இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பார்வோனின் இருதயத்தை கடினப்ப்டுத்திய தேவன்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பார்வோனின் இருதயத்தை கடினப்ப்டுத்திய தேவன்!
Permalink  
 


வேதாகமம் முழுவதும் தேவனின் மகிமை பிரஸ்தாபங்கள் பற்றி எடுத்துரைக்கும் பல்வேறு சம்பவங்கள்  எழுதப்பட்டுள்ளது. அதில் ஒரு சில சம்பவத்தை எடுத்து கொண்டு இதுதான் தேவனின் உண்மை தன்மை என்று நாம் தீர்மானித்துவிட முடியாது.  
 
யாத்திராகமம் 7:3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.
யாத்திராகமம் 9:12 ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

இந்த வசனந்த்தின்படி கர்த்தரே பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினார் எனவே ஒருவர் மனதை கடினப்படுத்துவதும் தயை உண்டாக்குவதும் தேவனால் நடப்பவைகள் அவரே நன்மை தீமை அனைத்துக்கும் சூத்திரதாரி என்று பொருள் கொண்டுவிடமுடியாது. 
 
என்னுடைய கருத்து என்னவெனில், தேவனால் ஒருவரின் மனதைகடினப்படுத்தவும்
முடியும்
இலகுண்டாக்கவும்முடியும் என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியும்.
ஆனால் அவர்
செய்யும் காரியத்தில் நீதியில்லாமல் தன்னிச்சையாக  செயல்பட்டு ஒரு சர்வாதிகாரியாக செயல்பட மாட்ட்டார் எனபதே. அதாவது அவர் செய்யும் காரியத்தில் நீதியிருக்கும் என்பதே எனது விசுவாசம்.
 
அதுபோல் இந்த பார்வோனின் சம்பவத்திலும், மோசே பார்வோனிடம் வரும் முன்னர் 
கர்த்தர்
அவனை சந்தித்து பேசும்போதே அவர் இவ்வாறு சொல்கிறார்.
 
யாத்திராகமம் 3:19 ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.

எகிப்த்தின் ராஜாவின் மனக்கடினம் ஏற்கெனவே தேவனுக்கு தெரிந்த ஒன்றுதான்
அவனிமித்தம் ஒடுக்கப்படும்  இஸ்ரவேல் ஜனங்கள் கூக்குரலிட்டதிநிமித்தமே தேவன் அவர்களை மீட்பதற்காக
இரங்கி வைத்திருக்கிறார்தேவன் தன்னுடைய இரக்க குணத்தை மனிதனை விட்டு நீக்கிவிட்டால் அவன் மனம் கடினமாகிவிடும். இங்கு ஏற்கெனவே பார்வோன் இரக்க குணத்தை இழந்து ஜனங்களை  ஒடுக்கிக் கொண்டு இருந்தான் அதாவது அவன் ஒரு கடினமானவனும் அழிவுக்கு பாத்திரமானவனாகவும் இருக்கும்போது, அவனை மேலும்கடினமாக்கி தன்னுடைய  வல்லமையை  அவனிடத்தில் விளங்கப்பண்ணி ஜனங்களுக்கு எச்சரிப்பை
கொடுக்கும்
நோக்கத்தோடு அவர் அவ்வாறு செய்தார்.  
 
யாத்திராகமம் 9:16 என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.
 
அதாவது ஏற்கெனவே கடினபட்டு தேவனுக்கு இடமில்லாமல் இருக்கும் ஒரு மனதை பயன்படுத்தி தேவன் தன்னுடைய வல்லமையை விளங்கபண்ண நினைத்ததில் தவறு எதுவும் இல்லையே!  
 
அதாவது ஏற்கெனவே அரிசியை அதிகமாக தின்று சாகப்போகும்  நிலையில் இருக்கும் ஒரு ஆட்டையோ மாட்டையோ அறுத்து விற்று ஆதாயம  பார்ப்பது
போன்ற நிலையே இதுவும்!

ஏற்கெனவே தேவனைவிட்டுபிரிந்து அழிவுக்குநேராக இருக்கும் ஒரு மனிதனையோ அல்லது ஜனத்தையோ தேவன் இருதயத்தை கடினப்படுத்தி அவனுக்குண்டான அழிவை அவர் நிறைவேற்றுகிறார். அல்லது ஒருவரை கடினப்படுத்துவதன் மூலம் இன்னொருவருக்கு நன்மை ஏற்ப்படுமனால் அங்கும் தேவன் செயல்பட்டு கடினப்படுத்துகிறார். மற்றபடி எல்லோருடைய இருதயத்தையும் அவர்தான் கடினப்படுத்துகிறார் என்று பொருள் கொள்ளமுடியாது. காரணம் அவர்தான் எல்லோரையும் கடினப்படுத்துகிறார் என்றால் நம்மைபார்த்து "உங்கள்மனதை கடினப்படுத்தாதீர்கள்" என்றும் "என் வாக்கை கேட்காமல் கடினப்படுத்தினார்கள்" என்றும்  சொல்லியிருக்க மாட்டார்.     
 
II நாளாகமம் 30:8 இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்  
சங்கீதம் 95:8 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், .....உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
 
II நாளாகமம் 36:13  , இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.
நெகேமியா 9:29 உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.

மேலும் பாவத்தின் வஞ்சனையாலும் மனிதன் கடினப்பட்டுபோக முடியும் என்று வேதம் சொல்கிறது.
 
எபிரெயர் 3:13 உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.

கீழ்கண்ட வசனத்தில் தேவன் "அவரவர் தம்தம் பொல்லாத கடினத்தில் நடந்தார்கள்" என்று சொல்கிறார்.  

எரேமியா 11:8
ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், அவரவர் தம்தம் பொல்லாத இருதயகடினத்தின்படி நடந்தார்கள்

அதாவது இங்கு புரிதல் என்பது மிக சுலபம்.

வேத புத்தகத்தில்"மனக்கடினம்" என்பது பல்வேறு நிலையில் பல்வேறு காரியங்களால் உண்டாயிருப்பதை அறியமுடிகிறது. அவற்றுள்  "ஒருவரின்
இருதயத்தை தேவனாலும் கடினப்படுத்த முடியும்" என்பதை நமக்கு உணர்த்தும் செய்கையே பார்வோன் பற்றியசெய்தி. மற்றபடி எல்லோருடைய மனகடினத்துக்கும் தேவன் காரணமல்ல. அத்தோடு நீதியான காரணமில்லாமல் ஒரு நல்லவன் மனதை தேவன் கடினப்படுத்தவும் மாட்டார். எனவே ஒருவர் மனது  எந்த சூழ்நிலையில் எவ்வாறு கடினப்பட்டது என்பதன் அடிப்படையிலேயே நாம் முடிவேடுக்க வேண்டுமேயன்றி தேவன்தான் எல்லார் இருதயத்தையும் கடினப்படுத்திகிறார் என்ற முடிவுக்கு வருவது சரியன்று.  அவ்வாறு முடிவெடுப்பது என்பது "தான்  இரக்கமில்லாமல் மனக்கடினத்துடன் ஒரு காரியத்தை  செய்துவிட்டு, அந்த பழியை தேவன்மேல் போடும் முயர்ச்சியேயன்றி வேறல்ல".         


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard