நமது தளத்துக்கு வருகை தந்து அறிமுக பதிவை தந்திருக்கும் சகோதரர் கண்ணா அவர்களை ஆண்டவரின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.
ஆண்டவ்ரைபற்றிய தங்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கு பதிவிடலாம். மேலும் எங்களில் தளத்தில் ஏற்கெனவே உள்ள பதிவுகளை படித்து தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். தொடர்ந்து வாருங்கள்.
தமிழில் எழுதுவது மிக சுலபம். கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி பயன்படுத்தலாம்.
சகோதரர் சுந்தர் அவர்களுக்கு எழுதிகொள்வது, யெகோவாவின் நாமத்தினாலும், அவரின் மகனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையாலும் வாழ்த்துதல்களை தெரிவித்து என்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். நான் அண்மைய காலமாக தாங்கள் எழுதும் அணைத்து பதிவுகளும் வாசித்துக் கொண்டு இருக்கிறேன். அது எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது:. அத்துடன் பதிவுகள் எழுதும் போது அடக்கத்தோடும், கோவப்படாது, மரியாத்யோடு பதிவுகள் எழுதும் விதம் எமக்கு பிடித்து இருக்கு. அத்துடன் எனது நண்பர் மூலமாகவே இந்த தளத்தை அறிந்துகொண்டேன். காரணம் நான் தங்களின் விசுவாசப் பிரிவை சேர்ந்தவன் அல்ல. எனக்கும் எனது நண்பருக்கும் இடையில் வேதம் தொடர்பாக கருத்து பரிமாற்றம் நடக்கும் போதே தங்களில் தளம் தொடர்பான விஷயத்தையும் அறிந்துகொண்டேன். அத்துடன் சில்சாம், நித்தியஜீவன், மற்றும் கோவை பிரதர்ஸ் போன்ற தளத்து கருத்துக்களும் வாசிக்க தவறுவது இல்லை.
என் விசுவாச அறிக்கை :- தாம் ஒருவராய் சாகாமையுள்ளவரும், ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், ஆதியந்தமில்லாத ஏக சக்கிரதிபதியுமான, எகோவா என்னும் நாமமுள்ள, ஒன்றான மெய்த்தேவனையே விசுவாசிக்கிறோம் (1 தீமோ. 6:15, 16; யாத். 6:3).
...அவருடைய ஒரே பேறான குமாரனும், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான, இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறோம். (யோவா. 3:16).
இவர் அதரிசமான தேவனுடைய தற்சொரூபமும், சர்வசிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர், தேவன் இவரைக் கொண்டும், இவருக்கென்றும், உலகங்களை எல்லாம் உண்டாக்கி, இவரையே சர்வத்துக்கும் சுதந்தரவாளியாகவும் நியமித்தார், எல்லாம் இவருக்குள் நிலை நிற்கிறதென்றும் விசுவாசிக்கிறோம். (கொலோ. 1:15; எபி. 1:2)
இதுவே என் விசுவாச அறிக்கை. அத்துடன் நான் யேகோவா சாட்சியோ அல்லது வேத மாணாக்கர் என்ற விசுவாசப் பிரிவை சேர்ந்தவன் அல்ல. இந்த உலகத்தில் எனது விசுவாசத்தை கொண்ட அமைப்பு ௮௦௦ க்கும் அதிகமாக இருக்கு. அதில் நானும் ஒருவன்.
__________________
கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
ஹாய் பிரண்ட்ஸ் நானும் தங்களுடன் இனைவதில் பெருமை கொள்கிறேன் என்னை வெல்கம் செய்த ரோசன் கு தேங்க்ஸ் என் வோர்டிங் ல சம் இங்கிலீஷ் மிக்சிங் இருக்கும் மன்னிச்சிகோங்க
நான் வேதத்துக்கு புதியவன் ஆனால் கிறிஸ்தவத்துக்கு ரொம்ப ஓல்ட்
சோ என் கேள்விகளை புரிந்து பதில் சொல்ல ரெடி ஆகுங்கள்
__________________
வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள் , அவைகளில் நித்திய ஜீவன் உண்டு
ஹாய் பிரண்ட்ஸ் நானும் தங்களுடன் இனைவதில் பெருமை கொள்கிறேன் என்னை வெல்கம் செய்த ரோசன் கு தேங்க்ஸ் என் வோர்டிங் ல சம் இங்கிலீஷ் மிக்சிங் இருக்கும் மன்னிச்சிகோங்க நான் வேதத்துக்கு புதியவன் ஆனால் கிறிஸ்தவத்துக்கு ரொம்ப ஓல்ட் சோ என் கேள்விகளை புரிந்து பதில் சொல்ல ரெடி ஆகுங்கள்
சகோதரரே எங்கள் மீது சற்று தயை வைத்து கொஞ்சம் சுலபமான கேள்விகளை கேளுங்கள். ஏதோ எங்களால் முடிந்த பதிலை தர முயற்ச்சிக்கிறோம். தங்கள் கேள்விக்கு சரியான பதில் சொல்லி அட்லீஸ்ட் 50௦% மார்க்காவது எடுக்கவேண்டும் என்பதே எங்கள் அவா!
மீண்டும் "திரித்துவம்" "இயேசு யார்" போன்ற கேள்விகளை கேட்டு ஆராய்ச்சியில் இரங்கவேண்டாம். அதற்க்கு போதுமான விளக்கங்கள் தளத்தில் பதியப்படுவிட்டன.