இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீங்கள் ஆண்டவரை தேடிய/தேடும் நோக்கம் என்ன?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நீங்கள் ஆண்டவரை தேடிய/தேடும் நோக்கம் என்ன?
Permalink  
 


இந்த உலகில்வாழும் ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு நோக்கத்துக்காக தேவனை தேடுகின்றனர். சிலர் பணத்துக்காகவும் சிலர் புகழுக்காகவும், சிலர் வெற்றிக்காகவும், சிலர் சமாதானமான வாழ்வுக்காகவும், சிலர் நோயில் இருந்து விடுபடவும், சிலர் சத்துருக்களின் தொல்லையில் இருந்து விடுபடவும், சிலர் நல்ல வேலைக்காகவும்,  சிலர் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகவும் இப்படி எத்தனையோ விதமான காரியங்களுக்காக  மனிதர்கள் தேவனை தேடுகிறார்கள்.
 
நீங்கள் என்ன நோக்கத்தோடு தேவனை தேடினீர்கள்?
 
ஒரு சபையில் நடந்த சொர்க்கம் நரகம் என்ற  ஒரு நாடகத்தை பார்த்து  தேவனை  நோக்கி ஆண்டவரே  இப்படி சொர்க்கம் நரகம், ஜீவபுத்தகம் போன்றவை இருக்கிறது உண்மையா? என்பதை வெளிப்படுத்தும் என்று  தொடர்ந்து மற்றாடி ஆண்டவரை நோக்கி ஜெபித்தபோது ஆண்டவர் அவர்களுக்கு அனைத்து உண்மையையும் ஒரு தரிசனமாகவே வெளிப்படுத்திவிட்டார்.

அதுபோல் ஒருவர்  தனது இருதய பரிசுத்தத்துகாக ஆண்டவரிடம் மற்றாடி அழுது
ஜெபித்துகொண்டே இருந்தபோது ஆண்டவர் ஒருமுறை அவர்களின் இருதயத்தை  தரிசனத்தில் காட்டி அந்த இருதயத்தை சுற்றி அக்கினி எரிந்துகொண்டிருபதுபோல தேவ பாதுகாப்பு இருப்பதை வெளிப்படுத்தினார்.
 
ஒருவர்  ஆண்டவரே மனுஷனுக்கு ஆத்துமா என்ன்று ஓன்று இருப்பது உண்மையா. எல்லோரும் இதுபோல் சொல்கிறார்களே எனக்கு உண்மையை விளங்கபண்ணும் என்று அநேகமுறை மற்றாடி கேட்டுவிட்டு ஒருநாள் முழுஇரவு ஜெபத்திற்கு சென்று ஜெபித்துவிட்டு வந்து காலையில் வீட்டில் அமர்ந்திருந்தபோது அவர்கள் மாம்சமான உடம்பு ஒரு இடத்தில் அப்படியே அமர்ந்திருக்க அவர்களுது ஆத்துமா மட்டும் சற்று தள்ளி வெளியில் நின்று அவர்கள் மாம்ச உடம்பை பார்க்கும்  அளவுக்கு தேவன் உண்மையை வெளிப்படுத்தினார்.
 
சபைகளை கட்டவேண்டும் என்ற ஏக்கத்தோடு ஆண்டவரை தேடுகிறவர்களுக்கு
அதற்க்கான வழிகளை உண்டாக்கி  சபை கட்டும் நிலையை ஏற்ப்படுத்தி அதற்க்கு கொடுக்கும்படி சில இருதயங்களையும் திறக்கிறார் .
 
அதுபோல் "அனேக மக்களை தேவனை நோக்கி திருபவேண்டும்" என்ற ஆத்தும  வாஞ்சையோடு அலைபவர்களுக்கு அதறக்கான வழிகளை தேவன் திறந்து கொண்டுக்கிறார்.
 
நீங்கள் எதற்கான ஆண்டவரை விடாப்பிடியாக உத்தமமாக தேடுகிறீர்களோ  அந்த காரியம் உங்களுக்கு நிச்சயம் அருளப்படும்.  அதற்க்கு மேல் அதிகமான காரியங்களின் உண்மையை வெளிப்படுத்துவதும் அத்தோடு நிருதிகொள்வதும் தேவனின் கிருபையின் அடிப்படையிலும்  அவரவர் தகுதிக்கு ஏற்றபிரகரமும் நடக்கும்.
 
I நாளாகமம் 4:10 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்
 
உங்கள் அலுவலத்தில் வேலை பார்க்கும் ஒரு பியூன் உங்களிடம் ஒரு ஐமபது ரூபாய் கடனாக கேட்டால் அதை மட்டுதம் தான் நீங்கள் கொடுப்பீர்கள். மிஞ்சி போனால் கூடஅம்பது கூட்டி கொடுக்கலாம். அதற்காக உங்களை பற்றிய அனைத்து காரியங்களையும் அவருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு என்னென்ன சொத்துஇருக்கிறது என்ற விபரத்தை அவருக்கு சொல்லிகொண்டிருக்க மாட்டீர்கள்.   அப்படி அவருடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்வதால் அவருக்கோ உங்களுக்கோ எந்த பயனும் இல்லை.
 
அதேபோல்தான் தேவனும் "பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடைய"  அனைத்து ஆலோசனையும் அந்தகாரமும், மறைபொருட்களும் அவர் ஒருவரே அறிவார். அவ்வாறிருக்கையில் ஒரு மனுஷன் என்ன நோக்கத்தோடு எந்த வாஞ்சையில் தேவனை  தேடுகிறானோ அந்த காரியம் குறித்த விளக்கத்தை  மட்டுமே தேவனிட மிருந்து பெறமுடியும்.  ஆனால் எல்லா கேள்விகளுக்கான பதிலும், இந்த  உலகில் நடக்கும் எல்லா காரியங்களுக்கான நியாயமான விளக்கமும் தேவனிடம் உண்டு. நீங்கள் வாஞ்சித்து கேட்டதுஎதுவோ அது மட்டுமே உங்களுக்கு அருளப்படும். 
 
எஸ்தர் 7:2  உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்
 
இது ராஜா எஸ்தர் ராசாத்தியை பார்த்து சொல்லிய வார்த்தை என்றாலும், இதே வார்த்தையை தேவன் தம்முடைய மணவாட்டிகளாகிய ராஜாத்திகளை பார்த்து சொல்வதாக எடுத்தக்கொள்ளலாம்.
   
ஒருவர் "நான் தேடினேன் அவர் எனக்கு எதுவும் தெரியப்படுத்தவில்லை" என்று சொல்வாராகில் அவரது தேடுதலிலும் அவரது இருதய இருமாப்பிலும்தான் குறை இருக்கிறதேயன்றி தேவனிடம் நிச்சயம் பட்சபாதம் இல்லை.   
 
நான் என்ன நோக்கத்தோடு எதற்காக ஆண்டவரை தேடினேன் அதன் மூலம் என்ன காரியங்களை அறிந்துகொண்டேன் என்பதை பதிவிடும் முன்,
 
தள சகோதரர்களாகிய நீங்கள் "முதலில் என்ன காரணத்துக்காக அல்லது என்ன நோக்கத்தோடு ஆண்டவரை விடாது  தேடினீர்கள்?  நீங்கள் ஆண்டவர் மூலம் எதை அறிந்துகொண்டீர்கள் அல்லது ஆண்டவரை நீங்கள் எவ்வளவுதூரம் அறிந்திருக் கிறீர்கள்"  என்பதை முடிந்த  அளவு விளக்கத்தோடு இங்கு பதிவிடும்படி அன்புடன் கேட்கிறேன்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard