இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவம் பற்றிய கிறிஸ்த்தவ கருத்தில் எனது சந்தேகங்கள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
திரித்துவம் பற்றிய கிறிஸ்த்தவ கருத்தில் எனது சந்தேகங்கள்!
Permalink  
 


தேவன் பாவத்தில் வீழ்ந்த மனிதர்களை மீட்கும் திட்டத்தில்  மூன்று ஆளத்துவமாக செயல்பட்டார் என்பதை நாம் மறுக்கவில்லை. அதை  குறித்த எனது விளக்கத்தை கீழ்கண்ட திரிகளில் பதிவிட்டுள்ளேன்!
 
 
சகோ ஜான் அவர்கள் அக்கருத்து தவறானது என்று விமர்சித்ததோடு  திருத்துவம் குறித்த கருத்துக்கு  கீழ்கண்ட தொடுப்பை படிக்கும்படி சுட்டியிருந்தார்கள்.
சகோ.  ஜான் எழுதியது  
///மறுபடியும் கேட்கிறேன். நான் கொடுத்த 2 தொடுப்புகளையும் (திரித்துவம் மற்றும் தேவனில் இரு சித்தங்கள்) வாசித்தீர்களா? அதிலே என்ன தவறு கண்டீர்கள்?///
 
சகோதரர் அவர்களே, தாங்கள் சுட்டியுள்ள கட்டுரையை நான் படித்தேன்  தேவனின் ஆள்த்துவம் பற்றிய சந்தேகங்களை அவரிடமே அமர்ந்து விசாரித்து அறிய முயலாமல்,  மனித முயற்ச்சியால் விவரிக்க முயன்றி ருக்கிரார்கள் என்பதை மட்டும் அறியமுடிகிறது.  
 
What Does it Mean That God is a Trinity?
The doctrine of the Trinity means that there is one God who eternally exists as three distinct Persons--the Father, Son, and Holy Spirit. Stated differently, God is one in essence and three in person. These definitions express three crucial truths: (1) The Father, Son, and Holy Spirit are distinct Persons, (2) each Person is fully God, (3) there is only one God.
 
சுருக்கமாக:
"தன்மையில் அல்லது நோக்கத்தில்  ஒன்றுபட்ட மூன்று தனி ஆள்கள்"
"பிதா குமாரன் அல்ல, குமாரன் பரிசுத்தஆவியல்ல, பரிசுத்த ஆவியானவர் பிதா அல்ல" அத்தோடு  "மூவரும் தனித்தனியான ஆள்கள்"  ஆனால் "மூவருமே  முழுமையான கடவுள் ஆனால் ஒரே கடவுள். 
 
இந்த குழப்பமான  விளக்கத்தை என்னவென்று விமர்சிப்பது என்று புரியவில்லை. சகோ. ஜான் அவர்களுக்கு  அந்த கட்டுரையில் வசன விரோத கருத்து  எதுவுமே தெரியாமல் இருப்பது அதிக ஆச்சர்யமே
 
இந்த கருத்தில்  எனக்கு தென்பட்ட வசனவிரோத கொள்கைகள்:  
 
1. இயேசுவை பவுல் "தேவனுக்கு சமமானவர்" என்று சொல்லியிருந் தாலும் இயேசுவோ "பிதா என்னிலும் பெரியவர்"என்றும் அவர்  எல்லாரையும்விட பெரியவர் என்று இரண்டு முறை தெள்ள தெளிவாக சொல்லியிருக்கிறார்     
 
யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்
யோவான் 14:28 ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
 
இந்த வசனத்துக்கு சரியான விளக்கம் இல்லை.

2. பரிசுத்தத் ஆவியானவர் "தேவன்" என்பதற்கு பேதுரு அனனியா சபீரால் விஷயததில் கூறிய வார்த்தையை எடுத்துகொண்டாலும் அவர் தேவனுக்கு சமமானவர் என்றோ அவரிடம் தேவத்துவத்தின் முழுமையும் உள்ளது என்றோ எங்கும் எந்த வசனமும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை   
 
3. பிலிப்பியர் 2:11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்
 
இங்கு இயேசுவுக்கு "எல்லா நாமத்துக்கும்  மேலான நாமம்" கிடைத்ததால் அவரை மற்றவர்களோடு சமமான தேவன் என்று கூறுவது தவறாகிறது.   
 
4. யகோவா சாட்சிகாரர்கள்  யகோவா தேவனையே முழுமையான கடவுள் என்று போதிக்கின்றனர். தாங்கள் சுட்டிய திரித்துவ கருத்துப்படி பார்த்தால் "அவரும் ஒரு முழுமையான தேவத்துவம் உள்ள தேவன்தானே!  இந்நிலையில்  இயேசுவை விசுவாசித்து யகோவா தேவனை  மட்டும் வணங்குகிறவர்களை அவர் தன்னிடம் உள்ள முழுதேவத்துவத்தால் மீட்டுக்கொள்ள முடியுமே? பிறகு அவர்களை என் Cult   என்று சொல்லவேண்டும்?
 
5. ஆண்டவராகிய இயேசுவை பிதா ஜெனிபித்ததாக கூறுகிறார்
 
எபிரெயர் 1:5  நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?

இந்த வசனத்தின்படி இயேசு தேவனால் ஜெனிப்பிக்கபட்டவர். அதாவது தேவனின்
"வார்த்தை" என்னும்  கருப்பொருளை கொண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் ஜெனிப்பிக்கபட்டவர். 
 
ஆனால் பரிசுத்த ஆவியானவர் தேவனால்  ஜெனிப்பிக்கபட்டவர் அல்ல எனவே இருவரும் சமமாக முடியாது. ஜெனிப்பிக்கபட்டவர் ஒருநாளும் 
ஜெனிப்பித்தவருக்கு சமமாகவும் முடியாது 
     
 
6. இயேசு மாம்சமானதன் மூலம் தேவ தூதர்களைவிட சிறியவராகி பின்னர் உயர்த்தபட்டார்.
 
எபிரெயர் 2:9  தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்
  
இதில் எந்த அனுபவமும் இல்லாத பிதாவாகிய தேவனும் பரிசுத்த ஆவியானவரும் எவ்விதத்திலும் அவருக்கு சமமாக முடியாது!
 
இன்னும் அனேக மாறுபாடுகள் இந்த கொள்கையில் இருக்கின்றனர்.  இந்த கொள்கையே முற்றிலும் தவறான ஓன்று. அதனால்தான் அநேகர் இந்த கருத்து குறித்து கேள்வி எழுப்புகின்றனர். தேவன் மூன்றாக செயல்பட்டார் என்பதை  அனுபவபூர்வமாகவும் வேதத்தின் மூலமும் அறிந்திருக்கும்  சகோதரர்களுக்கு அதற்க்கான காரணத்தையும் விளக்கத்தையும் கொடுக்க முடியாமல் போனதால் அந்த உண்மையே மறுக்கப்படும் நிலை  உருவாகிறது     
 
திரித்துவம் குறித்து நான் எழுதியிருக்கும் கருத்துக்கள் எந்த வசனத்துக்கு எவ்விதத்தில் முரண்பாடாக இருக்கிறது என்பதை சற்று எழுதும்படி அன்புடன் கேட்கிறேன்.


-- Edited by SUNDAR on Wednesday 16th of March 2011 04:12:04 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 28
Date:
RE: திரித்துவம் பற்றிய கிறிஸ்த்தவ கருத்தில் எனது சந்தேகங்கள்!
Permalink  
 


தேவன் பாவத்தில் வீழ்ந்த மனிதர்களை மீட்கும் திட்டத்தில் மூன்று ஆளத்துவமாக செயல்பட்டார் .திரித்துவம் குறித்து நான் எழுதியிருக்கும் கருத்துக்கள் எந்த வசனத்துக்கு எவ்விதத்தில் முரண்பாடாக இருக்கிறது என்பதை சற்று எழுதும்படி அன்புடன் கேட்கிறேன்.

sunder broக்கு see the ans pls;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;




1. “திரியேக தேவன்” என்ற உபதேசம் சத்திய வேதாகமத்திற்கு நேர் விரோதமானது.

2. “ திரியேக தேவன்” என்னும் வார்த்தையே bible-ல் கிடையாது.

1இராஜா.8:23; இஸ்ரயேலின் தேவனாகிய யாவே கடவுளே, மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை.
சங் 86:8; ஆண்டவரே தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை.
சங் 113:5; உன்னதங்களில் வாசம் பண்ணுகிற நம்முடைய தேவனாகிய யாவே கடவுளுக்குச் சமமானவர் யார்?
யாத் 15:11; யாவே கடவுளே , தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்?
எசா 46:9; நானே தேவன் . வேறொருவரும் இல்லை.
நானே தேவன் எனக்கு சமானமில்லை.
2சாமு.7:22; தேவர்க்கு நிகரானவர் இல்லை.
ஏசா 40:25 ; இப்படியிருக்க , என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?
எனக்கு யாரை நிகராக்குவீர்கள் ? என்று பரிசுத்தர் சொல்கிறார்.
ஏசா 46:5; யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?


சத்திய வேதம் இவ்வாறு சொல்லியிருக்க சரிசமானவர்கள் சமநித்தியர் என்று கூறுவது பொய் உபதேசம்.

“லூசிபர்” என்னும் தேவதூதனைப்பற்றி ….
ஏசா 14:14; நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்.உன்னதமானவர்க்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
லூசிபர் என்னும் தேவதூதன் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று பெருமைப்பட்டதால் அவனே தேவனுக்கு விரோதியான சாத்தானும் பிசாசுமானவன்.


இயேசு கிறிஸ்துவைப்பற்றி…..
பிலி 2:6-11; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கினார்.
… கீழ் படிந்தவராகி இதம்மைத்தாமேதாழ்த்தினார்.
• இயேசுவானவார், சாத்தானைப்போல் கொள்ளையாடி தேவனுக்கு சமமாய் இருக்க எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, மரண பரியந்தம் கீழ்படிந்தபடியால் தேவனே ஓர் விஷேச மகிமைக்கு உயர்த்தினார்.

கிறிஸ்துவத்தில் திருத்துவம் தொடங்கப்பட்டது எப்போது?

கி.பி. 325-க்கு பிறகு (Nicea counsil) நிசியா கவுன்சிலில்
முடிவெடுக்கப்பட்ட மூன்று தெய்வ வணக்கம் (or) திரியேக தேவத்துவம், திருத்துவம் என்ற வணக்கம் துவங்கப்பட்டது

.
ஏற்கனவே திருத்துவம் வணக்கம் உலகத்தில் இருந்தது.

1. எகிப்து – - ஓசீரியஸ், இஸிஸ் , நிப்திஸ்
2. பாபிலோன் - சீயூஸ் , ஹீரா , ரீயா
3. ரோமாபுரி – - ஜீபிடர் , தியானா , மொர்குரி
4. ஜப்பான் - - பான் , போ , பூ
5. இந்தியா- - சிவன் , பிரம்மா , விஷ்ணு.
6. ஜெர்மனி - தோர் , வெட்டன் ,வ்ரிட்கோ.



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
திரித்துவம் பற்றிய கிறிஸ்த்தவ கருத்தில் எனது சந்தேகங்கள்!
Permalink  
 


nissi wrote:

 1. “திரியேக தேவன்” என்ற உபதேசம் சத்திய வேதாகமத்திற்கு நேர் விரோதமானது. 2. “ திரியேக தேவன்” என்னும் வார்த்தையே bible-ல் கிடையாது. 1இராஜா.8:23; இஸ்ரயேலின் தேவனாகிய யாவே கடவுளே, மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை. சங் 86:8; 


சகோதரர் "nissi " அவர்களை நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் இணையில்லா நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்.

இதே கருத்துள்ள கட்டுரைகள் நமது தளத்தில் பலமுறை பதிவு செய்யப்பட்டு விட்டது. ஆகினும் தங்களின் விருப்பத்திணங்கள் இன்னொருமுறை இருந்துவிட்டு போகட்டும். இது free தளம்தானே. தங்களின் கருத்துக்கள் எல்லாவற்றிக்குமே என்னிடம் விளக்கம் இருக்கிறது. நான் மற்றவர்களைபோல கோபபட்டு எதுவும் சொல்லவும் மாட்டேன். இங்கு வரும் மற்ற சகோதர சகோதரிகள் விளங்கிக் கொள்ளும் அளவுக்கு நாம் நிதானமாகவே  விவாதிக்கலாம். "திரித்துவம்" "திரியேகத்துவம்" போன்ற வார்த்தைகள் வேதத்தில் இல்லாததால் அதை நாம் நம்பவும் வேண்டாம் அதை பற்றி  நாம் எதுவும் விவாதிக்க வேண்டாம். அதே

நேரத்தில் தேவனுக்கு நீர் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்றும் யாரும் வரையரை  நிர்ணயிக்க முடியாது.   
 
வேதத்தில் சொல்ல்பட்டுள்ள வார்த்தையின் அடிப்படையில் நான் கேட்கும் சில காரியங்களுக்கு மட்டும் தாங்கள் பதில் கொடுத்துவிட்டால் அதன்பின்னர் நான் தங்களின் கருத்துக்களை  ஏற்றுக்கொள்வது பற்றி பரிசீலிக்கிறேன்.
 
ஆதியாகமம்  1,3 அதிகாரத்தில் "எலோஹீம்" என்ற தேவன் தன்னை பற்றி குறிப்பிடும்போது "நமது" மற்றும் "நம்மில்"  என்று குறிப்பிடுகிறார்.
 
ஆதி: 1 26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;
 
3:22. பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்;    
 
என்று தம்மை பண்மையில் குறிப்பிடுகிறார். 
 
ஆனால் பின்னர் வரும் அனேக வசனங்களில்  அவர் தன்னை  "நான்" "நானே"
 ஒருமையில் குறிப்பிடுகிறார்.   
 
ஏசாயா 44:24   கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்.  நான் ஒருவராய் வானங்களை விரித்து    
 
1.  தேவன் இவ்வாறு சொல்ல காரணம் என்ன?
 
மேலும் வேதாகமம் முதல் அதிகாரத்தில் தேவனை  "தேவன்" என்றும்"எலோஹீம்"
என்றும் காட்டும்  வசனம், இரண்டாம் அதிகாரத்தில் "தேவனாகிய கர்த்தர்" என்றும் "யோகோவா" என்றும் காட்டுவதன் காரணம் என்ன? 
 
வேதாகமத்தை பொறுத்தவரை பெயர்கள் என்பது மிகவும் முக்கியமானது. அவ்வாறிருக்க  
 
2."தேவன்" என்பவர் ஏன் "தேவனாகிய கர்த்தர்" ஆனார்?
 
எனபதை அறிந்திருந்தால் சற்று விளக்குங்கள்.  நாம் தொடர்ந்து விவாதிக்கலாம்.
 


-- Edited by SUNDAR on Thursday 24th of March 2011 09:29:06 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 28
Date:
Permalink  
 

This article is about the Hebrew word. For other uses, see Elohim (disambiguation). Elohim (אֱלהִים) is a plural formation of eloah, the latter being an expanded form of the Northwest Semitic noun il (אֱל, ʾēl

 [1]). It is usually translated as "God" in the Hebrew Bible, referring with singular verbs both to the one God of Israel, and also in a few examples to other singular pagan deities. With plural verbs the word is also used as a true plural with the meaning "gods".

[2] The singular forms eloah (אלוה) and el (אֱל) are used as proper names or as generics, in which case they are interchangeable with elohim.

[3] The notion of divinity underwent radical changes throughout the period of early Israelite identity. The ambiguity of the term Elohim is the result of such changes, cast in terms of "vertical translatability" by Smith (2008); i.e. the re-interpretation of the gods of the earliest recalled period as the national god of the monolatrism as it emerged in the 7th to 6th century BC in the Kingdom of Judah and during the Babylonian captivity, and further in terms of monotheism by the emergence of Rabbinical Judaism in the 2nd century AD.

[4] In Hebrew the form of the word Elohim, with the ending -im, which normally indicates a masculine plural, however with Elohim the construction is usually grammatically singular, (i.e. it governs a singular verb or adjective) when referring to the Hebrew God, but grammatically plural (i.e. taking a plural verb or adjective) when used of pagan divinities (Psalms 96:5; 97:7).

Further information: El (deity), Ilah, and Allah The Dictionary of Deities and Demons in the Bible defines "elohim" as a plural of eloah, an expanded form of the common Semitic noun "'il" (ʾēl).

[5] It contains an added heh as third radical to the biconsonantal root. Discussions of the etymology of elohim essentially concern this expansion.

 An exact cognate outside of Hebrew is found in Ugaritic ʾlhm, the family of El, the creator god and chief deity of the Canaanite pantheon, and in Arabic ʾilāh "god, deity" (or Allah as " The [single] God"). "El" (the basis for the extended root ʾlh) is usually derived from a root meaning "to be strong" and/or "to be in front".[6]



-- Edited by nissi on Friday 25th of March 2011 08:53:12 AM



-- Edited by nissi on Friday 25th of March 2011 08:55:55 AM

__________________


இளையவர்

Status: Offline
Posts: 28
Date:
Permalink  
 

ஆதி: 1 26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; 3:22. பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; என்று தம்மை பண்மையில் குறிப்பிடுகிறார். ans sunder bro;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

சாலொமோன் ராஜா பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு முதல்சிருஷ்டியாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து கூறுகிறார். நீதி 8:22-30;

நீதி 8:22; கர்த்தர் தமது கிரியைகளுக்கு முன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.

“ யேகோவா தமது படைப்புகளில் என்னையே முதலாவதாக படைத்தார். ” என்று திருத்திய மொழி பெயர்ப்புகளில் காணலாம். “ஆதி முதற்கொண்டும்”.

 நீதி 8:23; அநாதியாய் அபிஷேகம் பண்ணப்பட்டேன். ஜெநிபிக்கப்பட்டேன். பிறப்பிக்கப்பட்டேன்.(ஆதி 1:20

நீதிமொழிகள் 8 அதிகாரம்

22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.

23. பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.

24. ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.

25. மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,

26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.

 27. அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,

28. உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,

29. சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,

30. நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.

கொலோசெயர்1 அதிகாரம்

 15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.



-- Edited by nissi on Friday 25th of March 2011 09:06:34 AM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
RE: திரித்துவம் பற்றிய கிறிஸ்த்தவ கருத்தில் எனது சந்தேகங்கள்!
Permalink  
 


சகோதரர்  அவர்களே! தாங்கள் ஆண்டவராகிய இயேசுவைபற்றி சொல்லியிருக்கிற எந்த ஒரு வசனத்தையும் நான் மறுக்கவில்லை. வசனத்தை மறுக்க முடியாது எனக்கும் இதே  நம்பிக்கை உண்டு!
 
nissi  WROTE 
////“ யேகோவா தமது படைப்புகளில் என்னையே முதலாவதாக படைத்தார். ” என்று திருத்திய மொழி பெயர்ப்புகளில் காணலாம். “ஆதி முதற்கொண்டும்”///.
 
ஆனால் இந்த கருத்து ஏற்புடையது அல்ல! தூதர்கள் படைக்கபட்டவர்கள் ஆனால் இயேசுவானவர் "ஜெநிப்பிக்கபட்டவர்". அவர்  படைக்கப்பட்டவர் அல்ல. அதை தாங்கள் சுட்டிய வசனமே சொல்கிறது.
 
24. ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்
 
அதாவது வெளியில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு கணினியை படைக்க அல்லது உருவாக்க முடியும் அனால் எனது பிள்ளையை நான் ஜெநிப்பிக்க என்னுடைய ஒரு கருப்பொருள் கட்டாயம் தேவைப்படும் அவ்வாறு என்னுடைய கருப்பொருள் அங்கு இல்லைஎன்றால் அது எனது பிள்ளையாக் இருக்கமுடியாது.  
 
அதுபோல் இயேசுவானவர் ஆதியிலே தேவனுடன்  தேவனாகவே கூட இருந்தவர். 
 
யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தி லிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது
 
தேவனாயிருந்த  அந்த  "வார்த்தை" என்னும் கருப்பொருள் மூலம் இயேசுவை தேவன் "இன்று" என்று வசனம்சொல்லும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஜெநிப்பித்தார்.   
 
எபிரெயர் 1:5 எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்
 
இந்த வார்த்தை எந்த தூதர்களுக்கும் சொல்லப்படவில்லை 
 
எபிரெயர் 1:5 எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?
  
எனவே தூதர்களின் சிருஷ்டிப்புக்கும் இயேசுவின் ஜெநிப்பித்தலுக்கும் அனேக முக்கிய வேறுபாடுகள் உண்டு! எனவேதான்    
 
கொலோசெயர் 2:9   தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.
 
தாங்கள் சுட்டியிருக்கும் வசனம்  எதையும் நான் மறுக்கவில்லை. அத்தோடு நான் சுட்டியிருக்கும் ஒருசில வசனங்களையும் சேர்த்து பொருத்தி பாருங்கள் உண்மை புரியவரும்.  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 28
Date:
திரித்துவம் பற்றிய கிறிஸ்த்தவ கருத்தில் எனது சந்தேகங்கள்!
Permalink  
 


தூதர்கள் படைக்கபட்டவர்கள் ஆனால் இயேசுவானவர் "ஜெநிப்பிக்கபட்டவர்". அவர் படைக்கப்பட்டவர் அல்ல. அதை தாங்கள் சுட்டிய வசனமே சொல்கிறது.
ஆனால் இந்த கருத்து ஏற்புடையது அல்ல!
24.When there were no depths, I was brought forth; when there were no fountains abounding with water.
ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்
And God said, Let the waters bring forth abundantly the moving creature that hath life, and fowl that may fly above the earth in the open firmament of heaven.
Gen.1:20;ஆதியாகமம்1 அதிகாரம்20. பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

riginal Word: חוּל
Transliteration: chuwl
Phonetic Spelling: (khool)
Short Definition: bear

bear, make to bring forth, make to calve, dance, drive away, fall grievously with pain
Or chiyl {kheel}; a primitive root; properly, to twist or whirl (in a circular or spiral manner), i.e. (specifically) to dance, to writhe in pain (especially of parturition) or fear; figuratively, to wait, to pervert -- bear, (make to) bring forth, (make to) calve, dance, drive away, fall grievously (with pain), fear, form, great, grieve, (be) grievous, hope, look, make, be in pain, be much (sore) pained, rest, shake, shapen, (be) sorrow(-ful), stay, tarry, travail (with pain), tremble, trust, wait carefully (patiently), be wounded.

கொலோசெயர்1 அதிகாரம்15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
Who is the image of the invisible God, the firstborn of every creature:

Original Word: πρωτότοκος, ον
Part of Speech: Adjective
Transliteration: prototokos
Phonetic Spelling: (pro-tot-ok'-os)
Short Definition: first-born
Definition: first-born, eldest.





-- Edited by nissi on Saturday 26th of March 2011 09:19:22 AM

__________________


இளையவர்

Status: Offline
Posts: 28
Date:
Permalink  
 

யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தி லிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது

தேவனாயிருந்த அந்த "வார்த்தை" என்னும் கருப்பொருள் மூலம் இயேசுவை தேவன் "இன்று" என்று வசனம்சொல்லும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஜெநிப்பித்தார்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;; pls see: jesus name "வார்த்தை"

வார்த்தை - யோவா. 1:14;

வெளி.19:13; இரத்தத்தில் தொய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருந்தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.

இயேசுவுக்கு வார்த்தை என்ற பெயரும் உண்டு. அரசனுடைய பிரதிநிதியாக பேசுகிற ஒருவனை கிரேக்க பாஷையில் Logos – லோகாஸ் அதாவது வார்த்தை என்று அழைத்தனர்.

தேவனாகிய யேகோவா தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உலகத்தாருடன் பேசினப்படியால் இயேசுவுக்கு வார்த்தை என்ற பெயர் பொருத்தமாயிருக்கிறது.

யோவா.12:49; நான் சுயமாய் ஒன்றும் பேசவில்லை. நான் பேசவேண்டியது இன்ன தென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்கு கட்டளையிட்டார்.
உபா 18:18-19; உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக எழும்ப பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்கு கற்பிப்பதெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். (நிறைவேறுதல் அப். 3:22-23) (எபி 1:1) இக்காரணங்களை முன்னிட்டு யோவா.1:1-3; வசனங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பதன் விளக்கம்.

 “அநாதி தேவன்" = தொடக்கமும் முடிவும் இல்லாதவர் தேவன்.

ஆதியிலே (தொடக்கத்திலே) வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவா.1:1; தேவர்கள் (or) தேவன் என்பவர்கள் யார்?

எபிரேயமொழியில்எல்லோயிம்என்னும்பதம்தேவன்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. Elohim = தேவன் -வல்லவர். Ans ::இவ்வார்த்தப்படி வல்லவர்கள் அனைவரும் தேவர்களே ஆவர்.

Example : யாத் 4:16;7:1; நீ அவனுக்கு தேவனாக இருப்பாய். (மோசே- தேவன்).உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்.

 சங் . 82:1-6; நீங்கள் தேவர்கள் என்றும் , நீங்கள் எல்லோரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். தேவ சபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார். தேவர்கள் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.(யோவா.10:34-36---இயேசு)

2கொரி. 4:4 ; இப்பிரபஞ்சத்தின் தேவன் ஆனவன் அவர்களுடைய மனதை குருடாக்கினான். பொல்லாத செயலில் வல்லவன் - (சாத்தான் - தேவன்) .

யாத் 22:28; நியாயாதிபதியை தூஷியாமலும் …. (நியாயாதிபதி, தூதர்கள் , மோசே தேவனுடைய பிள்ளைகள் சாத்தான் தேவர்கள் என்று சொல்லப்பட்டுயிருக்கிறது).

கிரேக்க பாஷையில் உள்ளபடி பார்த்தால் … In the beginning was the Logos , andthe Logos was with THE GOD and a god was the Word . என்றுள்ளது. பிதாவாகிய தேவனை THE GOD - மகாதேவன் குமாரனாகிய இயேசுவை a God - ஒரு தேவனாயிருந்தார்.

 உபா 10:17 ; உங்கள் தேவனாகிய யேகோவா;

1. தேவாதி தேவனும்

2. கர்த்தாதி கர்த்தரும்

 3. மகத்துவம் ,வல்லமையும் பயங்கிரமுமான தேவனுமாயிருக்கிறார் சங் 82:1;

 4. தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். சங் 95:3;

5. மகாதேவனும்.

 6. எல்லா தேவர்களுக்கும் மகா ராஜனுமாயிருக்கிறார். சங் 96:4 ;

7. பெரியவர்

8. எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. சங் 96:7; யேகோவாவுக்கே அதை செலுத்துங்கள். சங் 136:2; தேவாதி தேவனைத் துதியுங்கள். சங் 138:1; தேவர்களுக்கு முன்பாக உம்மை கீர்த்தனம் பண்ணுவேன்.

 1கொரி. 8:5-6;

 1. அநேக தேவர்கள் உண்டு. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள்உண்டு.

2. ஓரே தேவன் நமக்குண்டு இப்படி அநேக தேவர்களும், அநேககர்த்தாக்களும்உண்டாயிருந்தாலும் பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம்.

 3.இயேசு கர்த்தர். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு.

;;;;;;;;;;;;;;;;;;;; அதுபோல் இயேசுவானவர் ஆதியிலே தேவனுடன் தேவனாகவே கூட இருந்தவர்.see the ans pls;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

தேவன் ======ஆதியும் அந்தமும் இல்லாதவர் jesus=======தொடக்கமும் முடிவும்உண்டு

1.அநாதி தேவன் - everlasting (Eternal God )– நிரந்தரமான –என்றுமுள்ள - (ஆதியும் அந்தமும் இல்லாதவர்.)

சங் 41:13 ; இஸ்ரயேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். (சங் 106:48;)

உபா 33:27 ; அநாதி தேவனே உனக்கு அடைக்கலம் ; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்.

சங் 90:2 நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.

சங் 93:2; நீர் அநாதியாய் இருக்கிறீர்.

ரோம…..16:25; அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியாக்கப்பட்டதும் …

2.மாறாதவர் - unchangeable..

மல் 3:6; நான் கர்த்தர் ; நான் மாறாதவர் .

சங் 102:27 ; நீரோ மாறதவராய் இருக்கிறீர் ; உமது ஆண்டுகள்
முடிந்து போவதில்லை.

யாக் 1:17 ; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

யாத் 3:14 ; இருக்கிறவராக இருக்கிறேன்……(அவதாரம் எடுப்பவர் அல்ல)



-- Edited by nissi on Saturday 26th of March 2011 09:36:27 AM

__________________


இளையவர்

Status: Offline
Posts: 28
Date:
RE: திரித்துவம் பற்றிய கிறிஸ்த்தவ கருத்தில் எனது சந்தேகங்கள்!
Permalink  
 


I பேதுரு4 அதிகாரம்11. ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்;

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
Permalink  
 

Bro. Nissi Wrote
////1.“திரியேக தேவன்” என்ற உபதேசம் சத்திய வேதாகமத்திற்கு நேர் விரோதமானது.  2.“திரியேக தேவன்” என்னும் வார்த்தையே bible-ல் கிடையாது.///
 
சகோதரரே! மற்ற சகோதரர்கள் சொல்லும் கருத்தின் அடிப்படயில் எனது விளக்கத்தை நோக்கவேண்டாம்.  நான் தேவனை "திரியேக தேவன்" என்றோ "திரித்துவ தேவன்" என்றோ எங்கும் சொல்லவில்லை. 
 
நான் அறிந்துகொண்டிருக்கும்  கருத்து வித்யாசமானது. நீங்கள் யாரிடமும் கேட்டிருக்க மாட்டீர்கள்.  
 
மனுஷனை இருக்கும் ஒருவருக்கு  எத்தனை ஆவி இருக்கிறது என்று ஆராய்வோமானால்  "ஒரு ஆவி" இருக்கிறது என்றும் அவன் ஒரு ஆள்துவமாக இருக்கிறான் என்றும்  அந்த ஆவி ஒரே ஒருமுறை  போய்விட்டால் மனுஷன் என்பவன் இல்லை என்றும் அறிவோம். 
 
அதேபோல்  தேவனோ ஆவியாயிருக்கிறார்! 
 
யோ4:24 தேவன் ஆவியாயிருக்கிறார்
 
ஆவியாயிருக்கும் அந்த  தேவனுக்குள்  எத்தனை ஆவிகள்  கூட்டாக இருக்கிறது என்று ஆராய்வோமானால் அவருக்கு ஏழு ஆவிகள் இருக்கிறது வசனம் சொல்கிறது.
 
வெளி 4:5  தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன
     
இந்த ஏழு ஆவிகளுக்கு ஏழு ஆள்த்துவங்கள் உண்டு! என்பதுதான் எனது கருத்து! அந்த ஏழு ஆள்த்துவங்களில் மூன்று ஆள்த்துவங்கள்  மீட்பின் திட்டத்தில் செயல்படுகின்றன என்பதை நம்மால் அறியமுடியும்  
 
ரோமர் 8:9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், 
 
கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல
 
ரோமர் 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால்,  .
 
இவ்வசனங்களில் தேவனின் மூன்று தனிப்பட்ட  ஆவிகள் செயல்பட்டிருப்பதை அறியமுடியும்.
 
1 தேவனுடய ஆவி      - பிதா
2 கிறிஸ்த்துவின் ஆவி - குமாரன்
3 இயேசுவை மரித்தோரில் இருந்து எழுப்பியவர் ஆவி -ஆவியானவர்
 
இந்த மூன்று ஆவிக்கும் மூன்று ஆள்த்துவங்களாக செயல்படுகின்றன. 
 
அதாவது "ஏழு ஆவிகளையும் ஏழு ஆள்த்துவங்களையும் கொண்டுள்ள தேவன்
ஒருவரே!" அவர் மூன்று சமமானவரோ அல்லது மூன்று தலையுடைய ஒருவரோ அல்ல!    
 
உதாரணமாக ஒரு கருத்தை சொல்வோமாகில்:  
ஒரு எஜமானுக்கு ஏழு மகன்கள் உண்டு அனால்  எங்கள் வீட்டுக்கு என்னை அழைத்துவர  அனுப்பபட்டவர்களோ மூன்றுபேர் மட்டுமே! நான் அறிந்தது அந்த மூன்று பேர்கள்தான் என்றஉடன் அவருக்கு மொத்தம் மூன்று மகன்கள்தான் என்று முடிவுக்கு வருவது ஒரு தவறான கருத்து. இந்த தவறை எஜமான் பெரிதாக எடுத்து கொள்ளமாட்டார்!  அதுவே திரித்துவம் என்ற கருத்து!
 
ஆனால் எஜமான் சார்பாக  நமக்காக  நமது வீடு தேடி வந்த அவரது மகனை வேலைக்காரன் என்றும் இன்னொருவரை மகனே இல்லை என்றும்  உதாசீனம் செய்து, அவருக்கு கொடுக்க வேண்டிய கனத்தை கொடுக்காதோர் மீது எஜமான் கோபம்கொள்ள நேரிடும்.     
 
இயேசுவை மிகாவேல் தூதன் என்று தீர்ப்பவர்களும்,  பரிசுத்த ஆவியானவரை ஆள்தத்துவம் இல்லாதவர் என்று தீர்ப்பவர்களும் அந்த நிலையிலேயே இருக்கின்றனர். என்பது எனது கருத்து!  
 
Bro. Nissi Wrote
 ////கிரேக்க பாஷையில் உள்ளபடி பார்த்தால் … In the beginning was the Logos , andthe Logos was with THE GOD and a god was the Word . என்றுள்ளது. பிதாவாகிய தேவனை THE GOD - மகாதேவன் குமாரனாகிய இயேசுவை a God - ஒரு தேவனாயிருந்தார்.////
 
மிகவும் அருமையான காரியத்தை சுட்டியிருக்கிறீர்கள் ஆனால் அதற்க்கு தாங்கள் போருள்கொண்டுள்ள விதம்தான் தவறாக தெரிகிறது.
 
In the beginning was the Logos - தொடக்கத்திலே  அல்லது  ஆதியிலே 
வார்த்தை இருந்தது.  
 
"தொடக்கத்திலேயே வார்த்தை இருந்தது" என்று இறந்த காலத்தில்தான் சொல்லப்பட்டுள்ளதே தவிர தொடக்கத்தில் வார்த்தை உண்டானது என்றோ உருவாக்கப்பட்டது என்றோ சொல்லப்படவில்லை.
 
உதாரணமாக 
 
"தொடக்கத்தில் இந்த ஊரில் ஒரு கிணறு இருந்தது" என்று சொல்வோமாகில் நாம் எப்பொழுது அந்த ஊரைப்பற்றி அறிய வந்தோமோ அப்பொழுதே ஒரு கிணறு அந்த ஊரில் இருந்தது. அந்த கிணறு எப்பபொழுது உருவானது என்பது குறித்து நமக்கு தெரியாது என்றே பொருள்படும்.
 
அதேபோல் "தொடக்கம்" என்று சொல்லப்படும் நாளிலேயே வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை எப்பொழுதில் இருந்து தேவனோடு இருக்கிறது என்பது இங்கு சொல்லப்படவில்லை. 
 
சுருக்கமாக காலங்கள் உருவாகும் முன்னமே அந்த வார்த்தை தேவனோடு இருந்திருக்கிறது. காலங்கள் உருவாகும்போது அதாவது "தொடக்கத்தில்" அது தொடர்ந்து தேவனோடு ஒருதேவனாக இருந்தது என்றே பொருள்கொள்ள முடியும்.    
இந்த கருத்தின் அடிப்படையில் ஆண்டவராகிய இயேசு தேவனின் வார்த்தையாக காலங்கள் உருவாகும் முன்னரே அவரோடு தேவத்துவம் உள்ளவராக இருந்திருக்கிறார்.
  
Bro. Nissi Wrote 
////தேவன் ======ஆதியும் அந்தமும் இல்லாதவர் jesus=======தொடக்கமும் முடிவும்உண்டு////
வெளி 22:13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
 
ஆதாவது கிறிஸ்த்து தேவனோடு தேவனின் வார்த்தையாக இருந்த முந்திய காலங்கள் அனாதியானவை. ஆனால் "தேவனின் சிருஷ்ட்டிப்பில் தொடக்கமும் அதன்  முடியும் இயேசுவுக்காக  இயேசுவாலேயே நடந்தது"  என்பதை குறிக்கவே  இந்த வார்த்தைகள் பயன்படுகிரதேயன்றி கிறிஸ்த்துவுக்கு தொடக்கமும் முடிவும்
உண்டு என்று சொல்வதற்காக அல்ல.     
 
யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை
ரோமர் 11:36 சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; 
 
காலங்களின்  தொடக்கம் என்பது இயேசுவின் மூலமே ஆரம்பம் ஆகிறது, அவர் மூலமே அது முடிகிறது என்பதை குறிக்கவே"ஆதியும் அந்தமும்" என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது.
 
5. அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

இயேசுவின் மூலம் ஆரம்பமான காலம் அல்லது தொடக்கம் இங்கு ஒரு முடிவுக்கு வருகிறது. இதுவே "ஆதியும் அந்தமும்" ஆனவர் என்று குறிப்பிடப்படுள்ளது.  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



புதியவர்

Status: Offline
Posts: 1
Date:
திரித்துவம் பற்றிய கிறிஸ்த்தவ கருத்தில் எனது சந்தேகங்கள்!
Permalink  
 


Hai ,Trinity romba confuse pannikura visiyamey illa let me explain . bible la Trinity nu oru vaarthaiyee kedaiyathu but kadavul thanmaii ullavanga 3 Peru irukaga father god , son god ,sprit god ...father god ellathuku mel ulla kadavul avaru avaroda singaasanathula irukaratha paakurom ,ippo namma father god yaraachu oruthara enthirichu pooi pakanum appadingura alavuku yarachu periya aal irukagala ? Kedaiyathu . yarukachu venumna avanga vanthutha father god ah pakanum appadi avanga pesuna kuda avarukuda romba nero pesa mudiyathu because father god erichal ulla thevan nu namma vaasikurom ....ippadi irukum pothu heaven layu earth layu oru prachanaina epdi solve panna mudiyu athunala father god avaroda vaarthai ah thannoda kumaran ah padachu ella athikaaraththaiyu avar kitta kudukuraru literally ella athikarathaiyu ..ippo god enga la poganumo anga son of god tha povaru boomila moses kitta pesanuma god ku pathila son of god povaru ....boomila manusangaloda pavaththa pokkarathuku god vanthu bali aaganum so son of god tha vantharu ...boomiya god niyayam theerkanuma..so athuku Yaar vararu? Son of god tha vararu ....so god oda ella authority um son kitta iruku athunala tha yesappa solraru en namathinala enna venumo kelu ...na illama neega pitha kitta poga mudiyathu ....ennai kandavan pithavaii kandan...pithaavaii oruvanum kandathu illa kumaraney pitha vaiyum avar roobathaiiyu avar anbaiyu velii paduthunaaru ....holy sprit oru godly power irukaravar, masive millions of peoples ah monitor panraku avangala nalla valila nedatha appro eppavumey people kuda irukka .....people handle panraku god holy sprit ah use panrau but avaru namaku spiritual ah vaala help pannuvara avaru namakku valikaatti nu tha jesus sollii irukaru neega padichegannaley puriyum ...holy sprit thannoda mahimaiya theda maataaru yesappa oda mahimai kaha tha holy sprit so namma holy sprit name la endha prayer uh panna mudiyathu and father god name layu prayer panna mudiyathu because avaru ellathuku athikaariya yesappa va potrukaaru so namma prayer um workship um son of god ku ....athunala father god ku kovam varaathaanu ketikanna ,avarey sollikaru jesus is my son so obey his words....yesappa enna solraru athu father god eyy sonna maari .........hope this will helpful

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard