அமெரிக்க எப்ரஐம் வழிதோன்றல் என்றும் ..இங்கிலாந்து மனசே வழிதோன்றல் என்றும் கருத்து சொல்லபடுகிறதே..
விபரம் தெரிந்தவர்கள் விரிவாக எடுத்துரைத்தால் நல்லது..
தங்களின் இந்த கருத்து புதுமையாக இருக்கிறது. தங்களுக்கு யார் சொன்னது அல்லது எந்த தொடுப்பில் இருந்து இந்த செய்தியை அறிந்தீர்கள் என்று தெரிவித்தால் நாம் அதை ஆராய வசதியாக இருக்கும்.
பொதுவாக இஸ்ரவேல் கோத்திரருக்கு சரியான "வம்ச அட்டவணை" உண்டு.எனவே அவரவர்களின் வம்சத்தை அவர்கள் சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள். அந்த வம்ச அட்டவணை குறித்து வேத புத்தகத்திலும் குறிப்பு உள்ளது. ஐரோப்பாவில் இருந்துபோய் குடியேறியவர்கள்தான் அமெரிக்காவை உருவாக்கினர் என்பது உண்மை. ஆகினும் அவர்கள் இஸ்ரவேல் கோத்திரத்தை சேர்ந்தவர்கள்தான என்பது குறித்த செய்தி எங்காவது கிடைக்கிறதா என்பதை அராய்ந்து பார்க்கலாம்.
சகோதரர் அவர்களே தாங்கள் சுட்டிய திரியில் உள்ள கட்டுரையை படித்தபோது அதிலுள்ள விளக்கங்கள்படி பார்த்தால் ஏறக்குறைய எல்லாமே ஒத்துபோவதுபோல்தான் தெரிகிறது. ஆகினும் என்னால் அதை உறுதியாக ஏற்க்க முடியவில்லை. காரணம் கீழ்கண்ட வசனம்:
அப்போஸ்தலர் 13:46அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்ல வேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
புறஜாதியாரிடத்தில் போகிறோம் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப்போன பவுலால் சுவிசேஷம் சொல்லப்பட்டு அதன தொடர்ச்சியாக ஆண்டவரை ஏற்றுக்கொண்டு வந்தவர்களே பிரிட்டன் காரர்கள் என்பது எனது கணிப்பு.
இவ்வாறு இருக்கையில் அவர்கள்இஸ்ரவேல் கோத்திரத்தை சேர்ந்தவர்களாக எவ்வாறு இருக்கமுடியும்?