இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்த்தவர்களின் மிக உயர்த்த பண்பு நிலைகள்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கிறிஸ்த்தவர்களின் மிக உயர்த்த பண்பு நிலைகள்!
Permalink  
 


"பிறரின் துன்பவேளையில் அவர்களுக்காகவும், அவர்களின் நித்திய இரட்சிப்புக் காகவும் கண்ணீர்விட்டு அழுவதுதான் கிறிஸ்த்தவத்தின் மிக உயர்ந்தபண்பு என்று ஒரு கட்டுரையில் நான் எழுதியிருந்தேன்" ஆனால் அந்த உயர்ந்த பண்பு எத்தனை பேரிடம் இன்று இருக்கிறது என்பது இன்று கேள்விக்குறியாகி போனது.  "பிறரை குற்றவாழி என்று தீர்ப்பதிலும்" இயேசுவின் வார்த்தைகளை கைகொள்ளாமல்அதை காலில் போட்டு மிதிப்பதிலும் தீவிரம் காட்டும் அனேக கிறிஸ்த்தவர்கள் இன்று பெருகியிருப்பதை பார்க்க முடிகிறது.   
 
சமீபத்தில் ஒருசகோதரி  ஜெபகூட்டத்துகு வந்த பாஸ்டர் ஒருவரிடம் "எங்கள் குடும்பத்தில் நான் ஒருத்தி மட்டும்தான் இரட்சிக்கபட்டுள்ளேன், எனது  அம்மா அண்ணன் அக்காள் தம்பி மற்றும் குடும்பத்தார் அனைவருமே இன்னும் இந்து மார்க்கத்திலேயே இருக்கிறேன், அவர்களை நினைத்தால் எனக்கு மிகுந்த துக்கமாக இருக்கிறது" என்று சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.      உடனே அந்த அன்பு நிறைந்த பாஸ்டர் " அந்த மொத்த கூட்டத்தில் தேவன் உங்களை மட்டும்தான் தெரிந்திருக்கிறார் சகோதரி! மற்றவர்கள் எல்லோரும் அவ்வளவுதான், அவர்களில் யாரையும் தேவன் தெரிந்துகொள்ளவில்லை  அவர்கள் நரகத்துக்கு பாத்திரர்" என்பதுபோன்ற ஒரு கருத்தை கூறி சென்றாராம்.    
   
இந்த வார்த்தையை கேட்ட நான் கிறிஸ்தவர்களின் தெய்வீக அன்பை நினைத்து மிகுந்த பெருமை அடைந்து போனேன்.
 
இன்றும் கிறிஸ்த்தவர்களின் அநேகருக்கு தாங்கள் உண்மையாக ரட்சிக்க பட்டிருக்கிரர்களா என்பதை சரிவர அறியாமலே  "நான் ரட்சிக்கபட்டுவிட்டேன் பரலோகத்துக்கு போய்விடுவேன்" என்ற பெருமை விட்டபாடில்லை. அடுத்தவர்களை எப்படி வேண்டுமாலும் நியாயம்தீர்க்க  தயாராக இருக்கிறார்கள்.
 
இவர்களில்  அநேகர் பிறரிடம் ஆண்டவரை பிறரிடம் எடுத்து சொல்லமுயல்வதும்
அந்த பிறர்மீதுள்ள அன்போ கரிசனையோ  அல்லது ஆண்டவர் மீதுள்ள பாசமோ காரணம் அல்ல. நான் பெரியவன்  நான் சொல்வதை எல்லோரும் கேட்கவேண்டும் என்று அவரவர் மனதில் எழும் ஒரு பெருமையே!      
 
யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
 
என்று ஆறுதல்  சொல்லும் வசனமே!
 
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.  
 
என்றும்
ரோமர் 8:13   ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
 
என்றும் எச்சரிப்பையும் நமக்கு கொடுக்கிறது.  இங்கு எந்தஒரு மனிதனும்  தன்னை பெரியவனாக  மேன்மை பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லை  
 
சாதாரண உலக மக்களிடம் காணப்படும் நீதி நியாயத்தை கூட கைகொண்டு நடக்காத இவர்கள் எல்லாம் இயேசுவை ஏற்றுக் கொண்ட ஒரு காரணத்துக்காக பரலோகம் போய்விடலாம் என்று  மிகப்பெரிய கனவை கண்டுகொண்டு அடுத்தவர்களை நரகத்துக்குதான் போவார்கள் என்று நியாயம் தீர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.   
 
லூக்கா 6:37 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்
 
என்று  ஆண்டவர் சொல்கிறார் என்று  எந்தனைமுறை கத்தி  சொன்னாலும் யாரும் கேட்க தயாராக இல்லை.
 
மேலும் மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்றொரு உலக பழமொழியை நம்மில் பலர் கேட்டிருக்கலாம்.  

அதற்கொப்ப, தனக்கு வேண்டியவர்கள் தங்களுக்கு ஒத்த கருத்துடையவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் விடுவதும் தனக்கு வேண்டாதவர்கள் செய்யும்  தவறுகளை மட்டும் பெரிதாக்கி பூதாகரமாக காட்டுவதும் அன்றிலிருந்து இன்றுவரை அனேக உலக மனிதர்களிடம் இருக்கும் ஒரு அற்ப குணம்!
 
இந்த குணத்தை உண்மையில் ஒரு சாத்தானின் வஞ்சக குணம் என்றே நான் கூறுவேன். ஒருதலை பட்சமாக நடப்பவன் எவனும் தேவனுடைய நீதியில் நிலை நிற்க்கவில்லை. ஏனெனில் தேவன் நீதியும் செம்மையுமானவர்  "அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல". எனவே நீதி விசாரணையில் "தன்னுடைய இனமா? தன் ஜாதியா? தன் மகனா? தனது  சொந்தமா? தன் கட்சியா? தான் கொளகையுடயவனா போன்ற பட்சபாதங்களை பார்க்ககூடாது என்று தேவன் எச்சரித்துள்ளார்.    
 
லேவியராகமம் 19:15 நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக
 
அப்படி ஒரு தகுதியிலாத  ஒருதலை பட்சமாக சாயும் தன்மையுடையவர்கள் எவரும் நீதி விசாரணை செய்வதற்கும் அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதற்கும் சற்றும் தகுதியற்றவர்கள். 
 
வலைதளங்களில் எழுத ஆரம்பித்ததிலிருந்தே, கிறிஸ்த்துவை தொழுகிறேன் என்றொரு போர்வையை போர்த்திக்கொண்டு, அவரது வார்த்தைகளை எல்லாம் காலில் போட்டு  மித்திதுவிட்டு  பரியாச வார்த்தைகளும்,  பயங்கர சாபமும், இழிவு படுத்தும் வார்த்தைகளையும், நிர்வாசரத்துடன் அடுத்தவரை புண்படுத்தும்  வார்ததைகளை பதிவிடுவதுமாகிய செயல்களை செய்து "கிறிஸ்த்தவர்கள்" எனப்படும் அனைவர் மேலுமே எனக்கு  வெறுப்பை  ஏற்ப்படுத்தி, எவருடைய வார்த்தையையும் சற்றும் பொருள்படுத்தாமல் கிறிஸ்த்துவைவையும் கிறிஸ்த்து வத்தையும் நான்தான் பாதுகாக்கிறேன் என்பதுபோல் சொல்லிக்கொண்டு தலைகால் புரியாமல் ஒருவர் ஆட்டம் போட்டார். 
 
அப்போதெல்லாம் எந்தஒரு கிறிஸ்த்தவரும் அவருடைய வார்ததைகளை பெரிதாக கண்டிக்கவும் இல்லை, அவருக்கு கிறிஸ்த்தவம் என்பதை "எப்படிபட்ட  ஆவியால் கட்டப்பட வேண்டும்" என்று அறிவுரை கூறவும் இல்லை.  என்னை "இரத்தவியாதி வந்து சாவாய்" என்று எழுதினார்.  அப்பொழுதுகூட பலர்   அவரை கண்டுமகாணாது இருந்து வளர்த்துவிட்டனர். இன்றோ அவர்  அனேக அவருவருப்பான வார்த்தை களை பதிவிடும் அளவுக்கு துணித்து நிற்கிறார். அவருக்கு ஆதரவாகவும் சிலர் தாங்கி நிற்கின்றனர்!  அதற்க்கு முக்கிய  காரணம்  அதே குறைகூறும் ஆவியும் அடுத்தவரை  விமர்சிக்கும் ஆசையும் பலருக்குகுள்ளேயும் ஒளிந்திருந்ததே!

அவ்வாறு தன்னுடைய கருத்தை உடையவர் எழுதிய  தரம்கெட்ட எழுத்துக்களை எல்லாம் சாதாரணமாக எடுத்து கொண்டவர்கள், தங்கள் கருத்துக்கு எதிரான கருத்து உடையவர் ஒருவர் அவ்வாறு வார்த்தைகளை உபயோகிக்குபோது மட்டும் எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு அறிவுரை கூற விரைகின்றனர். 
 
லூக்கா 4:23 அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்
 
பிறகு அடுத்தவரை குணப்பட்டுதும் வேலையை செய்யலாம். உனக்குள்ளேயே உயிரைகொல்லும் கொடிய நோய்க்கிருமிகளை வைத்துகொண்டு அடுத்தவருக்கு வைத்தியம் பார்க்கபோகிறேன் என்று ஓடாதே. அது உன்னையும் அழித்து நீ கூட்ட்டாளியாக நினைப்பவனையும் அழித்து உனக்கு  வைத்தியம் பார்ப்பவனையும் அழித்துவிடும்.   
 
யார் கருத்து சரி யார் கருத்து தவறு என்பது இங்கு கேள்வியல்ல! நான் சரியான காரியத்தையே சொன்னாலும் கூட அதை சொல்வதற்கு ஒரு வரையறை உண்டு. அதுவும் "ஒரு கன்னத்தை அடித்தால் மறு கன்னத்தை திருப்பிகொடு" என்று போதித்த இயேசுவின் வார்த்தைகளை எழுதும் நாம், எவ்வளவு "சாந்த குணத்தின் ஆவியை உடையவர்களாக இருக்கவேண்டும்" என்பது புரியவேண்டும் இல்லையேல் அங்கு  உள்ளேயிருந்து கிரியை யார் கிரியை செய்கிறார்கள்  என்பது கண்கூடாக தெரிந்துவிடும்.   தங்களுக்கும் அதே ஆவி இருக்கும் பட்சத்தில் ஒருவரைப்பற்றிய உண்மை தெரிய வாய்ப்பில்லை    
 
ஆ ஊ என்றால் "இயேசு பரிசேயரை சாடினார்" "பவுல் அவனை சாடினார்" என்று சாக்கு சொல்கிறார்கள். ஆக மொத்தம் இவர்கள் எல்லாம் தங்களை "பிறர் பாவத்துக்காக தன் ஜீவனை கொடுத்த இயேசுவுக்கு ஒப்பான பரிசுத்தராகவும், தேவனின் சுவிஷேஷத்துக்காக தான் வாழ்க்கையே அர்ப்பணித்த பவுல்களாகவும் தங்களை உயர்த்திக்கொண்டு அடுத்தவர்களை அகங்காரத்துடன் நியாயம்தீர்க்க
விரைகின்றனர்.    
 
வசனம் என்ன சொல்கிறது என்பதோ ஆண்டவர் நம்மிடம்  என்ன எதிர்பார்க்கிறார் என்பதோ இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. தங்கள் மாம்சத்தின் இச்சையை  தீர்த்து கொள்ளவே இயேசு பெயரை சொல்லிக்கொண்டு  ஒருவருக்கொருவர் போராடுகின்றனர்.  

மத்தேயு 15:13  என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.

அவ்வாறு தேவனுக்கு பிரியமில்லாமல் ஆண்டவரின் தோட்டத்தில் நடப்பட்ட நாற்றுகள் நிச்சயம் பிடுங்கிபோடப்படும். அதை யாராலும் தடுக்க முடியாது. நமது நிலையை  நாம் தகவைத்துகொள்வது மிகுந்த அவசியம். அடுத்தவனை காப்பற்ற போகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஆற்றில் விழுந்து  சாககூடாது  சத்துரு வானவன் நம்மை இடறபண்ணவே இதுபோன்ற சோதனைகளை கொண்டுவந்து நம்முடன் போராடுகிறான் அதில் பல நல்லவர்களும் வீழ்ந்துவிடுகின்றனரே!         

ராமரை கும்பிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இஸ்லாம்  மசூதியை இடிப்பவர் களுக்கும். இயேசுவை கும்பிடுகிறேன் என்ற்று சொல்லிக்கொண்டு அடுத்தவர்களை தரக்குறைவாக விமர்சிப்பவர்களுக்கும் பெரிய வேறுபாடு இருபது போல் எனக்கு தெரியவில்லை.  
 
சிலரின்  தரம்கெட்ட வார்த்தைகள் மூலம் சத்துருக்களை கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு நாம் சென்றிருப்பது  வேதனையே!
 
உலக  அரசியலைவிட கேடுகெட்டுபோன கிறிஸ்தவ நியாயத்தையும்  உகலத்தார் காட்டும் இரக்கம் கூட உள்ளத்தில்  இல்லாத கிறிஸ்தவ அன்பையும் என்கேபோய் சொல்வது என்று புரியவில்லை

 

-- Edited by SUNDAR on Wednesday 23rd of March 2011 09:03:47 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard