இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Hi Frnds


இளையவர்

Status: Offline
Posts: 18
Date:
Hi Frnds
Permalink  
 


Hi frnds i m kanna 

thanks for allowing me

__________________

வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள் , அவைகளில் நித்திய ஜீவன் உண்டு 



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Kanna wrote:

Hi frnds i m kanna 

thanks for allowing me




நமது தளத்துக்கு வருகை தந்து அறிமுக பதிவை தந்திருக்கும் சகோதரர் கண்ணா  அவர்களை ஆண்டவரின் இனிய  நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.
 
ஆண்டவ்ரைபற்றிய தங்களின் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கு பதிவிடலாம். மேலும்   எங்களில் தளத்தில் ஏற்கெனவே  உள்ள பதிவுகளை படித்து தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். தொடர்ந்து வாருங்கள். 
 
 தமிழில் எழுதுவது மிக சுலபம். கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி பயன்படுத்தலாம்.  
 
   
அல்லது

 
என்ற சுட்டியை சொடுக்கி "ammaa"  என்று எழுதினால்  அது "அம்மா" என்று மாற்றித்தரும்

ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
 
அன்புடன்
சுந்தர்


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



இளையவர்

Status: Offline
Posts: 14
Date:
Permalink  
 

சகோதரர் சுந்தர் அவர்களுக்கு எழுதிகொள்வது,  யெகோவாவின் நாமத்தினாலும், அவரின் மகனாகிய  இயேசு கிறிஸ்துவின்  கிருபையாலும் வாழ்த்துதல்களை தெரிவித்து  என்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்.
நான்  அண்மைய காலமாக தாங்கள் எழுதும் அணைத்து பதிவுகளும் வாசித்துக் கொண்டு இருக்கிறேன். அது எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது:. அத்துடன் பதிவுகள் எழுதும் போது அடக்கத்தோடும், கோவப்படாது, மரியாத்யோடு பதிவுகள் எழுதும் விதம் எமக்கு பிடித்து இருக்கு. அத்துடன் எனது நண்பர் மூலமாகவே இந்த தளத்தை அறிந்துகொண்டேன். காரணம் நான் தங்களின் விசுவாசப் பிரிவை சேர்ந்தவன் அல்ல. எனக்கும் எனது நண்பருக்கும் இடையில் வேதம் தொடர்பாக கருத்து பரிமாற்றம் நடக்கும் போதே தங்களில் தளம் தொடர்பான விஷயத்தையும் அறிந்துகொண்டேன். அத்துடன் சில்சாம், நித்தியஜீவன், மற்றும் கோவை பிரதர்ஸ் போன்ற தளத்து கருத்துக்களும் வாசிக்க தவறுவது இல்லை. 

என் விசுவாச அறிக்கை :- தாம் ஒருவராய் சாகாமையுள்ளவரும், ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், ஆதியந்தமில்லாத ஏக சக்கிரதிபதியுமான, எகோவா என்னும் நாமமுள்ள, ஒன்றான மெய்த்தேவனையே விசுவாசிக்கிறோம் (1 தீமோ. 6:15, 16; யாத். 6:3).

...அவ‌ருடைய‌ ஒரே பேறான‌ குமார‌னும், ந‌ம்முடைய‌ க‌ர்த்த‌ரும் இர‌ட்ச‌க‌ருமான‌, இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறோம். (யோவா. 3:16).

இவ‌ர் அத‌ரிச‌மான‌ தேவ‌னுடைய‌ த‌ற்சொரூப‌மும், ச‌ர்வ‌சிருஷ்டிக்கும் முந்தின‌ பேறுமான‌வ‌ர், தேவ‌ன் இவ‌ரைக் கொண்டும், இவ‌ருக்கென்றும், உல‌க‌ங்க‌ளை எல்லாம் உண்டாக்கி, இவ‌ரையே ச‌ர்வ‌த்துக்கும் சுத‌ந்த‌ர‌வாளியாக‌வும் நிய‌மித்தார், எல்லாம் இவ‌ருக்குள் நிலை நிற்கிற‌தென்றும் விசுவாசிக்கிறோம். (கொலோ. 1:15; எபி. 1:2)

இவ‌ர் தேவ‌ குமார‌னாயிருந்தும், தேவ‌னுக்குச் ச‌ம‌மாயிருக்க‌ எண்ணாம‌ல், அக்கிர‌ம‌ங்க‌ளினால் ஜீவ‌னை இழ‌ந்த‌ ம‌னுஷ‌ர் பேரில் ம‌ன‌துருகி, த‌ம்மைத் தாமே வெறுமையாக்கி, ம‌னித‌னாகி எல்லாரையும் மீட்கும் பொருளாக‌த், த‌ம்முடைய‌ ஜீவ‌னையே கொடுத்து, தேவ‌னுக்கும் ம‌னுஷ‌ருக்கும், ச‌மாதான‌த்தை உண்டுப‌ண்ணினாரென்றும் விசுவாசிக்கிறோம். (யோவா. 10:36)

ஆத‌லால் தேவ‌ன் இவ‌ரை ம‌ரித்தோரிலிருந்து எழுப்பி, த‌ம்மைபோல் குமார‌னும் ஜீவ‌னுடைய‌வ‌ராயிருக்க‌ அருள் செய்து, எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ உய‌ர்த்தி, த‌ம்முடைய‌ வ‌ல்ல‌மையின் வ‌ல‌து பாரிச‌த்தில், வீற்றிருக்க‌ச் செய்தார் என்றும் விசுவாசிக்கிறோம். (அப். 3:15; யோவா. 5:26)

இவ‌ரே தேவ‌னுக்கும் ம‌னுஷ‌ருக்கும் ம‌த்திய‌ஸ்த‌ராக‌வும், ச‌பையாகிய‌ ச‌ரீர‌த்துக்கு த‌லையாக‌வும் இருக்கிறார் என்றும் விசுவாசிக்கிறோம் (1 தீமோ. 2:5; கொலோ. 1:18).

இவ‌ர் ப‌ர‌லோக‌த்துக்கேறி, தாம் வாக்குத்த‌த்த‌ம் ப‌ண்ணின‌, உன்ன‌த‌த்திலிருந்து வ‌ரும் பெலானாகிய‌ ப‌ரிசுத்தாவியை, விசுவாசிக‌ள‌ட‌ங்கிய‌ ச‌பைக்கு அருளி, தேவ‌ சித்த‌த்தை அவ‌ர்க‌ளுக்கு வெளிப்ப‌டுத்தி, ப‌லியின் ஜீவிய‌த்தில் அவ‌ர்க‌ளை ந‌ட‌த்தி வ‌ருகிறாரென்றும் விசுவாசிக்கிறோம் (அப். 1:5; 2:1)

பிதா குறித்த‌ கால‌த்தில், இவ‌ர் ப‌லியின் ம‌ர‌ண‌த்துக்குட்ப‌ட்டு, முத‌லாம் உயிர்த்தெழுத‌ல‌டையும், த‌ம்முடைய‌ ச‌பையாகிய‌ ச‌க‌ல‌ ப‌ரிசுத்த‌வான்க‌ளோடும், இப்பூமியை நீதியாய் நியாய‌ந்தீர்த்து, ச‌க‌ல‌ துரைத்த‌ன‌த்தையும் அதிகார‌த்தையும் வ‌ல்ல‌மையும் ப‌ரிக‌ரித்து என்றும் அழியாத‌ த‌ம்முடைய‌ நீதியுள்ள‌ அர‌சாட்சியை ஸ்தாபிப்பார் என்றும் விசுவாசிக்கிறோம்.

ம‌ர‌ண‌ம‌டைந்த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள், கிறிஸ்துவின் அர‌சாட்சி கால‌த்தில், அவ‌ன‌வ‌ன் த‌ன்த‌ன் வ‌ரிசையிலே உயிர்ப்பிக்க‌ப்ப‌ட்டு, அவ‌ர் த‌ம்முடைய‌ ம‌ர‌ண‌த்தினால் ச‌ம்பாதித்த‌ நித்திய‌ ஜீவ‌னைய‌டைய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு, பூர‌ண‌ப்ப‌டுவார்க‌ள்.

எல்லாச் ச‌த்துர‌க்க‌ளையும் த‌ம‌து பாத‌ப‌டியாக்கும் ம‌ட்டும், இவ‌ர் ஆளுகை செய்து, க‌டைசிச் ச‌த்துருவாகிய‌ ம‌ர‌ண‌த்தையும் ப‌ரிக‌ரித்து, எல்லாவ‌ற்றையும் முந்தின‌ சீருக்குக் கொண்டு வ‌ந்து, பிதாவே ச‌க‌ல‌த்திலும் ச‌க‌ல‌முமாய் இருப்ப‌த‌ற்கு, அவ‌ருக்கு இராஜ்ய‌த்தை ஒப்புக்கொடுத்து, அவ‌ருக்கு கீழ்ப்ப‌ட்டிருப்பார் என்றும் விசுவாசிக்கிறோம். (1 கொரி 15:25,26,28). ஆமென்!!

இதுவே என் விசுவாச அறிக்கை.  அத்துடன் நான் யேகோவா சாட்சியோ அல்லது வேத மாணாக்கர் என்ற விசுவாசப் பிரிவை சேர்ந்தவன் அல்ல. இந்த உலகத்தில் எனது விசுவாசத்தை கொண்ட அமைப்பு ௮௦௦ க்கும் அதிகமாக இருக்கு. அதில் நானும் ஒருவன்.


__________________

கலாத்தியர் 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.



இளையவர்

Status: Offline
Posts: 18
Date:
Permalink  
 

ஹாய் பிரண்ட்ஸ் நானும் தங்களுடன் இனைவதில் பெருமை கொள்கிறேன்
என்னை வெல்கம் செய்த ரோசன் கு தேங்க்ஸ் என்
வோர்டிங் ல சம் இங்கிலீஷ் மிக்சிங் இருக்கும் மன்னிச்சிகோங்க

நான் வேதத்துக்கு புதியவன் ஆனால் கிறிஸ்தவத்துக்கு ரொம்ப ஓல்ட்

சோ என் கேள்விகளை புரிந்து பதில் சொல்ல ரெடி ஆகுங்கள்

__________________

வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள் , அவைகளில் நித்திய ஜீவன் உண்டு 



MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
Permalink  
 

Kanna wrote:

ஹாய் பிரண்ட்ஸ் நானும் தங்களுடன் இனைவதில் பெருமை கொள்கிறேன் என்னை வெல்கம் செய்த ரோசன் கு தேங்க்ஸ் என் வோர்டிங் ல சம் இங்கிலீஷ் மிக்சிங் இருக்கும் மன்னிச்சிகோங்க நான் வேதத்துக்கு புதியவன் ஆனால் கிறிஸ்தவத்துக்கு ரொம்ப ஓல்ட் சோ என் கேள்விகளை புரிந்து பதில் சொல்ல ரெடி ஆகுங்கள்


 சகோதரரே எங்கள் மீது சற்று  தயை வைத்து கொஞ்சம்  சுலபமான கேள்விகளை கேளுங்கள்.  ஏதோ  எங்களால் முடிந்த பதிலை தர முயற்ச்சிக்கிறோம். தங்கள் கேள்விக்கு சரியான பதில் சொல்லி அட்லீஸ்ட்  50௦%  மார்க்காவது எடுக்கவேண்டும் என்பதே  எங்கள் அவா! biggrinblankstare

மீண்டும் "திரித்துவம்" "இயேசு யார்" போன்ற கேள்விகளை கேட்டு ஆராய்ச்சியில் இரங்கவேண்டாம். அதற்க்கு போதுமான விளக்கங்கள் தளத்தில்  பதியப்படுவிட்டன.  no    
 
விசேஷ எதிர்ப்பார்ப்புடன்
இறைநேசம்
 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard