சகோதரர் ஜான் அவர்கள் "தேவனுக்கு இரு சித்தங்கள் உண்டு" என்றும், அதற்க்கு ஆதாரமாக அதே கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கீழ்கண்ட தொடுப்பை படிக்கும்படி சுட்டியிருந்தார்கள்.
அந்த கட்டுரையை நான் படித்தபோது, தேவனை சிலர் தவறாக புரிந்துகொண்டு அவரை இருசித்தம் உள்ளவர் என்று விளக்கம்ளித்திருப்பதை அறியமுடிகிறது. துன்மார்க்கரை அழிப்பதும் நீதிமான்களை காப்பதுவும் தேவனின் இரு சித்தங்கள்" என்ற பொருளில் எழுதப்பட்ட இந்த கட்டுரை சரியானதுதான் என்பதுபோல் தோன்றினாலும் அதில் உண்மை இல்லை! தெளிவான வசனங்கள் புரட்டபட்டு பொருள்கொள்ளப்படுகின்றன என்றே நான் கருதுகிறேன்.
"துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்" "துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்" யோபு 18:5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்
எசேக்கியேல் 18:32மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
தேவன் சாகிறவனுடைய சாவை விரும்புவதும் இல்லை அவன் சாகவேண்டும் என்பது தேவனின் சித்தமும் இல்லை! என்பதை நமக்கு சுலபமாக உணர்த்துகிறது. யாரையும் நரக அக்கினியில் போட்டு அவிப்பது எனது தேவனின் சித்தம் அல்ல.
தனது பிள்ளை ஓன்று தவறான காரியத்தை செய்துவிட்டது என்பதற்காக ஒரு சாதாரண மனிதன்கூட அதை அக்கினியில் போட்டு அவிக்க விரும்பமாட்டான்.
என்று தானே சொல்லிவிட்டு, தானே இருவழிகளில் இரு சிந்தைகளில் இருக்கிறார் என்று போதிப்பது தகுந்ததா?
தேவனுக்கு ஒரே ஒரு சித்தம்தான் "தீமையை நன்மையால் வென்று, எல்லோரும் மீட்கப்பட வேண்டும்" என்ற ஒரே சித்தம்தான் தேவனிடம் உண்டு! அதை குறித்து வசன ஆதாரத்துடன் கீழ்கண்ட திரியில் எழுதியிருக்கிறேன். நம்மீதான "தேவனின் சித்தம்" என்ன? தீமைக்குள் விழுந்து கிடக்கும் இந்த உகலம் மீட்கப்பட வேண்டும் என்பதே தேவனின் ஒரே சித்தம்.
ஆகினும், தேவ நீதியின்படி சாத்தான் தண்டிக்கப்படும்போது, துன்மார்க்கமாய் நடப்பவர்கள் அதே தேவநீதியின் அடிப்படயில் தேவனால் கைவிடப்பட்டு, சாத்தனுடன் சேர்ந்து அவன் இடமாகிய நரக பாதாளத்துக்கு போகும் நிலை இருப்பதால், அப்படியாரும் போய்விடக் கூடாது என்ற நோக்கிலேயே தேவன் நீடிய
பொறுமையுடன் காத்திருக்கிறார் என்று வேதம் சொல்கிறது.
தேவன் என்னதான் பொறுமையை இருந்தும் மனம்திருபாதவர்கள் இறுதியில் அக்கினி கடலிலே தள்ளபடுவது உறுதி.
வெளி 20:15ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்
நான் அறிந்தவரை தேவனுக்கு ஒரேஒரு சித்தம்தான் அது "ஒருவரும் கெட்டு போககூடாது" என்பது. அதே சித்தம்தான் எனக்கும் உள்ளது. அதற்காகவே நான் ஆண்டவரிடம் அதிகமதிகமாக மன்றாடுகிறேன்.
தேவனுக்கு எல்லோரும் மீட்கப்பட வேண்டும் என்ற ஒரே சித்தம் இருந்தும், அவரது நீதிக்கும் பரிசுத்தத்ததுக்கு விரோதமாக செயல்படும் துன்மார்க்கர்கள் தண்டிக்கபடுவது என்பது தேவ நீதியே அன்றி அது அவரின் சித்தம்அல்ல!
வேதத்ததில் உள்ள ஒரு சம்பவத்தையே இங்கு உதாரணமாக கூறலாம்.
ராஜாவாகிய தரியு அந்த தேசத்துக்கே ராஜாவானவர். அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அவருக்கு தானியேல் மேல் பிரியம் உண்டு. அவன் சிங்க கெபியில் போடப்படுவதை அவர் சற்றும் விருபவில்லை ஆகினும் அந்த காரியம் அவரால் தீர்மாநிக்கபட்டு அதற்க்கு முத்திரை இட்டதிநிமிதம அவரால் ஒன்றும் செயமுடியாமல் போனது.
அதேபோல் தேவனை பற்றி அவர் "சர்வவல்லவர், எனவே நினைத்த நேரத்தில் நினைத்ததை செய்துவிடுவார் என்று தவறான கணக்கு போட்டு ஏமாறக்கூடாது"
"ஆதாரம்" என்றால் "அடிப்படை" அவரது சிங்காசனத்தின் அடிப்படையே அதாவது அவரது சிங்காசனம் போடப்பட்டிருபதே "நீதி, நியாயம்" என்னும் காரியங்களின் மேல்தான். எனவே அவர் நீதியில்லாமல் தனது விருப்பபடி எதையும் செய்து விடமாட்டார் அதற்காக அவர் சர்வ வல்லவர் அல்ல என்ற நிலையையும் அடைந்துவிட மாட்டார். அவர் சர்வ வல்லவரே ஆனால் நீதி நியாயங்களுக்கு கட்டுபட்டவர். மனுஷன் வேண்டுமானால் அவரை தவறாக கணித்து என்ன வேண்டுமானாலும் சொல்லிகொள்ளலாம்
இவ்வாறு எல்லோருக்கும் பொதுவான "தேவ நீதி" என்று ஓன்று உள்ளது. அந்த நீதியின் அடிப்படையில் பரலோக ராஜ்யத்துக்கான குறைந்தபட்ச தகுதியை தேவனே தீர்மானித்து வைத்துள்ளார். அந்த நீதிக்கு வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருப்பவர் இயேசு. அவர் மூலம் அந்த தகுதியை எட்டுகிரவர்கள் மட்டுமே தேவனிடம் சேரமுடியும். எல்லோரும் அதுபோல் தகுதியை பெற்று தேவனை சேரவேண்டும் என்பது தேவனின் விருப்பம் மற்றும் சித்தம்! ஆனால்அந்த தகுதியை எட்டாதவர்கள் சாத்தானுடன் சேர்ந்து அக்கினி கடலுக்கு போவது தேவனின் "சித்தம் அல்ல"
மத்தேயு 18:14இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
அதாவது அது "தேவனின் சித்தம்" அல்ல அது "தேவ நீதி"! அந்த சாவை தேவன் விரும்பவில்லை என்று எசே:18:32ல் சொல்கிறார்.
வேதத்தை புரிந்துகொள்ள முதலில் தேவனை புரிந்துகொள்ளுங்கள்! ஜனங்களுக்காக பரிதபிக்கும் அவர் யாரையும் அக்கினிகடலில் போட்டு அவிக்க சித்தம் கொண்டிருக்கவில்லை!
-- Edited by SUNDAR on Wednesday 16th of March 2011 10:20:48 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)