இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான் எதற்க்காக கடவுளை தேடினேன்?


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நான் எதற்க்காக கடவுளை தேடினேன்?
Permalink  
 


நான் பரம்பரை   இந்து மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும்  எந்த ஒரு  மதத்தையும் பின்பற்றாமல். எந்த சாமியையும் பார்த்து கைஎடுக்காமல், ஏனோ தானோ என்று வாழ்ந்தவன்.  
 
நான் முக்தி பெறவேண்டும் என்றோ, ஞானம் வேண்டும் என்றோ, நன்றாக வாழ வேண்டும் என்றோ, எனக்கு சுகம்வேண்டும் என்றோ எனக்கு பணம் வேண்டும் என்றோ, பாவம் நீங்கவேண்டும் என்றோ, பரலோகம் போகவேண்டும் என்றோ, நரகத்துக்கு தப்பிக்க வேண்டும் என்றோ, இறைவனை அறிந்துகொள்ளவேண்டும் என்ற பற்றினாலோ பாசத்தினாலோ, யாருடைய நிர்பந்தத்தின் அடிப்படையிலோ நான் கடவுளை தேடவில்லை.
 
இந்த  உலகில் நடக்கும் பல்வேறு கொடூரங்கள், கொலை, கொள்ளை, பணத்துக்காகவும் சுய நலத்துக்காகவும்  மனிதர்கள் ஆடும் கோரதாண்டவங்கள். சற்றும் இரக்கமில்லாமல் சுய இனத்தையே  அழித்து ஆரவாரம் செய்து விலங்குகள் போல நடக்கும் மனிதர்களின் மறுபக்கங்கள், அத்தோடு  அருமையாக படைக்கபட்ட பாவமறியா உயிரினங்கள்கூட இந்த உலகில் படும் அவஸ்த்தைகள், ஒற்றை ஓன்று கொன்று  உயிரோடு உரித்து சாப்பிடும் அகோர நிலைகள்,  உயிரினங்களுக்கு  வேதனையை  ஏற்படுத்தவே படைக்கப்பட்டுள்ள இரத்தம்உருஞ்சும் உண்ணிகள் ஈக்கள்
கொசுக்கள் இவை எல்லாவற்றையும்பற்றி அடிக்கடி யோசித்து. இவை எல்லாம் ஏன் எதற்க்காக எப்படி  உருவானது என்ற மிகப்பெரிய குழப்பத்தில் இருந்தேன்.
 
முக்கியமாக எல்லோரையுமே ஆட்கொள்ளும்  மரணம் என்பது என்ன? அது  இந்த உலகை எப்படி ஆட்கொண்டது? அதிலிருந்து விடுபடவே முடியாதா?  இந்த உலகம் இப்படி சீர்கேட்ட நிலையில் இருக்க யார் காரணம்? அனைத்து இன்பங்களும் நிறைந்த இந்த உலகம் தீமையில் இருந்து மீட்க  வழியே இல்லையா?  கடவுள் கடவுள் என்று சொல்கிறார்களே அவர் ஏன் எதையுமே கண்டு கொள்வதில்லை? அப்படி ஒருவர் இருக்கிறாரா? என்பது போன்ற கேள்விகளுடன்   ஒரு பதிலற்ற நிலையில்  இருந்தேன். 

இந்நிலையில்  1992ம் வருடத்தில் ஒருநாள் மும்பையில் உள்ள அந்தேரி என்னும் இடத்தில் மேற்க்கு பகுதியிலிருந்து கிழக்கு பகுதி செல்ல அமைந்துள்ள ரயில் பாலத்தை நடந்து கடந்து கொண்டிருந்தேன்.  ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத காலை நேரத்தில் நான் நடந்துகொண்டிருந்த போது, அந்த பாலத்தின் மேல் ஒரு மனிதன்  உடம்பில் ஆழமான புண்களுடன் கை எது கால் எது என்று அறிய முடியாத அளவுக்கு உடம்பு முழுவதும் ஈக்கள் புழுக்கள் மொய்த்து கொண்டிருக்க, சதைகளுக்குள்ளேகூட  ஈ புகுந்து வெளியே வந்தது கொண்டிருக்க,   வெறும் தோல் மட்டும் உடம்பில் தொங்கிகொண்டிருக்க சாகவும் முடியமால் பிழைக்கவும் முடியாமல் உயிரோடு கிடந்தது மரணத்தோடு போராடி துடித்துக் கொண்டிருந்தார்.

ஏதாவது உதவிசெய்யலாம் என்றுகருதினால் என்னால் எதுவுமே 
செய்ய முடியாது. இந்தி பாஷை சரியாகதெரியாது. சிலர் என்னை கடந்து வந்து போய்கொண்டு இருந்தும் அவருக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.  அவருக்கு  உதவி செய்யும் அளவுக்கு வசதியும் எனக்கில்லை திறமையும் இல்லை. நமது சென்னையில் உள்ளதுபோல்  "வித்யாசாகர்" அமைப்புபோல் அங்கு எதுவும்  இருக்கிறதா என்பதுகூட எனக்கு சரியாக தெரியாது.   அந்த காட்சியை பார்த்து எதுவுவே செய்யமுடியாத கையாலாகத எனக்கு அழுகை மட்டுமே அடக்க முடியாமல் வந்தது. வேகமாக பாலத்துக்கு கீழே இறங்கி வந்து:

ஒ இறைவா நீர் உண்மையில் இருக்கிறீரா இல்லையா? உம்மால் இந்த மனிதனின் நிலையை உணர முடிகிறதா இல்லையா?  ஒரு சாதாரண மனிதனான என்னாலே இந்த கோரநிலையை பார்த்து  சகிக்கமுடியவில்லையே,  மிகுந்த இரக்கம் உள்ளவர் என்று மக்களால் புகழப்படும் நீர் எப்படி இதயெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்? என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை நான் அழுகிறேன் உம்மால் எல்லாம் செய்யமுடிந்தும், நீர் ஏன் சும்மா இருக்கிறீர்? இப்படி ஒரு கடவுள் தேவையா? நீர் இருந்து என்ன புண்ணியம் இல்லாமல் போய் என்ன புண்ணியம் உண்மையில் கடவுள் என்று ஒன்றும்மே இல்லை அப்படி ஓன்று இருந்திருந்தால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நீர் சும்மா இருக்கமாட்டீர்!  இந்த உலகில் நடக்கும் கொடூரங்களையும் அநியாயங்களையும் பார்த்து ஆற அமர அமர்ந்திருக்க மாட்டீர்.  
 
என்று புலம்பிவிட்டு என்று மனதில் எழுந்த அனேக கேள்விகளோடு சுமார் பத்து பதினைந்து நிமிடம் அழுது தீர்த்தேன். எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை! 
நான் பார்த்த அந்த  காட்சி மற்றும் எனது மனதில் எழுந்த அனேக கேள்விகள் இவற்றின் மூலம் "கடவுள்  என்றொருவர் இல்லை" என்று முடிவுக்கு வந்த நான்  "எப்பொழுது ஏன் மனதில் இருக்கும்  எல்லா கேள்விக்கும் எனக்கு  சரியானவிடை கிடைக்கிறதோ அப்பொழுதுதான் இறைவனை நம்புவேன்" என்று எண்ணிக்கொண்டு மனம் போன போக்கில் வாழ்ந்தேன்  

இவ்வாறு "கடவுள்
இல்லை" என்ற முடிவுடன் வாழ்ந்தாலும் என் இருதயம் முழுவதும்  இந்த உலகம் அனுபவித்து வரும் துன்பங்களை துயரங்களை பார்த்து மனம் வெதும்பி, மொத்தமாக துடைக்க வழி உண்டா அதற்க்கான காரணத்தையும் வழியையும் யாராவது நமக்கு தெரிவ்க்க மாட்டார்களா என்ற ஏக்கத்திலேயே இந்த உலக வாழ்வில் எந்த பற்றும் இல்லாமல் வாழ்ந்தேன்! அதற்காக  எந்த கடவுளிடம் வேண்டுவது என்பது கூட தெரியாமல் பெருமூச்சுடன் பலநேரம் அழுதிருக்கிறேன். என் மனதில் இருந்த ஏக்கத்தை அறிந்தேவன், ஒரு குறிப்பிட்டகாலம் வந்தபோது அவரே வந்து, என்னை அபிஷேகித்து எனக்கு அனைத்து உண்மைகளையும் தெரிவித்தார். தெரிவித்ததோடு, "மரணத்தை ஜெயிக்கவும், தீமையை ஒழிக்கவும்     எழுதப்பட்ட வழிகள்  "பரிசுத்த வேதாகமம்" எனப்படும் பைபிளில் இருப்பதையும் 
எனக்கு அறியத்தந்தார். வேறுஎந்த புத்தகத்திலும் இந்தவழிகள் எழுதப்படவில்லை.  
 
எனவே அன்பான சகோதர சகோதரிகளே!
நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள்  எந்த மதத்தில் இருந்தாலும்,
நீங்கள் எந்தநிலையில் இருந்தாலும், எவ்வளவு பாவியாக இருந்தாலும் அதெல்லாம் தேவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. நீங்கள் எந்த ஒரு காரியத்தை குறித்து அதிகமதிகமாக பாரபட்டு பரிதபித்து ஆண்டவரிடம் உண்மையை அறியவேண்டும் என்ற வாஞ்சையில் 
கேட்டாலும் அவர் அதை உங்களுக்கு நிச்சயம் செய்யவல்லவர் என்பதை நான் இங்கு மீண்டும் மீண்டும் இங்கு  சொல்லிகொள்கிறேன்! 
 
சும்மா ஏனோதானோ என்று வாழாதீர்கள். தேடுங்கள், தேடுங்கள்  பதில் அறிந்து கொள்ளும்வரை தேடுங்கள்!  கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் இருக்கிறதா அவரை அறியும் வரை அவரை தேடுங்கள்!  வேதாகமத்தின் மீதும் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? சந்தேகம் தீரும்வரை ஆண்டவரை விடாதீர்கள் தேடுங்கள். இல்லை நீங்கள் வேறு ஏதோ புத்தகத்தை  நம்பிக்கொண்டோ, அல்லது வேறு ஏதோ ஒன்றை சாமி என்று எண்ணிகொண்டோ இருக்கிறீர்களா? இப்பொழுது ஒன்றும்
கெட்டுவிடவில்லை. "ஆண்டவரே நான் போகும் பாதை சரியானது தானா? நான் அறிந்துகொண்ட தெய்வம் 
சரியானதுதான்? உமது வார்த்தை என்று எண்ணிக் கொண்டு நான் கையில் வைத்திருக்கும் இந்த புத்தகம் சரியான புத்தகமா? என்று இறைவனை நோக்கி மன்றாடுங்கள். உண்மையை அறியும் வரை ஓயாதீர்கள். அவர் நிச்சயம் உங்களுக்கு உண்மையை உணர்த்துவார்.         
 
அவர் மரித்த தெய்வமல்ல!  அவர் நம்மிடம் பேச விரும்பாத ஒரு தகப்பன் அல்ல அல்லது  அவர் பேச முடியாத  மண்ணோ கல்லோ அல்ல "அவர் ஜீவனுள்ளவர்" தன்னை தேடுகிறவர்களுக்கு அதில் பதில் கொடாமல் இரார்!  
 
புலம்பல் 3:25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.
 
அவரை தேடினால் நிச்சயம் உண்மையை கண்டடைய முடியும்!
 
லூக்கா 11:10  கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்;
தேடுகிறவன் கண்டடைகிறான்;

உபாகமம் 4:29
  உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொரு கிறிஸ்த்தவரும் "நீங்கள் எதற்காக கடவுளை தேடினீர்கள்" என்று சற்று சிந்தித்து பாருங்கள்.
 
நீங்கள் எந்த நோக்கத்தோடு கடவுளை தெடினீர்களோ அந்த நோக்கத்துக்கு ஒத்த வெளிப்பாட்டை அல்லது உண்மைகளை மட்டும்தான் நீங்கள் தேவனிடம் இருந்து பெற்றுகொண்டிருக்க முடியும்.
 
உதாரணமாக:  உங்கள் முன்னாள் ஒரு பிச்சைக்காரன் வருகிறான் அவனின் பாவமான தோற்றத்தை பார்த்து அவனுக்கு நீங்களும் கேட்பதை கொடுக்க முன்வருகிறீர்கள். அவனும் உங்களிடம் என்ன கேட்கலாம் ஒரு 10 ரூபாய் கேட்கலாம்  நீங்களும் 10 ரூபாய் கொடுப்பீர்கள் அல்லது அவன்மேல் அன்புகொண்டு அதிகம் கொடுக்க விரும்பினால் 100 ரூபாய் கொடுப்பீர்கள் அவ்வளவுதான்.
 
அதற்காக அவனை கூப்பிட்டு அருகில் வைத்து என்னிடம் என்னென்ன சொத்து இருக்கிறது, என் குடும்பம் இப்படிபட்டது நான் இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என்று உங்கள் ரகசியம் அனைத்தையும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டீர்கள்.
 
அப்படி அவனிடம் சொல்வதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை அவனுக்கும் அதை கேட்பதில் எந்த ஒரு ஆர்வமும் இருக்காது. காரணம் அவனது தேவை ரூபாய் 10 அல்லது அப்போதைய பசி போக்குதல் மட்டும்தானேயன்றி உங்களை வாழ்க்கை பற்றியோ உங்கள் குடும்பம் பற்றியோ அவனுக்கு எந்த அக்கறையும் இல்லை.
 
அவன்மீது தங்களுக்கு நிச்சயம் அன்பிருந்தது,  அன்பில்லை என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் உங்களை பற்றிய எல்லா தகவலும் அவனுக்கு தெரிவிக்கவும் தாங்கள் விரும்பவில்லை. 
 
இந்த நிலையை சற்று கிறிஸ்த்தவ விசுவாசிகளின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கவும்.
 
நீங்கள் எதற்க்காக அந்த சர்வ வல்லவரை தேடினீர்கள்?
 
பரலோகம் போகவேண்டும் என்று தேடினீர்களா?
உங்களுக்கு பரலோக வாழ்வை தேவன் கொடுக்கலாம். 
 
நல்ல உலக வாழ்க்கை வேண்டி தேடினீர்களா?
ஆம்! சமாதானமான உலக வாழ்வை தேவன் தரலாம்.
 
நரகம் போககூடாது என்று தேவனை தேடினீர்களா?
நரக பாதாளத்தில் இருந்து தேவன் உங்களை தப்புவிக்க முடியும்.
 
கடன் பிரச்சனையா? தீராத நோயா? திருமண பிரச்சனையா? 
 
என்ன பிரச்சனை தங்களுக்கு எதற்க்காக தேவனை தேடினீர்கள்?
 
தங்கள் மீது அன்புகூர்ந்து அதை தர தேவனால் நிச்சயம் முடியும்! 
 
தாங்களும் கூட தேவனை "பரலோக வாழ்வை தருபவராக" நோய் நொடி தீர்ப்பவராக"  சமாதானமான உலக வாழ்வை தருபவராக இன்னும்  எப்படி எப்படி விரும்புகிறீர்களோ அப்படி அப்படி அவரை அறிய முடியும்.   
 
அதற்காக நீங்கள் சில காரியங்களை தேவனிடம் இருந்து பெற்று விட்டு  "அவர் அவ்வளவுதான் செய்வார்" "தேவன் இவ்வளவுதான்" என்று அவரை ஒரு வட்டத்துக்குள் கொண்டுவந்து அவனை பற்றி தப்புகணக்கு போடவேண்டாம்.
  
நம் மீது அன்பு கூர்ந்து நாம் கேட்டதை கொடுத்துவிட்டதால் தேவன் தன்னைப்பற்றி முழுமையாக தங்களுக்கு வெளிப்படுத்துவார் என்று நீங்கள் எண்ணினால் உங்கள் கணக்கு முற்றிலும் தவறு.
 
தேவன் தன் ஊழிய நாளில் எத்தனையில் அர்ப்புதங்களை  செய்தார் ஆனால் எல்லோரிடமும் எல்லா தேவ ரகசியங்களையும் பற்றி பேசவில்லை அதிலும் முக்கியமாக தன சீஷர்களிடம் சொன்ன அனேக வார்த்தைகளை பலரால் கேட்கமுடியவில்லை. 
 
தேவன் அவனன் தகுதிக்கு நோக்கத்துக்கு தகுந்தால்பொல்தான் வெளிப்பாடுகளை தருவார்!
 
இன்று பிற மதத்தவர் முகாம் சுளிக்கும் அளவுக்கு கிறிஸ்த்தவத்தில் பிரிவினைகளும் பேதங்களும் மலிந்து கிடப்பதற்கு காரணம் என்ன? அவரவர் தான் புரிந்துகொண்டது மட்டுமே சரி என்று அடுத்தவர் புரிதல் எல்லாமே தவறு என்றும் சளைக்காமல் வாதிடுவதால்தான்.
 
உங்கள் தகுதியின் அடிப்படையில் தேவனிடம் இருந்து  தாங்கள் பெற்றுள்ள புரிதலை கையில் எடுத்துகொண்டு அடுத்தவரின் புரிதல்கள்  தவறு என்று கடின மனதோடு நீங்கள் வாதிட்டுகொண்டு இருந்தால் உங்கள் அறியாமையை எண்ணி நான் வருந்துகிறேன்.

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

// இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொரு கிறிஸ்த்தவரும் "நீங்கள் எதற்காக கடவுளை தேடினீர்கள்" என்று சற்று சிந்தித்து பாருங்கள்.

 நீங்கள் எந்த நோக்கத்தோடு கடவுளை தெடினீர்களோ அந்த நோக்கத்துக்கு ஒத்த வெளிப்பாட்டை அல்லது உண்மைகளை மட்டும்தான் நீங்கள் தேவனிடம் இருந்து பெற்றுகொண்டிருக்க முடியும்.//

//தேவன் அவனன் தகுதிக்கு நோக்கத்துக்கு தகுந்தால்பொல்தான் வெளிப்பாடுகளை தருவார்!//

அன்பு சகோதரமே,

வெளிப்பாட்டை பெற தேவனை ஒருவர் தேடித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படியானால் பரிசேயர்கள் ராஜ்யத்தை சுலபமாய் சுதந்தரிபார்களே!! இந்த பரிசெயர்கள் அருமையான வேத அறிவை கல்வியினால் பெற்றவர்கள். ஆனால் எப்படிபட்டவர்களாய் இருந்திருகிரார்கள் என்று இயேசு கூறுகிறார் என்று பார்த்தால் மாய காரர்களாகிய அவர்களை குறித்து எச்சரிப்பு அவசியமாகிறது!!

மத்தேயு 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

வெளிப்பாடு அழைப்பைப்  பொருத்தது. அது விசுவாசத்தை துவக்குகிரவரும் முடிகிறவருமான தேவனின் கையில் உள்ளது!!!

சீஷர்களும்,அப்போஸ்தலர்களும் இந்த அறிவை  மனித முயற்சியில் பெற்றதாக வேதத்தில் இல்லை. பாலகர்களுக்கே தேவன் வெளிபடுதுகிறார் என சகோதரர் அறியவேண்டும் ..

மத்தேயு 11:25 அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து,பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

லூக்கா 10:21 அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.

ஆனாலும் பாலகரான அவர்கள் அறிவை பெற்றபின் அறிவில் தேரியவர்களாகலானர்கள். 

மேலும் இந்த பாலகர்கள் எந்த ஒரு தீர்க்கதரிசி விரும்பின காரியதிர்க்கும் மேலான அறிவை கேள்விபட்டார்கள் என்பதை தாங்கள் அறியவில்லையா? அறிய மனம் இல்லையா?

மத்தேயு 13:17 அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்

//உதாரணமாக:  உங்கள் முன்னாள் ஒரு பிச்சைக்காரன் வருகிறான் அவனின் பாவமான தோற்றத்தை பார்த்து அவனுக்கு நீங்களும் கேட்பதை கொடுக்க முன்வருகிறீர்கள். அவனும் உங்களிடம் என்ன கேட்கலாம் ஒரு 10 ரூபாய் கேட்கலாம்  நீங்களும் 10 ரூபாய் கொடுப்பீர்கள் அல்லது அவன்மேல் அன்புகொண்டு அதிகம் கொடுக்க விரும்பினால் 100 ரூபாய் கொடுப்பீர்கள் அவ்வளவுதான்.

 அதற்காக அவனை கூப்பிட்டு அருகில் வைத்து என்னிடம் என்னென்ன சொத்து இருக்கிறது, என் குடும்பம் இப்படிபட்டது நான் இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என்று உங்கள் ரகசியம் அனைத்தையும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டீர்கள்.

 அப்படி அவனிடம் சொல்வதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை அவனுக்கும் அதை கேட்பதில் எந்த ஒரு ஆர்வமும் இருக்காது. காரணம் அவனது தேவை ரூபாய் 10 அல்லது அப்போதைய பசி போக்குதல் மட்டும்தானேயன்றி உங்களை வாழ்க்கை பற்றியோ உங்கள் குடும்பம் பற்றியோ அவனுக்கு எந்த அக்கறையும் இல்லை.

 அவன்மீது தங்களுக்கு நிச்சயம் அன்பிருந்தது,  அன்பில்லை என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் உங்களை பற்றிய எல்லா தகவலும் அவனுக்கு தெரிவிக்கவும் தாங்கள் விரும்பவில்லை. இந்த நிலையை சற்று கிறிஸ்த்தவ விசுவாசிகளின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கவும் //

தங்களது கட்டுரை தங்களது மனநிலையினை வெளிபடுதுவதாக இருக்கிறது. தாங்கள் கர்த்தரை பிச்சையிடுபவராகவும், விசுவாசிகளை பிச்சைகாரராகவும் ஒப்பிடுகிறீர்கள். கவனியுங்கள்,

நீங்கள் குறிப்பிட்ட பிச்சைக்காரன் (விசுவாசி ) ஒருவனிடமா பிச்சை எடுப்பான். ஒருவனிடம் மாத்திரம் பிச்சை எடுக்கிற பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களா எங்காவது? கண்டிருகிறீர்களா???

பிச்சைக்காரன் பிச்சைகாரனாக இருக்கிரபடியினால் அவன் 10 அல்லது 100 ருபாய் (நிறைவைப் ) பெற்றாலும் அடுத்த பிசையிடுபவரை தேடுகிறான் !! ஏனென்றால் அவன் பிச்சை பெற்றபின்னும் தன்னை ஒரு பிச்சைக்காரனாகவே உணருகிரான் (செத கிரியையை தொடருகிறான் ).

மற்றொரு பிச்சையிடுபவரை  (இன்னொரு தேவனை  ) தேடுகிற படியினால், நீங்கள் குறிப்பிட்ட பிச்சைக்காரனாகிய அந்த விசுவாசி ஆவிக்குரிய பிச்சைகாரனாகவே மரிப்பான். அவனக்கு தான் பெற்ற பிச்சை 'உலகத்தை ஜெயிக்கும்' என்று அறிவில்லையே!!

I யோவான் 5:4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

வாழ்க்கை முழுவதும் அந்நிய பிசையிடுகிரவரை தேடி தேடி தன்னை வினோத விசுவாசியாக காண்பிகிராரனே.. 

//உங்கள் தகுதியின் அடிப்படையில் தேவனிடம் இருந்து  தாங்கள் பெற்றுள்ள புரிதலை கையில் எடுத்துகொண்டு அடுத்தவரின் புரிதல்கள்  தவறு என்று கடின மனதோடு நீங்கள் வாதிட்டுகொண்டு இருந்தால் உங்கள் அறியாமையை எண்ணி நான் வருந்துகிறேன்.//

'தகுதி' என்று சகோதரர் எதை குறிப்பிடுகிறீர்கள்!! நீங்கள் தகுதியின் அடிபடியில் சிலவற்றை தேவனிடத்தில் பெற்றதாக கருதினால் நீங்கள் கூறின பிச்சைக்காரரைப் போல அந்நிய தேவனை தான் தேட நேரும்.

மேலும்,தேவ கிருபையினால் மாத்திரமே 'தகுதியும்' ஒருவனுக்கு ஏற்படுவதாக வேதம் சொல்லுகிறது.  இந்த தகுதி மனுஷனால் ஏற்படுவதில்ல!!!

II கொரிந்தியர் 3:6 புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.

II கொரிந்தியர் 3:5 எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதிதேவனால் உண்டாயிருக்கிறது.

மேலும் தகுதியை முன் வைப்பீர்களானால் எல்லோருக்கும் ரட்சிப்பை தேவன் அருளுவார் என்பதை எப்படி விசுவாசிப்பீர்கள்? விந்தையை இருக்குமே!!!

//.... தாங்கள் பெற்றுள்ள புரிதலை கையில் எடுத்துகொண்டு அடுத்தவரின் புரிதல்கள்  தவறு என்று கடின மனதோடு நீங்கள் வாதிட்டுகொண்டு இருந்தால் உங்கள் அறியாமையை எண்ணி நான் வருந்துகிறேன்.//

வசனத்தை கையில் எடுத்துக்கொண்டு நான் பேசுகிறேன். கிறிஸ்துவுக்குள் நான் ஐசுவர்யவானாய் இருகிறபடியினால், கட்டுகதைகளுக்கும்(ஒப்பீடுகளுக்கும் ), மனித அனுபங்களுக்கும் நான் ஆச்சர்யபடாமல் இவைகளை குறித்து எனக்கு பிறக்கும் வசனம் எப்படிபட்டது என்பதை குறித்து ஆச்சர்யபடுகிறேன்.

கிறிஸ்து நம்மை ஊழியகாரர் என்று சொல்லாமல் பிள்ளைகள்,சிநேகிதர் (நண்பர் ) என்கிறார்!! ஆனால் நாம் விசுவாசியை பிச்சைக்காரன் என்கிறோம். கிறிஸ்துவின் சிந்தையே நம்மிடமும் இருப்பதாக !!! 

யோவான் 15:15 இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.

பாலகரான நம்மை இயேசு இறைநேசர்களாக்குகிறார்!! அந்த சிநேகமே பிதாவின் ரகசியத்தை பெற நாம் கிருபையினால் பெற்ற தகுதி!!

நான் பெற்றவற்றை அனைவரோடும் இந்த சிநேகதிர்காகவே பகிருகிறேன் இது நான் எடுத்துகொண்ட என் பணி !! அறியாமை இருளை அகற்றுவதும்,அதற்க்கு கவலைபடுவதும் என் வேலையல்ல!! காரணம் இரட்சிப்பு என்னுடையதல்ல!! நம்முடையதல்ல!! கர்த்தராகிய தேவனுடையது!!

(சகோ.சுந்தர் அவர்களே!! தங்களது கட்டுரை என்னை பாதித்தது இதற்கு நான் தியானித்து பெற்றதை பழுதில்லாது தர முயன்றுள்ளேன்!!! எனது இந்த பதிவும் தங்களை மனமடிவாகுமானால் தங்கள் பதிவுகளில் நான் இனி இடைபடுவதில்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்!! )

 

தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாகுக!!!

 



-- Edited by JOHN12 on Monday 10th of February 2014 07:40:09 PM

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

JOHN12 wrote:

 (சகோ.சுந்தர் அவர்களே!! தங்களது கட்டுரை என்னை பாதித்தது இதற்கு நான் தியானித்து பெற்றதை பழுதில்லாது தர முயன்றுள்ளேன்!!! எனது இந்த பதிவும் தங்களை மனமடிவாகுமானால் தங்கள் பதிவுகளில் நான் இனி இடைபடுவதில்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்!! )

 -- Edited by JOHN12 on Monday 10th of February 2014 07:40:09 PM


அன்பான் சகோதரரே, 

 
நான் நடந்த உண்மை சம்பவத்தை எழுதினாலும் சரி அல்லது வேத வசனத்தை அப்படியே சுட்டிகாட்டி எழுதினாலும் சரி அதற்க்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தாங்கள் எழுதி வருகிறீர்களா அல்லது நான் என்ன எழுதினாலும் தங்களுக்கு தவறாகவே தோன்றுகிறதோ தெரியவில்லை. 
 
நம் இருவருக்கும் நிச்சயம் ஒத்துபோகாது. எனவே தங்களிடம் விவாதிக்க எனக்கு எதுவும் இல்லை.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

(என்னைபோலவே ஒத்த எண்ணம் கொண்டுள்ள ஒரு அருமையான சகோதரர் அவர்களின் கருத்து facebookல் இருந்து இங்கு copy paste
செய்யப்பட்டுள்ளது )
 
 
Like ·  · Share · Yesterday at 10:28am · 
 
  •  
    Johnson Durai Mavadi நண்பரே உங்களின் அனுபவத்தைப் பார்க்கும் போது அதே அனுபவத்தை என் கடந்த நாட்களில் அனுபவித்தவன் அதை அப்படியே தாங்கள் சொன்னதுப்போல் இருக்குது நான் ரட்சிக்கப்பட்ட நாட்களில் வாய் பேசாத மிருகங்களுக்கும் இரட்சிக்கப்படவேண்டும் அவைகளும் பரலோகம் வரவேண்டும் என்று ஆரம்ப நாட்களில் இயேசு அப்பாவிடம் நான் அழுத நாட்கள் ஏராளம் அதை இப்போதும் நினைக்கும் போது எண்ணால் தாங்கிக்கொள்ள என் மனதில் பெலன் இல்லை இன்றும் ஏழை ஜனங்கள் உம்மை அறியாதவர்கள் அல்லது இரட்சிக்கப்படாதவர்கள் நரகத்துக்கு போகவே கூடாது என்று இன்றுவரை தேவனிடம் அழுகிறேன் அதற்கு அப்பாவிடம் பதில் வராமல் ஒரு அமைதியை நான் பார்க்கிறேன் .என் நம்பிக்கை வேதத்தின் வசனத்தின் அடிப்படையில் தவறுப்போல இருந்தாலும் என் நம்பிக்கையை கைவிட மாட்டேன் ஏனென்றால் அவர் இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர் என்கிற ஒரு வசனம் இன்றுவரை அந்த ஜெபத்துக்கு எனக்கு பதில் இல்லாவிட்டலும் என் நம்பிக்கை வீனாய் போகாது என்கிற தைரியத்தை தருகிறது . இரண்டாவது லாசரு தேவனைத் தெடினதாக எழுதவில்லை அவன் இந்த உலகில் கஷ்டப்பட்டான் என்கிற அடிப்படையில் அவன் ஆபிரகாம் மடியில் தேற்றப்பட்டான் என்கிற வசனத்தைப் பார்க்கும் போது கட்டாயம் என் ஜெபமும் என் அழுகையும் வீனாய் போவதில்லை அப்படியே அன்று இஸ்ரவேல் ஜனத்துக்காய் மோசே என் பெயரை ஜீவபுஸ்தகத்தில் கிறிக்கிப்போடும் என்று அவர்களுக்காய் வேண்டிக்கொண்டான் அதேபோல இந்த உலகத்தில் இரட்சிப்பின் அனுபவம் பெறாத ஏழைகள் இங்கும் கஷ்டப்படுகிறார்கள் அவர்கள் நரகத்திலும் வேதனைப்பட வேண்டு என்கிற நிலமை வரக்கூடாது அப்படி வருமானால் எனக்கும் பரலோக சந்தோசம் வேண்டாம் இந்த ஏழைகள் எங்குப் போவார்களோ அங்கும் நான் தெரிந்தே செல்ல வேண்டும் என்று அப்பாவிடம் அடம்பிடிப்பேன் .
  •  
    Sundararaj Paulraj Johnson Durai Mavadi WROTE
    //////இன்றும் ஏழை ஜனங்கள் உம்மை அறியாதவர்கள் அல்லது இரட்சிக்கப்படாதவர்கள் நரகத்துக்கு போகவே கூடாது என்று இன்றுவரை தேவனிடம் அழுகிறேன் அதற்கு அப்பாவிடம் பதில் வராமல் ஒரு அமைதியை நான் பார்க்கிறேன் .என் நம்பிக்கை வேதத்தின் வசனத்தின் அடிப்படையில் தவறுப்போல இருந்தாலும் என் நம்பிக்கையை கைவிட மாட்டேன். ஏனென்றால் அவர் இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர் என்கிற ஒரு வசனம் இன்றுவரை அந்த ஜெபத்துக்கு எனக்கு பதில் இல்லாவிட்டலும் என் நம்பிக்கை வீனாய் போகாது என்கிற தைரியத்தை தருகிறது////

    அன்பான சகோதரர் அவர்களே ஜெபத்துக்கு பதில் வேதத்தில் இருக்கிறது. வேதத்தின் அடிப்படையில் தவறு என்று ஏன் சொல்கிறீர்கள்.

    II பேதுரு 3:9 ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

    காணாமல் போன ஆடுகளை காணும்வரை வீடு திரும்பாத நல்ல மேய்ப்பனை போல தேவனும் ஒருவரும் கெட்டுபோக கூடாது என்ற நோக்கிலேயே இவ்வளவுநாள் பொறுமையோடு இருக்கிறார் என்று வேதம் சொல்கிறதே. 

    சற்று யோசியுங்கள் "நடக்காத ஒன்றுக்கா தேவனே இப்படி பொறுமையோடு காத்திருக்கிறார்? நிச்சயமாக இருக்க முடியாது. தேவனின் இந்த விருப்பம் நிறைவேற ஏதாவது வழி வேதத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் அல்லவா? 

    "இரட்சிக்கபடாதவர்களை நரகத்துக்கு போகாமல் தடுக்க முடியாது" என்பது உண்மையாக இருந்தாலும். 

    I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

    தேவனே எல்லோரும் ரட்சிக்கபடவெண்டும் என்ற சித்தத்தோடு இருக்கும்போது நாமும் அதே சித்தம் உள்ளவர்களாக இருப்பதில் என்ன தவறு சகோதரரே? 

    எனவே. என்னுடைய அனுதின ஜெபம் "தேவனே உம்முடைய சித்தம் நிறைவேறுவதாக" என்பதாகவே கொண்டுள்ளேன். 

    தேவ சித்தம் நிறைவேறினால் அதுவே எனக்கு போதும். அது நமக்கும் ஏற்புடையதாகவே இருக்கும் . காரணம் அவர் நம்மைவிட 1000 மடங்கு இறக்கத்தில் உயர்ந்தவர் அல்லவா?

    Johnson Durai Mavadi WROTE
    /// அதேபோல இந்த உலகத்தில் இரட்சிப்பின் அனுபவம் பெறாத ஏழைகள் இங்கும் கஷ்டப்படுகிறார்கள் அவர்கள் நரகத்திலும் வேதனைப்பட வேண்டு என்கிற நிலமை வரக்கூடாது அப்படி வருமானால் எனக்கும் பரலோக சந்தோசம் வேண்டாம் இந்த ஏழைகள் எங்குப் போவார்களோ அங்கும் நான் தெரிந்தே செல்ல வேண்டும் என்று அப்பாவிடம் அடம்பிடிப்பேன் ///

    மிக மிக சரியான உண்மை கருத்துக்கள். ஆனால் இந்த கருத்துக்க்ளை தாங்கள் இறந்த காலத்தில் எழுதுவதை பார்த்தால் தற்ப்போது அந்த எண்ணஙள் இல்லை போல் தோன்றுகிறதே! 

    ஏன் அந்த வேண்டுதல்களை கைவிட்டீர்கள்? இன்று நான் அதைதான் வேண்டிகொண்டு இருக்கிறேன். தேவனால் எல்லாம் கூடும்.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 292
Date:
Permalink  
 

//நான் நடந்த உண்மை சம்பவத்தை எழுதினாலும் சரி அல்லது வேத வசனத்தை அப்படியே சுட்டிகாட்டி எழுதினாலும் சரிஅதற்க்கு 1) ஏதாவது எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தாங்கள் எழுதி வருகிறீர்களா அல்லது 2)நான் என்ன எழுதினாலும் தங்களுக்கு தவறாகவே தோன்றுகிறதோ தெரியவில்லை.// 

தாங்கள் குறிப்பிட்ட இரண்டு காரியத்திலும் தங்களை 'BENCH MARK' ஆக எண்ணிக்கொண்டு என்னை தவறாக எடைபோடுகிறீர்கள் !!! 'அப்படியே' என நீங்கள் குறிப்பிடுகிற காரியத்தில் எனக்கு எப்போதும் ஆட்சேபம் உண்டு!!

நீங்கள் எதிர்த்த கருத்துகளுக்கு நான் என்றைக்கும்தாங்கள் குறிப்பிடுவதுபோல  குறிப்பிட்டதில்லை!! சிலர் அனுபவங்கள் என்று கண்டுகொண்டவைகள் வசன விரோதமாய் இருக்கும்போது ஆதை நான் அடுத்தவர்களுக்கு 'அப்படியே' போதித்து அவர்களை மகாத்து'மாக்களாக' காண்பிக்க நான் எண்ணம்கொள்கிறதில்லை!!! 

அனைவரின் ரட்சிபிற்கும் வேண்டுதல் செய்வது தவறு என்று நான் என்றும் கூறவில்லையே!! ஆனாலும் வேதம் அனைவரும் ரட்சிக்கபடமாட்டார்கள் என சொல்லுவதையே நானும் சொல்லுகிறேன்..  

நானும் அனுதினமும் உலகமக்களின் நன்மைக்காக / ரட்சிபிற்காக வேண்டுகிறேன் தான், ஆனால் தாவீது தன் குழந்தை மரிக்கக்கூடாது என அறிந்தே வேண்டிகொண்டதைப் போல!!! 

//நம் இருவருக்கும் நிச்சயம் ஒத்துபோகாது. //

இது கடைசி காலம் ஓத்தகருத்துகளை பெற்றிருப்பது கடினம் தான்.'ஒத்த கருத்திற்கு' காத்திருக்க தேவ ராஜ்ஜியம் ஓட்டெடுப்பு நடதுகிறதில்லை!! அங்கு ஜனநாயகம் இல்லை!! மக்களாட்சியும் இல்லை!! அது செங்கோல் ஏந்திய இயேசுராஜனின் அரசாட்சி!! 

தங்களை நான் மதிக்கிறேன்!! இனி எனக்கும் தங்களோடு போராடி பேச ஒன்றும் இல்லை.. கர்த்தர் தங்களை ஆசிர்வதிபாராக!!

அல்லேலுயா !!!



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

////////////////////அவர் மரித்த தெய்வமல்ல! அவர் நம்மிடம் பேச விரும்பாத ஒரு தகப்பன் அல்ல அல்லது அவர் பேச முடியாத மண்ணோ கல்லோ அல்ல "அவர் ஜீவனுள்ளவர்" தன்னை தேடுகிறவர்களுக்கு அதில் பதில் கொடாமல் இரார்!

புலம்பல் 3:25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.

அவரை தேடினால் நிச்சயம் உண்மையை கண்டடைய முடியும்!

லூக்கா 11:10 கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்;
தேடுகிறவன் கண்டடைகிறான்;

உபாகமம் 4:29 உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்//////////////////

ஆவிக்கு உயிரளிக்கும் வார்த்தைகள்

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard