இந்த வலைத்தளத்தில் அனேக பதிவுகளை நான் தந்திருக்கிறேன். என்னுடைய கருத்துக்கள் பொதுவான கிறிஸ்த்தவர்களின் விளக்கங்களோடு ஒத்துபோகா விட்டாலும் அடிப்படை கொள்கையை பொறுத்தவரை ஒரு சில காரியங்களைதவிர முக்கியமான கருத்துக்களின் நான் எவ்விதத்திலும் அவர்களை விட முரண்பாடானவன் அல்ல! மேலும் நமக்கும் யகோவா சாட்சிகள் மற்றும் வேத மாணவர்களுக்கும் எந்த சம்பவந்தமும் இல்லை.
இந்நிலையில் சகோ. ஜான் அவர்கள் "இங்கு எழுதப்படும் கருத்துக்கள் பிறரை இடரவைக்கும்" என்ற பொருளில் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்கள்.
சகோதரர் ஜான் எழுதியது
///யெகோவாவின் சாட்சிகள், வேத மாணவர்கள், மார்மன்ஸ் எல்லாரும் உங்களை போலவே வேதத்தில் தேவன் எங்களுக்கு இதை வெளிப்படுத்தினார் என்று தங்களுடைய சொந்த வெளிப்பாட்டை வேதத்திற்கு மேலாக உயர்த்தி தங்களும் வஞ்சிக்கப்பட்டு, மற்றவர்களையும் வஞ்சித்தார்கள். நீங்கள் இப்போது செய்வதை தொடர்ந்தால் முடிவு அதே மாதிரியே இருக்கும்.////
யகோவா சாட்சிகள்/வேத மாணவர்கள் வெளிப்பாடுகளை நம்புகிறார்களா? அல்லது கிறிஸ்த்தவர்கள் என்று சொல்பவர்கள் அதிகம் வெளிப்பாடுகளை நம்புகிறார்களா? என்று கேட்டால், நான் அறிந்தவரை பொதுவாக யகோவா சாட்சிகாரர்கள் எந்த ஒரு வெளிப்பாட்டையும் நம்புவது கிடையாது. அவர்கள் ஆவியானவரின் துணையின்றி எந்த ஒரு ஆவிக்குரிய அனுபவமும் இல்லாமல், இஸ்லாமியரைப்போல் வேத வார்த்தைகளை மட்டுமே எழுதியிருக்கிற பிரகாரமாகவே ஆராய்வதால்தான் அவர்கள் உண்மையை சரியாக அறியவில்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால் தாங்களோ அவர்கள் வெளிப்பாடுகளை நம்புகிறார்கள் என்று தவறான கருத்தை கூறுகிறீர்கள் என்றெ கருதுகிறேன்.
திரித்துவத்தை புரிந்துகொள்ள தேவனின் வெளிப்பாடு மற்றும் ஆவியானவரின் நடத்துதல் மிகவும் அவசியம். எழுதியிருக்கிற பிரகாரம் பார்த்தால் திரித்துவத்துக்கு மிக சரியான வசன ஆதாரம் கொடுக்கமுடியாது.
அவர்கள் ஆவிக்குரிய எந்த ஒரு அனுபவத்தையும் நம்புவது இல்லை. "ஆத்துமா என்ற ஒன்றே இல்லை" என்று சாதிக்கும் அவர்கள், வேதத்தில் பலமுறை சுட்டபட்டு, ஆவிக்குரிய அனுபத்தில் நானே பார்த்துவந்த பாதாளம்/நரகம் போன்றவை இருக்கிறது என்பதையும் அவர்கள் நம்புவது கிடையாது அதை வெறும் "பிரேத குழி" என்று போதிக்கின்றனர்.
பரிசுத்த ஆவியானவரை மட்டும் வாஞ்சித்து பெற்றுக்கொண்டாலே அவர்களின் ஆவிக்குரிய இருதயம் திறக்கபட்டு, அனைத்து உண்மையையும் அறிந்துகொள்ள முடியும். ஆனால் அவர்களோ பரிசுத்தஆவியானவரை "வெறும் வல்லமை" என்றும் அவர் ஒரு ஆள்தத்துவம் உள்ள தேவன் அல்ல என்றும் போதித்து உண்மையை அறியாமல் இடறுகிறார்கள்.
நான் தொடக்கத்தில் இருந்தே ஆவியானவரை பற்றி அதிகமதிகமாக போதித்து வருகிறேன். கிறிஸ்த்தவ வாழ்வின் அச்சாணியும், மீட்கப்படும் நாளுக்கென்ற முத்திரயுமாகிய அவர் நம்முள் வந்து வாசம் செய்யவில்லை என்றால் நாம் இடறுவது உறுதி.
போன்ற எனது கட்டுரைகளை சற்று வாசித்து பாருங்கள். ஆகினும் எனது கருத்துக்களில் எந்தஒரு தனிப்பட்ட கருத்தையும் எடுத்துசொல்லாமல் என்னுடைய கருத்துக்கள் அவர்களைப்போல அடுத்தவரை இடறவைக்கும் என்று பொதுவாக நீங்கள் சொல்வதில் எந்த பயனும் இல்லை!
மேலும் யாருடைய எழுத்துக்களாலும் நான் கொபம்கொள்வேன் என்று சற்றும் எண்ணவேண்டாம். அவ்வாறு கொபம்கொள்வது எவ்விதத்திலும் முறையல்ல. மேலும் நான் எழுதும் கருத்துக்கள் வேண்டுமானால் சற்றுமாறுபாடாக இருக்கலாம் ஆனால் பிறர் மனதை புண்படுத்தும் ஒரு சிறு வார்த்தைகூட பயன்படுத்தினால் ஆவியானவர் உடனே என்னை கண்டித்து உணர்த்திவிடுவர். "மனிதனின் கோபம் தேவ நீதிய நடப்பிக்காது" என்பது எனக்கு நன்றாகவே தெரியும். என்னை "இரத்த வியாதி வந்து சாவாய்" என்று கிறிஸ்த்தவர் எனப்படுபடும் ஒருவர் சபித்தும் கூட அவரை நான் கோபமாக எதுவும் எழுதவில்லை .
எனவே யாரொருவர் என்னுடைய கருத்துக்கள் பிறரை இடறவைக்கும் என்று கருதினாலும் இங்கு தாராளமாக இங்கு தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். "தவறு" என்று ஒருவர் சொல்வதில் நியாயம் இருக்கவேண்டும் அவ்வளவுதான். அதே நேரத்தில் எனது கருத்துக்கள யாரையாவது இடரவைக்கும் என்று நான் அறிந்து கொண்டால் அதை உடனே நீக்கவும் எனக்கு உதவியாக இருக்கும். எனவே தங்கள் கருத்க்க்களை சுதந்திரமாக தெரிவிக்கலாம். அதே நேரம் எந்த முகாந்திரமும் இல்லாமல் எனது எழுத்துக்களை தவறு என்று தீர்த்து உங்கள் கொள்கைகளை நம்பும்படி என்னை வருப்புருத்தவும் வேண்டாம். ஏனெனில் உங்கள் வழிகளில் சில தவறுகள் இருக்கிறது என்று ஆண்டவர் தெரிவித்ததாலேயே இங்கு சில உண்மையை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
-- Edited by SUNDAR on Tuesday 22nd of March 2011 09:35:17 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோதரர் ஜான் அவர்களின் நம்மைப்பற்றிய அடுத்த தவறான புதிதலுடன் கூடிய விமர்சனம்
சகோ. ஜான் WROTE
//// வேதத்தைவிட நீங்கள் உங்களுடைய (அதாவது தேவனிடம் இருந்து பெற்றதாக நீங்கள் நினைக்கும்) கருத்துக்களை பெரிதாக கருதுகிறீர்கள்
சகோதரர் ஜான் அவர்களே நான் என்னுடைய வெளிப்பாடுகள் என்று புதியதாக எதையும் இங்கு எழுதவில்லை. என்னுடைய கீழ்கண்ட முக்கிய கட்டுரைகளுக்கு எல்லாம் வேண்டியமட்டும் வசன ஆதாரம் கொடுத்தே எழுதியிருக்கிறேன்.
முதலில் என்னுடைய கருத்துக்களுக்கு வசன ஆதாரம் தராமலேயே எழுதிவந்தேன் பலர் அக்கருத்துக்களை குறைகூறவே ஆண்டவரிடம் அமர்ந்து அதற்க்கு ஏற்ற வசனத்தை குறிப்பிட்டே எழுதுகிறேன். எனவே தங்களின் கருத்து ஏற்புடையது அல்ல என்றே நான் கருதுகிறேன். வேதத்த்தில் இரண்டாம் மரணத்தை "இரண்டாம் மரணம்" என்று தெளிவாகசொல்லியிருக்க, நேரடி வசனங்க்ளைகூட மாற்றி பொருள் கொண்டு, "நான் வெளிப்பாடை பெரிதாக கருதி எழுதுகிறேன்" என்று சொல்வது சரியானதா என்று நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.
எனது வெளிப்படுகளுக்கடுத்த பதிவுகளை தனியாக "வெளிப்பாடுகளும் தரிசனங்களும்" என்று தொகுப்பாக பதிவிடுகிறேன் அதில் எனது வெளிப்பாடுகளின் அடிப்படையில் உள்ள முக்கிய கட்டுரையாக்கிய பாதாளத்தின் பயங்கரங்கள்!!!என்பது. நான் சுமார் மதியம் ஒரு மணிக்கு திடீர் என்று எனது ஆத்துமா பாதாளத்துக்குள்செல்ல, நான் அங்கு நேரடியாக பார்ப்பதுபோல் பார்த்த காட்சிகளின் தொகுப்பேயற்றி வேறெதுவும் இல்லை. அதற்கும் முடிந்த அளவு வசன ஆதாரம் கொடுத்துள்ளேன். சிலர் அதை உண்மையில்லை என்று மறுக்கலாம் ஆனால் நான் பார்த்ததை பார்த்த பிரகாரமாக எழுதியிருக்கிறேன். நம்புகிறவர்கள் நம்பட்டும். தேவையில்லை என்று கருதும் ஞானிகள் விட்டுவிடட்டும்.
நான் பார்த்ததையும் அறிந்ததையும் எழுதாமல் இருக்க முடியாதே! அதற்க்கு நான் முக்கியத்துவம் கொடுக்கத்தான் செய்கிறேன் என்பதை என்னால் மறுக்கமுடியாது. அதில் வேதத்துக்கு புறம்பான வசன ஆதாரமற்ற கருத்துக்கள் இருந்தால் மட்டும் தெரிவியுங்கள்.
ஆண்டவர் எனக்கு தெரிவித்த காரியங்களை எழுதுவதற்கும் விளக்கம் கேட்பவர் களுக்கு தேவையான விளக்கம் தருவதற்கும் மட்டுமே இந்ததளத்தை பயன்படுத்தி வருகிறேன். மற்றபடி வேறு எந்த தேவையற்ற வாக்குவாதம் மற்றும பிரச்சனைகளில் இருந்தும் நான் விலகிகொள்ளவே விரும்புகிறேன்.
சகோ. ஜான் WROTE
/// நான் வேதத்தில் வாசித்த வரை உங்கள் அளவுக்கு தேவனுடைய ரகசியம் எல்லாம் தெரிந்த ஒருவரும் இல்லை சொல்லுவேன்.///
சகோதரரே தேவன் அதனதன் காலத்தில் அதனதனை நேர்த்தியாக செய்யக் கூடியவர். தாவீது என்ன எழுதுவான் என்பது மோசேவுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். தானியேல் என்னஎழுதுவார்என்று தாவீதுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் யார்யாரோஎழுதிய தேவவார்த்தைகளின் மொத்த தொகுப்பும் இன்று நமது கையில் இருக்கிறது. நாம் நிச்சயம் பாக்கியவங்கள் தானே. இவ்வளவுபெரிய பொக்கிசத்தை கையில் வைத்துகொண்டு "பரிசுத்த ஆவியானவர்" என்னும் தேவ ரகசியங்களின் அனைத்து ஆழமும் அறிந்த ஆசானையும் பெற்றுகொண்டு. "என்னைகேள்" "என்னை நோக்கி கூப்பிடு" சங்கீதம் 78:2என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன்
போன்ற வார்த்தைகளையும் வைத்துகொண்டு, இன்னும் தேவனின் முழு திட்டத்தையும் நம்மால் அறிய முடியவில்லை என்றால் நாம்தான் சரியில்லை எங்கோ தவறு செய்கிறோம் என்பதை அறியவேண்டும்
கர்த்தரிடத்தில் மரணத்துக்கு நீங்கும் வழிகள் இருக்கிறது
சங்கீதம் 25:14கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது;
கர்த்தருக்கும் அவர் வார்த்தைக்கு பயந்து நடுங்கி அவைகளை கைகொள்ளுங்கள் உண்மையை அறியலாம். இன்னும்கூட நான் அறிந்து கொண்ட எல்லாமே அதாவது இரகசியமானது எல்லாமே சாத்தானுக்கும் தெரியும். அவனை பற்றி கர்த்தர் சொல்லும்போது
எசேக்கியேல் 28:3இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல.
ஆனால் அவன் யாரிடமும் மறைபொருள் குறித்த உண்மையை சொல்ல மாட்டான். தேவனிடமிருந்துமட்டுமே உண்மையை அறியமுடியும். அதையும் அவ்வளவு சீக்கிரத்தில் அறியவிடமாட்டான். ஏனெனில் அவன் முடிவு அங்குதான் இருக்கிறது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.
இது கடைசி காலமும் தேவனின் திட்டம் நிறைவேறும் நாளும் நெருங்கி விட்டபடியால் தேவன் வெளிப்படுத்த சித்தமானார் நான் இதை இங்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன். இவ்வளவு நாள் சரியான உண்மையை அறியாமல் இருந்தது நமது தவறேயற்றி தேவனின் தவறு அல்ல.
அதாவது எந்த ஒரு காரியத்துக்கும் சரியான லாஜிக் இருக்கவேண்டும். சமீபத்தில் ஒருமனிதன் சுமார் 4வயதுள்ள சிறுகுழந்தை ஒன்றை கொண்டுபோய, இருவர் அந்த பிள்ளையை பிடித்துகொள்ள ஒருவன் தலையை அறுத்து இரத்தத்தை பிடித்து வருத்தார்களாம்.
இதுபோன்ற செய்தியை எல்லாம் கேட்கும்போது என் இதயமே நொறுங்கி விடுகிறது. ஏன் ஆண்டவரே "நீர் படைத்த உம்முடைய பூமியில இவ்வாரெல்லாம் நடக்கிறது? அந்த சிறு பிஞ்சு என்ன கதறு கதறியிருக்கும்" என்றுசொல்லி நான் ஆண்டவரிடம் கதறுகிறேன். அவர் அதற்க்கான உண்மை காரணத்தை எனக்கு தெரிவிக்கிறார்!
"எவனுக்கோ வந்தது எவனுக்ககோ" நமக்கென்ன என்றோ "இது கடைசி காலம் எல்லாம் இப்படித்தான் நடக்கும்" என்றோ "தேவன்தான் இதுபோன்ற கொடூர காரியங்களை தனது பினாமியாகிய சாத்தான் மூலம் செய்து வருகிறார்" என்று எண்ணிக்கொண்டு விட்டேத்தியாக சொல்லிவிட்டு விலகி போகிறவன் நானல்ல. அப்படி போகிறவன் எந்த உண்மையையும் ஆண்டவ்ரிடமிருந்து அறிந்துகொள்ள முடியவும் முடியாது எனக்கு திருப்தியான பதில் வரும்வரை நான் சொர்ந்துபோகவே மாட்டேன். ஆண்டவரிடம் உண்மை வேணும் என்று கேட்டுகொண்டே இருப்பேன். நீங்களும் உலகில் நடக்கும் காரியங்களினிமித்தம் பெருமூச்சுவிட்டு அழுது தேவனிடம் விசாரியுங்கள். அவர் உண்மையை தெரிவிப்பார்.
உலகில்உள்ள மனுஷன்எல்லாமே "பிசாசின் ஆவியால்பீடிக்கப்பட்டு இருப்பதை அப்படியே எனது மாம்ச கண்களாலேயே பார்த்தவன் நான். மனிதாகள் சொல்லும் விளக்கங்கள்மூலம் அறிந்து கொண்ட உண்மைகளை வைத்துகொண்டு என்னை விமர்சிக்க வேண்டாம். நீங்கள் தேவனிடம் விசாரித்து அறிந்துகொண்டீர்களா? அதன் அடிப்படையில் எனது கருத்துக்களில் குறை இருந்தால் சொல்லுங்கள் ஆராய்ந்து பார்க்கலாம். .
-- Edited by SUNDAR on Tuesday 22nd of March 2011 09:40:34 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)