ஆரவாரத்தைக் கேட்டார். வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றார்.பயத்தின் காரணமாக அவர் வீட்டிற்குள் பின்வாங்கிச் சென்றார். பதினொரு அப்போஸ்தலர்களும்அப்போது நித்திரையிலிருந்தனர்.
அப்பொழுது கர்த்தர் தன் ஊழியக்காரனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதைஅறிந்து, தன்னுடைய மந்திரிகளாகிய கப்ரியேல், மீக்காயேல், ராஃபேல்,உரியேல் என்போருக்கு இயேசுவைப்பூலோகத்திலிருந்து புறமே எடுத்துவிடும் படிக்குக் கட்டளையிட்டார்.
தெற்குப் பக்கமாக திறந்திருக்கும் சாளரம் வழியாக இயேசுவை தேவ ஊழியர்கள் வெளியே எடுத்தார்கள். அவரையும்கொண்டு அவர்கள் கர்த்தரின் அருள் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடிய தேவ ஊழியக்காரர்கள்தங்கியிருக்கக் கூடிய மூன்றாவது வானத்துக்குக் கொண்டு சென்றார்கள்.
216.
Judas entered impetuouslybefore all into the chamber whence Jesus had been taken up. And the discipleswere sleeping. Whereupon the wonderful God acted wonderfully, insomuch thatJudas was so changed in speech and in face to be like Jesus that we believed himto be Jesus. And he, having awakened us, was seeking where the Master was. Whereuponwe marvelled, and answered: ‘Thou, Lord, art our master; hast thou nowforgotten us?’
And he, smiling, said: ‘Noware ye foolish, that know not me to be Judas Iscariot!’
And as he was saying this thesoldiery entered, and laid their hands upon Judas, because he was in every waylike to Jesus.
We having heard Judas’ saying,and seeing the multitude of soldiers, fled as beside ourselves.
And John, who was wrapped ina linen cloth, awoke and fled, and when a soldier seized him by the linen clothhe left the linen cloth and fled naked. For God heard the prayer of Jesus, andsaved the eleven from evil.
இயேசு எடுக்கப்பட்ட உடனே யூதாஸ் மற்றவர்கள் முன்னிலையில்அறைக்குள் சாடிச் சென்றான். அப்போது எல்லா அப்போஸ்தலர்களும் நித்திரை கொண்டிருந்தனர்.அப்பொழுது அற்புதங்களை உடைய கர்த்தர் அற்புதத்தை நிகழ்த்தினார்! யூதாசின் உரையாடலும்அவனது முகமும் இயேசுவினுடையது போல ஆயிற்று! நாங்கள் அனைவரும் அவன் இயேசுவென்று நினைக்கும்நிலைக்கு ஆகிவிட்டது! எங்களை எழுப்பி அவன் குரு எங்கே என்று தேடினான். அப்பொழுது நாங்கள்வியப்புடன் அவனுக்குப் பதில் கூறினோம் ”ஆண்டவரே! தாங்கள் தானே எங்களுக்கு குருவானவர், இப்போது எங்களை மறந்து விட்டீர்களா?”அவன் புன்னகைத்துக் கொண்டுகூறினான்: நான்தான் யூதாஸ் இஸ்காரியாத்,இதனைப் புரியாத நீங்கள் இப்போதுஅறிவீனர்களே!”
இப்படிக் கூறிக் கொண்டிருக்கையில் படையாட்கள் உள்ளேநுழைந்தனர். முற்றிலும் இயேசுவைப் போல மாறிவிட்டிருந்த யூதாசைப் பிடித்துக் கொண்டார்கள்.எங்களைச் சுற்றியிருந்த படையாட்களுக்கு இடையில் நாங்கள் ஓடுகையில் யூதாஸ் கூறிக் கொண்டிருந்ததைநாங்கள் கேட்டோம். நார்ப்பட்டுத் துணியால் தன்னைப் போர்த்தியிருந்த யோவான் எழுந்து ஓடிய போது ஒரு படையாள் நார்ப்பட்டுத்துணியைப் பிடித்த போது, அவர் அதை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்!இயேசுவின் வேண்டுதலுக்கு கர்த்தர் செவிகொடுத்து, பதினொன்று பேரும்தீமையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.
217.
The soldiers took Judas andbound him, not without derision. For he truthfully denied that he was Jesus; andthe soldiers, mocking him, said: ‘Sir, fear not, for we are come to make theeking of Israel,and we have bound thee because we know that thou dost refuse the kingdom.’
Judas answered: ‘Now have yelost your senses! Ye are come to take Jesus of Nazareth, with arms and lanternsas [against] a robber; and ye have bound me that have guided you, to make meking!’
படையாட்கள் யூதாசைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர்.அவனோ தான் இயேசு அல்ல என்று மறுத்துக் கொண்டிருந்தான். படையாட்கள் அவனைப் பரிகசித்துக்கொண்டு சொன்னார்கள், ஐயா,தாங்கள் பயப்பட வேண்டாம், தங்களை இஸ்ரவேலரின் மன்னராக ஆக்குவதற்கு நாங்கள் வந்திருக்கிறோம். அரசாட்சியை தாங்கள்மறுப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் தான் உங்களைப் பிடித்து வைத்துள்ளோம்!”
இப்போது நீங்கள் உங்கள் மதியை இழந்து விட்டீர்கள்.நீங்கள் ஒரு திருடனைப் (பிடிப்பது) போல் நாஸரேத்துடைய இயேசுவைப் பிடிப்பதற்காக ஆயுதங்கள்மற்றும் விளக்குகளுடன் வந்துள்ளீர்கள். உங்களுக்கு வழிகாட்டிய என்னையே அரசனாக்குவதற்காகநீங்கள் பிடித்து வைத்துள்ளீர்கள்” என்று யூதாஸ் பதிலளித்தான்.
இது குறித்து கிறித்தவ குருமார்கள் பதில் அளிக்கும்போது பர்னபா சுவிஷேசம் என்பது முஸ்லிம்களின் கற்பனை என்ற ரெடிமேட் பதிலைக் கூறுவதைவழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இதர்கு அவர்கள் எவ்வித ஆதாரத்தையும் காட்டுவதில்லை.
பர்னபாவின் சுவிஷேசத்தை ஆங்கிலத்தில் முழுமையாக http://www.sacred-texts.com/isl/gbar/index.htm
. என்ற முகவரியில் காணலாம்.
பர்னபாவைப் பற்றி பைபிள் கூறும் நற்சான்றைஅறிந்து கொள்ள இந்த நூலை வாசிக்கவும். http://onlinepj.com/books/iyesu_siluvayil/
மேலும் இயேசுவின் காலத்திற்குப்பின் இயேசுவை அப்படியே பின்பற்றிய மக்கள் இருந்துள்ளதும் அவர்கள் காலத்தில் இருந்தஇயேசுவின் போதனைகளும் தற்போது கண்டெடுக்கப்பட்டு கிறித்தவ திருச்சபையைஅதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதை பிபிசி தொலைக் காட்சி அம்பலப்படுத்தியுள்ளது. அந்தவீடியோவையும் அது குறித்த செய்தியையும் அறிந்து கொள்ள
இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதற்கு பைபிளுக்கு வெளியே உள்ள ஆதாரங்கள்.
பிளேவியுஸ் யோசீப்பஸ் யூத சரித்திர ஆசிரியர், கி.பி 37- 100
இவர் எழுதிய புஸ்கங்கள் ஒன்றில் இயேசு கிறிஸ்துவைப்பற்றி இப்படி குறிப்பிட்டு இருக்கிறார். இயேசு வாழ்ந்த காலம் இது, மனிதர் என்று அவரை உண்மையாக சொல்லமுடியுமா? முடியுமென்றால், அவர் ஒரு ஞானமுள்ள மனிதர், அநேக அற்புதங்களை செய்தவர். அவர் அநேகருக்கு போதித்தார், அவருடைய சத்தியமான போதனைகளை மக்கள் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார்கள். பொந்தியு பிலாத்துவினால் சிலுவையில் அறையப்பட்டார். .
அப்போஸ்தர் பேதுரு "ரோம பேராயராக" நியமித்த “ரோம் கிளமண்ட் (Clement of Rome)” என்பவர் கூட பல முறை அப்போஸ்தர்களின் நம்பிக்கையாகிய "இயேசுவின் மரணம் மற்றும் அவரது உயிர்த்தெழுதல்" பற்றி பலமுறை எழுதியுள்ளார்[9].
அப்போஸ்தலர் யோவான் நியமித்த போலிகார்ப் (Polycarp), என்பவரும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி பலமுறை எழுதியுள்ளார் [10]. இன்னும் பல "கிறிஸ்தவ அல்லாத ஆதாரங்கள் (Non-Christian Writings)"
இயேசுவைப் பற்றியும், அவரது அப்போஸ்தலர்கள் பற்றியும் மிக முக்கியமான விவரங்களைச் சொல்கின்றன. யூத சரித்திர ஆசிரியர் "ஜோசபாஸ் (Josephus)" மற்றும் ரோம சரித்திர ஆசிரியர் டாசிடஸ் (Tacitus) இவர்களின் விவரங்களின்படி, இயேசு பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilate) என்பவர் ஆட்சிசெய்யும் போது சிலுவையில் அறையப்பட்டார்[11].
ஒரு கிரேக்க நகைச்சுவை (Satirist) எழுத்தாளர் "Lucian of Samosata" என்பவர் இவ்விதமாகச் சொல்கிறார், "இன்று கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஒரு மனிதனை வணங்குகிறார்கள், இவர்களுடைய எல்லா நம்பிக்கைக்கும் அவர் தான் காரணர் மற்றும் இதனாலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டார் "[12]. அவ்வளவு ஏன், யூதர்களின் தல்மட் (Talmud) கூட இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலைப் பற்றிச் சொல்கிறது[13].
இவை யாவும் திருக்குர்ஆன் எழுதப்படுவதற்கு சுமார் 400௦௦ ஆண்டுகளுக்கு முந்தய ஆதாரங்கள்.
முதல் நூற்றாண்டில் அனேக கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் என்பதற்கும் யூதர்கள் இருந்தார்கள் என்பதற்கு அனேக சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்கள் இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இயேசு இஸ்லாத்தை போதித்தார் என்றால் அவரை பின்பற்றிய எல்லோரும் என்னவானார்கள்?
சகோதரரே, திருக்குரானை நிரூபிக்க அதற்க்கு 500௦௦ வருடகளுக்கு முன் வந்ததும் அநேகரால் எழுதப்பட்டதுமாகிய வேதாகமத்தை மாற்றி விமர்சிக்க வேண்டாம் .
சகோதரர் சிட்டிக் அவர்களே,தாங்கள் சொல்வதுபோல் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஒருவருக்கும் தெரியாமல் அல்லாவால் எடுத்துக் கொள்ளப்பட்டு இயேசுவுக்கு பதில் யூதாஸ் ஆள்மாறாட்டம் செயபட்டான், என்றே வைத்துகொள்வோம்.
அந்த அல்லாவானவர் அட்லீஸ்ட் அதை இயேசுவுக்காவது சொல்லி யிருக்கலாம் அலல்து அவரது சீடர்களுக்கவது சொல்லியிருக்கலாம் ஆனால் யாருக்குமே சொல்லாமல் திடீர் என்று எடுத்துகொண்டதால் என்ன ஆனது தெரியுமா?
இயேசுவின் 33 வருட நபித்துவ போதனையை வீணாக்கியதோடு எல்லோரையும் ஏமாற்றி தெரிந்தோ தெரியாமலோ "கிறிஸ்த்தவம்" என்ற மிகப்பெரிய மதம் உருவாக அல்லாவே காரணமாகிவிட்டார்!.
முகம்மது வரும் வரை சுமார் 500 வருடங்கள் இந்த ரகசியத்தை யாருக்கும் சொல்லாமல் எதையும் கண்டுகொள்ளாமல் கிறிஸ்தவம் வேகவேகமாக வளர வழி செய்துவிட்டு, ஆற அமர 500௦௦ வருடங்களுக்கு பிறகு முகமதுவை அனுப்பி இயேசு மரிக்கவில்லை நான் எடுத்து விட்டேன் என்று புதுகதை கூறி கிறிஸ்த்தவத்தை ஒழிக்க நினைத்தால் முடியுமா?
ஆக மொத்தம், கிறிஸ்த்தவம் என்று உலகத்தில் முதல் பெரிய மார்க்கம் உருவானதற்கு காரணம் யார்? அல்லா செய்த பெரிய தவறுதானே?
இன்று கிறிஸ்தவர்கள் எல்லோரும் நரகம் போவார்கள் என்று சொன்னால் அது "அல்லா" செய்த தவறால் அல்லவா நடந்தது.
இவ்வளவு பெரிய தவறை ஒரு இறைவன் செய்வாரா?
அப்படி செய்தால் அவர் இறைவனாக இருக்கமுடியுமா?
சகோதரரே இஸ்லாம் கிறிஸ்த்தவத்துக்கு இடையே உள்ள வேறுபாடுகள் சம்பந்தமான அனேக கருத்துக்கள் பல்வேறு அறிஞர்களால் ஆராயப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இடையில் சில அறிவாளிகள் திரும்பதிரும்ப எதையாவது திரித்து எழுதுவதால் எந்த பயனும் இல்லை.
மேலும் என்னை பொறுத்தவரை நான் நேரடியாக ஆண்டவரிடம் அமர்ந்து விசாரித்து உண்மை தேவன் யார் என்பதை அறிந்து கொண்டவன். என்னுடைய எழுத்துக்கள் எல்லாமே அதன் அடிப்படையிலேயே இருக்கும்.
தாங்கள் உண்மை இறைவன் யாரென்பதை அறிய வாஞ்சை உள்ளவராக இருக்கிறீர்களா? தங்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் என்னவெனில். நீங்கள் எந்த ஒரு மதத்தையும் அதன் கருத்துக்களையும் நம்பவேண்டாம். திறந்த மனதோடு இருக்கும் இடத்தில் இருந்து இறைவனை விடாபிடியாக தேடுங்கள். அவரை நோக்கி மன்றாடி ஜெபியுங்கள் அவர் எது சரியான வழி என்ற உண்மையை உங்களுக்கு உணர்த்துவார். அவர் தன்னை வாஞ்சையோடு தேடுபவர்களுக்கு பதிலளிப்பவராக இருக்கிறார்.
எரேமியா 29:13உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.
இதெல்லாம் நமது இறைவன் கொடுத்த வாக்குகள்.
அதன் அடிப்படையில் இறைவனை கடுமையாக தேடி அவரை அனுபவபூர்வமாக அறிந்துகொண்ட எங்களுக்கு தங்களின் எழுத்துக்கள் எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது. நாங்கள் சொல்லும் தேவன் வெறும் எழுத்தின் மூலமாக மட்டுமல்ல "ஆவியானவர்" என்னும் ஜீவனுள்ள தேவனாக இருந்து அனுபவ பூர்வமாகவும் கிரியை செய்வதால் மற்ற எழுத்துக்ள் எங்களை அசைக்க முடியாது நீங்கள்கூட ஒருமுறை அவரை ருசித்துபார்த்தல் உண்மையை அறிந்துகொண்டு பின்னர் வேறு எல்லாவற்றையும் ஒதுக்கி விடுவீர்கள் என்பது திண்ணம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
//இயேசுவின் சீடரான பர்னபா// //இயேசு தப்பிப்பிழைத்து தான் சீட்ர்கள் முன் காட்சி அளித்தார் என்ற உண்மையுடன் பவுலடிகள் கலந்துவிட்ட பொய்யும் சேர்ந்து விட்டதால்//
தம்பி நீங்கள் வேறு இடத்தில் இருந்து கட் அண்ட் பேஸ்ட் செய்யும் முன்னர் கிறிஸ்த்தவம் என்றால் என்ன என்று நீங்களே வாசித்து புரிந்து கொள்ளுங்கள். யோவான் சுவிஷேஷத்தில் ஒரு 10 அதிகாரம் வாசித்தாலே இந்த புளுகு எல்லாம் மாறிவிடும் முழுமையாக படித்தால் குரான் என்ற குப்பையை தூக்கி போட்டுவிடுவீர்கள். பர்னபா இயேசுவின் சிடர் இல்லை என்கிற அடிப்படை கூட தெரியாமல் Cut & Paste செய்யாதீர்கள். Ironically பர்னபாவை நீங்கள் இகழும் பவுலின் சிடர் என்று சொன்னால் அது தவறாகாது ஏனென்றால் பவுலுடன் இணைந்து பர்னபா உழியம் செய்தார். இதையெல்லாம் "The Gospel Of Barnabas" என்ற குப்பையை 6 ஆம் நூற்றாண்டில் பர்னபா என்ற பெயரில் எழுதிய முல்லா தெரிந்து இருக்க வாய்ப்பில்லை ஆகையால் நீங்களாவது தெரிந்து கொளுங்கள். வேதத்தில் உள்ள சுவிசேஷங்களை நீங்களே வைத்து அப்படியும் இயேசு மரிக்கவில்லை என்று உண்மையிலே கருதினால் எனக்கு சொல்லுங்கள் நான் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன்
-- Edited by John on Tuesday 15th of March 2011 03:36:44 AM