1. இயற்கை அழிவுகளுக்கு காரணம் யார்? இறைவனா? சாத்தானா?
சகோதரர் சந்தோஷ் அவர்களே,
இந்த உலகில் நடக்கும் நன்மை /தீமை/ அழிவு /நாசம்/ மோசம் போன்ற எல்லா காரியங்களும் சாத்தான் செய்தாலும் மனுஷன் செய்தாலும் "அது தேவனின் அனுமதியோடு தேவனால்தான் நடத்தபடுகிறது" என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதற்க்கு கீழ்கண்ட வசனம் ஆதாரமாக இருக்கிறது.
புலம்பல் 3:37ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? ஏசாயா 44:24உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்,
அவ்வாறிருக்கும்போது இந்த உலகில் நடக்கும் எல்லா இயற்க்கை அழிவுகளுக்கும் தேவனே காரணம் என்றே தீர்க்க முடியும்.
ஆகினும் இங்கு நான் அறிந்த உண்மை என்னவெனில். ஒரு காரியத்தை யார் நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல அதை ஏன் நடத்துகிறார் என்பதுதான் என்றுமே முக்கியமாகும்.
உதாரணமாக நான்கூட எனது பிள்ளையை சில வேளைகளில் அடிக்கிறேன். இங்கு "தகப்பனே தன் பிள்ளையை அடிக்கிறார்" என்று என்னை குறைசொல்வதைவிட நான் பெற்று வளர்த்த பிள்ளையே நான் ஏன் அடிக்கிறேன்? அல்லது பிறர் அடிப்பதற்கு ஒப்புகொடுக்கிறேன் அடிக்கும் இந்தசெயலை நான் விரும்பி செய்கிறேனா அல்லது வேறுவழியில்லாமல் செய்கிறேனா?என்பதை பார்க்க வேண்டும். அதாவது "எனது பிள்ளையை அடிக்கும் நோக்கம்" என்ன வென்பதை பார்க்கவேண்டும்.
கஷ்டபட்டு பெத்து எடுத்து பார்த்து பார்த்து வளர்த்த எனது பிள்ளையை அடித்து துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சிறிதும் கிடையாது. ஆனாலும் நான் அந்த பிள்ளை செய்த தவறை கண்டியாமல் விட்டால் அது பாதாளம் என்னும் கொடிய இடம் போக வாய்ப்பிருக்கிறது
நீதிமொழிகள் 23:14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
எனவே அந்த கொடிய இடத்துக்கு போய்விடக்கூடாது என்ற நோக்கத்தில் வேண்டா வெறுப்பாக அந்த காரியத்தை செய்கிறேன்.
அதேபோல் இந்த உலகில் நடக்கும் எந்தஒரு காரியமானாலும்சரி அது தேவனுக்கு தெரிந்து தேவனால் அனுமதிக்கபட்டே செய்யப்படுகிறது என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதை தேவன் வேண்டுமென்று விரும்பி செய்யவில்லை வருத்ததோடும் துக்கத்தோடும் பரிதபிபோடுமே செய்கிறார்.
நோவா காலத்தில் பூர்வ உலகத்தில் அழிவுக்கு ஒப்புகொடுக்கும் முன்னர் கூட தேவன் மிகுந்த மனஸ்தாபபட்டார் என்று வேதம் சொல்கிறது. அவர் அந்த அழிவை விரும்பி செய்யவில்லை. மாறாக
5. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்.
அதினிமித்தம் அந்த உலகத்தை அழித்தார். அதன்பின்னர் நினிவேயின் அழிவைப்பற்றி யோனாவிடம் சொல்லும்போதும்:
யோனா 4:11இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
சகோதரரே! நான் இங்கு சொல்லவருவது ஒரே ஒரு அடிப்படை காரணம்தான் அதை புரிந்துகொண்டால் தேவனின் செயல்பாடுகள் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். அவர் தான் படைத்த ஜனங்களுக்காக என்னென்ன காரியங்கள் எல்லாம் செய்திருக்கிறார் என்பதையும் அவர் மனுஷனுக்காக மட்டுமல்ல ஒவ்வொரு உயிருக்காகவும் எவ்வளவு பரிதபிக்கிறார் என்பதை அறியமுடியும். அவரின் ஆவி என்னை நிரப்பும்போதேல்லாம் நான் ஏங்கி ஏங்கி அழுகிறேன் இந்த ஜனங்களுக்காக அதிகமதிகமாய் பரிதபிக்கிறேன்.
எரேமியா 13:17நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்
அதே இரக்கமும் மனதுருக்கமும் ஆண்டவராகிய இயேசுவிடமும் இருந்தது லாசரு மரித்தபோது அங்குள்ள ஜனங்கள் அழுதபோது அவரும் அழுதார். எருசலேம் நகரத்துக்கு வரப்போகும் அழிவிநிமித்தமும கண்ணீர் விட்டார்.
"மிகுந்த இரக்கமுள்ளவர்" "மஹா பரிசுத்தம்" " நீதி/நேர்மை/செம்மை" இன்னும் "ஆழம் அகலம் தெரியாத அன்பு" இவற்றின் தொகுப்புதான் தேவன். இந்த் குணம் அனைத்தும் இருப்பதால்தான் அவர் தேவனாகவும் "சர்வ வல்லவராகவும்" இருக்கிறார்.
அதாவது
பரிசுத்தம் + அன்பு + இரக்கம் + நீதி + நேர்மை +உண்மை +செம்மை = சர்வவல்லமை = தேவன்
இந்த தேவன் தன்னுடைய ஆவியை ஒருவரிடமிர்ந்து முற்றிலும் நீக்கி விட்டால் அவன் கொடூரனாகிவிடுவான்! அவ்வாறு ஆகிப்போனவனே சாத்தான்.
ஒரு மனுஷனோ அல்லது மனுஷ கூட்டமோ தேவனின் இந்த பரிசுத்த நிலையை விட்டுவிலகி. வெகுதூரம் செல்லும்போது அந்த கூட்டத்தால் எந்த பயனும் இல்லை என்ற நிலைவரும்போது அது பிறருக்கு எச்சரிப்பாக இருப்பதற்காக ஒரு சிலரையோ அல்லது ஒரு கூட்டத்தையோ தன்னுடைய சங்கரிக்கும் தூதன் மூலம் அழிக்கலாம். ஆனால் தேவன் அதை வேறுவழியின்றி மிகுந்த வருத்ததோடும் மனஸ்தாபத்தோடும் செய்கிறார். அங்கு யாராவது ஒருவர் திறப்பில் நின்று ஜெபித்தால்கூட உடனே அவர் மனமிரங்கி ழிக்காமல் விட்டுவிடுவார். இதற்க்கு பல சாட்சிகள் வேதத்தில் உண்டு:
ஆமோஸ் 7: 4. கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது.
5. அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.
6. கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார்.
அடுத்து மோசேயிடம் கர்த்தர்:
யாத்திராகமம் 32:10௦ என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
14. அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.
அடுத்து
II சாமுவேல் 24:16தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்;
இஸ்ரவேல் ஜனங்கள் எத்தனை முறையோ தேவனை நோக்கி கெஞ்சி மன்னிப்பு கேட்பதும் அவர் மன்னிப்பதும், பின்னர் அவர்கள் தகாத செயல்களை செய்வதும் வாடிக்கையாக கொண்டிருந்தனர் என்பது போன்ற இன்னும் அனேக காரியங்களை சொல்லிக்கொண்டே போகலாம்
புலம்பல் 3:22நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
"எப்படிஎன்று விளக்க முடியாத ஒரு குறிபிட்ட வரையறைக்குள் கொண்டுவர முடியாத முடிவில்லா மிகுந்த இரக்கம் உள்ளவர் நமது தேவன்" அவரை இந்த ஜனங்கள் அறியாமல் இருப்பதுதான் எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது.
இவ்வளவு அளவிடமுடியாத இரக்கமுள்ள தேவனை வணங்குகிறேன் என்று சொல்லும் மனுஷர்கள் சற்றும் இரக்கம் இல்லாமல் தாங்களே கள்ளனாகவும் தவறானவனாகவும் இருந்துகொண்டு அடுத்தவரை நீயா நானா/ அவன் தப்பு, இவன் தப்பு/ நீ நரகம் போவாய்/ நான் தப்பித்துவிடுவேன்/ இவன் கள்ள உபதேசம் நான் நல்ல உபதேசம் என்று போட்டிபோட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் விரோதித்து தேவனைவிட்டு அதிகமதிகமாக விலகிபோய கொண்டு இருப்பது வேதனையே.
இவர்கள் தேவனை சரியாக அறிந்தால் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தவே மாட்டார்கள்!
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்.........
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இங்கு மனுஷன் தன்னுடைய சுய லாபத்துக்காக அல்லது தன்னை மேன்படுத்தி கொள்ள அல்லது ஏதோ ஒரு நன்மையை எதிர்பார்த்து செய்யும் காரியங்களால் இன்னொருபுறம் பேரழிவுகள் வரும் நிலை ஏற்படுத்திறது. போர்/ இயற்க்கை சமநிலையை கெடுத்தல்/ அணு உற்பத்தின் போன்றவை இதில் அடங்கும்.
இவ்வித அழிவின் முக்கிய காரணம் மனிதன் தனக்கு ஏதாவது ஒரு நன்மை உண்டாகும் என்று கருதி செய்யபோக, அதனால் அவனுக்கோ அல்லது இன்னொரு சாரருக்கோ அழிவு உண்டாகிறது.
2. சாத்தானால் உண்டாகும் பேரழிவுகள்:
சாத்தானால் உண்டாகும் பேரழிவில் யாருக்கும் எந்த நன்மையும் எதிர்பார்க்க முடியாது. "அவனது நோக்கமே கொல்லுவதும் அழிப்பதும்தான்". தேவனுடைய பிள்ளைகள்மேல் இடைவிடாது இரவும் பகலும் குற்றம்சாட்டி தேவனிடம் அனுமதி பெற்று, சன்மார்க்கருக்கும் துன்மார்க்கருக்கும் அழிவை கொண்டுவந்து ஆனந்தப் படுவது இவனது ஆதி தொழில்.
3.தேவனால் வரும் பேரழிவுகள்:
ஒரு குறிப்பிட மனிதனாலோ அல்லது குறிப்பிட்ட சமுதாயத்தலோ தேவனுக்கு எந்தபயனும் ஏற்ப்படபோவது இல்லை, அவர்கள் தேவனைவிட்டு வழிவிலகி நெடுந்தூரம் சென்றுவிட்டார்கள் என்ற நிலையிலோ அல்லது அவர்கள் ஆடுமாடுகள் போல உணர்வில்லாத நிலையில் இருக்கும்போதோ தேவன் தாமே சில அழிவுகளை தனது சங்கரிக்கும் தூதர்கள் மூலம் செய்கிறார். அதாவது அவரது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தை எத்தனை முறை கொத்தி எருபோட்டும் கனியில்லாத பட்சத்தில் அதை வேட்டிபோடும் காரியத்தை வருத்ததோடு செய்கிறார். தேவனின் இந்த அழித்தல் மூலம் மூன்று பயன்உண்டாகிறது:
1. அந்த ஜாதியார் பிற ஜனங்களையோ அல்லது ராஜ்யத்தையோ கெடுத்துவிடாமல் தவிர்க்கப்படுகிறது.
2. அவர்கள் மீதான அழிவு மற்றவர்களுக்கு ஒரு பாடமாக திருஷ்டாந்திரமாக வைக்கப்படுகிறது.
3. தேவன் வெறும் அன்பானவர் மட்டுமல்ல அவர் பட்சிக்கிற அக்கினி என்று மற்றவர்கள் எச்சரிக்கப்படுகின்ற்றனர்
அழிவு என்பது யார் மூலமாக வந்தாலும் அங்கு தேவனின் அனுமதி இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை! எனவே அனைத்து அழிவுக்கும் தேவன் தாமே முடிவான அதாரிட்டி.
இந்த சம்பவத்தை ஏசாயாவில் கர்த்தர் சொல்லும் திராட்சைதோட்டம் உவமையுடன் ஒப்பிட்டு நோக்கினால் நலமாக இருக்கும்.
ஏசாயா 5:2 அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.
ஏசாயா 5:5இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.
தேவன் மனிதனை நல்லவனாகவே படைத்து நன்மையாகவே எல்லாவற்றையும் செய்து அவனை சுற்றி வேலியடைத்து பாதுகாப்பாகவே வைத்தார். ஆனால் மனிதனோ அனேக உபாயதந்திரங்களை தெரிந்து தீமையை நோக்கியே போகும்
நிலையில் இருக்கிறார்.
தேவன் பெரியதாக ஒன்றும் செய்யவேண்டியது இல்லை. அவருடைய பாதுகாப்பு வேலியை சற்று தளர்த்தினால் போதும், ஒரே நிமிடத்தில் சாத்தான் எல்லோரையும் மேய்ந்து விடுவான்.
இறைவனா? சாத்தானா? என்ற கேள்விக்கு "இறைவன்தான் பெரியவர்" என்று சுலபமாக பதில் சொல்லிவிடலாம்:
எபிரெயர் 6:13ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு:
I யோவான் 4:4உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
சங்கீதம் 135:5கர்த்தர் பெரியவர்என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
எரேமியா 10:6கர்த்தாவே, உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; ஆனால் "கர்த்தர்தான் சாத்தானை தனது திட்டத்தின் செயல்பாட்டுக்காக உருவாக்கி அனுமதித்தார்" என்ற கருத்தை நான் திட்டமாக மறுக்கிறேன்.
பிசாசானவன் ஆதிமுதலே பாவம் செகிறான்: ஆனால் தேவனோ பரிசுத்தர்:
I யோவான் 3:8ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்,
அவன் மனுஷ கொலைபாதகன் ஆனால் தேவனோ மனுஷங்களுக்காக பரிதபிக்கிறவர்:
யோவான் 8:44நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
பொய் வார்த்தைகளால் தேவநீதியை புரட்டுவதர்க்காகவே ஓயாமல் போராடும் தேவனின் சத்த்ருவாகிய சாத்தானை தேவன் தன் சுய விருப்பத்தின் அடிப்படயில் தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உருவாக்கினார் என்று சொல்வது "ஒருபுறம் தீவிரவாதத்தை வளர்த்துவிட்டு" இன்னொருபுறம் "தீவிரவாதிகளை அழிப்பேன்" என்று கோஷமிடும் ஒரு மாறுபாடான நிலையை காட்டுகிறது. தேவன் நிச்சயம் மாறுபாடானவர் அல்ல!
யோபு 31:3மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்
"மாருபாடானவனுக்கு ஆக்கினை" என்று சொன்ன தேவன், தானே மாறுபாடான காரியங்களை நிச்சயம் செய்வதில்லை! ஆகினும்அவர் மாறுபாடானவனுக்கு மாறுபாடானவர் போலவே தெரிவார் என்று வேதம் சொல்கிறது.
II சாமுவேல் 22:27புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
தேவன் "நான்தான் எனது திட்டத்தை நிறைவேற்ற எனது சத்துருவான சாத்தானை அனுமதித்தேன்" என்று எங்கும் சொல்லவில்லை. மாறாக
ஏசாயா 14:12அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே
அதாவது "அவனே மேட்டிமையாகி தேவனது பரிசுத்தத்துக்கும் முன்னால் நிற்க முடியாமல் வீழ்ந்துபோனான்". அதற்க்கு தேவன் எவ்விதத்திலும் பொறுப்பல்ல!
சூரியன்தான் கிழக்கில்தோன்றி மேற்கில் மறைகிறது என்பது எத்தனையோ ஆண்டு காலமாக் மக்கள் உறுதியாக் நம்பிக்கொண்டு இருந்தார்கள். நமது நேரடி கண் பார்வைக்கு அப்படியே தெரிவதால் எல்லோரும் அதை ஏற்றே ஆகவேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் யாரோ ஒருவரின் இடைவிடாத முயற்ச்சியால் சூரியன் நிலையானது பூமிதான் சுற்றுகிறது என்ற உண்மை உலகுக்கு தெரிந்தது. ஆகினும் இன்றும் நமது கண்பார்வைக்கு சூரியன் பயனிப்பதுபோலதான் தெரிகிறது.
அதேபோல் இந்த உலகம் பரிணாம வளர்ச்சியால் உண்டானதுதான் என்ற நோக்கிலேயே நோக்குகிறவர்களுக்கு அவ்வாறே தோன்றும்படிக்கு சிறிய உயிரியல் இருந்து பெரிய உயிர் வரை வரிசையாகவும் அவர்கள் கூற்றை நிரூபிப்துபோல் குரங்கும் அதன்பின் மனிதனும் கிரமப்படி உருவாகியிருக்கிறது. "மனிதனை தேவன் படைத்தார்" என்று நோக்கினால் தேவன் படைத்ததாகவே தெரியும். "தானாகவே பரிணாம வளர்ச்சியால் உருவானது" என்ற நோக்கிலேயே பார்ப்பவர்களுக்கு அது அப்படியே தெரியும்.
அதேபோல்
தவறான புரிதலின் அடிப்படையில், தேவன்தான் தீமையை உருவாக்கினார் என்ற நோக்கிலேயே வேதத்தை ஆராய்பவர்களுக்கு அது அப்படியே தெரியும். காரணம் எப்படி சாத்தான் பரிணாம வளர்ச்சி கொள்கையை கொண்டுவந்து தேவனின் படைப்பை மறுதலிக்க வைக்கிறானோ அதேபோல் "தேவன்தான் தீமையை அனுமதித்தார்" என்பது போன்றொரு மாய தோற்றத்தை உண்டாக்கி, உண்மை நீதி நேர்மை நியாயம் இவற்றின் மிகுந்த முக்கியத்துவத்தை மறைத்ந்து மற்றும் இயேசுவை ஏற்றுக்கொள்வதன்/ பிரசங்கிப்பத்தின் அவசர அவசியத்தை இலகுவாக்கி தன்னை தக்க வைத்துகொள்கிறான்
ஆனால் "தேவன் தீமையை தேவன் வேண்டுமென்று உருவாக்க வில்லை" என்று நோக்குகிறவர்களுக்கு அது அப்படியேதெரியும். அதற்கும் அனேக வசன ஆதாரங்கள வேதத்தில் எடுத்துசொல்லமுடியும் ஒருகாரியத்தை தேவனிடமிருந்து சரியாக அறியாமல் தாங்களே தீர்மானித்துக்கொண்டு போகிறவர்களுக்கு அவர்கள் அதையே நம்பும்படிக்கு தேவன் விட்டுவிடுகிறார்.
II தெசலோனிக்கேயர் 2:12அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
அவர் ஏன் அவ்வாறு அனுப்புகிறார்? அவர் மறுபாடாக இருப்பதால் அல்ல!
அவர்கள் அநீதியில் பிரியப்படுகிறார்கள்! அவர்கள் பிரியம்மே தவறாக இருப்பதால் தேவன் கொடிய வஞ்சகத்தை அனுப்புகிறார். இங்கு "தேவன் வஞ்சகத்தை அனுப்பி விட்டார்" என்று கூக்குரலிடுவது முறையல்ல. நீ நீதியில் பிரியபட்டால் தேவன் அதற்கேற்றவழியில் உன்னை நடத்துவார். அனால் உனக்கோ உன்னிடம் ஆயிரம் குறையைவைத்துகொண்டு அடுத்தவனை குற்றம்சாட்டுவதிலும் அவனிடம் தவறு கண்டுபிடிப்பதிலுமே அதிகமதிகமான பிரியம்இருக்கிறது" பின்னர் தேவன் என்ன செய்வார்? உன் விருப்பபடியே உன்னை விட்டுவிடுவார்!
அதேபோல் இந்த வசனமும் தவறாக போருள்கொள்ளப்டுகிறது!
ரோமர் 8: 21அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
இந்த உலகில்உள்ள சிருஷ்டிகள் எல்லாம் மாயையான காரியகளுக்கு கீழ்படுத்த பட்டிருப்பது உண்மையே. அதாவது இந்த உலகத்தில் உள்ள மனிதர்களின் கண்களும் இருதயமும் தேவனாலேயே அடைக்கபட்டு உண்மையை அறிந்து விடாதப்டிக்கு மாயையில் நிலைநிற்கும்படிக்கு செய்யப்பட்டுள்ளது.
ஏசாயா 6:10இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
அதற்க்கு பல ஆவிக்குரிய முக்கிய காரணம் உண்டு. அவ்வாறு மாயையில் மூடபட்டு கிடைப்பதாலேயே நாம் எந்த ஒரு மிகப்பெரிய துனபத்தையும் பேரிழப்புகளையும் ஒரு சில நாட்களில் மறந்து அதை கடந்து இந்த உலகத்தில் வாழ முடிகிறது.
ஆனால் இவ்வாறு மாயைக்குள் கிடக்கும் மூடபட்டகண்களையும் இருதயத்தையும் தேவன் திறக்க வல்லவர்.
ஆண்டவரே என் கண்களை திறந்தருளும், என் இருதயத்தை உணர்வுள்ளதாக்கும், என் உதடுகளை திறந்தருளும் என்றும்
சங்கீதம் 119:37மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்
என்றும் தொடர்ந்து ஜெபித்தால், அந்த மாயை என்ற திரையை தேவன் விலக்கி அதற்க்கு பின்னே இருக்கும் காரியங்களை காணும் நிலைக்கு நம்மை கொண்டு செல்வார்.
"தேவன்தான் என்னை மாயைக்கு உட்படுத்தியிருக்கிறார்" என்று எண்ணிக் கொண்டு அவர்மேல் பழியை போட்டுவிட்டு நிர்விசாரமாக இருந்தால் அதற்க்கு தேவன் பொறுப்பல்ல
நான் இதற்குமேல் "கர்த்தர் நல்லவர்" என்ற கருத்து குறித்து எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. அவர் நல்லவர் என்பதை ருசித்து பார்த்துதான் அறிய முடியும். சிலர் "கர்த்தர் நல்லவர்தான் ஆனால் தீமையை அவர்தான் அனுமதித்தார்" என்று கருதுவார்களேயாயின் அவர்கள் கர்த்தரின் அன்பையும் அரவணைப்பையும் அறியாதவர்கள்! ஏதோஒருவிதத்தில் சாத்தானின் வஞ்சனையில் சிக்குண்டவர்கள் என்றே நான் கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)